Followers

Tuesday, December 31, 2013

நெகிழ வைக்கும் ஒரு சம்பவம்......

ஹம்ஜா, உமர் (ரழி) ஆகிய இரு வீரர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு இணைவைப்பவர்கள் முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து சற்று பின்வாங்கினர். நபி (ஸல்) அவர்களுடனும் முஸ்லிம்களுடனும் உண்டான தங்களது நடவடிக்கைகளை மாற்றத் தொடங்கினர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை விரும்பி முஸ்லிம்களுக்கு ஆசாபாசங்களையும் ஆசைகளையும் காட்டினர். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும், அழைப்புப் பணிக்கும் முன்னால் உலகமனைத்தையும் கொட்டிக் கொடுத்தாலும் அது முஃமின்களுக்கு கொசுவின் இறக்கை அளவிற்குக் கூட சமமாகாது என்பது இந்த அறிவீனர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. ஆகவே, இவர்கள் தங்களது முயற்சியில் படுதோல்வி கண்டனர்.

ஹம்ஜாவும் (ரழி) இஸ்லாமைத் தழுவி, நாளுக்குநாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகிய சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நாம் பார்ப்போம்: ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். உத்பா இப்னு ரபீஆ குறைஷிகளிடம் “குறைஷிகளே! நான் முஹம்மதிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலவற்றை அவருக்குக் கூறுகிறேன். அவற்றை அவர் ஏற்றுக்கொண்டால் நாம் அவருக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அவர் நம்மைவிட்டு விலகிக் கொள்ளலாம்” என்று கூறினான். அப்போது குறைஷிகள் “அப்படியே ஆகட்டும் அபுல் வலீதே! நீ சென்று அவரிடம் பேசிவா” என்றனர்.

உத்பா, நபி (ஸல்) அவர்களிடம் சென்று “எனது சகோதரனின் மகனே! நீ எங்களில் குடும்பத்தாலும் வமிசத்தாலும் கண்ணியமிக்கவர். ஆனால், நீ உன் சமுதாயத்தவரிடம் ஆபத்தான ஒரு மார்க்கத்தை கொண்டு வந்திருக்கிறாய்! அதன் மூலம் உமது சமுதாயத்தவன் ஒற்றுமையை குலைத்து விட்டாய்! அறிஞர்களை முட்டாளாக்கி விட்டாய்! அவர்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் குறை கூறிவிட்டாய்! முன் சென்ற உன் முன்னோரை காஃபிர் (நிராகரித்தவர்) என்று கூறிவிட்டாய்! நான் உனக்கு முன்பு சில விஷயங்களை எடுத்து வைக்கிறேன். அதை நன்கு யோசித்து ஒரு முடிவைச் சொல். அதில் ஏதாவதொன்று உனக்கு விருப்பமானதாக இருக்கலாம்” என நயமாக பேசினான்.

இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “அபுல் வலீதே! சொல்! நான் கேட்கிறேன்” என்றார்கள். அவன் “எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப் பெரியசெல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களைச் சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம். அல்லது உனக்கு ஏதேனும் ஜின்களின்” தொல்லை இருந்து அதை உன்னால் தடுக்க முடியவில்லையென்றால், உன்னை நாங்கள் குணப்படுத்துவதற்காக எங்களின் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கின்றோம். ஏனெனில், சில நேரங்களில் ஜின்களின் சேட்டை மிகைத்து வைத்தியம் பார்க்கும் அவசியம் ஏற்படலாம்” என்று கூறினான்.

