Followers

Thursday, May 15, 2014

நேற்றைய ஹைதரபாத் கலவரம் பற்றி.....நேற்றைய ஹைதரபாத் கலவரத்தைப் பற்றி செய்திகளில் பார்த்திருப்போம். ஹைதரபாத் ராஜேந்தர் நகரில் கிஷன் பக் என்ற இடத்தில் சீக்கியர்களின் கொடி எரிந்து சாம்பலானதுதான் இந்த கலவரத்துக்கு காரணம். இதனால் கொதிப்படைந்த சீக்கிய இளைஞர்கள் இதற்கு காரணம் முஸ்லிம்கள்தான் என்று முடிவு கட்டி அப்பாவியாக அந்த வழியே சென்று கொண்டிருந்த வாஜித் அலி (வயது 38) என்ற இளைஞரை குத்தி கொன்று விடுகின்றனர். சம்பவ இடத்திலேயே பலியான வாஜித் அலியின் நிலையைப் பார்த்து கொதித்து போன முஸ்லிம்கள் ஒன்று திரண்டு வந்துள்ளனர். கல் வீச்சும் இரு தரப்பிலும் நடந்துள்ளது. கலவர இடத்துக்கு சில மணி நேரங்களில் வந்த காவல்துறை இஸ்லாமியர் தரப்பை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்துள்ளனர்.

அவ்வாறு நடத்திய துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக முஹம்மது சாஜூத்தீன் (வயது 42), நஜீர் (வயது 28) என்ற இரண்டு முஸ்லிம்கள் இறந்துள்ளனர். மொத்தம் இறந்தவர்கள் நான்கு என்று மற்றொரு செய்தி சொல்கிறது. 10க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் குண்டு காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலவரத்துக்கு மூல காரணமான அந்த சீக்கிய கொடியை எரித்து யார்? அந்த கொடி நடப்பட்டிருந்த கடை மின்சார உபகரணங்கள் நிறைந்தது. அங்குள்ள வயர்களிலிருந்து தீப்பிழம்புகள் மின் கசிவினால் ஏற்பட்டு அது அந்த கொடியையும் எரித்துள்ளது. இது ஒரு மின் விபத்து என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் அங்குள்ளவர்களிடம் பேட்டி எடுத்து போட்டுள்ளது. சாதாரண ஒரு துணி கொடி மின் கசிவினால் ஏற்பட்ட விபத்தில் கருகியதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத 3 முஸ்லிம்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை நோக்கியே போலீஸாரின் துப்பாக்கிகள் திரும்பியுள்ளன. மேலே பார்க்கும் படத்தில் மிகப் பெரிய கத்திகளோடு போலீஸாரின் பாதுகாப்போடு சீக்கியர்கள் நிற்பதை பார்க்கிறோம். எந்த ஆயுதங்களும் இல்லாமல் உள்ள முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கிச் சூடு. இதற்கு பெயர்தான் மதசார்பின்மையா?

சில நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமில் எதிர்த்து வாக்களித்த ஒரே காரணத்துக்காக இந்துத்வா கும்பல் 33 அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்ததை நாம் மறந்து விடவில்லை. ஹைதராபாத், அஸ்ஸாம், முஜாபர் நகர் என்று இதே போன்ற நிலை நாடெங்கும் நிகழ்ந்தால் இந்த நாட்டின் மீது வெறுப்புற்று ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக மாறினால் இந்த நாட்டில் அமைதி நிலவுமா? பெரியண்ணன் பாணியில் முஸ்லிம்களை மிரட்டியே காலத்தை ஓட்டுவோம் என்று இந்துத்வாவாதிகள் எண்ணினால் அவர்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளட்டும். ஏனெனில் இந்துத்வாவாதிகளான நீங்கள் இந்த உலகத்தை மட்டும் நேசிக்கக் கூடியவர்கள். ஆனால் முஸ்லிம்களோ மறு உலகையும் சேர்த்து நேசிப்பவர்கள். உங்களிடம் காவல் துறை இருக்கலாம்: நீதிமன்றமும் ஒரு சார்பாக செயல்படலாம்: ஆட்சியாளர்களும் உங்களுக்கு சார்பாக நிற்கலாம்: ஆனால் எங்களிடம் உண்மை இருக்கிறது: மாற்ற முடியாத இறை பக்தி இருக்கிறது. அந்த இறை பக்தியானது அநீதிக்கு எதிராக தங்களின் உயிரையும் அர்பணிக்கும் மனோ திடத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது. 'ஜிஹாத்', 'ஜிஹாத்' என்று கூறி வருகிறீர்களே அதனை நோக்கி உண்மையிலேயே முஸ்லிம்கள் நகர்ந்தால் இந்த நாட்டில் எந்த இனமும் அமைதியாக வாழ முடியாது. அத்தகைய நிலைக்கு முஸ்லிம்களை தள்ளிவிட வேண்டாம் என்று சூழ்ச்சி செய்து கலவரங்களை உண்டாக்கும் பிஜேபி, ஆர்எஸ்எஸ் அபிமானிகளுக்கு சொல்லிக் கொள்கிறோம்.9 comments:

Anonymous said...

