Followers

Wednesday, December 18, 2013

ஜோர்டான் மன்னர் பனியில் சிக்கிய காரை தள்ளுகிறார்!



சவுதியில் பனிக் காலம் ஆரம்பமாகி விட்டது. குளிர் சட்டைகளை போட்டுக் கொண்டு தினம் அலுவலகத்துக்கு வேலைக்கு வருவதே ஒரு குஷியான அனுபவம்தான். இதை விட அதிக குளிர் பக்கத்து நாடான ஜோர்டானில் வீசுகிறது. சாலைகள் பனியால் போர்த்தப்பட்டுள்ளன. வாகனங்கள் முன்னேற முடியாமல் பல இடங்களில் நின்று விடும்.

இது போல் ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு கார் வழியில் மாட்டிக் கொண்டது. அந்த வழியே வந்த ஜோர்டான் மன்னர் அப்துல்லா தனது நாட்டு மக்களில் ஒருவரோடு ஒருவாக நின்று மாட்டிக் கொண்ட காரை வெளியே இழுப்பதற்கு முயற்சி செய்வதையே இந்த காணொளியில் பார்க்கிறோம்.




அதே போல் பனிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஹெலிகாப்டரில் ஏற்றுவதற்கு ராணுவத்தோடு சேர்ந்து மன்னரும் உதவி புரிகிறார்.

பாதுகாப்பு படை, கருப்பு பூனைப் படை என்று எந்த படாடோபமும் இல்லாமல் மக்களோடு மக்களாக இணைந்து செல்வதால்தான் இத்தனை ஆண்டு காலம் அந்த மக்களை நிம்மதியாக வைக்க இந்த மன்னர்களால் முடிகிறது.

இந்த மன்னர்களிடம் குறைகள் அறவே இல்லை என்று சொல்ல வரவில்லை. நம் நாட்டு அரசியல்வாதிகளோடு ஒப்பிடும் போது இந்த மன்னர்கள் எனக்கு உயர்வாகவே தெரிகின்றனர்.


==========================================================================

இஸ்லாமிய ஆட்சி எப்படி இருக்க வேண்டும்?

அரசியல் என்பது உழைத்துக் கொள்வதற்கான ஒரு தொழிலாக இன்று மாறிவிட்டது. மக்களை ஏமாற்றி அல்லது அராஜகம் செய்து தேர்தல்களில் வெற்றி பெற்று அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கின்றவர்கள், தமது ஆட்சிக் காலம் முடியும் வரையில் சுரண்டல், இலஞ்சம், களவு போன்ற தவறான வழிகளில் முடியுமான அளவுக்கு சொத்து சேர்ப்பதற்கே தமது முழு நேரத்தையும் செலவு செய்கின்றனர். மக்களின் நலன் பற்றி சிந்திப்பதற்கோ அவர்களுக்காக பணியாற்றவோ அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இத்தகைய அநீதியாளர்கள் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாம். ஆனால், அவர்களால் இறைவனை ஏமாற்றிவிட முடியாது. சுவனத்தின் வாடையைக் கூட அவர்கள் நுகர்வதற்கு இறைவன் அனுமதிக்கப் போவதில்லை.

மேலும் நாம் மற்றுமொரு விஷயத்தையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தியாக வேண்டும். ஏனைய இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மக்களின் உலக நலனை மாத்திரம் கருத்திற் கொள்பவர்கள். ஆனால், ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அவ்வாறு இருக்க முடியாது. அவர் தமது சமூகத்தின் மறுமை நலனுக்காக உழைக்கின்றவராகவும் இருக்க வேண்டும். இப்பொறுப்பை உணர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை நமது சமூகம் மிகக் குறைந்தளவிலேயே கொண்டிருக்கின்றது. இது துரதிஷ்டவசமான நிலையாகும். தேர்தல் மேடைகளில் பாதை அமைத்துத் தருவதாகவும் பாலம் கட்டித் தருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கும் நமது அரசியல்வாதிகள் அப்பிரதேசத்தின் மார்க்க மற்றும் ஒழுக்க ரீதியான வீழ்ச்சிநிலை குறித்து ஒரு வார்த்தையாவது பேசும் நிலையிருப்பதாகத் தெரியவில்லை.

