Followers

Saturday, May 24, 2014

ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?வளி மண்டலத்தின் தோற்றம் உருவாக்கம் அதன் கால நிலை பற்றி 900 வருடங்களுக்கு முன்பு வரை மனிதனுக்கு போதிய அறிவு இல்லாமலேயே இருந்தது. பாஸ்கல் என்ற அறிவியல் அறிஞர்தான் வளிமண்டலத்தின் பல புதிர்களை அவிழ்த்தார். 1648 ஆம் ஆண்டு பாஸ்கல் தனது அறிவியல் ஆய்வுகளை வெளியிட ஆரம்பித்தார். இவரது ஆய்வானது கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் காற்றின் அழுத்தமானது குறைந்து கொண்டே வரும் என்று தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார். வளி மண்டல அளவு என்பது எண்ணிக்கையில் வராததும் நம்மால் சென்று விட முடியாத தூரமுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது சூரிய குடும்பம் மட்டும் அல்லாது இது போன்ற எண்ணற்ற கேலக்சிகள் வளி மண்டலத்தில் பயணித்த வண்ணமே உள்ளன. அவற்றை எல்லாம் சென்று அடைந்து விடக் கூடிய கண்டுபிடிப்புகளை மனிதன் இதுவரை உருவாக்கவில்லை. இனி வருங்காலத்தில் சாத்தியப்படலாம்.

ஒரு விண்வெளி வீரன் கடல் மட்டத்திலிருந்து 15000 அடியிலிருந்து 25000 அடி வரை செல்வதாக வைத்துக் கொள்வோம். அவனது இந்த பயணத்தில் சுவாசத்தைப் பொறுத்தவரையில் எந்த சிக்கலுக்கும் உள்ளாக மாட்டான். ஏனெனில் அவனுக்கு தேவையான ஆக்சிஜன் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தாராளமாக கிடைத்து விடுகிறது. ஆனால் அவன் 25000 அடிகளுக்கு மேலே சென்றான் என்றால் வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைபாட்டால் அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆக்சிஜன் குறைவானாதால் அவனது இதயம் இறுக்கமாக ஆரம்பிக்கிறது. சுவாச அமைப்பு சுத்தமாக சீர்குலைந்து அந்த விண்வெளி வீரனை இறப்பு வரை கொண்டு சென்று விடுகிறது. எனவேதான் விண்வெளி பயணம் மேற் கொள்ளும் வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தங்களுக்கு பின்னால் கட்டிச் செல்கின்றனர்.

இது போன்று வளி மண்டலத்தில் உள்ள அடுக்குகளில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியும் அங்கு ஆக்சிஜன் குறைவாவதால் மனிதனின் இதயம் சுருங்கி இறப்பு வரை கொண்டு சென்று விடும் என்ற உண்மையையும் கடந்த 500 வருடங்களாகத்தான் அறிந்து வருகிறோம். குறைந்த அழுத்தம், அதிக அழுத்தம் என்ற இரு வேறு நிலைகள் வளிமண்டலத்தில் உள்ளதே விஞ்ஞானிகளுக்கு இதே கால கட்டத்தில்தான் தெரிய வருகிறது. 30000 அடிகளுக்கு மேல் மனிதன் வளி மண்டலத்தில் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்களோடு செல்ல வேண்டும். இல்லை என்றால் இறந்து விடுவான் என்பது தற்போது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்.

இன்றும் கூட பலர் விண்வெளி பயணம் என்பது சுத்த கட்டுக் கதை: நமது பூமி தட்டையானது: உருண்டையானது அல்ல: என்று வாதிடுபவர்களை பார்க்கிறோம். மனிதன் விண்வெளி பயணம் மேற் கொள்வான் என்பதை 1400 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டான். ஆனால் இன்று நமக்கு இது அரிச்சுவடி பாடம். இனி குர்ஆனின வசனத்துக்கு வருவோம்.

'ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'

-குர்ஆன் 6:125

எவ்வளவு அழகிய அறிவியல் முன்னறிவிப்பை மிக அலட்சியமாக சொல்லிச் செல்கிறது இந்த குர்ஆன் வசனம்! அன்றைய மக்களுக்கு இதயம் இறுக்கமாவதையும், மனிதன் விண்வெளியில் பயணிப்பான் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. அது எப்படிப்பட்ட அனுபவம் என்பதும் அன்றைய மனிதர்களுக்கு தெரியாது. இன்றும் கூட விண்வெளி வீரர்களைத் தவிர மற்றவர்கள் அந்த அனுபவத்தை அறிய முடியாது. குர்ஆனை வாசிக்கும் இன்று நமக்கு அந்த இதயம் எந்த நிலையை அடையும் என்பதை விண்வெளி வீரர்களின் மூலம் அறிந்து கொள்கிறோம். பிற்கால அறிவியல் வளர்ச்சி பெற்ற நம்மைப் போன்ற மக்கள் இது இறை வேதம்தான் என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இது போன்ற வசனங்களை ஆங்காங்கே இறைவன் நமக்கு தந்திருக்கிறான். இது இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் நமக்கு சான்று பகன்று கொண்டிருக்கிறது.5 comments:

ஆனந்த் சாகர் said...

//'ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'

-குர்ஆன் 6:125//

மேற்கண்ட் குரான் வசனத்தில் 'உள்ளம்' என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தவில்லை. 'மார்பகம்'(breast ) என்றுதான் கூறுகிறான். உங்கள் கூட்டம் "உள்ளம்", 'இதயம்' என்றெல்லாம் மொழிபெயர்ப்பு மோசடி செய்து பாமர மக்களுக்கு படம் காட்டுகிறது.

இந்த வசனத்தில் அல்லாஹ் மார்பகத்தை(breast) விரிவாக்குவதாகவும் சுருக்குவதாகவும்தான் கூறுகிறான், உள்ளத்தையோ(mind) இதயத்தையோ (heart) அல்ல.

6:125 வசனத்தில் மார்பகம் என்று சரியாக கூறுகிற மொழிபெயர்ப்புகளை கீழே பார்க்கவும் :

Ahmed Ali:

Thus God guides whomsoever He please by opening wide his breast to surrender; and Straitens the breasts of those He allows to go astray, (who feel suffocated) as if they were ascending the skies. Thus will God punish those who do not believe.

Muhammad Sarwar :

God will open the hearts of whomever He wants to guide to Islam, but He will tighten the chest of one whom He has led astray, as though he was climbing high up into the sky. Thus, God places wickedness on those who do not accept the faith.

Hamid S. Aziz :

Whomever Allah wishes to guide, He expands His breast unto the Surrender (Islam); but whomever He wishes to lead astray, He tightens and constricts his breast as though he were climbing steeply into heaven. Thus does Allah set dishonour on those who do not believe.

Faridul Haque :

And whomever Allah wills to guide, He opens his bosom for Islam; and whomever He wills to send astray, He makes his bosom narrow and firmly bound as if he were being forced by someone to climb the skies; this is how Allah places the punishment on those who do not believe.

Shakir :

Therefore (for) whomsoever Allah intends that He would guide him aright, He expands his breast for Islam, and (for) whomsoever He intends that He should cause him to err, He makes his breast strait and narrow as though he were ascending upwards; thus does Allah lay uncleanness on those who do not believe.

Yusuf Ali :

Those whom Allah (in His plan) willeth to guide,- He openeth their breast to Islam; those whom He willeth to leave straying,- He maketh their breast close and constricted, as if they had to climb up to the skies: thus doth Allah (heap) the penalty on those who refuse to believe.

Pickthall :

And whomsoever it is Allah´s will to guide, He expandeth his bosom unto the Surrender, and whomsoever it is His Will to send astray, He maketh his bosom close and narrow as if he were engaged in sheer ascent. Thus Allah layeth ignominy upon those who believe not.

Ali Unal :

Thus, whomever God wills to guide, He expands his breast to Islam, and whomever He wills to lead astray, He causes his breast to become tight and constricted, as if he were climbing towards the heaven. Thus God lays ignominy upon those who do not believe (despite many signs and evidences).

Amatul Rahman Omar :

But as to whom Allâh intends to guide He opens his bosom to Islam and as to him whom He allows to go astray He makes his bosom close and constricted, so that he feels as though he were climbing up the heights. Just as Allâh does this He lays ignominy on those who do not believe.

மலையில் ஏறினால் மார்பகம் சுருங்கும் என்று அறிவியல் கூறுகிறதா?

குரானின் உளறல்களில் அறிவியலை தேடும் மதிகெட்ட வேலை ஏனப்பா உமக்கு?

yalali1956 said...

For my Dear Ananda Sahar !!!

