Followers

Sunday, May 04, 2014

நான்அதிகம் நேசிக்கும் நாடு எனது தாய்மண் தான்!

திரு அரிசோனன்!

// ஜனாப் சுவனப்பிரியன்!
அப்படிப்பட்ட, இஸ்லாமிய நாட்டிற்கு, ஷாரியாப்படி நடத்தப்படும் நாட்டிற்கு நீங்கள் செல்லத் தயாரா, அல்லது நீங்கள் குறிப்பிடுவது போன்ற, இந்துக்களால் ஆட்சி செய்யப்படும், //முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாகத்தானே நடத்தப்படுகின்ற// இந்தியாவில் இருக்க விரும்புகிறீர்களா?//


எனது தாய் நாடான இந்தியாவில் இருப்பதற்கு யாருடைய அனுமதியையும் பெற தேவையில்லை நண்பரே! எனது தாய் நாடு பல வலிகளை எனக்குள் கொடுத்துள்ளது. அது மாறாத பல ரணங்களை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் எனது தாய் மண்ணை நேசிப்பதிலோ இந்த மண்ணை காப்பதிலோ எள் அளவும் பின் வாங்க மாட்டேன். ஒருவன் தனது தாய் நாட்டை நேசிப்பதென்பது அவனது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அது ஒருவரால் சொல்லிக் கொடுத்து வருவதில்லை.

சவுதிக்கு பணி நிமித்தம் வந்ததில் பல சௌகரியங்களை நான் பெற்றுக் கொண்டாலும் தாய் நாட்டை அதுவும் தமிழக மண்ணை விமானம் மிதித்தவுடன் எனது உடம்பினுள் ஏற்படும் ஒரு புத்துணர்ச்சிகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. அலுவலக அறை, சமையல் அறை, படுக்கை அறை, ஏன் கழிவறை கூட சவுதியில் அவ்வளவு சுத்தமாகவும், மணத்துடனும் இருக்கும். ஆனால் இந்த சுத்தத்திலும் மணத்திலும் ஒரு அந்நியமே தென்படும். தமிழகத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியேறியவுடன் பணம் பிடுங்கும் சுங்கத் துறையினரும், பிச்சைக்காரர்களும், தெருவோர குடிசைவாசிகளும், பேரூந்து நிலைய மூத்திர வாசனையும், பலரின் வியர்வையின் துர்நாற்றமும் ஒரு வித அயற்சியை தந்தாலும் இது நான் பிறந்த மண் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நான் செல்கிறேன். இங்கு எனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனாலும் நான் சவுதியில் எந்த கட்டுப்பாடுகளோடு இருந்தேனோ அதே கட்டுப்பாடுகளை எனது தாய் நாட்டிலும் பின்பற்றுகிறேன்.

பல தலைமுறைகளாக எந்த கஷ்டமும் இன்றி இறைவன் எங்களின் குடும்பத்தை நலமாகவே வைத்துள்ளான். உற்றார் உறவினர் அக்கம் பக்கத்தினர் இந்து கிறித்தவ நண்பர்கள் என்று பலரையும் நல்லவர்களே எங்களைச் சுற்றி உள்ளனர். ஆனால் நானும் எனது குடும்பமும் மட்டுமே நன்றாக இருந்து விட்டால் போதுமா?

இஸ்லாத்தை ஏற்று அரபு பெயரை வைத்த ஒரே காரணத்திற்காக 'தீவிரவாதி' என்ற பழிச் சொல்லை சுமந்து 10 வருடம் 15 வருடம் என்று வெறும் விசாரணைக் கைதிகளாகவே காலம் தள்ளும் எத்தனையோ குடும்பங்களை நான் சந்தித்துள்ளேன். 10 வருடம் அவனது இளமை எல்லாம் கழிந்தவுடன் 'நிரபராதி' என்ற பெயருடன் வெளி வரும் அவனை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? முன்பு 'தீவிரவாதி' என்று கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் பிரசுரித்த நமது நாளேடுகள் இவனது விடுதலையையும் போடலாம் தானே! அப்படி போட்டதா?

