Followers

Wednesday, May 14, 2014

சஞ்சய் திவேதி என்ற பார்பனர் - அஹமத் பண்டிட்டாக இஸ்லாத்தை ஏற்றார்!

http://www.youtube.com/watch?v=3rJZWrX-fz

அகில இந்திய பார்பன சங்கத்தின் முன்னால் தலைவர். அகில இந்திய பிர்லா குழும கோவில்களின் கூட்டமைப்பின் தலைமை பூசாரி. 15 வயதில் காசிக்கு சென்று இந்து மத வேதங்கள் அனைத்தையும் படித்து தெளிவு பெற்று சான்றிதழும் பெற்றவர். உத்தராஞ்சல் மாநிலத்தின் முன்னால் முதல்வர் நாராயண தத் திவாரியின் பேரன். இவரது முன்னாள் பெயர் ஆசார்ய சஞ்சய் திவேதி. இவ்வளவு பெருமைக்குரிய இந்து மதத்தின் உயர் குலத்தில் பிறந்த இவர் இன்று தனது பெயரை அஹமத் பண்டிட்டாக மாற்றிக் கொண்டு இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சொந்த வேலை காரணமாக துபாய் வந்த போது கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வரும் பட்கல் சமூகத்தினரின் கூட்டமைப்பான bhatkallys.com ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் அஹமத் பண்டிட்டை பேச அழைத்தனர். அந்த நிகழ்ச்சியில் அஹமத் பண்டிட் பேசியதை இனி பார்ப்போம்:

'இந்து மத வேதங்களை நான் காசியில் முழுவதும் படித்து சான்றிதழ் பெற அழைக்கப்பட்டபோது எனக்கும் எனது குழுமத்துக்கும் சொல்லப்பட்ட அறிவுரை 'கற்ற இந்த வேதங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். பொது மக்களுக்கு சொல்லி விட வேண்டாம்' என்பதுதான். எங்களிடம் இது சம்பந்தமாக சத்தியபிரமாணமும் வாங்கிக் கொண்டார்கள். அப்போ நாங்கள் மக்களிடம் எதை போதிப்பது என்று கேட்டோம். அதற்கு அவர்கள் 'ராமாயணம், மகாபாரதம் இருக்கிறதே! அதை சொல்லுங்கள். பல நாட்களுக்கு அதை வைத்து கதாகாலட்சேபம் பண்ணலாம்' என்ற பதில் வந்தது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்து மத வேதங்கள் அனைத்துமே ஓரிறைக் கொள்கையையே போதிக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் வசதிக்காக இந்த உண்மைகளை மக்களிடமிருந்து காலாகாலமாக மறைத்து வருகின்றனர். வேதங்களை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்காததன் காரணம் ஏன் என்பது உங்களுக்கு இப்போது விளங்கியிருக்கும்.'

'வேதங்கள் சொன்ன இந்த ஓரிறைக் கொள்கையை இந்து மக்களின் மனத்திலிருந்து இன்று முழுவதுமாக எடுத்து விட்டனர். இந்துவாக பிறந்த எனக்கு இது மிகவும் வருத்தத்தை தந்தது. இந்து மத வேதங்களில் பல இடங்களில் முகமது நபியைப் பற்றிய முன்னறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. முகமது நபி தோன்றும் போது அவரை பின்பற்றுங்கள் என்றும் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. 60 சதத்துக்கும் மேலான வேத வசனங்கள் ஏக தெய்வ கொள்கையையே போதிக்கின்றன. ஆனால் இந்துக்களுக்கு 33 கோடி தேவர்களையும் கடவுளாக்கி அவர்களை பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தி விட்டனர் கற்றறிந்த பண்டிதர்கள். படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற மூன்றையும் ஒருங்கே செயல்படுத்தும் ஈஸ்வரனை வணங்கவே இந்து மத வேதங்கள் போதிக்கின்றன.

பெரும்பாலான இந்துக்கள் தங்களின் வேத நூல் என்ன கட்டளையிடுகிறது என்பதை விளங்காதவர்களாகவே உள்ளனர். பலராலும் திட்டமிட்டு வேதங்களின் உண்மை வசனங்கள் இந்துக்களை சென்றடையாமல் பார்த்துக் கொண்டதே அதற்கான முக்கிய காரணம். ராமாயணம், மஹாபாரதம், பகவத் கீதை போன்ற புராணங்கள் முன்னுக்கு கொண்டு வரப்பட்டு இறை அருளிய வேத வசனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இந்த நிலை இன்று வரை தொடர்கிறது. இன்று சிலரிடம் இருக்கும் வேதங்கள் கூட 23 லிருந்து 30 அத்தியாயாங்கள் வரையே. 678 அத்தியாயங்கள் மக்களுக்கு சொல்லாமலேயே திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.

குர்ஆன், பைபிள், இந்து மத வேதங்கள் என்று இவற்றை எல்லாம் ஆய்வு செய்து அதன் உண்மையான அர்த்தங்களை அனைத்து மதத்தவரும் விளங்கி தங்களின் வாழ்வை சீர்படுத்திக் கொள்வார்களாக!'

No comments: