Followers

Saturday, December 21, 2013

மிருகம் மனிதனானது: மனிதன் மிருகமாகிறான்!



'இளம் கன்று பயமறியாது' என்ற ஒரு பழமொழியை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். அந்த பழமொழியை உண்மைப்படுத்தும் முகமாக இந்த காணொளி அமைந்துள்ளது. காட்டில் கூட்டமாக வாழ்ந்து வரும் காட்டெருமை கூட்டத்தை அடித்து சாப்பிடும் எண்ணத்தோடு ஒரு சிங்கம் வேகமாக சீறிக் கொண்டு வருகிறது. அந்த காட்டெருமை கூட்டத்தில் அன்றுதான் தனது கன்றை ஈன்றெடுத்த மாடு ஒன்று தனது உயிரை காப்பாற்றுவதா அல்லது பிறந்த கன்றை காப்பாற்றுவதாக என்ற மனப் போராட்டத்துக்குப் பின் தனது கன்றை விட்டு விட்டு தாய் மாடு ஓடி விடுகிறது. கன்றால் தாயின் அளவுக்கு ஓட முடியவில்லை. முடிவில் சிங்கம் கன்றுக் குட்டியின் அருகில் வந்து விடுகிறது. தாய் தூரத்திலிருந்து சோகத்தோடு தனது கன்றையும் அந்த சிங்கத்தையும் மாறி மாறி பார்த்த வண்ணம் நிற்கிறது.

சிறிது நேரத்தில் கன்றை விரட்டிக் கொண்டே ஒரு ஓரமான இடத்துக்கு கொண்டு சென்றது சிங்கம். கன்றை சாப்பிடலாம் என்று எத்தனிக்கும் போது சிங்கத்தின் முகத்தை அந்த கன்றானது தனது நாக்கால் வருட ஆரம்பித்தது. இதை எதிர்பாராத சிங்கம் திடுக்குற்று அதனை சாப்பிடாமல் தானும் தனது நாவால் அந்த கன்றை வருட ஆரம்பிக்கிறது. சிங்கத்துக்கு தனது குட்டிகளின் ஞாபகம் வரவே இந்த கன்றையும் தனது குட்டிகளில் ஒன்றாக நினைக்க ஆரம்பித்தது.

நேரம் செல்ல செல்ல அந்த கன்றானது இதனை தனது தாயாக எண்ணி பால் அருந்த அந்த சிங்கத்தை தனது தலையால் முட்டுகிறது. இதனை எல்லாம் ரசித்துக் கொண்டே சிங்கம் அந்த கன்றை மேலும் வருட ஆரம்பிக்கிறது. இந்த பாசப் பிணைப்பு அரிய ஒன்றாகும். சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த கன்றை அதன் தாயிடமே ஒப்படைத்து விடுகிறது இந்த சிங்கம். என்ன ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். மிருகத்துக்குள்ளும் மனிதம் இருப்பதை இந்த நிகழ்வு நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.





அதே நேரம் மனிதன் மிருகமாக மாறிய நிகழ்வுகளும் உலகில் ஆங்காங்கே நடந்து வருகிறது. 2002 குஜராத்தில் மோடியின் தலைமையில் நடந்த இனக் கலவரத்தை இதற்கு உதாரணமாக எடுக்கலாம். கோத்ரா ரயில் விபத்தை காரணமாக வைத்து அந்த சம்பவத்தில் சற்றும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் 2000 க்கு மேல் கொல்லப்பட்ட சம்பவம் நமது இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கம் என்றால் மிகையாகாது. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து அதனுள் இருந்த சிசுவையும் வெளியே இழுத்து உயிரோடு நெருப்பில் இட்டார்களே அந்த கயவர்கள் இன்றும் சுதந்திரமாக நரேந்திர மோடி தயவால் வெளியே உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சிங்கத்தையும் இந்த நரேந்திர மோடியையும் அவரது இந்துத்வா கூட்டத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.

காட்டில் மிருகம் மனிதனானது :

நாட்டில் மனிதன் மிருகமாகிறான்:

1 comment:

Anonymous said...

Aloor Shanavas

ரஜினி படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. இதிலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
- லதா ரஜினிகாந்த்

மோடிக்கு ஆதரவாக நான் பேசவேயில்லை. அந்த வீடியோ போலியானது.
- அமிதாப் பச்சன்

மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக நாங்கள் எந்தக் குழுவையும் குஜராத்துக்கு அனுப்பவில்லை.
- அமெரிக்க அரசு

மோடியை இங்கிலாந்துக்கு வருமாறு நாங்கள் அழைக்கவே இல்லை. அந்தத் தகவல் தவறானது.
- இங்கிலாந்து அரசு

முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இல்லை. பல வகையிலும் பின்தங்கியுள்ளது.
- ரகுராம் ராஜன் குழு அறிக்கை

நவீன வசதிகளுடன் கூடிய 'ஹைடெக் தெரு' அகமாதாபாத்தில் இல்லை. அந்தப் புகைப்படத்தில் உள்ள தெரு சீனாவில் இருக்கிறது.
- கூகுள் சர்ச் மூலம் அம்பலம்

இப்பவே கண்ணக் கட்டுதே...

பேசாமல் மோடி தன் பெயரை மோ'ச'டி என்று மாற்றிக் கொள்ளலாம்!