உத்பா அவனது பேச்சை முடித்த பிறகு “அபுல் வலீதே! நீ உனது பேச்சை முடித்துக் கொண்டாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அவன் “ஆம்!” என்றான். “இப்போது நான் சொல்வதைக் கேள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற “அவ்வாறே செய்கிறேன்” என்று அவன் பதிலளித்தான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ என்று ஆரம்பித்து அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள். முதுகுக்குப்பின் தன்னுடைய கைகளை ஊன்றி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை மிகக் கவனமாகக் கேட்டான். பிறகு ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதி ஸஜ்தா செய்து முடித்தார்கள். பின்னர் “அபுல் வலீதே! நீ செவியேற்க வேண்டியதையெல்லாம் செவியேற்று விட்டாய். நீயே இப்பொழுது முடிவு செய்துகொள்!” என்று மொழிந்தார்கள்.

அதற்குப் பிறகு உத்பா அவனது நண்பர்களிடம் திரும்பி வந்தபோது அவர்கள் தங்களுக்குள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அபுல் வலீத் முகம் மாறியவனாக வந்திருக்கின்றான்” என்று பேசிக் கொண்டனர். உத்பா வந்தவுடன் “நீ என்ன செய்தியை கொண்டு வந்திருக்கின்றாய்” என வினவினர். “இதுவரை கேட்டிராத பேச்சையல்லவா நான் கேட்டேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கவிதையும் அல்ல! சூனியமும் அல்ல! ஜோசியமும் அல்ல! குறைஷிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது. மற்ற அரபியர்கள் அவரை அழித்துவிட்டால் அதுவே நமக்குப் போதும். நமது நோக்கமும் அதுவே! மாறாக, மற்ற அரபுகளை இவர் வெற்றி கொண்டால் அவருக்குக் கிடைக்கும் ஆட்சி உங்களுடைய ஆட்சியே! அவருக்குக் கிடைக்கும் கண்ணியம் உங்களுடைய கண்ணியமே! அவர் மூலமாக கிடைக்கும் அனைத்து பாக்கியங்களுக்கும் நீங்களும் முழு உரிமை பெற்றவர்கள்” என்று கூறினான். இதனைக் கேட்ட அவர்கள் “அபுல் வலீதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் தன்னுடைய நாவன்மையால் உன்னை வசியப்படுத்தி விட்டார்” என்றனர். “அவரைப் பற்றி எனது கருத்து இதுதான். இனி உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டான்.

- (இப்னு ஹிஷாம்)

மற்றும் சில அறிவிப்புகளில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் 13ம் வசனத்தை ஓதியபோது “முஹம்மதே போதும்! போதும்!! என்று கூறி தனது கையை நபி (ஸல்) அவர்களின் வாயின் மீது வைத்து, இரத்த உறவின் பொருட்டால் நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அதற்குக் காரணம், அல்லாஹ்வின் எச்சரிக்கை உண்மையில் நிகழ்ந்துவிடும் என்று அவன் பயந்ததுதான். பிறகு எழுந்து சென்று தனது கூட்டத்தாரிடம் இதற்கு முன் கூறப்பட்டது போன்று செய்திகளை கூறினான்.

- (இப்னு கஸீர்)

5 comments:

suvanappiriyan said...

சாரங்!

//உயிர் என்றால் என்ன.குரானிலிருந்து சொல்லணும். ஒருவருக்கு எப்படி உயிரூட்டுவது. இதை அல்லா செய்வாரா அல்லது ஷைத்தான் செய்வாரா.//

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக!

குர்ஆன் 17:85

நீங்கள் மட்டும் அல்ல! அன்றைய அரபுகளும் முகமது நபியிடம் இதே கேள்வியைக் கேட்டனர். அதற்கு இறைவன் 'உயிரை தெரிந்து கொள்ளும் அளவுக்கு மனிதர்களாகிய உங்களுக்கு நான் அறிவை தரவில்லை' என்று முடித்துக் கொள்கிறான். இன்று வரை அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் விடை சொல்ல முடியாத ஒரு கேள்வி இந்த உயிரைப் பற்றித்தான்.

இந்த உயிருக்கு சிறந்த விளக்கத்தை கொடுத்து விட்டால் அடுத்த வருட நோபல் பரிசு உங்களுக்குத்தான். குர்ஆனையும் பொய்யாக்கி விடலாம். முயற்சி செய்து பாருங்களேன். :-)

suvanappiriyan said...

