நான் எதுவும் கருத்து சொல்வதை விட கார்ட்டூனிஸ்ட் பாலா நேற்று இட்ட கார்ட்டூன் பல எண்ணங்களை வெளிப்படுத்தி விடும்.
மோடி வெற்றி பெற்றார் என்பதை விட காங்கிரஸின் கையாலகாத தனத்தால் கிடைத்த வெற்றியே இந்த பவனிக்கு காரணம் என்று சொல்லலாம். மோடி வந்தாலும் ஊழல் குறையப் போவதில்லை. விலைவாசி குறையப் போவதில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் தீரப் போவதுமில்லை. இன்னும் ஆறு மாதத்தில் இதனை ஓட்டு போட்ட சாமான்யன் உணரும் நேரம் தன் மேல் உள்ள வழக்குகளையும் ஆர்எஸ்எஸ் மேல் உள்ள வழக்குகளை எல்லாம் அதிகார மையத்தை வைத்து சரி செய்திருப்பார் மோடி. அதற்குத்தான் இத்தனை முஸ்தீபுகளும். இந்த வேலையை செய்து முடிக்கத்தான் அத்வானியை ஓரம் கட்டி விட்டு மோடியை முன்னிறுத்தியது ஆர்எஸ்எஸ்.
மோடி வந்து விட்டதால் இனி முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியோ என்று எவரும் பயப்பட தேவையில்லை. கலவரம் செய்பவர்களே இன்று ஆட்சிக் கட்டிலில் இருப்பதால் தங்களின் ஆட்சிக்கு அவப் பெயர் வந்து விடக் கூடாது என்பதால் அடக்கியே வாசிப்பர். இவர்கள் ஆட்சியை விட்டு இறங்கும் வரை குண்டுகளும் வெடிக்காது. :-) பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி தீவிரவாதிகளும் வர மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் எஜமானர்கள் தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பதால் உத்தரவு வரும் வரை அடங்கியே இருப்பர். தெகோடியா போன்றவர்களின் தூண்டுதலால் நாளை மோடி இந்துத்வாவை கையில் எடுத்தால் குஜராத் முஸ்லிம்களைப் போன்று மற்ற மாநில முஸ்லிம்கள் அமைதியாக இருந்து விடப் போவதில்லை. மேலும் வட நாடுகளில் ராமரின் பெயரால் சேர்த்த ஓட்டுக்களை தென் மாநிலங்களில் பிஜேபியால் கொண்டு வர முடியவில்லை. அடுத்து எங்கெல்லாம் இஸ்லாத்துக்கு எதிர்ப்பு அதிகமாகிறதோ அந்த இடங்களில் இஸ்லாம் அதிகம் வளர்ந்ததாகத்தான் சரித்திரம்.
முக நூலில் மாணிக் வீரமணி என்ற இந்து சகோதரரின் ஸ்டேடஸ் ஒன்றே எனது கருத்தை சரியென்று பிரதிபலிக்கும்.
தன்னை நம்பி ஓட்டளித்திருக்கும் கோடான கோடி சாமான்ய மக்களின் அபிலாசைகளை இனி வரும் ஐந்து வருடங்களில் மோடி நிறைவேற்ற பாடுபட வேண்டும். அதை விடுத்து பொது சிவில் சட்டம், ராமர் கோவில், பசு வதை என்று எதற்கும் உதவாத செயல்களை மோடி கையிலெடுத்தால் முன்பு வாஜ்பாய்க்கும், கல்யாண்சிங்குக்கு உபியிலும் ஏற்பட்ட கதிதான் இவருக்கும் ஏற்படும்.
பொறுத்திருந்து பார்ப்போம்... மோடியின் ஐந்து வருட ஆட்சியை....
8 comments:
//தெகோடியா போன்றவர்களின் தூண்டுதலால் நாளை மோடி இந்துத்வாவை கையில் எடுத்தால் குஜராத் முஸ்லிம்களைப் போன்று மற்ற மாநில முஸ்லிம்கள் அமைதியாக இருந்து விடப் போவதில்லை.//
உங்கள் கூட்டம் பயங்கரவாத செயல்களை செய்யாமல் இருந்தால் எந்த அசம்பாவிதமும் நடக்க போவதில்லை. பிறகு ஏன் உங்களுக்கு தேவையில்லாத பயம், அந்த பயத்தை மறைக்க இப்படியொரு மிரட்டல்?
