
//வைரஸ் இருந்தால் அதற்க்கான ஆண்டி வைருஷ் வரும் நண்பா - பர்மாவில் பார்த்தாயா, அது தான் ஆண்டி வைருஷ், அது போன்ற ஆண்டி vairusமுறையால் மட்டுமே இவர்கள் கொட்டத்தை அடக்க முடியும். இவர்களுக்கு சிறந்த ஆண்டி வைருஷ் யூதர்கள் தான், எங்கெல்லாம் வைரஸ் வருகிறதோ அங்கெல்லாம் ஆண்டி வைருஷ் வரும் கடைசியில் அழிவு வைரசுக்கு தான்.//
முந்தய பதிவில் ஒரு இந்துத்வாவாதியின் பின்னூட்டம் இது. இந்த பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் இஸ்ரேலில் இஸ்லாத்தின் வளர்ச்சி என்பது எந்த அளவில் உள்ளது என்று கூகுளில் தேடிப் பார்த்தேன். இனி அதனை அப்படியே தமிழ்ப் படுத்தி தருகிறேன்.
இஸ்ரேல் இன்று இஸ்லாத்துக்கு மிகப் பெரிய சிக்கலை உலகம் முழுவதும் தந்து கொண்டிருக்கிறது. மொஸாத் பல குழுவினரை பல நாடுகளுக்கும் அனுப்பி தீவிரவாத செயல்களை செய்து அந்த பழியை இஸ்லாத்தின் மீது போட்டு வருகிறது. நமது நாட்டிலும் இந்துத்வாவாதிகளோடு கை கோர்த்துக் கொண்டு பல நாசகார செயல்களை நமது நாட்டில் அரங்கேற்றி அதற்கு இஸ்லாமிய சாயம் பூசி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் தங்கள் நாடான இஸ்ரேலை எந்த வகையிலாவது உலக மக்களை அங்கீகரிக்க வைத்துவிட வேண்டும் என்ற வேட்கைதான். அதில் ஓரளவு வெற்றியும் பெற்று வருகின்றனர்.
ஆனால் காலம் இப்படியே சென்று விடுவதில்லை. இன்று இஸ்லாத்தின் தாக்கமானது இஸ்ரேலையும் விட்டு வைக்கவில்லை. இஸ்ரேலில் உள்ள காஃப்ர் கரா என்ற கிராமத்தில் குரோஷியாவிலிருந்து புலம் பெயர்ந்து இன்று இஸ்ரேலை தனது நாடாக ஆக்கிக் கொண்ட யூதப் பெண் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஆயிஷா என்று மாற்றிக் கொண்டுள்ளார். அங்கு செயல்பட்டு வரும் 'தாருல் இஸ்லாம்' என்ற அமைப்பானது இஸ்லாம் சம்பந்தப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறது. 'அமைதி வாழ்வுக்கான வழி' என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் அவருக்கு கிடைத்தது. அதனை படித்ததில் இருந்து அவரது மனம் நிலை கொள்ளவில்லை. உண்மையை தேடி மனது அலைபாய்ந்தது. அதனை தொடர்ந்து படித்து வந்த இவர் உண்மையை விளங்கி சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தார்.
தனக்கு பிரசுரங்களை விநியோகித்த 'தாருல் இஸ்லாம்' என்ற அமைப்பை தொடர்பு கொண்டு ஆறு மாதங்களாக யாருக்கும் தெரியாமல் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தார். தான் இஸ்லாமாக மாறவிருப்பதை ரகசியகமாக வைத்திருந்தார். முடிவில் தனது தந்தையிடமும் தாயிடமும் தனது மனமாற்ற முடிவை எப்படியோ தைரியத்தை வர வழைத்துக் கொண்டு சொல்லி விட்டார். பிறகென்ன... ஒரே போராட்டம்தான். இவரது தாயார் யூத பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்து வரும் பழமைவாதி. அவர் தனது மகளை நோக்கி 'போயும் போயும் வன்முறை மார்க்கம்தானா உனக்கு கிடைத்தது?' என்று கோபப்பட்டார். உடன் அங்கிருந்து வெளியேறிய ஆயிஷா 'தாருல் இஸ்லாம்' அலுவலகத்தை வந்தடைந்தார். அங்கு ஏற்கெனவே இதே போல் வீட்டை துறந்து தஞ்சமடைந்த ஐந்து யூத பெண்கள் இவரை இன்முகத்தோடு வரவேற்றனர். அந்த ஐந்து பெண்களில் ஒருவரான ஹெனின் குரோஷியாவில் இருந்து வந்து இஸ்ரேலை தனது நாடாக்கிக் கொண்டவர். ஆயிஷாவுக்கும் பழக்கமானவர். ஹெனின் ஆயிஷாவிடம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளையும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். இது தற்போது பல குடும்பங்களிலும் தொடர்கதையாகி வரகிறது.