இந்து ராமின் பதில்கள்!

கேள்வி: சமகாலத்துக்கு வருவோம். மோடி X ராகுல்: உங்கள் கருத்து என்ன? மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுமா?

ராம் : மோசமான சூழல். தேர்தலில் என்னவாகும் என்று கேட்டால், காங்கிரஸின் ஊழல்கள், மோசமான கொள்கைகளின் விளைவாக, பந்தயத்தில் மோடி முந்தலாம்; ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா என்று கேட்டால், எனக்கு ஆழமான சந்தேகம்தான்.

கேள்வி: மோடியின் பேரலை ஒட்டுமொத்த இந்தியாவையும் சூழும் என்று பலரும் ஆரூடம் கூறும் நிலையில், நீங்கள் தொடர்ந்து மோடியை எதிர்த்து எழுதியும் பேசியும் வருகிறீர்கள். மோடி ஏன் கூடாது என்று நினைக்கிறீர்கள்?

ராம்: சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு மாபெரும் பிளவு சக்தி. எல்லோராலும் பழிக்கப்படும் அவரது பெருமை 2002 கலவரங்களில் அவருக்கும் அவரது அரசுக்கும் இருந்த பங்கில் வேர்கொண்டது. அந்தப் பெயரை நீக்குவதற்கான தந்திரம்தான் ‘விகாஸ் புருஷ்’ அல்லது ‘வளர்ச்சியின் நாயகன்’ படிமம். சட்டம், அரசியல், தார்மீகம் ஆகிய எந்த அடிப்படையில் பார்த்தாலும் 2002-ல் நடந்தவை இப்போதைக்கு மறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

2002-ல் நடந்ததற்கும் இந்துத்துவச் சக்திகளின் அடிப்படை நோக்கங்களுக்கும் இடையே அறுக்க முடியாத தொடர்பு இருக்கிறது. மோடி பிரதமராகும்பட்சத்தில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகவே ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி பிரதமராவது இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பேரபாயமாக அமையும் என்பது தெளிவாகத் தெரியும்.

Anonymous said...

எம்மதமும் சம்மதம் என்று உபதேசிக்கும் நண்பர்களுக்கு !

நான் என்ன...
நான் மட்டும் வாழ வேண்டும்.. என் மதம் பெருக வேண்டும்.
மற்ற அனைத்தும் அழிய வேண்டும்.. அல்லது அழிக்க படவேண்டும் என்று எண்ணி கொண்டு இருக்கும் வஹாபி பேர்வழியா? அல்லது அலுலேய ஆட்கொல்லியா?

எனக்கும் என் அனைத்து நண்பர்களுக்கும் எம்மதமும் சம்மதம்தான்.. கர்த்தரும், ஸல்ல ரும்.. உலகில் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'வசுதேவம் குடும்பகம்' என்று உபதேசம் செய்தது எங்கள் தர்மம்.

அந்த தர்மத்தை கேவலபடுத்தாத வரை ..
விமர்சிக்காதவரை ...
எங்கள், பண்பாட்டை, கலாச்சாரத்தை, வழிபாட்டு முறைகளை
அழிக்க நினைக்காதவரை....
எங்களுக்கும் எம்மதமும் சம்மதம்தான்!
அனைவரையும் அரவணைத்து வாழத்தான் விரும்புகிறோம்.

உலகத்தில், ஒரு மூலையில், மத போரால், மக்கள் அழிவடைந்த போது, உயிரை காப்பாற்றி கொள்ள அகதிகளால் பாரதம் வந்த போது, அவர்களை அரவணைத்த தாய் இந்த பாரத தாய்! அவர்களுக்கு வாழ இடமும், அவர்கள் மத வழிபாட்டை கடைபிடிக்க அனைத்து சுதந்திரத்தையும் கொடுத்த மக்கள், பாரத தாயின் மக்கள்.