இன்றில்லா விட்டாலும் இன்னும் பல ஆண்டுகள் கழித்தாவது இந்த இஸ்லாமியனை எனது தாய் நாடு புரிந்து கொண்டு அரவணைக்கும் என்ற நம்பிக்கையில் காலம் தள்ளும் பல கோடி இஸ்லாமியர்களில் நானும் ஒருவன். எனவே வெளி நாடுகள் பல சொர்க்கபுரியாகவே இருந்தாலும் எனது தாய் நாட்டுக்கு ஈடாக முடியாது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

எனது மூதாதையர்கள் வாழ்ந்த பூமி: இன்று நான் வாழ்ந்து வரும் பூமி: நாளை எனது குழந்தைகள் தங்களின் வாழ்வை துவக்கப் போகும் இந்த பாரத பூமி என்றுமே எங்கள் தாய் நாடுதான் என்று சொல்லிக் கொள்கிறேன். அதற்கு ஈடு இணை வேறு நாடுகளை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன். ஆனால் வருங்காலமும் இதே போன்ற இன்பத்தை இந்த நாடு பெற வேண்டுமானால் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற ஒரு தன்னலமற்ற தலைவரை ஒரு இயக்கத்தை நமது நாடு பெற வேண்டும். அதில்தான் நமது நாட்டின் வெற்றி அடங்கியுள்ளது.

12 comments:

Anonymous said...

//எனது தாய் நாடு பல வலிகளை எனக்குள் கொடுத்துள்ளது. அது மாறாத பல ரணங்களை என்னுள் ஏற்படுத்தியுள்ளது.//

கொஞ்சம் அந்த வலிகள் மற்றும் ரணங்கள் எப்படி ஏற்பட்டன என்று விளக்கமாக சொல்ல முடியுமா.

சுவனப் பிரியன் said...

ஹானஸ்ட் மேன்!

//1) மற்றவற்றை எரிக்க உத்திரவிட்டார் என்றால் எரிந்துபோன அவையும் குரான்கள்தானே? உங்களைபோருத்தவரை அவை புனிதமானதுதானே?
அப்போது அவை எரிக்கபட்டால் தவறில்லை. ஆனால் இப்போது யாராகிலும் எரித்தால் மட்டும் எகிறி குதிப்பதுஎனப்பா?
2) 7 வித குரான்கள் என்றால் அல்லா நபிக்கு 7 விதமாக மெசேஜ் அனுப்பினாரா?//

குர்ஆன் முழு புத்தமாக முகமது நபிக்கு கிடைத்து விடவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக சிறுக சிறுக சிறு சிறு அத்தியாயங்களாக அருளப்பட்டது. அன்றைய மக்கள் அந்த சிறு சிறு அத்தியாயங்களை வசதிக்கேற்றவாறு தோல்களிலும், எலும்புகளிலும், மரப் பட்டைகளிலும் எழுதி சேமித்து வைத்திருந்தனர். ஆட்சியாளர் உஸ்மான் அனைத்து அத்தியாயங்களை ஒரு இடத்தில் கொண்டு வர உத்தரவிட்டார். முழு குர்ஆனையும் வரிசைப்படி மனனமிட்ட நபர்களை அழைத்து வாசிக்கவிட்டு எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகளையும் ஒரு குழுவை நியமித்து சரிபார்க்க உத்தரவிட்டார். அந்த குழு மூலம் முழு குர்ஆன் வரிசைப்படி சீராக்கப்பட்டது. வரிசைப்படி சீராக்கப்பட்ட அந்த குர்ஆன் பல பிரதிகள் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்பட்டது. அதன் ஒரு பிரதி இன்றும் ரஷ்யாவின் தாஷ்கண்ட் அருங்காட்சியகத்திலும், துருக்கி அருங்காடசியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எலும்புகளிலும், தோல்களிலும், மரப்பட்டைகளிலும் எழுதப்பட்ட சிறு சிறு அத்தியாயங்களை ஒன்றாக்கி குழப்பம் வராமல் இருக்க ஆட்சியாளர் உஸ்மான் எரிக்க ஆணையிட்டார். எனவே தான் உலகம் முழுவதும் குர்ஆனைப் பொறுத்த வரையில் எந்த குழப்பமும் முஸ்லிம்களிடத்தில் இல்லை. அதற்கு விரிவுரையான நபி மொழிகளில் தான் குழப்பம் உள்ளது. எனவே தான் குர்ஆனுக்கு மாற்றமாக வரும் எந்த நபி மொழிகளையும் முஸ்லிம்கள் ஆதாரமாக எடுப்பதில்லை.

