Followers

Tuesday, May 20, 2014

தமிழச்சிக்கு குர்ஆன் வசனத்தையொட்டிய ஒரு விளக்கம்.

//குரான் வாசிக்கும் போது எனக்குள் தோன்றும் முரண்களை பற்றி பேஸ்புக்கில் விவாதத்தில் வைப்பதுண்டு. ஆனால் முரண்பாடுகள் குறித்து எப்போதுமே சரியான நகர்வை நோக்கியதாக இருக்காது. பன்முனை தாக்குதல்கள், வேற்று மத சாடல்களுக்கு இடையே சில இஸ்லாமியர்கள் மிகப் பொறுமையாக விவாதத்திற்கு மறுப்பு கருத்தாக தாங்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதையே பார்த்து சலித்து போயிருக்கிறேன்.

இன்றும் குரான் வாசித்தபோது சில கருத்துக்கள் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கான பதில் சமாளிப்பு... சமாளிப்பு... சமாளிப்பு. தாங்கள் சொல்வதையே திரும்ப திரும்ப சொல்வது... இருப்பினும் விவாதத்தின் பொருட்டு அதிருப்தி கொண்ட கருத்தினை பதிவிடுகிறேன்.

குரான் வாசகத்தை மறுப்போரை அல்லா இவ்வாறு தண்டிக்கிறாராம்.

"4:56 நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனும் , ஙான மிக்கவனாகவும் இருக்கிறான். . ."
- தமிழச்சி
20/05/2014//


தமிழச்சி! நீங்கள் குர்ஆனை ஆய்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இனி உங்கள் கேள்விக்கு வருவோம்.

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள், மனிதனின் தோலில் தான் உள்ளன, என்பது மிகச் சமீபத்திய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பதுதான் இந்த வசனம் சொல்ல வரும் மறைமுக கருத்து. . இதனால் தான் அறுவை சிகிச்சைகளில் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு அறுவை சிகிச்சை செய்கின்றனர். அந்த ஊசி மூலம் முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் இறந்து விடுவான். அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம் என்று மட்டும் கூறாமல் 'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்' என்று இறைவன் கூறுகிறான். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த விஞ்ஞான உண்மையைக் குர்ஆன் கூறுகிறது. நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம். (4:56)

இது இறைவனின் வார்த்தைதான் முகமது நபியின் சொந்த வார்த்தைகள் அல்ல என்பதற்கு இந்த வசனமும் ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது.

//1000 வருடங்களுக்கு மேற்பட்ட சித்த வைத்தியத்தில் சித்தர்கள் நரம்பியல் குறித்து விரிவாக பேசி இருக்கிறார்கள். கடவுளால் மட்டும்தான் மனிதனின் உடல்கூறுகள் குறித்து பேச முடியும் என்பதை சித்த வைத்தியத்தில் ஏற்கவில்லை. பல சித்தர்கள் அந்த காலங்களிலேயே பகுத்தறிந்து இருக்கிறார்கள் உளவியல் உட்பட...//

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4

இந்த வசனத்தின் மூலம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நமது தமிழ் மொழிக்கும் தூதர்களும், வேதங்களும் இறைவனால் தரப்பட்டுள்ளன. அது திருக்குறளாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்மால் உறுதியாக சொல்ல முடியவில்லை. அந்த வேதங்களிலும் இதே போன்ற வசனங்கள் வந்திருக்கலாம். அதன் அடிப்படையில் நமது சித்தர்கள் தங்கள் அறிவை உபயோகித்து பல உண்மைகளை அந்த காலத்திலேயே அறிந்திருக்கலாம்.

ஆனால் குர்ஆன் இதை மட்டும் பேசவில்லை. வானங்களின் கோள்களை பற்றியும் சூரியனின் நகர்வு பற்றியும், குழந்தை ஜனிப்பதை பற்றியும், பெரு வெடிப்புக் கொள்கையைப் பற்றியும் இன்றைய அறிவியலோடு எந்த முரணும் இல்லாது தனது வசனங்களைச் சொல்லிச் செல்கிறது.