உலகில், நம்மை விட அகிம்சைவாதி யார்? நம்மைவிட அன்பை போத்தித்தவர் யார்? நம்மைவிட வந்தாரை வாழவைத்தது யார்?

உலகத்திற்கே அன்பை, அகிம்சையை ,ஞானத்தை போதித்த இந்த மண்ணில், எங்கிருந்தோ வந்த அந்நிய பாலைவன மதங்களை வரித்து கொண்டு, இந்த மண்ணின் ஆணிவேரான, சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கும் கயவர்களிடம் எம்மதமும் சம்மதம் என்று சொல்லத்தான் முடியுமா? பிறந்த தாய் நாட்டின் சக சகோதரனை மதிக்காத, அவன் தர்மத்தை மதிக்காத, அவன் வழிபாடுகளை மதிக்காத இந்த பயங்கரவாதிகளிடம் நாம் அன்பை போதிக்கதான் முடியுமா? அகிம்சையை போதிக்க முடியுமா? ஆயிரம் வருடங்கள் இதை போதித்து நாம் கண்ட நன்மைதான் என்ன? சரித்திரம் மறந்து விட்டதோ? இனி, எவ்வளவு காலத்திற்கு, சரித்திரத்திலிருந்து பாடம் கற்காத மூடர்களாக இருக்க போகிறோம்?

நம் மதம் நமக்கு, அவர்கள் மதம் அவர்களுக்கு! அவர்களின் தர்மத்தை மதிப்போம். அவர்கள் பண்பாடு கலாசாரம் வழிபாடுகள் அனைத்தையும் மதிப்போம்.. அவர்களை இழிவு படுத்தி, அவர்கள் தர்ம்மத்தை இழிவு படுத்தி நாம் மதம் வளர்க்க வேண்டாம் என்று எண்ணும், வாழும் பல்லாயிரகனகான நல்லவர்களை , மிதமானவர்களை நாம் மதிப்போம். அரவணைப்போம். சேர்ந்து வாழ்வோம்.

ஆனால், இந்த பூமியின் ஆதிதர்மத்தை அழித்தே தீருவோம் .. என்று கங்கணம் கட்டி கொண்டு, ரத்த காட்டேரிகலாய் அலையும், பயங்கரவாதிகளை வேரோடு களையெடுப்போம்..
இத்தகைய காட்டேரிகளிடம் அன்பு எடுபடாது, அகிம்சை கோலாச்சாது!

இங்கு, எனக்கு அறிவுரை சொல்ல வரும் எம்மதமும் சம்மதம் நண்பர்கள், அப்படியே சிறிதுநேரம் பாலைவனம் பக்கம் போய், உங்களின் எம்மதமும் சம்மதம் உபதேசத்தை சொல்லி பாருங்களேன்..!

எங்கள் மதத்தில் இணைந்தால் மட்டுமே.. நீ எங்களுக்கு சம்மதம் என்று சொல்வார்கள்..!

suvanappiriyan said...

IIM Ganapathi Raman says:
January 2, 2014 at 3:05 am

//கடைசீ முறையாகக் கேழ்க்கிறேன். நீங்கள் உங்கள் அலக்கியப்படைப்பில் விவரித்த ராமகதையை மெய்யாக நடந்த விஷயமாகப் பதிவு செய்துள்ளீர்கள். தாங்கள் எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள்? இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? //

“கடைசி முறையாகக் கேட்கிறேன்….இலக்கியப்படைப்பில்” என்றுதான் தமிழ் எழுதவேண்டும். கேழ்வி என்பது தமிழ் இல்லை. அது தமிழைப்பழித்தலே. திண்ணையோ பிறவாசகர்களோ கேடகத்தவறினால் அவர்கள் ஏற்றுக்கொண்டதாக எடுத்துக்கொண்டு திருமபத்திரும்பத் தமிழைபழித்தல் தகாத செயலாகும்.