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் சமூகத் தலைமைத்துவத்தை ஏற்றவர்கள் உலக மற்றும் ஆன்மிக தலைமைத்துவத்தை சமூகத்திற்கு வழங்குகின்றவர்களாகவே இருந்துள்ளனர். அந்த வரலாற்றை மறந்த நிலையிலேயே நமது சமூகத்தின் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணமும் கழிந்திருக்கிறது. ஆன்மிகமில்லாத அரசியல்வாதிகளையும் அரசியல் தெரியாத ஆன்மிகவாதிகளையும் கொண்ட சமூகம் என்ற நிலை மாற வேண்டும்.

‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப் படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம்’ என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: உர்வா (ரலி), நூல்: புகாரி 2567,6459)

‘நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிராற உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 5374)

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். ‘அதற்கவர்கள், என்னிடம் ஒரேயொரு ரொட்டித் துண்டும், சில பேசீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும்’ என்றார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 3802)

‘ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டார்கள். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அவ்விருவரும் ‘பசி’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வெளியே வந்துள்ளேன்’ என்றார்கள்…(ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 3799)


மேலே எடுத்துக்காட்டிய வரலாற்று நிகழ்வுகள் ஒரு ஆட்சித் தலைவரின் வாழ்க்கையாக இருந்துள்ளது. முழு அரபுலகுக்கும் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்த ஒரு தன்னலமற்ற தலைவர் வாழ்வு எப்படி இருந்தது என்பதை பார்த்தோம். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் ஒரு எம்எல்ஏ ஆனவுடன் ஒரே வருடத்தில் பல கோடிகளுக்கு அதிபதியாகி விடுவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். இந்த அரசியல் வாதிகள் நபிகள் நாயகத்தின் வாழ்வு முறைகளையும் அவரது எளிமையையும் சற்றே சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

2 comments:

Seeni said...

Nalla pakirvu...

Anonymous said...

அவர்களுக்கு ஷரியா சட்டம் வேண்டும் என்றால், அவர்கள் அந்த சட்டம் எங்கு நடைமுறையில் இருக்கிறதோ அங்கு சென்று விடலாம்.<>ரஷ்யாவின் ஜனாதிபதி வ்ளாடிமிர் ப்யூட்டின் அவர்கள், ரஷ்ய பாராளுமன்றத்தில், பிப்ரவரி நாலாம் தேதியன்று சிறுபான்மையினர், ரஷ்யாவின் பெரும்பான்மையினரோடு முரன்படுவதை குறித்து நிகழ்த்திய உரை, ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டியது. "ரஷ்யாவில் ரஷ்யர்கள் வாழ்கிறார்கள். எந்த சிறுபாண்மையினர் எங்கிருந்து வந்திருப்பினும், ரஷ்யாவில் வாழ வேண்டுமென்றால், ரஷ்யாவில் உணவருந்த வேண்டும் என்றால், அவர்கள் ரஷ்ய மொழியில் பேச வேண்டும். அவர்கள் ரஷ்ய சட்டத்தை மதிக்க வேண்டும்.அவர்களுக்கு ஷரியா சட்டம் வேண்டும் என்றால், அவர்கள் அந்த சட்டம் எங்கு நடைமுறையில் இருக்கிறதோ அங்கு சென்று விடலாம். ரஷ்யர்களுக்கு சிறுபாண்மையினர் தேவையில்லை, சிறுபாண்மையினருக்குதான் ரஷ்யா தேவை படுகிறது. அவர்களுக்கு நாங்கள் எந்த சலுகைகளும் தர மாட்டோம். எந்த சட்டத்தையும் மாற்ற மாட்டோம். அவர்கள் எத்தனை தான் நாம் பாரபட்சம் காட்டுகிறோம் என்று கூச்சல் போட்டாலும் சரி. நாம் ஒரு தேசமாய் வாழ வேண்டும் என்றால் நாம் அமேரிக்காவில், இங்கிலாந்தில், ஹால‌ந்தில், ப்ரான்ஸில் நட‌க்கும் தற்கொலை தாக்குதல்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.ரஷ்யாவின் கலாச்சாரமும், பாரம்பரியமும், கலாச்சாரம் இல்லாத பிற்போக்குவாதிகளாய் வாழும் பல சிறுபான்மையினருக்கு உகந்தது அல்ல. இந்த சபை புதிய சட்டங்களை உருவாக்க நினைத்தால், அது தேசத்தை முதலில் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர், ரஷ்யர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்".வ்ளாடிமிர் ப்யூட்டினின் இந்த பேச்சிற்கு ரஷ்ய பாராளுமன்றம், எழுந்து நின்று ஐந்து நிமிடங்களுக்கு கரவொலி எழுப்பியது