வெங்காய வியாபாரி தமீம் அன்சாரி விடுதலை.

இந்திய இராணூவத்தை உளவு பார்த்து தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் கூறியதாக கீயூ பிரிவு போலீசாரால் பொய் வழக்கு போடப்படடு சிறையில் அடைக்கப்பட்ட அதிராம்பட்டணத்தை சார்ந்த வெங்காய வியாபாரி நீதிமன்றதால் குற்றவாளி அல்ல என கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகள் இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டதை மட்டும் பிரசுரிக்க மறுப்பது ஏனோ.......

சுவனப் பிரியன் said...

ஹானஸ்ட் மேன்!

//திரு சுவனபிரியன் பார்வைக்கு:--------------------------------
1. இஸ்லாம் மதத்தை உருட்டி மிரட்டி பயமுறுத்தி பரப்பவில்லை என்று சொல்கிறீர்கள். நைஜீரிய நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 200 இளம் பள்ளி மாணவர்களில் பலர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் முஸ்லிம் மதத்திற்கு “”இப்போது”" மாறியுள்ளனர் (பயத்தின் காரணமாக).//

இது தவறு. 'போகோ ஹராம்' என்ற அமைப்பு இஸ்லாமிய சட்டங்களை மதிப்பதில்லை. அவர்களை முன்னுதாரணமாக முஸ்லிம்கள் ஆக்கிக் கொள்ள வேண்டாம் என்று சவுதி அரேபிய தலைமை குரு நேற்றைய செய்தியில் அறிவித்துள்ளார். பெண்களை கடத்தியதை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். இது கோழைகளின் செயல்.

//2. இஸ்லாம் மதத்தில் சகோதரத்துவம் கொடிகட்டி பறக்கிறது என்று கூறுகிறீர்களே! இங்கே கீழே படிக்கவும். சென்ற செவ்வாய் கிழமை ஷியா முஸ்லிம்கள் நிறைந்த பகுதியான பாக்தாத்தில் (ஈராக் நாடு) குண்டு வைத்து 25 பேரை கொண்டிருக்கின்றனர். அதில் 80க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானிலும் இதே கதைதான்.//

நம் நாட்டிலும் அஸ்ஸாமில் 33 அப்பாவி முஸ்லிம்கள் வெறியர்களால் கொல்லப்பட்டனர். நேற்று சீக்கியர்களின் கொடி மின் கசிவினால் எரிந்திருக்க அதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது வரை மூன்று பேர் இறந்துள்ளனர். இதனால் இந்தியர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்று யாராவது சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

//3. ஆப்கன் நாட்டில் கோரக் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு தலிபான்கள் food supply யை தடை செய்துள்ளனர் அதனால் அம்மக்கள் புல் (grass ) சாப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களான தலிபான்கள் ஈவு இரக்கமற்றவர்களா?//

ஆப்கானிஸ்தானின் மீடியாக்கள் பூராவும் அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்களை பற்றி அவர்கள் எவ்வாறான செய்திகளை வெளியே விடுவார்கள் என்று நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த செய்திகளை எல்லாம் நம்ப வேண்டாம் என்று முல்லா உமர் கொடுத்த செய்தியை நான் பதிவாகவே போட்டுள்ளேன். எனவே உண்மை நிலை வேறு. நமக்கு கிடைக்கும் செய்திகளோ வேறு.

சுவனப் பிரியன் said...

//மோடிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்,ரியாதில் வெய்யில் அதிகமோ?//

பிஜேபிக்கு 160 சீட்டுக்கு மேல் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் மலை போல் நம்பியிருப்பது ஜெயலலிதாவைத்தான். மலைச்சாமியை நீக்கியதன் மூலம் தனது எண்ணத்தை அழகாக வெளிப்படுத்தி விட்டார். அடுத்து அவர்கள் நம்பியிருந்தது பிஜூ ஜனதா தளத்தை. ஆனால் நவீன் பட்நாயக்கோ காங்கிரஸையும், பாஜகவையும் சம தூரத்தில் வைத்துள்ளோம் என்று சொல்லியுள்ளார். எனவே இரண்டு பேரும் கழட்டி விட்டுள்ளதால் மோடியின் பாடு திண்டாட்டம் தான்.

