'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, May 10, 2014
+2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள்!
நமது தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி சுஷாந்தினிக்குக்கு பாராட்டுக்கள். முன்பெல்லாம் மாநிலத்தில் முதல் மாணவன் மாணவி என்றால் பார்பன குழந்தைகள்தான் என்ற நிலைமை கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமிய மக்களும் அந்த முதல் இடத்தை அலங்கரிப்பதை சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். ஆர்வமும் வாய்ப்பும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்தால் எந்த மாணவனும் சாதிக்க முடியும் என்பதை இது போன்ற செய்திகள் மெய்ப்பிக்கின்றன. இனி தமிழ் ஹிந்து தரும் பத்திரிக்கை செய்தியைப் பார்ப்போம்.
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 89.61% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். மாணவர் முகமது ஜாவீது முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்து 477 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 77 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.61 சதவீதமாகும். இதில் மாணவர்கள் 86.12 சதவீதமும், மாணவிகள் 92.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி மாநில அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதலிடத்தை பிரிம்ரோஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகமது ஜாவீது 1,191 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். 2-ம் இடத்தை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் ஆனந்தவேல் 1,187 மதிப்பெண் பெற்றும், 3-ம் இடத்தை காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹமீத்நஸீரா 1,186 மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்தனர்.
புதுச்சேரி மாநில அளவில் அரசு பள்ளிகளில் முதல் 10 இடங்களையும் காரைக்காலை சேர்ந்த மாணவர்களே பிடித்தனர்.
மாணவர் முகமது ஜாவீதின் தந்தை சையது நஜீம் வழுதாவூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமையாசிரியராக வேலை பார்த்து வருகிறார். அம்மா சரீனா பேகம் பிரிம் ரோஸ் மெட்ரிக் பள்ளியில் முதல்வராக உள்ளார்.
சாதனை படைத்தது குறித்து மாணவர் முகமது ஜாவீது கூறியதாவது:–
"எனது அக்கா பிளஸ்–2 தேர்வில் முதல் பாட பிரிவை தேர்ந்தெடுத்து அதிக மதிப்பெண் பெற்றார். எம்.பி.பி.எஸ். படித்து வெற்றி பெற்றார். அவர் ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். எனது அக்காவை போல் நான் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து படித்தேன். அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பாடங்களை படித்தேன். எனக்கு அதிக மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.
இதையடுத்து நான் எம்.பி.பி.எஸ். படிப்பேன். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகவேண்டும் என்பதே லட்சியமாகும். எனவே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் வெற்றி பெறுவேன்." இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
you say like this, but your brothers are discussing like this,
http://www.pakistantoday.com.pk/2014/03/15/comment/coucil-of-islamic-ideology-declares-womens-existence-anti-islamic/
and I am sure what they saying will be the true colour of Islam
தாவரவியல், விலங்கியலில்
சென்னை முஸ்லிம் மாணவி முதலிடம் ...
பிளஸ்-2 தேர்வில் சென்னை, டி.எஸ்.டி.ராஜா பெண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆஷிகா பானு தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இது குறித்து அந்த மாணவி கூறுகையில், பிளஸ்-2 தேர்வு நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்து டி.வி.பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி படித்ததால் சிறப்பிடம் பெற முடிந்தது. மருத்துவராக வேண்டும் என்பது எனது கனவு. எனவே மருத்துவப் படிப்பில் சேர உள்ளேன் என்றார். பாட வாரியாக
ஆஷிகா பானு பெற்ற மதிப்பெண் விவரம்:
தமிழ் - 188, ஆங்கிலம் - 184, இயற்பியல் - 200, வேதியியல் - 197, தாவரவியல் - 200, விலங்கியல் - 200, மொத்தம் - 1,169.
Post a Comment