மற்றபடி குர்ஆனை மற்றவர்கள் எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தற்கால நபர்கள் அறியாமையினால் செய்கிறார்கள். ஏனெனில் குர்ஆன் புத்தகமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில்தான் அருளப்பட்டது. அதே சமயம் விபரம் புரியாத முஸ்லிம்கள் கோபப்படுவார்கள் என்ற நோக்கில் பொது இடத்தில் வேத நூலான குர்ஆனை எரிப்பவர்களையும் நாம் கண்டிக்க வேண்டும்.

Anonymous said...

ஜாகிர் உசேன் கைது: ஊடகங்களின் உச்சகட்ட சோம்பேறித்தனத்துக்கு இன்னும் ஒரு உதாரணம்?

பொதுவாக ஊடக அரசியல் என்றதும் ஊடகங்களின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் சார்புகள் பற்றி மட்டுமே நாம் பார்க்கிறோம். கவனிக்கிறோம். அதைவைத்து அவர்களை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் அல்லது விமர்சிக்கிறோம். ஆனால் ஊடகங்கள் தேர்வு செய்யும் செய்திகளிலேயே அரசியல் இருக்கிறது என்பதை ஊடக விமர்சகர்கள் பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.

ஒரு நாளைக்கு உள்ளூரிலும் சரி உலக அளவிலும் சரி ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நடக்கும். செய்திகள் வெளியாகும். அதில் ஒரு ஊடகம் எதை தேர்வு செய்து பிரசுரிக்கிறது அல்லது ஒலி/ஒளிபரப்புகிறது என்பதும், அதுவும் எந்த செய்திக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதிலும், ஒரு செய்தியில் இருக்கும் எந்தெந்த கோணங்களை ஒரு ஊடகம் அல்லது ஊடகவியலாளன் எடுத்து விரிவாக அலசுகிறார் அல்லது ஆராய்கிறது என்பதில்தான் அந்தந்த ஊடகத்தின் அரசியல் பார்வை, சார்பு ஆகியவை வெளிப்படும், படுகிறது.

இப்படி செய்திகளை தேர்வு செய்வதில் ஒரு ஊடகத்தின், ஊடகவியலாளனின் சமூகப்பார்வையும், அரசியல் அணுகுமுறையும் கூட வெளிப்படும். இந்த கண்ணோட்டத்தில் இலங்கையைச்சேர்ந்த 37 வயது முஸ்லிம் இளைஞர் சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை இது தொடர்பாக கசியவிட்டச் செய்தியை பார்ப்போம்.

அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட பிறகே அந்த செய்தி ஊடகங்களுக்கு காவல் துறையால் கசியவிடப்படுகிறது. அதுவும் காவல்துறை ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வமாக இது வெளியாக்கவில்லை. வாய்மொழியாகவே காவல்துறையால் ஊடகத்தில் "விதைக்கப்படுகிறது".

கைது செய்யப்பட்டவர் பெயர் ஜாகிர் ஹுசைன். வயது 37. இலங்கை கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர். இலங்கையிலிருக்கும் பாகிஸ்தானின் தூதரகத்தில் ஐ எஸ் ஐ அமைப்புக்கு உளவாளியாக சென்னைக்கு வந்து செயல்பட்டபோது அவரை மாநில, மத்திய புலனாய்வாளர்கள் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இது தான் ஆரம்பகட்டத்தகவல்.....

Anonymous said...

அடுத்து இவருக்கு உதவியதாக கூறப்படும் பாகிஸ்தானின் தூதரக அதிகாரிகளின் இரண்டு பேர் பெயர்களையும் இதே பாணியில் தமிழக காவல்துறை வெளியிடுகிறது. மேலும் இந்த ஜாகிர் உசைன் சென்னை அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல முக்கிய கட்டிடங்களைத்தகர்க்க அந்த இடங்களை வேவு பார்த்ததாகவும் தமிழக காவல்துறை சொன்ன செய்திகளும் ஊடகத்தில் வெளியாயின. கொழும்பில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகம் இந்த குற்றச்சாட்டை மறுத்த செய்தியும் வெளியானது.

இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி இந்த ஒட்டுமொத்த தகவல்களுமே வெறுமனே சென்னை காவல்துறையால் கவனமாக சில செய்தியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு மட்டும் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் மட்டுமே கசியவிடப்படுகிறது. இந்த தகவலை சொன்ன சென்னை காவல்துறை அதிகாரியின் பெயரோ, பதவியோ எந்த இடத்திலும் வெளியாகவில்லை. அவர்களின் பாதுகாப்பு கருதி அதை செய்திருக்கலாம். அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதை சென்னைகாவல்துறையின் சார்பில் செய்தி வெளியீடாக (press release) கொடுப்பதே முறை. அப்படி கொடுத்தார்களா என்று எதிரொலிக்குத்தெரியவில்லை. குறைந்தபட்சம் தி ஹிந்துவின் செய்தியில் அப்படி அதிகாரப்பூர்வ காவல்துறை செய்தி அறிக்கை கொடுக்கப்பட்டதாக கூறப்படவில்லை. (தி ஹிந்து செய்திகளின் இணைப்பு கமெண்ட் பகுதியில்).

இதில் இப்படி செய்திகளை தாம் விரும்பியபடி "விதைக்க" சென்னை காவல்துறைக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அதை எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் அப்படியே பிரசுரிப்பது சரியான ஊடக அணுகுமுறையா என்பது தான் எதிரொலி எழுப்ப விரும்பும் முக்கியமான கேள்வி.....

Anonymous said...

காரணம் கைது செய்யப்பட்டவரின் பெயர், வயது மற்றும் அவர் இலங்கையின் கண்டி பகுதியைச்சேர்ந்தவர் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். அதுவும் இந்த தகவல்களை சென்னை காவல்துறை கசிய விட்டதால் நமக்கு தெரியும். அதைத்தாண்டி அவர் யார்? எந்த ஊர்? என்ன படித்தார்? என்ன வேலை செய்து கொண்டிருந்தார்? அவர் எதற்காக சென்னை வந்தார்? அவர் எப்போது சென்னை வந்தார்? என்று இப்படி பாரதூரமான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி அவர் குடும்பம் என்ன கருதுகிறது? இதில் அவர்களின் கவலைகள் என்ன? நிலைப்பாடு என்ன? அவர்களின் மறுப்பு என்ன? சந்தேகம் என்ன? இப்படி எத்தனையோ கேள்விகள் நமக்கு எழுகின்றன. இவை எதற்குமே இதுவரை எதிரொலிக்கு விடை கிடைக்கவில்லை.

என்ன காரணம்? இந்த கேள்விகளுக்கான விடைகளை தேடவேண்டியது யார்? ஏன் தேடவில்லை?

இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் ஒன்றே ஒன்றுதான். ஊடகங்கள் தான் இந்த கேள்விகளுக்கு பதில் தேடவேண்டும். அதுதான் ஊடகங்களின் பிரதான பணி. ஆனால் அவை இதுவரை இந்த பதில்களை தேடவில்லை. ஏன் தேடவில்லை?

அரசியல் உள்நோக்கம், ஹிந்து/முஸ்லீம் மதக்கண்ணோட்டம் போன்ற நியாயமான சந்தேகங்களையெல்லாம் தாண்டி, இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்களின் மிகப்பெரிய பிரச்சனை இந்த தலைமுறை ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கடைந்தெடுத்த சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள் என்பது தான் மிகப்பெரிய பிரச்சனை.

ஏசிரூமில் இருந்தபடி, செல்பேசியில் தங்களைத் தேடிவரும் அரசியல் உள்நோக்கம் கொண்ட வதந்திகள், அரைகுறை உண்மைகளை, முழுக்க முழுக்க கட்டுக்கதைகளை மட்டுமே பரபரப்புச்செய்தியாக எழுதி, எழுதி, பழகிவிட்ட இளம் தலைமுறை ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்பின் அடிப்படையே மறந்து விட்டதோ என்று அச்சம் தோன்றுகிறது.