'தாருல் இஸ்லாமின்' டைரக்டர் ஷேக் ரஷான் கூறுகிறார் 'நான் இங்குள்ள அல் ஹக் பள்ளியின் இமாமாகவும் பணியாற்றுகிறேன். குர்ஆனின் மொழி பெயர்ப்புகளையும், நபி மொழிகளையும் ஹுப்ரூ மொழியில் ஆயிரக்கணக்கில் அச்சடித்து இலவசமாக விநியோகிக்கிறோம். எங்களின் நோக்கம் இந்த யூதர்களுக்கு சத்திய இஸ்லாத்தை எத்தி வைப்பதே. வரவேற்கத்தக்க மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.' என்கிறார்.
இஸ்ரேல் முழுக்க மேற்கத்திய கலாசார தாக்கத்தால் குடும்ப வாழ்வு தொலைந்து பல பெண்கள் நிம்மதியற்று அலைகின்றனர். இவ்வாறு வாழ்வை தொலைத்து மன உளைச்சலுக்கு ஆட்பட்டு அலைந்து திரியும் பெண்களை இந்த அமைப்பு ஆதரவு கரம் கொடுத்து தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வருகிறது. அவர்களிடம் இந்த மனித வாழ்வு எவ்வளவு சிறந்த ஒன்று என்பதை விளக்கி அவர்களுக்கு குடும்ப வாழ்வின் அவசியத்தை விளக்கி போதனைகள் நடத்தப்படுகிறது. தெளிவு பெற்ற பல பெண்கள் உடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர். மனநிறைவோடு வெளியேறுகின்றனர். இஸ்ரேலை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருப்பதை விட அந்நாட்டையும் இஸ்லாமிய நாடாக மாற்றி விட்டால் பல பிரச்னைகள் தீர்ந்து விடும். சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளும் நேசக் கரம் நீட்ட தொடங்கி விடும். அத்தகைய நிலையை நோக்கித்தான் இஸ்ரேல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையை மேலும் வலுவாக்க தாருஸ் ஸலாம் போன்ற அமைப்புகள் இன்னும் அதிக முனைப்புடன் தங்கள் பிரசாரங்களை முடுக்கி விடுவார்களாக! இந்த அமைப்புக்கு தேவையான பொருளாதார உதவிகளை முஸ்லிம் செல்வந்த நாடுகள் மனமுவந்து கொடுக்க முன் வர வேண்டும். அதற்காக நாமும் பிரார்த்திப்போம்.
http://www.israelnationalnews.com/News/News.aspx/175699#.U3IohEDZncs
5 comments:
இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு. எனவே அங்கே எந்த மதத்தையும் பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. அதை பயன்படுத்திக்கொண்டு இஸ்லாமிய தாவா செய்து அப்பாவிகள் சிலரை பொய்களை சொல்லி ஏமாற்றி முஸ்லிமாக மாற்றிவிட்டால் உடனே இஸ்ரேலையும் இஸ்லாம் விடவில்லை என்று ஊளையிடுவது சுத்த மடத்தனம்.
//இஸ்ரேலை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருப்பதை விட அந்நாட்டையும் இஸ்லாமிய நாடாக மாற்றி விட்டால் பல பிரச்னைகள் தீர்ந்து விடும்.//
இஸ்ரேல் யூத நாடாக இருந்தால் அதனுடன் போரிட்டுக்கொண்டு இருப்பீர்கள். அது இஸ்லாமிய நாடாக மாறிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று கூறுவது பாசிசம். பழங்காலத்தில் நடந்ததுபோல மிரட்டலுக்கு, பயங்கரவாத செயலுக்கு பயந்து இனி எவரும் முஸ்லிமாக மாறமாட்டார்கள். இனி வரும் காலங்களில் இஸ்லாமிய பாசிசத்துக்கு தக்க பதிலடி கொடுத்து உங்களை ஓட ஓட விரட்டுவார்கள். இஸ்ரேல் ஒருபோதும் இஸ்லாமிய நாடாக மாறாது.
//இஸ்ரேல் இன்று இஸ்லாத்துக்கு மிகப் பெரிய சிக்கலை உலகம் முழுவதும் தந்து கொண்டிருக்கிறது.//
இஸ்லாமிய பயங்கரவாததை ஒடுக்க இஸ்ரேல் பல வகைகளில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. இதை இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பொறுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இப்படி பேசுகிறார்கள். பயங்கரவாதம் இல்லையென்றால் இஸ்லாம் இல்லை. அந்த வகையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்குவது இஸ்லாத்திற்கு உலகம் முழுவதும் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதில் மாற்று கருது இல்லை.
// மொஸாத் பல குழுவினரை பல நாடுகளுக்கும் அனுப்பி தீவிரவாத செயல்களை செய்து அந்த பழியை இஸ்லாத்தின் மீது போட்டு வருகிறது. நமது நாட்டிலும் இந்துத்வாவாதிகளோடு கை கோர்த்துக் கொண்டு பல நாசகார செயல்களை நமது நாட்டில் அரங்கேற்றி அதற்கு இஸ்லாமிய சாயம் பூசி வருகிறது. //
இஸ்லாம் என்ற பொய் மதத்தை பின்பற்றும் பொய்யர்களான முஸ்லிம்களின் பொய் பிரசாரம்தான் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
naaravaayanidamirunthu nalla vaartthaikalai pera mudiyaathu enpathu anand sagar pondroorai paarkkum pothe therikirathu.
தமாசு தமாசு
Post a Comment