இந்த குர்ஆன் வசனங்களின் சட்டங்களை நம் ஊர் உசிலம்பட்டியை சேர்ந்த கிராமத்தானும், ஃபிரான்ஸ், கனடா, அமெரிக்கா போன்ற நவ நாகரிக உலகில் வாழும் மனிதனும் ஒரு வரியைக் கூட ஒதுக்கித் தள்ளாமல் பின் பற்றி வாழ முடிகிறது. இந்த வசனம் இந்த காலத்துக்கு பொருந்தாது என்று எந்த வசனத்தையும் உங்களால் காட்ட முடியாது. இத்தனை தகவல்களையும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த படிப்பறிவில்லாத சமூகத்தில் வாழ்ந்த தனது தாய் மொழியை எழுதவும் படிக்கவும் தெரியாத முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது? என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன


//மனிதனின் உடல் முழுவதும் தோல்களால் ஆனதுதான். உரோமங்கள் வலிகளை ஏற்படுத்தவில்லை. நகங்களில் வலியில்லை. எல்லாவற்றையும் காட்டுமனிதன் உணர்ந்திருந்தான். இதில் எங்கே அடிப்பட்டாலும் அவனால் வலியை உணர முடியும். காட்டு மனிதனுக்கே இது தெரிந்திருக்கிறது. ஆடு மேய்க்கும் பன்பட்ட மனித காலத்தில் வாழ்ந்த நபிகளுக்கு இது தெ ரிவது வியப்பா? //

“அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம்.” வேதனையை உணர்வதற்காக நாம் தோல்களை மாற்றுவோம் - என்ற சொற்றொடர் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக கவனமாக கையாளப்பட்டுள்ளதை கவனியுங்கள். மேலும் நான் முன்பு சொன்னது போல் நகம் முடிகளைத் தவிர மற்றவை வேதனையை உணரக் கூடியவை என்பதை சாமான்யரும் விளங்கலாம் என்பதை ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொண்டாலும் 'சூரியன் நகர்கிறது, அது தனது சூரிய குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு இறைவன் வகுத்தளித்த அதனதன் பாதையில் பயணிக்கிறது' என்ற குர்ஆன் வசனத்தை உங்களால் எப்படி பார்க்க முடிகிறது?

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் அதன் இடத்தை விட்டு நகர்கிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

இது போன்ற மெகா அறிவியல் உண்மைகளை முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது? இது போன்று நூற்றுக்கணக்கான அறிவியல் வசனங்களை என்னால் காட்ட முடியும்.

//நபிகள் வாழ்ந்த காலத்தில் பைத்தியக்கார மனிதன் என்று புறக்கணிக்கப்பட்ட மனிதன் அவர். இயேசுவுக்கும் இதே கதிதான். மார்க்கம் மதமாக மாற்றம் பெற்றபோது இவர்கள் கடவுளாக்கப்பட்டார்கள்//.

தவறான வாதம். முகமது நபியை எந்த முஸ்லிமும் கடவுளாக வழிபட மாட்டார். அதே போல் ஏசுவும் முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஒரு இறைத் தூதரே! ஏசு தன்னை வணங்க வேண்டும் என்று எங்குமே சொல்லவில்லை. ஏசுவை வணங்க ஆரம்பித்தது அவரது காலத்துக்குப் பிறகே. ஏசுவை வணங்க இவர்களால் பைபிளிலிருந்தும் ஆதாரத்தை காட்ட முடியாது.

//ஷரியா, ஷரத் உள்ளீட்ட எதுவும் நபிகளால் கூறப்பட்டதில்லை. மதமாக்கப்பட்ட இஸ்லாத்தின் மதவாதிகளால் திணிக்கப்பட்டது.//

குர்ஆனையும் அதற்கு விளக்கவுரையாக அமைந்த முகமது நபியின் போதனைகளையும் அடிப்படையாக வைத்து இஸ்லாமியரின் வாழ்வு முறையை தொகுத்ததற்கு பெயர்தான் ஷரியா. குர்ஆனுக்கு மாற்றமாக எந்த நாட்டிலும் ஷரியா இருந்தால் ஷரியா சட்டத்தைத்தான் மாற்றியமைக்க வேண்டுமேயொழிய குர்ஆனை மாற்றுவதற்கு உலகில் எவருக்கும் அதிகாரம் இல்லை. இன்று வரை அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.

