

'ஆம் ஆத்மி' பார்டிக்காக பிரசாரம் செய்து வந்து மயூர் வாரணாசியில் இறந்துள்ளார். துளசி கட் என்ற இடத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இறந்த அந்த நபரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இயற்கையான மரணமா? அல்லது அரசியல் கட்சிகளின் திட்டமிட்ட படுகொலையா என்பது விசாரணையில் தெரிய வரும்.
-----------------------------------------

மஹராஷ்ட்ராவில் வெடிக்குண்டு தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
- அபினவ் பாரத், வி. ஹெச்.பி யை சார்ந்த 4 பேர் கைது!
மஹராஷ்ட்ரா மாநிலத்தில் கர்நாடாகா எல்லைக்கு அருகே இருக்கும் ஊர் ககல் டவுன். இங்கு லட்சுமி ஹில் பகுதியில் வெடிக்குண்டு தொழிற்சாலை இயங்கி வந்ததை கோல்ஹாபூர் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிருந்து ஜெலட்டின் குச்சிகள், ரிமோட் சுவிட்சுகள், ரிமோட் கண்ட்ரோல் உபகரணங்கள், ஸ்க்ரூ ட்ரைவர்கள், ஸ்டீல் கிளிப்புகள், வயர் கட்டர்கள், வாள்,கத்தரிகோல், சுத்தியல்கள், பேட்டரி செல்கள், மின்சார கட்டுப்பாட்டு உபகரணம், எனர்ஜி சர்க்யூட் வயர், சுவிட்ச் கார்ட் மற்றும் காகிதத் துண்டுகளில் வரையப்பட்ட வரைப்படங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அபினவ் பாரத் அமைப்பை சார்ந்த அஜிங்யா மனோகர் போபடே (வயது 22), அனிகட் பிவாஜி மாலி (வயது 22), நிலேஷ் பபன்ராவு பாடீல் (வயது 20) அனில் பொபாட் கராசே (வயது 26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுக்குறித்து ககல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கூறும்போது:
வெடிக்குண்டை தயாரிக்க தேவையான பொருட்களை பாடீல் மற்றும் கராஸே சப்ளை செய்ததற்காக கைது செய்யப்பட்டனர். போபடே மற்றும் மாலி ஆகியோர் வெடிக்குண்டை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
போபடே எலக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ படித்தவர். மாலி வயர்மேனாக பணியாற்றுபவர். இவர்கள் அதிநவீன
உபகரணங்களை தயாரித்துள்ளனர். விலை உயர்ந்த கார்களில் வெடிக்குண்டை வெடிக்க வைக்க உதவும் எலக்ட்ரானிக் லாக்கிங் சிஸ்டமாக இதனை பயன்படுத்த முடியும்’ என்றார். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. மஹராஷ்ட்ரா மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும்
வேளையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட இவர்கள் குண்டுகளை தயாரித்திருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. வெடிப்பொருட்களை இவர்களுக்கு யார் சப்ளைச் செய்தார்கள் என்பதுக் குறித்தும் இவர்கள்
யாருக்கு வெடிக்குண்டுகளை தயாரித்து விற்றார்கள் என்பது குறித்தும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
1 comment:
ஆயுத கடத்தலில் ஈடுபட்ட 12–ம் வகுப்பு மாணவர்கள் ரஸ் தீவிரவாதி இயக்கத்திற்கு தொடர்பா?
டெல்லியில் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட 12–ம் வகுப்பு மாணவர்கள் RSSக்கு தொடர்பா?
டெல்லியில், ஒரு மேம்பாலத்துக்கு அடியில் ஆயுதங்கள் கைமாறப்போவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு குவிந்தனர்.
அங்கு பையுடன் ஓர் இளைஞர், யாரையோ எதிர்பார்த்து நின்றிருந்தார். அவரது பையை சோதனையிட்டபோது, அதில் 10 நவீன கைத்துப்பாக்கிகளும், 5 தோட்டா உறைகளும் இருந்தன. அவர் பெயர் அஜய் அலவா (வயது 19) என்றும், 12–ம் வகுப்பு மாணவர் என்றும், என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வருவதாகவும் தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் மத்தியபிரதேச மாநிலம் தாரம்புரியில் சக மாணவர்களுடன் ஓர் அறையில் வாடகைக்கு தங்கி இருப்பது தெரிய வந்தது.
பணத்துக்கு ஆசைப்பட்டு, மத்தியபிரதேசத்தின் பிரபல ஆயுத வியாபாரி மற்றும் தீவிரவாதி தன்மன்சிங்குக்கு அவர் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.
மத்தியபிரதேசத்தில் இருந்து டெல்லி, ஆக்ராவுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று ஒப்படைக்க அவர் ஒரு தடவைக்கு ரூ.3 ஆயிரம் கமிஷன் பெற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தன்மன்சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள்.
Post a Comment