I hope you will know me. I am so happy and thank you for your research in Quranic verses and findings ( wrong interpretations )

I recall my advice to you earlier that if you are in doubt about anything which you can't solve your self go to the learned or Expert on the subjects in which you have genuine doubts.

Merely looking at any translation ( without having the Original script in its real form ) and trying out meaning and finding solution in subjects like religious script won't help your understanding in broder way.

This is what happened in your explanation for Holy Quran (Sura 6 verse 125 ).
Please look at the original in arabic ( the language of the Holy Quran )

فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ (صَدْرَهُ) -/1 لِلإِسْلَـمِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ (صَدْرَهُ) -/2 ضَيِّقاً حَرَجاً كَأَنَّمَا يَصَّعَّدُ فِى السَّمَآءِ كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ
الرِّجْسَ عَلَى الَّذِينَ لاَ يُؤْمِنُونَ
sura 6 verse 125

Translation:
ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'

-குர்ஆன் 6:125

If you see the original verse the noun which is quoted in two places (1 and 2 in breakouts)-
( صَدْرَهُ) indicates as "chest" , not as "Breast" or " Bosom".
The word for "breast" in arabic is " صَدْرَ " which is not used here in the original script (arabic).

If in the translation the word " Breast " is used it is inappropriate. That is how i ask not only you but also me as well to go to the original roots ( Arabic)

For your own understanding in goole translate you find this:-

Translate
ArabicEnglishTamilDetect languageEnglishArabicTamil

Chest
صدرة-noun---------- (Real meaning )

Google Translate for Business:Translator

May Almighty Allah guide you to explore the Holy Quran with open mind and taste the real fruit of it. Ameen.

சுவனப் பிரியன் said...

சகோ யாழாளி!

மிக அருமையான விளக்கங்கள். ஆனால் ஆனந்த் சாகர் சிந்திக்க மாட்டார். இறைவன் அவரின் அறிவை விசாலமாக்குவானாக! உங்களின் நீண்ட பின்னுட்டத்திற்கு நன்றி!

ஆனந்த் சாகர் said...

திரு. யலாளி,

மற்ற முஸ்லிம் அறிஞர்கள் மார்பகம்(breast) என்று செய்த மொழி பெயர்ப்புகள் தவறு என்று நீங்கள் கூறுகிறபடி வைத்துக்கொள்வோம். நீங்கள் மார்பு(chest) என்பதுதான் சரியான மொழி பெயர்ப்பு என்று கூறுகிறீர்கள். சரி அப்படியே வைத்துக்கொள்வோம்.

பிறகு எப்படி மார்பு(chest) என்பதை உள்ளம் (mind) என்று உங்கள் வசதிக்கு ஏற்ப திரித்து கூறுகிறீர்கள்? அந்த உள்ளம் என்பதை இதயம்(heart ) என்று ஏன் மறுபடியும் திரிக்கிறீர்கள்? மார்பும் இதயமும் ஒன்று என நினைக்கிறீர்களா?
இரண்டும் வெவ்வேறு இல்லையா?

மலையில் ஏறினால் மார்பு சுருங்கும் என்று அறிவியல் கூறுகிறதா? உயரே போகும்போது ஆக்சிஜன் அளவு குறையும், அதனால் மூச்சு திணறல் ஏற்படும் என்பது நமக்கு தெரியும். மார்பு(chest ) சுருங்கும் என்று எந்த அறிவியல் அறிஞர் கூறினார்?

ஆனந்த் சாகர் said...

திரு,யலாளி,

//Merely looking at any translation ( without having the Original script in its real form ) and trying out meaning and finding solution in subjects like religious script won't help your understanding in broder way.//

அதானே பார்த்தேன். அறிவுரீதியாக சரியான பதில் சொல்ல முடியவில்லை என்றால் உடனே அரபியில் குரானை படித்தால் தான் சரியாக புரியும், மொழிபெயர்ப்புகள் உதவாது என்று முஸ்லிம்கள் கூற ஆரம்பித்து விடுவார்கள்.

அரபி மொழியை தாய் மொழியாக கொண்டிராதவர்கள் குரானை புரிந்து கொள்ள முடியாது என்றால் அது அரேபியர்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாம் அரேபியர்களுக்கு மட்டும்தான் புரிகிற மதம், அவர்களால் மட்டுமே பின்பற்றக்கூடிய மதம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.