பெரியாரின் சிந்தனைகளை வாழ்வியலாக கொண்டிருக்கும் சமூக ஆர்வலரும் சிந்தனையாளருமான தமிழச்சி அந்த பெரியார் சொன்ன 'இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு' என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப தமது சிந்தனையை செலுத்துவாராக என்று அழைப்பு விடுக்கிறேன். உங்களின் மற்ற சந்தேகங்களுக்கும் நேரம் கிடைக்கும் போது பதிவுகளாக இடுகிறேன்.This verse indicates that there is something in the skin which makes us feel pain. This is exactly what modern science tells us i.e. pain receptors are responsible for feeling pain. It was thought that the sense of feeling and pain was dependent only on the brain. Recent discoveries however prove that there are pain receptors present in the skin, without which a person would not be able to feel pain. When a doctor examines a patient suffering from burn injuries, he verifies the degree of burns by a pinprick. If the patient feels pain, the doctor is happy, because it indicates that the burns are superficial and the pain receptors are intact. On the other hand, if the patient does not feel any pain, it indicates that it is a deep burn and the pain receptors have been destroyed.

Prof. Tegatat Tejasen, Chairman of the Department of Anatomy at Chiang Mai University in Thailand, has spent a great amount of time on research of pain receptors. Initially he could not believe that the Qur'an mentioned this scientific fact 1,400 years ago. He later verified the translation of this particular Qur'anic verse. Prof. Tegatat Tejasen was so impressed by the scientific accuracy of the Quranic verse, that at the 8th Saudi Medical Conference held in Riyadh on the Scientific Signs of Qur'an and Sunnah, he proudly proclaimed in public: "There is no God but Allah and Muhammad (Peace Be upon Him) is His Messenger."

The sensation of pain results from communication between nerve cells in the brain, spinal cord, and elsewhere in the body. When a person experiences an injury, such as a stubbed toe, specialized cells called nociceptors (another name for pain receptors) sense potential tissue damage (1) and send an electric signal, called an impulse, to the spinal cord via a sensory nerve (2). A specialized region of the spinal cord known as the dorsal horn (3) processes the pain signal, immediately sending another impulse back down the leg via a motor nerve (4). This causes the muscles in the leg to contract and pull the toe away from the source of injury (6). At the same time, the dorsal horn sends another impulse up the spinal cord to the brain. During this trip, the impulse travels between nerve cells. When the impulse reaches a nerve ending (7), the nerve releases chemical messengers, called neurotransmitters, which carry the message to the adjacent nerve. When the impulse reaches the brain (8), it is analyzed and processed as an unpleasant physical and emotional sensation.

The Ayat under discussion mentions the burning of the skin. The severity of a burn depends on its depth, its extent, and the age of the victim. Burns are classified by depth as first, second, and third degree. First-degree burns cause redness and pain (e.g., sunburn). Second-degree burns are marked by blisters (e.g., scald by hot liquid). In third-degree burns, both the epidermis and dermis (external and internal parts of the skin) are destroyed, and underlying tissue may also be damaged. Further burn in the skin would damage the pain receptors and hence the person would not feel pain.

Word Analysis:
Quran rightly mentions this 'extreme' stage for the change of skin. The Arabic word used is نضجت which indicates the burning to the extreme stage. Ibn e Faris says that its basic meaning includes burning something to the last stage.

Hence, not only the Quran told humans that sensation is due to the pain receptors of the skin, Quran also describes accurately the type of burn that kills the pain receptors.

10 comments:

ஆனந்த் சாகர் said...

//அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம் என்று மட்டும் கூறாமல் 'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்' என்று இறைவன் கூறுகிறான்.

நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம். (4:56)//

மனிதர்களை திரும்ப திரும்ப எரித்து மகிழ்ச்சி அடையும் அல்லாஹ் மிக பெரிய தீய சக்தியாகத்தான் இருக்க முடியும். குரூர தீய சக்திக்குத்தான் இந்த குணம் இருக்கும். இந்த கொடூர தீய சக்தியை இறைவன் என்று நம்புகிற முஸ்லிம்களை எந்த வகையில் சேர்ப்பது? முஸ்லிம்கள ஏன் வன்முறையை விரும்புகின்றனர் என்பதற்கு விடை இதில் இருக்கிறது.

கிறிஸ்தவர்களின், யூதர்களின் அல்லாஹ் வேறு; முஹம்மது கற்பனையில் விவரித்த முஸ்லிம்களின் அல்லாஹ் வேறு.

//ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த விஞ்ஞான உண்மையைக் குர்ஆன் கூறுகிறது.//

எந்த அறிவியலும் குர்ஆனில் இல்லை. குர்ஆனின் உளறல்களை அறிவியல் என்று முஸ்லிம்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனந்த் சாகர் said...

//முகமது நபியை எந்த முஸ்லிமும் கடவுளாக வழிபட மாட்டார். //

முகம்மதுவை அல்லாஹ்வின் தூதரென்று சொல்லிக்கொண்டே அவரை அல்லாஹ்வுக்கும் மேலாக முஸ்லிம்கள் பூஜித்து வருகின்றனர். அவர்கள் அல்லாஹ்வை விமர்சித்தால் கூட பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் முகம்மதுவை விமர்சிப்பதை மட்டும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. உடனே காட்டுமிராண்டித்தனமாக வன்முறையில் இறங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு அல்லாஹ்வைவிட அதிகமாக முகம்மதுவை முஸ்லிம்கள் வழிபடுகின்றனர். முஸ்லிம்கள் குழந்தை பருவத்திலிருந்தே முஹம்மதுவின்மேல் பயங்கர போதை ஏற்றப்படுவதுதான் இதற்கு காரணம்.

ஆனந்த் சாகர் said...

// 'சூரியன் நகர்கிறது, அது தனது சூரிய குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு இறைவன் வகுத்தளித்த அதனதன் பாதையில் பயணிக்கிறது' என்ற குர்ஆன் வசனத்தை உங்களால் எப்படி பார்க்க முடிகிறது? //

சூரிய குடும்பத்தை பற்றி குரான் எங்குமே சொல்லவில்லை. சூரிய குடும்பத்தை காபிர்கள் கண்டுபிடித்து சொன்னால், அது குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று பொய்யாக பில்டப் கொடுப்பது எல்லாம் ஒரு பிழைப்பா உங்களை போன்ற பொய்யர்களுக்கு?

//'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:3 //

சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தம் ஆவதை எல்லோரும் அறிவர். பூமி சுழல்வதால் கிழக்கிலிருந்து மேற்கு வரை சூரியன் நகர்வது போல் நம் கண்களுக்கு தெரிகிறது. அந்த கால மக்களை போல முகம்மதுவும் சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறது என்று நம்பினார். இதைதான் சூரியன் தன் பாதையில் செல்வதாக முஹம்மது குர்ஆனில் கூறினார். முஹம்மது கூறியதில் ஒரு அறிவியலும் இல்லை.

விண்மீன் கூட்டத்தோடு(galaxy ) சூரியன் தன்னுடைய கோள்களை இழுத்துக்கொண்டு பயணிக்கிறது என்கிற தற்கால அறிவியல் கண்டுபிடிப்பை குரானுக்குள் சொருகுவது மிகப்பெரிய மோசடி. இந்த வகை மோசடியைத்தான் முஸ்லிம்கள் செய்து குரானின் வசனங்களில் அறிவியல் இருக்கிறது என்று தமாஷ் செய்து வருகின்றனர்.

சுவனப் பிரியன் said...