ரியாத்தில் வெயில் அதிகமா, அல்லது நமது நாட்டில் வெயில் அதிகமா என்பதை இந்திய நேரம் நாளை காலை 11 மணிக்கு தெரிந்து கொள்ளலாம். அதுவரை மோடியை இலாகா அமைச்சர்கள் தேர்ந்தெடுத்த கூத்தை வெளியில் விட வேண்டாம் என்று சொல்லி வைக்கவும். வர வர மோடி காமெடியனாக மாறி வருகிறார் :-)

சுவனப் பிரியன் said...

"சாதி இரண்டொழிய சாற்றுங்கால், நீதி வழுவா நெறி முறையில், இட்டார் பெரியோர்.இடாதார் இழி குலத்தோர். பட்டாங்கில் உள்ள படி." உற்பத்தி சமூகம் இட்ட சமூகம். இடாத சமூகம் உண்ணும் சமூகம்.ஆகவே உற்பத்தி சமூகங்கள் உயர் சாதியாகவும், உண்ணும் சமூகங்கள் தாழ்ந்த சாதியாகவும் ஆகும் பொழுதுதான் இந்த நிலை மாறும். இந்த உஞ்ச விருத்தி சமூகத்தினர்களால், தங்கள் நிலையைப் பாது காத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப் பட்டதுதான் இந்த சாதியமும் மதமும். இன்றய நிலையில் இந்த உண்ணும் சமூகத்தினர்களை உற்பத்தி சமூகத்தினர் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்றே டி.எம்.கிரிஷ்ணா போன்ற உண்ணும் சமூகத்தினர் புரட்சி பேசிக் கொண்டிருக்கின்றனர். பாட்டுச் சொல்லிக் கொடுத்தால் சாதி அழியப் போவதில்லை.முதலில் அவர் சார்ந்த உண்ணும் சமூகத்தை உற்பத்தி சமூகமாக மாற்ற அவர் முயற்சிக்கட்டும். என் பதின் பருவத்துக் காலங்களில் இருந்தே இந்த உண்ணும் வர்க்கத்து புரட்சியாளர்களை அறிவேன். ஒரு அறிஞர்," உண்ணும் சமூகத்தினருக்கு, சொத்து உறிமை, குடும்பமாக வாழும் உறிமை, வாக்களிக்கும் உறிமை யாவும் கொடுக்கக் கூடாது." என்று கூறினது நினைவிற்கு வருகிறது.சைத்தானின் வேதம்.

Tk nidhi - from Nagercoil
------------------------------------------------------------------------------------------------------------------------
டி.எம்.கிருஷ்ணா! இந்த இளம் வயதில் என்ன ஒரு கூர்மையான அறிவு, தெளிவான உள்ளம், அச்சமற்ற கருத்துக்கள். மிகவும் பாராட்டப்படவேண்டிய, அங்கீகரிக்கப்படவேண்டிய மனிதர். யாருமே பிராமினரகவோ, தலித்தாகவோ பிறப்பதில்லை. யாருமே பிராமிணராகவோ, க்ஷட்ரியராகவோ, வைசியராகவோ, சூத்திரராகவோ பிறப்பதில்லை. இது நமது வேத நூல் பகவத் கீதையின் கூற்று. பின் எப்படி இந்த பிரிவு? அவரவர் பண்பு, தொழில் , நடவடிக்கை இதன்படியே அந்த நான்கு பிரிவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.அதாவது இறைத்தொண்டு செய்கிறவன் பிராமிணான் என்று அழைக்கப்படுகிறான். நாட்டை ஆள்பவர்கள், நாடை பாதுகாப்பவர்கள் க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர். வாணிபம் செய்பவர்கள் வைசியர்கள். மற்றவருக்குப்பணிபுரிபவர், சேவை செய்பவர் சூத்திரர் ஆவர்.. ஆகவே பிறப்பாலும், தொழிலாலும் யாரும் உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என்று கிடையாது. நால்வருமே சமப்பிரிவினரே. டி.எம்.கிருஷ்ணாவின் கருத்துகளுக்கு நன்றி.

ஆர் .எம். மனோகரன்


ஹிந்து வாசகர் கடிதம்

Anonymous said...

//பிஜேபிக்கு 160 சீட்டுக்கு மேல் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் மலை போல் நம்பியிருப்பது ஜெயலலிதாவைத்தான்//
அய்யா தேர்தல் முடிவை பார்த்தீர்களா. எந்த அம்மாவின் தயவும் மோடிக்கு தேவை இல்லை. நீங்கள் எல்லாம் பெரிய இவனுகளா. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே பெரிய இவராட்டம் பதிவாக எழுதி தள்ளினீர். எங்கே போனது உனது கூட்டத்தின் ஓட்டுகள்

ஆனந்த் சாகர் said...