//இவர்கள் ஆட்சியை விட்டு இறங்கும் வரை குண்டுகளும் வெடிக்காது. :-) பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி தீவிரவாதிகளும் வர மாட்டார்கள். //
தேசிய நலனில் அக்கறை உள்ள கட்சியும் அதை சேர்ந்த தீரமிக்க தலைவரும் தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்டதால் பயங்கரவாத கூட்டம் பயந்துபோய் தங்கள் வாலைசுருட்டிக்கொண்டு அடங்கி இருக்கும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அவர்கள் மீறி வாலாட்டினால் வால் ஒட்ட நறுக்கப்படும்.
//மோடி வெற்றி பெற்றார் என்பதை விட காங்கிரஸின் கையாலகாத தனத்தால் கிடைத்த வெற்றியே இந்த பவனிக்கு காரணம் என்று சொல்லலாம். //
மோடி வெற்றி பெற்று உங்களை போன்றவர்களின் முகத்தில் நன்றாக கரியை பூசிவிட்டார்.
என்ன பண்றது சுவனப்ரியர், இப்படி எல்லாம் பதிவு போட்டு தான் ஆறுதல் படுத்தி கொள்ளவேண்டும். அது அண்ணன் பீ.ஜே அடுத்து என்ன ஸ்டெப் எடுக்க போகிறார். கொஞ்ச நாள் முன்னாடி ரஜினி வாய்ஸ், ரஜினி வாய்ஸ் என்று கொஞ்சம் கோமாளிகள் கூவி திரிந்த மாதிரி, அண்ணனும் கொஞ்சம் பிலிம் காட்டினாரே, என்னமோ இவங்க ஓட்டு போட்டு தான் தமிழ் நாட்டுல எல்லாரும் ஜெயிக்கிற மாதிரியும், இவனுக இல்லேன்னா இந்தியால யாரும் ஆட்சிக்கு வர முடியாது மாதிரியும் என்ன ஆட்டம் போட்டிங்கய்யா, தென்கச்சி சாமிநாதன் ஸ்டைலில் இன்று ஒரு தகவல் சொல்வானே ஒரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - என்னென்னவோ சொன்னானே அவன் என்ன பண்றான் இப்போ
//பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி தீவிரவாதிகளும் வர மாட்டார்கள்//
பாகிஸ்தானில் இருந்து எதற்கு வரவேண்டும். அதுதான் உள்ளுக்குளேயே நீங்கள் இருக்கிறீர்களே போதாதா. உங்கள் சகோதரர்களின் உதவியும் இருந்தால் உங்கள் கூட்டத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும்.
https://www.facebook.com/photo.php?v=790016751017341
Sorry, you may not have permission to add this comment or the original post may have been deleted.
facebook தளத்தில் கோமாளி செய்யது இப்ராகிம் உரைக்கு கமெண்ட் போட்டால் இப்படி வருகிறது. ஹா ஹா ஹா
வாழ்க மோடி. வெல்க பாரதம்.
சுவனப்ரியர், இந்துத்துவா இந்துத்துவா என்று இளக்காரம் செய்தீரே, ஓட்டு போட்ட ஒட்டு மொத்த மக்களும் பார்ப்பனர்களா? என்னவோ பார்ப்பனர்கள் மட்டும் தான் இந்துக்கள் மாதிரியும் மற்ற மக்கள் எல்லாம் மோடிக்கு ஓட்டு போடாத மாதிரியும் முக்கி முக்கி பதிவு போட்டீர்கள். நானும் பார்ப்பனன் இல்லை. எனக்கு மோடி தான் தலைவர். இப்போது பதிவு போடும் 'மோடிக்கு ஓட்டு போட்ட அனைவருமே பார்ப்பனர்களாக மாறி விட்டார்கள்' என்று
//வாழ்க மோடி. வெல்க பாரதம்.
சுவனப்ரியர், இந்துத்துவா இந்துத்துவா என்று இளக்காரம் செய்தீரே, ஓட்டு போட்ட ஒட்டு மொத்த மக்களும் பார்ப்பனர்களா? என்னவோ பார்ப்பனர்கள் மட்டும் தான் இந்துக்கள் மாதிரியும் மற்ற மக்கள் எல்லாம் மோடிக்கு ஓட்டு போடாத மாதிரியும் முக்கி முக்கி பதிவு போட்டீர்கள். நானும் பார்ப்பனன் இல்லை. எனக்கு மோடி தான் தலைவர். இப்போது பதிவு போடும் 'மோடிக்கு ஓட்டு போட்ட அனைவருமே பார்ப்பனர்களாக மாறி விட்டார்கள்' என்று//
மோடியின் ஒரு வருட ஆட்சிக்குப் பின் நான் சொன்னது சரிதான் என்று உங்களைப் பொன்றவர்கள் ஒத்துக் கொள்ளும் காலமும் வரத்தான் போகிறது. பொறுத்திருந்து பார்க்கவும்.
Post a Comment