//மனிதர்களை திரும்ப திரும்ப எரித்து மகிழ்ச்சி அடையும் அல்லாஹ் மிக பெரிய தீய சக்தியாகத்தான் இருக்க முடியும். குரூர தீய சக்திக்குத்தான் இந்த குணம் இருக்கும்.//

குற்றவாளிகளுக்கு நமது நாடு கொடுக்கும் தண்டனைகள் உண்மையான தண்டனைகளே அல்ல. உதாரணத்துக்கு நமது நரேந்திர மோடியை எடுத்துக் கொள்வோம். அவரது ஆட்சியில் குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் 2000க்கு மேல் கத்தியால் குத்தியும், எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்கள். ஒரு நபரே 10லிருந்து 20 பேர் வரை கொன்றிருக்கிறார்கள். தற்போது சிறையிலும் அடைபட்டிருக்கிறார்கள். தீர்ப்புகள் வந்து அந்த கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு முறைதான் அவருடைய உயிரை எடுக்க முடியும். ஆனால் அந்த கொலையாளி கொன்றதோ 20 உயிர்களுக்கு மேல். 20 உயிர்களை கொன்றவனை ஒரு முறை தூக்கில் ஏற்றினால் அது சரியான தண்டனையாகுமா? எனவே அவனுடைய இறப்புக்குப் பிறகு அவன் கொன்ற 20 உயிர்களுக்கும் இறைவன் முன்னிலையில் உலக மக்கள் முன்னிலையில் பழி வாங்கப்படும். 20 உயிர்களின் வலியையும் அன்று அவன் உணருவான், தோல்கள் புதுப்பிக்கப்படும்: மீண்டும் உயிரும் கொடுக்கப்படும் அவனது தண்டனையை நிறைவேற்றுவதற்காக. அதுதான் நியாயமும் கூட...

இறைவன் கொடியவர்களைத்தான் மறுமையில் கொடுமைபடுத்துவதாக சொல்கின்றான். இந்து வேதங்களும் கூட சொல்கின்றன. கொடியவர்களைப் பற்றி பேசினால் ஆனந்த் சாகருக்கு ஏன் கோபம் வருகிறது? :-)

சுவனப் பிரியன் said...

//கிறிஸ்தவர்களின், யூதர்களின் அல்லாஹ் வேறு; முஹம்மது கற்பனையில் விவரித்த முஸ்லிம்களின் அல்லாஹ் வேறு.//

உண்மைதான் ஏசுவும், டேவிட்டும் போதித்த அல்லாஹ் வேறு: இன்று கிறித்தவர்களும், யூதர்களும் பின்பற்றும் அல்லாஹ் வேறு. முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வைத்தான் நபி ஏசுவும், நபி தாவூதும் வணங்கினார்கள். பின்னால் வந்த யூத கிறித்தவர்கள் தங்களின் வேதத்தில் கை வைத்ததால்தான் குர்ஆனும் இறங்கியது.

சுவனப் பிரியன் said...

//முகம்மதுவை அல்லாஹ்வின் தூதரென்று சொல்லிக்கொண்டே அவரை அல்லாஹ்வுக்கும் மேலாக முஸ்லிம்கள் பூஜித்து வருகின்றனர்.//

உலகில் முகமது நபிக்கு எந்த நாட்டிலும் சிலை கிடையாது. காரணம் தவறாக பிற்காலங்களில் வரும் முஸ்லிம்கள் மரியாதை நிமித்தம் கடவுளாக்கி விடுவார்கள் என்பதால்தான். மதினாவில் முகமது நபியின் அடக்கத் தளத்துக்கு பக்கத்தில் இரண்டு காவலர்கள் எப்போதும் நிற்பார்கள். சில முஸ்லிம்கள் தவறுதலாக முகமது நபியிடம் கையேந்த ஆரம்பித்தால் அதனை தடுத்து பள்ளிக்கு சென்று இறைவனிடம் கேட்கச் சொல்வார்கள். இனி வருங்காலங்களிலும் முகமது நபி இறைத்தூதராகத்தான் பார்க்கப்படுவார். உலக முடிவு நாள் வரை இதுவே தொடரும்.

சுவனப் பிரியன் said...

//சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தம் ஆவதை எல்லோரும் அறிவர். பூமி சுழல்வதால் கிழக்கிலிருந்து மேற்கு வரை சூரியன் நகர்வது போல் நம் கண்களுக்கு தெரிகிறது. அந்த கால மக்களை போல முகம்மதுவும் சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறது என்று நம்பினார். இதைதான் சூரியன் தன் பாதையில் செல்வதாக முஹம்மது குர்ஆனில் கூறினார். முஹம்மது கூறியதில் ஒரு அறிவியலும் இல்லை.

விண்மீன் கூட்டத்தோடு(galaxy ) சூரியன் தன்னுடைய கோள்களை இழுத்துக்கொண்டு பயணிக்கிறது என்கிற தற்கால அறிவியல் கண்டுபிடிப்பை குரானுக்குள் சொருகுவது மிகப்பெரிய மோசடி. இந்த வகை மோசடியைத்தான் முஸ்லிம்கள் செய்து குரானின் வசனங்களில் அறிவியல் இருக்கிறது என்று தமாஷ் செய்து வருகின்றனர்.//

'இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் வானவெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் 21:33

'சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
-குர்ஆன் 13:2

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39:5

சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
-குர்ஆன்36:40

சொல்லப்பட்ட அனைத்து வசனங்களையும் ஒன்றாக்கினால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்போடு முற்றாக ஒத்துப் போவதை அனைத்து அறிவியல் அறிஞர்களும் ஒத்துக் கொள்கின்றனர். இந்துத்வாவில் வார்த்தெடுக்கப்பட்ட ஆனந்த் சாகருக்கு இவையெல்லாம் மூளையில் ஏறாது.
ஆனந்த் சாகர் said...

//முகமது நபியை எந்த முஸ்லிமும் கடவுளாக வழிபட மாட்டார். //

ஆனால் இறை தூதர் என்று சொல்லிக்கொண்டே அல்லாஹ்வுக்கும் மேலாக முகம்மதுவை வைத்து முஸ்லிம்கள் பூஜிப்பர். அல்லாஹ்வுக்கு இணை வைக்க கூடாது என்று சொல்லிக்கொண்டே முகம்மதுவை இணைவைப்பர். இருப்பினும் இந்த இணைவைப்பை அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனந்த் சாகர் said...

//20 உயிர்களை கொன்றவனை ஒரு முறை தூக்கில் ஏற்றினால் அது சரியான தண்டனையாகுமா? எனவே அவனுடைய இறப்புக்குப் பிறகு அவன் கொன்ற 20 உயிர்களுக்கும் இறைவன் முன்னிலையில் உலக மக்கள் முன்னிலையில் பழி வாங்கப்படும். 20 உயிர்களின் வலியையும் அன்று அவன் உணருவான், தோல்கள் புதுப்பிக்கப்படும்: மீண்டும் உயிரும் கொடுக்கப்படும் அவனது தண்டனையை நிறைவேற்றுவதற்காக. அதுதான் நியாயமும் கூட...//

இதுதான் முஸ்லிம் மனநிலை. ஒருவன் 20 கொலைகள் செய்திருந்தால் அவனை 20 முறை துடிக்க துடிக்க கொல்ல வேண்டும் என்பதுதான் சரியான தண்டனை என்பது இஸ்லாமிய அடிப்படைவாதியின் கூற்று. முஸ்லிம்கள் அறிவு, நாகரிக முதிர்ச்சி அடையவில்லை, அடையமாட்டார்கள் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. இந்த மனநிலை உள்ளவர்களோடு நாகரிக மனிதர்கள் விவாதம் புரிய முடியுமா? இது தெளிந்த புத்தி உள்ளவன் பைத்தியக்காரனோடு விவாதம் செய்வதற்கு ஒப்பானது.