//இது தவறு. 'போகோ ஹராம்' என்ற அமைப்பு இஸ்லாமிய சட்டங்களை மதிப்பதில்லை. //

இஸ்லாமிய சட்டங்களை, முஹம்மதின் செயல்களை முன்னுதாரணமாக கொண்டே போகோ ஹராம் உட்பட அனைத்து இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும் செயல்படுகின்றன. இஸ்லாம் என்பதே பயங்கரவாத இயக்கம்தான். இஸ்லாத்தை பற்றி நன்கு படித்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை விட்டு வெளியேறுங்கள் என்று அப்பாவி முஸ்லிம்களுக்கு நாங்கள் அழகிய முறையில்(!!!) அழைப்பு விடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

//அவர்களை முன்னுதாரணமாக முஸ்லிம்கள் ஆக்கிக் கொள்ள வேண்டாம் என்று சவுதி அரேபிய தலைமை குரு நேற்றைய செய்தியில் அறிவித்துள்ளார். பெண்களை கடத்தியதை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். இது கோழைகளின் செயல்.//

இது நாகரிக உலகத்தை ஏமாற்ற செய்யும் அப்பட்டமான தகியா(ஏமாற்றுதல்).

ஆனந்த் சாகர் said...

//நீங்கள் எல்லாம் பெரிய இவனுகளா. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே பெரிய இவராட்டம் பதிவாக எழுதி தள்ளினீர். //

மோடி மீது பல அவதூறுகளை அள்ளி வீசி புழுதி வாரி தூற்றி பல பதிவுகளை சுவனப்பிரியன் என்கிற ஹூரி பிரியன் எழுதி மனப்பால் குடித்துக்கொண்டு இருந்தார். இப்பொழுது அவரது முகத்தில் நன்றாக கரி பூசப்பட்டு விட்டது.

//எங்கே போனது உனது கூட்டத்தின் ஓட்டுகள்//

இவர்களின் ஓட்டுக்கள் தேவை இல்லை என்கிற நிலையை முஸ்லிமல்லாதோர் உருவாக்க வேண்டும். முஸ்லிம்களை தாஜா செய்யாத கட்சிக்கே பெரும்ப்பன்மையோர் வாக்களித்தால் இது நிறைவேறும்.

Anandan Krishnan said...

//மோடி மீது பல அவதூறுகளை அள்ளி வீசி புழுதி வாரி தூற்றி பல பதிவுகளை சுவனப்பிரியன் என்கிற ஹூரி பிரியன் எழுதி மனப்பால் குடித்துக்கொண்டு இருந்தார். இப்பொழுது அவரது முகத்தில் நன்றாக கரி பூசப்பட்டு விட்டது//
கொஞ்சம் அவரது பழைய பதிவுகளை பார்த்தால் பெரும்பாலும் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே மோடியை எப்படி எல்லாமோ விமர்சித்து அண்ணாச்சி விளாசி இருந்தார். அதற்கெல்லாம் சேர்த்து ஒட்டு மொத்த இந்தியாவும் பதில் சொல்லி இருக்கிறது. தனது முகத்தில் அவரே கரியை பூசி முகத்தை மறைத்து கொண்டிருக்கிறார்.

Anandan Krishnan said...

//இவர்களின் ஓட்டுக்கள் தேவை இல்லை என்கிற நிலையை முஸ்லிமல்லாதோர் உருவாக்க வேண்டும். முஸ்லிம்களை தாஜா செய்யாத கட்சிக்கே பெரும்ப்பன்மையோர் வாக்களித்தால் இது நிறைவேறும்.//

இந்த தேர்தல் முடிவே சொல்கிறதே இவர்கள் வெத்து வேட்டுகள் என்பதை. இவர்களை தாஜா செய்வதால் ஒன்றும் ஓட்டுகள் விழவில்லை என்பதை கோமாளி அரசியல்வாதிகள் சிலர் புரிந்து கொண்டால் இவர்களின் ஆட்டம் குறையும். ஒரு சில குருவி மண்டை எழுத்தாளர்கள், இந்த வெத்து வேட்டுகளிடம் ஆதாயம் எதிர் பார்க்கும் சில அரசியல்வாதிகள், இவர்கள் தான் இந்த பிள்ளை பெற்று மதத்தை வளர்க்கும் கூட்டத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள். முஸ்லிம்களை யோக்கியர்கள் என்று நம்பி இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் பாமர இந்து மக்கள் எல்லாருக்கும் இந்த அரபு அடிமைகளின் உண்மை முகத்தை புரிய வைக்க வேண்டும். இவர்களுக்கு இவர்களை ஆதரித்தால் வருங்காலத்தில் ஜிஸ்யா வரி கட்டித்தான் இந்த நாட்டில் வாழ முடியும் என்ற உண்மையை சாமான்ய இந்துக்களுக்கு புரிய வைத்தால் இந்த குப்பைகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.