Followers

Sunday, May 11, 2014

மோடி பார்பனராக சாதி மாறி விட்டாராமே! உண்மையா?"With the authority vested in me I hereby appoint Namo as a Brahmin since he has Brahminical gunas," Swamy tweeted from his handle @Swamy39, opening the floodgates of both scorn and back-slapping from fans and dissenters online.

'பார்பனர்களுக்கு உரிய அனைத்து குண நலன்களும் மோடிக்கு இருப்பதால் அவரை இன்று முதல் பார்பனராக அங்கீகரிக்கிறேன்' - சுப்ரமணிய சுவாமி.

மோடி தனது இருப்பை இருத்திக் கொள்ள ஹரேன் பாண்டியாவை போட்டு தள்ளியது: கோத்ரா ரயில் விபத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு 2000 அப்பாவி முஸ்லிம்களை கொன்றது: தனது பெயர் மீடியாவில் எப்போதும் இருக்க தன்னை கொல்ல வந்ததாக சொல்லி இள மங்கை இர்ஷத் ஜஹானை என்கவுண்டர் பண்ணியது: தனக்கு போட்டியான அத்வானியை மிரட்டி அவரை அடி பணிய வைத்தது: தனக்கு எதிராக கருத்து சொன்ன சஞ்சீவ் பட் என்ற ஐபிஎஸ் அதிகாரியை பைத்தியம் என்று முத்திரை குத்தி வீட்டுக்கு அனுப்பியது: குஜராத் ஒளிர்கிறது என்று வண்டி வண்டியாக பொய்களை அரங்கேற்றி பிறகு அம்பலப்பட்டுப் போனது: ஹேமந்த் கர்கரேயை போட்டு தள்ள பாகிஸ்தானிலிருந்து கூலியாட்களை கொண்டு வந்து அதற்கு குஜராத் கடற்கரையை சாதகமாக்கி தனது காரியத்தை சாதித்தது: இப்படி பல குண நலன்களை கொண்டவர் மோடி. சில நேரங்களில் தன்னையும் அறியாமல் சுவாமி உண்மையை பேசி விடுவார். அதுதான் இப்போதும் நடந்துள்ளது.

முக நூலில் இது சம்பந்தமாக ஒரு உரையாடலை பார்த்தேன். ரசிக்கும்படி இருந்தது. அதனை காப்பி பேஸ்ட் செய்கிறேன்:

கேள்வி :- உங்களின் மதிப்பிற்குரிய டாக்டர். சுப்ரமணியன் சுவாமி, திரு நரேந்திர மோடி அவர்களை பார்ப்பனராக அங்கீகரித்திருக்கின்றாரே? அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன கிளிமூக்கு அரக்கனே?

பதில் :- சுவாமியின், மோடிக்கான பார்ப்பன பட்டாபிஷேகம் இயல்பான ஒன்று. பார்ப்பனர்கள் எப்பொழுதும் அதிகார மையத்திலேயே காலங்காலமாய் இருப்பதற்கான முழுமுதற் காரணம் இதுதான். மேற்கத்திய நாடுகள் நிறைவேற்றத் தடுமாறிக் கொண்டிருக்கும் Integration Policy யை ஆயிராமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சிறப்பாக செயல்படுத்தத் தொடங்கியவர்கள். தாங்கள் கொண்டு வந்த இந்திரன் முதலான கடவுள்களை தூரத் தூக்கிவைத்துவிட்டு, புகுந்த இடத்தின் தெய்வங்களை தம் தெய்வமாக்கி , சொந்தக் கடவுள்களை இரண்டாம் பட்சமாக்கி விட்டுக்கொடுத்துவிட்டு அதிகாரத்தைப் பெற்றவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கடவுளுக்காக கலவரங்கள் நடைபெறும் நாகரிக உலகச்சூழலை நினைவில் கொண்டு மேற்சொன்னதைப் பாருங்கள். தமக்கு வேண்டும் என்றால், யாராயிருந்தாலும், தம்மவர் ஆக்கிக்கொள்வர். காகபட்டர் , சித்பவன் பார்ப்பனர்களைக் காப்பாற்ற, சிவாஜிக்கு செய்துவைத்த தன்னிச்சையான ஷத்திரிய அபிஷேகம் இவ்வகையே.

பார் போற்றும் இராமனுசர் கூட, சைவ அடியாட்களால், வைணவ அடி ஆட்களின் எண்ணிக்கைக் குறைந்தபொழுது, 'எல்லோரையும்' வைணவர் ஆக்கினார். புத்தமும் சமணமும் வேதமதத்தை விழுங்கியபொழுது, அதே புத்த சமணக்கொள்கைகளை வைத்து வேதத்தை மீட்டு எடுத்தவர்கள். அவ்வளவு ஏன், சமகாலத்தில், காங்கிரஸ் தனது எதிரியானவுடன் , தனக்குக் குடியரசுத்தலைவர் பதவிதராத கோபத்தில், எப்படியும் திமுக அதிகாரத்தை அடைந்துவிடும் என்று உறுதியான நிலையில், திமுகவின் தோளில் ஏறிக்கொண்டார் ராஜாஜி. ஆனால் அண்ணா, சிவாஜியைப் போன்றவர், கமுக்கமாய் உப்புசப்பில்லாத காகபட்டர் ராஜாஜியை எதிர்கால நலன் கருதி வண்டியில் ஏற்றிக்கொண்டார். 96 ஆம் ஆண்டு, சர்வசாதாரணமாக வென்றிருக்கக் கூடிய, திமுகவின் தோளில் சோ. இராமசாமி ஏறிக்கொண்டதும் இவ்வகைதான்.

சுவாமியிடம் பிடித்ததே, இலைமறை காய்மறையாய் இருக்கும் பஜகோவிந்த விசயங்களை அப்பட்டமாக செய்து, சமயங்களில் சுணங்கிப்போய் இருக்கும் திராவிடக் கருத்தியலை பீனிக்சாய் எழுப்பிவிடுவதுதான். ஒரு சூத்திரனாய் சுவாமியை கிண்டல் செய்வதைவிட , நாம் கவனிக்க வேண்டியது, யாரால் என்பதல்ல, எதற்காக என்பதுதான் நோக்கம், என்று கிடைத்த ஜீப்பில் ஏறிக்கொண்டு செய்து முடிக்கவேண்டிய காரியங்களை எப்படி கண்ணும் கருத்துமாய் அவர் செய்கிறார் என்பதை

"இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பதைத்தான் நான் இவரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றேன்.

அரசியலிலும் அகாடெமியாவிலும் ஏனைய எல்லாவகையிலும் தோற்றுப்போன சுவாமி, தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்திருக்கும் கடைசி ஆயுதமே இந்த பார்ப்பன பட்டாபிஷேகம். பார்க்கலாம், சுவாமியுடன் நீண்ட நாள் நண்பர்களாக இருந்தவர்கள் மிகக்குறைவு. மோடி எத்தனை நாளைக்கு என்று? கடைசியாக சில சந்தேகங்கள், சுவாமி ஒரு தமிழ்ப்பார்ப்பனர், நரேந்திராவிற்கு என்ன பார்ப்பனப் பின்னொட்டு கொடுப்பார்? ஐயர் , ஐயங்கார், குருக்கள் ? அவரின் கூட்டணியில் இருக்கும் பாமகவினர் ஏற்கனவே ஷத்திரியர்கள் ஆகிவிட்டதால், வைகோவும் பார்ப்பனர் ஆவாரா என்பதை அறியவும் ஆவலாக இருக்கின்றேன்.

--கிளிமூக்கு அரக்கன்

No comments: