
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஆசிரியரைக் கொன்ற மாணவனின் செய்தியைப் படித்தோம். அமெரிக்காவில் சொல்லவே வேண்டாம். தினமும் அங்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடக்கும பிரச்னைகள் முடிவில் துப்பாக்கி சூட்டில் முடிவது வழமை. அதே போன்று சமீப நாட்களில் சவுதியிலும் ஆங்காங்கே இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது கவலையளிக்கிறது.
முஹம்மது பர்னாவி என்ற மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் ஜிஜான் என்ற மாகாணத்தில் இந்த கொடுஞ்செயல் நடந்துள்ளது. இவரது இறந்த உடலை காணவும், பிரார்த்தனையில் கலந்து கொள்ளவும் மிக அதிக அளவில் மக்கள் வந்தனர். இதே போல் மெக்காவிலும் ஒரு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். தற்போது இது போன்று தாக்குதல்கள் ஏன் நடைபெறுகிறது என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
கல்வி அமைச்சர் ஃபைசல் பின் அப்துல்லா ஒரு கமிட்டியை அமைத்து எதனால் இத்தகைய வன்முறைகள் நிகழ்கிறது? இதற்கு தீர்வு என்ன? என்று ஆய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி பணித்துள்ளார். இந்த குழு பல குடும்பங்களை அணுகி அந்த குழந்தைகளின் பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. முக்கியமாக பள்ளிகளில் இவர்களுக்கு கிடைக்கும் நண்பர்களில் சில தவறான நடத்தை உடையவர்கள் நல்ல மாணவர்களையும் கெடுத்து விடுவதாக கண்டறிந்துள்ளனர்.
அடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை பாடங்கள் சரி வர புரிந்து கொள்ளாததை கருத்தில் கொண்டு மற்ற மாணவர்கள் முன்னிலையில அவமானப்படுத்துகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ளாத சில மாணவர்கள் சக மாணவர்களின் மீதோ அல்லது வீட்டில் தனது அண்ணன், தம்பி, தங்கைகளோடோ தங்களின் கோபத்தை சண்டையிடுவதன் மூலம் தீர்த்துக் கொள்கின்றனர்.
மேலும் சில குடும்பங்களில் விவாகரத்து, கணவன் மனைவி சண்டை, சுற்றத்தார்களோடு சண்டை என்று வீட்டில் அமைதியற்ற சூழ்நிலை நிலவினால் அதுவும் அந்த மாணவன் தனது இயல்பு நிலையை இழக்க காரணமாக அமைந்து விடுவதாக ஆய்வில் தெரிய வருகிறது. எனவே பெற்றோர்கள் முடிந்த வரை குழந்தைகளுக்கு முன்னால் சண்டை இடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உம் அய்மன் என்ற ஒரு மாணவனின் தாய் கூறும் போது 'மேல்நிலைப் பள்ளிக்கு போவதற்கு முன்பு எனது மகன் மிக சாதுவாக இருந்தான். யாரிடமும் எந்த பிரச்னையும் வைத்துக் கொள்ள மாட்டான். ஆனால் பள்ளிக்கு சென்ற சில மாதங்களிலேயே அதிக கோபப்படுவதும், சக நண்பர்களோடு சண்டை இடுவதும் தினம் அதிகரிக்க ஆரம்பித்தது. பிறகு எனது கணவர் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விபரங்களை அறிய முயற்சித்தார். அந்த பள்ளியின் ஆசிரியர் பாடம் நடத்தும் விதமே மிக அதிக சப்தமிட்டும் ஒரு வித அதிகாரத்தோடு பாடங்களை நடத்துவதை நோட்டமிட்டார். எனது மகன் சில பாடங்களை புரிந்து கொள்வதில் சற்று அவகாசம் எடுத்துக் கொள்வான். இந்த குறையை சக மாணவர்கள் முன்னிலையில் அந்த ஆசிரியர் கிண்டலாக சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். இதை எல்லாம் நோட்டமிட்ட எனது கணவர் தற்போது எனது மகனை வேறொரு பள்ளியில் சேர்த்துள்ளார். தற்போது எனது மகன் பழைய நிலையை அடைந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது' என்கிறார்.
எனவே நாம் மாணவர்களை மட்டும் குற்றம் சொல்வதை விடுத்து ஆசிரியர்களின் குறைகளையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு குறைளை பரிமாறிக் கொள்ள வேண்டும். இது போன்ற ஆசிரியர் மாணவனின் புரிதலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அமீர்கானின் படம் 'தாரே ஜமீன் பர்' மிக அழகிய உண்மையை சொல்லும்.
தகவல் உதவி சவுதி கெஜட்
3 comments:
இதுக்குத்தான் நாங்க சொன்னா கேக்கணும். பொதுககல்வியெல்லாம் வேஸ்ட்.மார்க்கக்கல்வி மட்டும் பெஸ்ட்
அரேபிய கலாச்சாரக்க கல்வி பின்லேடன்களையும் ஓமா் அப்துல்லாவையும் அதிக அளவில் உருவாக்கி விடும். பங்களா தேஷ் நாட்டில் இந்துக்களை அழிக்க இயக்ககம் நடத்துபவா்களில் பெரும்பான்மையானவாகள் அரேபிய பள்ளிகளில் படித்தவர்கள்தாம்.
இதற்கும் மேற்கத்திய கல்வி முறைதான் காரணமா ?
Post a Comment