ராமகதை மெய்யாக நடந்தது என்று ஜயபாரதன் சொன்னாலும், கிருட்டிணக்குமார் சொன்னாலும் ஏற்கவியாலது. த்ரேயுத யுகத்தில் நடந்தது என நம்புகிறார்கள். அதாவது 75 லட்சம் ஆண்டுகளுக்கு முன். எனவே ராம கதையை எழுதிய அனைவரும் பிறர்வாய்க்கேட்ட கதையை எழுதினார்கள். மனிதன் உலகில் தோன்றியது அவ்வளவு காலத்திற்கு முன்பு கிடையாது. ஆக, நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கைகளுக்குத் தரவுகளும் ஆதாரங்களும் தேவையில்லை.

ஜயபாரதன் தான் சமூஹத்தில் ஒரு உலாவும் கதையைத்தான் மறு சிருஷ்டி செய்கிறேன் என்றும் அப்படிப்பட்ட சிருஷ்டிகள் படைப்பாளிகளின் விருப்பத்தின்படியேதான் நடக்குமென்றும், ஷாலி எடுத்துக்காடியவாறு நூற்றுக்கணக்கான இராமாயணங்களுள் இதுவும் ஒன்று என்று முடித்திருந்தால் கிருட்டிணக்குமாரின் மனோவேதனைகளுக்கிடமிரா.

இந்துக்களுள் தீவிர இந்துக்கள்தான் எழுதவேண்டுமென்போருக்கு, இந்தோனிசாவின் நாட்டுநாடகம் இதுவாகும். உலகத்திலே அதிக் இசுலாமியர்கள் உடைய நாடு. இராமாயணம் இந்திய காவியம். இந்துக்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது.

//என்னுடைய தொகுப்பை சமர்ப்பிக்க விழைகிறேன் ஐயன்மீர்.//

வரவேற்கப்படவேண்டிய ஒன்று. விரைவில் வரட்டும் அதுவும் இதுமுன்னர் சொல்லப்பட்ட இராமாயணங்களில் மீள்பதிவாகத்தான் இருக்கமுடியும். சிருஷ்டி இல்லாவிடில் அப்படித்தான். சிருஷ்டியின் போது படைப்பாளி புதிதாகவும் ஏற்றியும் இறக்கியும் சொல்லலலாம். கம்பர் செய்ததது போல. தரவுகள் கேட்பது. ஏன் அப்படி எழுதினாய் எனக்கேட்பதெல்லாம் தாலிபானித்தனமாகும். அப்படி எவரும் கிருட்டிணக்குமாரின் இராம கதைக்குக் கேட்க மாட்டார்கள்.

suvanappiriyan said...

//ஆனால், இந்த பூமியின் ஆதிதர்மத்தை அழித்தே தீருவோம் .. என்று கங்கணம் கட்டி கொண்டு, ரத்த காட்டேரிகலாய் அலையும், பயங்கரவாதிகளை வேரோடு களையெடுப்போம்..
இத்தகைய காட்டேரிகளிடம் அன்பு எடுபடாது, அகிம்சை கோலாச்சாது!//

இந்த பூமியின் ஆதி தர்மம் என்று இந்து மதத்தையா சொல்கிறீர்கள். நமது பாரத மண்ணில் மிகச்சிறந்த கலாசாரம் முன்பு இருந்தது. ஆனால் இப்போது உள்ளதோ பார்பனர்களுக்கு கால் கழுவி விடும் இந்து கலாசாரமே விஞ்சியிருக்கிறது. சுய மரியாதையுடைய எவனும் தன்னை சூத்திரன் என்றும் பார்பனர்களை பிராமணர்கள் என்றும் சொல்ல மாட்டான்.

மற்றபடி நமது பாரத மண்ணில் எல்லா மக்களும் எல்லா இன்பமும் பெற்று சுகமாக வாழ வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பமும்.