செய்தி சேகரிப்பின் அடிப்படை என்பது கேள்வி கேட்பது. கேள்வி கேட்பது என்பது ஏதோ கம்பசூத்திரமல்ல. ஐந்து கேள்விகள் தான் செய்தி சேகரிப்பதற்கு அடிப்படையானவை. அவற்றையே நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும்.

ஏன்?
எதற்கு?
எப்படி?
எப்போது?
யார் அல்லது யாரால்?

Anonymous said...

ஒவ்வொரு செய்தியிலும் இந்த ஐந்து கேள்விகளை மட்டும் திரும்பத்திரும்ப கேட்டாலே போதும். உங்களுக்கு தேவையான பதில்கள் கண்டிப்பாக கிடைக்கும். இவற்றுக்கான பதில்கள் கிடைக்கும் வரை ஒரு ஊடகமோ ஊடகவியலாளனோ ஓய்வுகொள்ளக்கூடாது. அதுதான் செய்தி சேகரிப்பின் எளிய இலக்கணம்.

இந்த எளிய அளவுகோளை நீங்கள் சென்னையில் கைது செய்யப்பட்ட ஜாகிர் ஹுசைன் தொடர்பான செய்திக்கு பொறுத்திப்பாருங்கள். அவர் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் ஆகிறது. அவர் பெயர் மற்றும் வயது பற்றி சென்னை காவல்துறை சொன்ன தகவல்களைத்தாண்டி வேறு ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இத்தனைக்கும் அவர் பகையாளிநாடான பாகிஸ்தானைச்சேர்ந்தவர் அல்ல. இந்தியாவின் நட்புநாடான இலங்கையைச்சேர்ந்தவர். எதிரொலிக்குத்தெரிந்து இந்திய செய்தியாளர்கள் ஐந்துபேர் இலங்கையில் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் இருவர்.

இதைத்தாண்டி தமிழ்நாட்டு தமிழ் ஊடகங்களுக்கும் கூட இலங்கையில் நல்ல தொடர்புகள் உண்டு. இலங்கயில் ஒருவரின் பெயரைக்கொண்டு அவரது குடும்பத்தை கண்டுபிடிப்பது எளிது. அதுவும் முஸ்லீம்களுக்குள் இது கூடுதல் எளிதான செயல்.

ஆனால் இந்த செயலை இந்திய தமிழ்நாட்டு ஊடகங்கள் இதுவரை செய்ததாகத்தெரியவில்லை. ஜாகிர் உசைன் பற்றி காவல்துறை சொன்னதை மட்டும் பிரசுரிக்கும் ஊடகங்கள், அதைதாண்டிச்சென்று சுயாதீனமாக அவர் யார் என்றோ அவர் தரப்பு கருத்து அல்லது மறுப்பு அல்லது மாற்றுக்கருத்து என்னவென்றோ தெரிந்துகொள்ள முயன்றதாகத்தெரியவில்லை.

ஊடகங்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. காரணம் இதன் மூலம் அவை தம் அடிப்படை கடமையில் இருந்து தவறுகின்றன.

அதாவது உண்மையைத்தேடி கண்டுபிடித்து ஊருக்கு சொல்வது தான் ஊடகங்களின் அடிப்படை பணி. அதை ஊடகங்கள் செய்ய மறுக்கும்போது, பொய்களும் வதந்திகளும் தான் உண்மைகளாக வேஷம் கட்டி வரும். அதுவும் காவல்துறை திட்டமிட்டு, தேர்ந்தெடுத்து கசியவிடும் ஒருதரப்புத் தகவல்களை எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் "எக்ஸ்குளூசிவ்" என்கிற பெயரில் இந்த ஊடகங்கள் பிரசுரித்து மகிழ்வது இன்னும் ஆபத்தான செயல். ஊடகங்களின் இந்த போக்கு தேவையற்ற விபரீதங்களை அரசியலில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திலும் விதைக்கும்.

ஜாகீர் உசைன் தவறான நபரா இல்லை அப்பாவியா என்பதை புலனாய்வுத்துறையும் நீதித்துறையும் முடிவு செய்யட்டும். ஆனால் அவர் தரப்பு என்ன என்பதை தெரிந்துகொள்வதும் தனக்கு தெரிந்ததை ஊர் முன் வைப்பதும் ஊடகங்களின் அடிப்படை வேலை.

அந்த அடிப்படை வேலையை செய்ய மறுக்கும் ஊடகவியலாளர்களின் கடைந்தெடுத்த சோம்பேறித்தனம், ஜாகீர் உசைன் என்கிற நபரை மட்டும் பாதிக்காது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் சேர்த்தே பாதிக்கும். அது யாருக்கும் நல்லதல்ல.

எனவே வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமேனும் சொந்தமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ஊடகவியலாளர்களே!!!

நன்றி: எதிரொலி

Anonymous said...

//இன்றில்லா விட்டாலும் இன்னும் பல ஆண்டுகள் கழித்தாவது இந்த இஸ்லாமியனை எனது தாய் நாடு புரிந்து கொண்டு அரவணைக்கும் என்ற நம்பிக்கையில் காலம் தள்ளும் பல கோடி இஸ்லாமியர்களில் நானும் ஒருவன்//

pooiyya fradu

Anonymous said...

//எனது தாய் நாடு பல வலிகளை எனக்குள் கொடுத்துள்ளது. அது மாறாத பல ரணங்களை என்னுள் ஏற்படுத்தியுள்ளது.//

கொஞ்சம் அந்த வலிகள் மற்றும் ரணங்கள் எப்படி ஏற்பட்டன என்று விளக்கமாக சொல்ல முடியுமா.

ஆனந்த் சாகர் said...

இஸ்லாமியர்களுக்கு தாய்நாடு, பிறந்த நாடு என்பதெல்லாம் கிடையாது, அவர்களுடைய உம்மத்(அதாவது இஸ்லாமிய சமுதாயம்) உலகில் எங்கிருந்தாலும் அதை உள்ளடக்கியதுதான் அவர்களின் இஸ்லாமிய நாடு என்பதுதான் இஸ்லாமிய கோட்பாடு. பிறந்த மண், தாய்நாடு என்று வேஷம் போடும் உம்முடைய ஏமாற்று(தக்கியா) வேலையை நிறுத்திக்கொள்ளும்.

ஆனந்த் சாகர் said...

/எனது தாய் நாடு பல வலிகளை எனக்குள் கொடுத்துள்ளது. அது மாறாத பல ரணங்களை என்னுள் ஏற்படுத்தியுள்ளது.//

////கொஞ்சம் அந்த வலிகள் மற்றும் ரணங்கள் எப்படி ஏற்பட்டன என்று விளக்கமாக சொல்ல முடியுமா.////

இந்தியா இஸ்லாமிய நாடாக மாறவில்லை, இந்தியர்கள் முஸ்லிமாக மாறவில்லை என்பதால்தான் சுவனப்பிரியனுக்கு பல வலிகளும் ரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. என்ன செய்வது, அவருக்கு அந்த வலிகளும் ரணங்களும் தீர வழியே இல்லை!

ஆனந்த் சாகர் said...

//எலும்புகளிலும், தோல்களிலும், மரப்பட்டைகளிலும் எழுதப்பட்ட சிறு சிறு அத்தியாயங்களை ஒன்றாக்கி குழப்பம் வராமல் இருக்க ஆட்சியாளர் உஸ்மான் எரிக்க ஆணையிட்டார். //

பல மாறுபட்ட குரான்கள் இருந்ததால்தான் தன்னுடைய தொகுப்பை மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டு மற்ற மாறுபட்ட குர்ஆன்களை காலிஃபாவாக இருந்த உதுமான் எரித்து அழித்துவிட்டார். இதை பலர் அப்பொழுதே எதிர்த்தனர். இருந்தாலும் அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.

ஆனந்த் சாகர் said...

//எனவே தான் உலகம் முழுவதும் குர்ஆனைப் பொறுத்த வரையில் எந்த குழப்பமும் முஸ்லிம்களிடத்தில் இல்லை. //

மாறுபட்ட் பல குர்ஆன்களில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை எல்லாம் எரித்து அழித்துவிட்டு ஒரே ஒரு குரான் தான் உலகம் முழுவதும் இருக்கிறது; அதை பற்றி எந்த குழப்பமும் இல்லை என்று சொல்லிக்கொண்டால் உங்கள் திருப்திக்காக நீங்கள் அப்படி சொல்லிக்கொள்ளுங்கள்.