அது சரி, நரகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் இறப்பின்றி நித்தியகாலமாக அதிலேயே இருப்பார்கள்; அவர்கள் ஒருபோதும் அதிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள் என்றுதானே அல்லாஹ் பலமுறை குர்ஆனில் கூறுகிறான்?. அவர்களை என்றென்றும் நித்தியகாலமாக நரக நெருப்பில் வேதனை படுத்திக்கொண்டே இருப்பேன் என்றுதானே அவன் குர்ஆனில் பல வசனங்களில் கூறுகிறான்? நீங்கள் எப்படி 20க்கு 20 என்ற கணக்கிற்கு வந்தீர்கள்? அல்லாஹ்வை பொறுத்தவரை ஒன்றோ அல்லது இருபதோ பொருட்டல்ல; அவன் ஒரே ஒரு குற்றத்திற்காக ஒருவரை நரகத்திற்கு அனுப்ப ஒரு முறை முடிவு செய்துவிட்டால், குரான் வசனங்களின்படி அந்த மனிதரை நித்திய காலமாய் நரக நெருப்பில்தானே எரித்து கொண்டிருப்பான்? நீங்கள் எப்படி இதற்கு மாறாக புது சட்டம் இயற்றுகிறீர்கள்? நீங்கள் புது நபியாக அல்லாஹ்வால் அனுப்பட்டு இப்படி பேசுகிறீர்களா!!!

ஒருவர் தன்னுடைய தவறான செயல்களுக்காக மனதளவில் வருந்துவதே அவருக்கான சரியான தண்டனை. அவரை கொடூரமாக வேதனை படுத்துவது தண்டனை ஆகாது. எந்த கொடூர குற்றம் புரிந்தவர்களையும் கடவுள் தண்டிப்பதே இல்லை. அது எவரையும் எதற்காகவும் தண்டிப்பதே இல்லை. அது எல்லோர் மீதும் நிபந்தனையற்ற அன்பு கூறுகிறது. மனிதர்கள் இறந்தவுடன் அவர்கள் பிறந்ததிலிருந்து இறப்பு வரை செய்த அனைத்து செயல்களும் ஆன்ம உலகில் அவர்களுக்கு திரையில் போட்டு காண்பிக்கப்படுகிறது. அவர்கள் செய்த தீய செயல்களுக்காக அவர்கள் அப்பொழுது மனம் வருந்துவார்கள். இந்த உலகில் வேண்டுமானால் மனசாட்சி இல்லாமல் பல கொடூர செயல்களை செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் மனசாட்சி அங்கு விழித்துக்கொள்ளும். அவர்கள் இதற்காக ஆழ்ந்த மன வருத்தம்(remorse ) அடைவார்கள். இதுதான் அவர்களுக்கு தண்டனை. அப்பொழுதும் அவர்கள் கடவுளின் நிபந்தனையற்ற அன்பில் நனைந்து கொண்டுதான் இருப்பார்கள். கடவுள் எவரை குறித்தும் எதற்காகவும் தீர்ப்பு வழங்குவதில்லை, தண்டிப்பதும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

//சொல்லப்பட்ட அனைத்து வசனங்களையும் ஒன்றாக்கினால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்போடு முற்றாக ஒத்துப் போவதை அனைத்து அறிவியல் அறிஞர்களும் ஒத்துக் கொள்கின்றனர். //

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புது நபியாக உருவெடுத்துள்ள உங்கள் அண்ணன் P. ஜைனுல் ஆபிதீன் போன்ற அறிவுக்குருடு இஸ்லாமிய அறிவியல் அறிஞர்களைதானே குறிப்பிடுகிறீர்கள்?

அனைத்து வசனங்களையும் ஒப்பீட்டாலும், கூட்டினாலும், கழித்தாலும், பெருக்கினாலும், வகுத்தாலும் எந்த அறிவியலும் குரான் வசனங்களில் துளியும் இல்லை. இதை சுதந்திரமாக சிந்திக்கிற எவரும் அறிவர்.

//இந்துத்வாவில் வார்த்தெடுக்கப்பட்ட ஆனந்த் சாகருக்கு இவையெல்லாம் மூளையில் ஏறாது.//

இஸ்லாமிய பயங்கரவாத இயக்க கொள்கைகளில் மூழ்கி முத்தெடுத்த சுவனப்பிரியன் என்கிற ஹூரி பிரியன் இப்படி சொல்வது சிரிப்பை வரவைக்கிறது. வடிவேல் பாணியில் சொல்வதென்றால், சிப்பு வருது,சிப்பு!!!