Followers

Sunday, May 25, 2014

செந்தில் நாதன் - கண்ணீரை வர வழைத்த அவனது பாட்டு!https://www.youtube.com/watch?v=vqscDfd9TaA

'கோழி ஒரு கூட்டிலே..... சேவல் ஒரு கூட்டிலே......

கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே....

பசுவை தேடி கன்னுக் குட்டி பால் குடிக்க ஓடுது.....

பறவை கூட இரை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது.

தாத்தா தெரியுமா?..... பாத்தா புரியுமா?.......

தனித்தனியா பிரிஞ்சிருக்க எங்களால முடியுமா?.... எங்களால முடியுமா.....

என்று இந்த சிறுவன் செந்தில் நாதன் பாடி முடித்த போது என்னையறியாமல் எனக்கு கண்ணீர் வந்து விட்டது. தனது வாழ்க்கையையே பாட்டாக பாடினானோ என்று எனக்கு தோன்றியது. கண்ணும் தெரியாது: மூளையும் சரியான வளர்ச்சி இல்லை: உடலும் ஒரு இடத்தில் நிலையாக நிற்காது: சாப்பிடுவது, இயற்கை கடன்களை கழிப்பது போன்ற அனைத்தையும் மற்றொருவர்தான் செய்து விட வேண்டும்: இத்தனை குறைகளையுடைய ஒரு மகன் நமக்கு தேவைதானா? என்று யோசித்த இவரது பெற்றோர் இவனை கடற்கரையில் விட்டு விட்டு சென்று விட்டனர். பசியில் அலைந்து திரிந்த இந்த சிறுவனை கூட அழைத்து வந்தவர்தான் தன்னோடு தங்க வைத்துள்ளார். இது போன்று பெற்றோர்களால் கைவிடப்பட்ட பல குழந்தைகளை பராமரித்தும் வருகிறார்.

இறைவன் இவரைப் பொன்ற நல்ல உள்ளங்களுக்கு பொருளாதார உதவி மேலும் கிடைத்து இன்னும் பல குழந்தைகளை தத்தெடுக்கும் பாக்கியத்தை தர வேண்டும். பெற்ற தாய் தந்தை உதறி விட்டாலும் ஏதோ ஒரு வகையில் இது போன்ற அனாதைகளை காக்க இந்த பெரியவரைப் போன்ற சிலரையும் இறைவன் படைத்தே வருகிறான்.

இன்னும் எத்தனையோ தாய் தந்தையர் வறுமைக்கு பயந்து கள்ளிப்பால் கொடுத்து குழந்தைகளை கொல்வதும் ஸ்கேன் போட்டு பார்த்து பெண் குழந்தை என்றால் அதனை அழித்து விடுவதும் பல இடங்களில் நடக்கிறது. படித்தவர்கள் மத்தியில் இது அதிகம் நடக்கிறது. வறுமையும், செல்வந்த நிலையும் நமது திறமையால் வந்து விடுவதில்லை. அதனை கொடுப்பது இறைவன். சிலருக்கு பொருளை கொடுத்து சோதிப்பான்: சிலருக்கு குழந்தையை கொடுத்து சோதிப்பான்: இன்னும் சிலருக்கு வறுமையைக் கொண்டு சோதிப்பான்: இதிலிருந்து எல்லாம் மீண்டு எந்த உயிருக்கும் தீங்கிழைக்காது இறைவன் சொன்னபடி தனது வாழ்வை அமைத்துக் கொள்பவனே இந்த பரீட்சையில் வெற்றியடைகிறான். அத்தகைய வெற்றி பெற்ற மக்களின் கூட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்ள முயற்சிப்போமாக!

இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5 கோடி மக்களிடம் 200 கோடி மக்களுக்குத் தேவையான செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த செல்வத்தை பகிர்ந்து கொடுத்தாலே நமது நாட்டின் வறுமையை முற்றாக ஒழித்து விடலாம். உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை. ஒரு கோழிக்குஞ்சு கோழியாக வளர்வதற்கு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தொகை குறைவாக உள்ள போது இது தான் நிலைமை. மக்கள் தொகை பெருகிய பின் மிக விரைவாகவும் அதிக எடையுடனும் வளரக் கூடிய கோழி இனங்களைக் கண்டு பிடித்து விட்டான். சேவல் இல்லாமல் தினந்தோறும் முட்டை இடும் கோழி இனத்தையும் மனிதன் கண்டு பிடித்துள்ளான். ஒரு படி பால் கறப்பதற்கே தாளம் போட்ட நிலை மாறி 100 லிட்டர் வரை பால் கறக்கும் பசுக்களையும் மனிதன் கண்டுபிடித்து விட்டான். எனவே வறுமைக்கு பயந்து குழந்தைகளை கொல்வதோ குழந்தை பெற்றுக் கொள்ளாமல் முற்றிலும் தவிர்ப்பதோ ஒரு சரியான தீர்வாகாது என்பதை நாம் விளங்க வேண்டும்.

முகமது நபி இஸ்லாத்தை போதிப்பதற்கு முன் அரபு நாடுகளில் வறுமைக்கு பயந்து குழந்தைகளை கொல்லும் பழக்கம் இருந்தது. இது பற்றி குர்ஆன் கூறுவதாவது...

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட செய்தி கெட்டதெனக் கருதியதால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை உயிருடன் புதைப்பதா? என்று எண்ணுகிறான் கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
(அல்குர்ஆன் 16:58,59)


அறியாமைக் காலத்தில் ரபீஆ மற்றும் முளர் குலத்தார் தங்களுடைய பெண் மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்து வந்தனர். வறுமை மற்றும் இழிவைப் பயந்து பெண் மக்களை அரபுகள் கொன்று வந்தனர். இதற்குத் தடைவிதித்தே இறைவன் இவ்வசனத்தை அருளினான்.
“”உன்னுடைய குழந்தை உன்னுடன் உண வருந்துவதை அஞ்சி, அதை நீ கொலை செய்வது பெரும் பாவமாகும்.” என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி:7532 )

2 comments:

k.rahman said...

i was not even able to watch the full video. my god. why so much suffering for some people in this world? i almost cried when i watched the video.

/இறைவன் இவரைப் பொன்ற நல்ல உள்ளங்களுக்கு பொருளாதார உதவி மேலும் கிடைத்து இன்னும் பல குழந்தைகளை தத்தெடுக்கும் பாக்கியத்தை தர வேண்டும். பெற்ற தாய் தந்தை உதறி விட்டாலும் ஏதோ ஒரு வகையில் இது போன்ற அனாதைகளை காக்க இந்த பெரியவரைப் போன்ற சிலரையும் இறைவன் படைத்தே வருகிறான். /

mr.badri who supported this kid should have a long and happy life. what a gem of person he is that he has dedicated his entire life for such kids. compared to this we have so much in our life but all that we do is complaining.
thanks for sharing mr.suvanapriyan.

சுவனப் பிரியன் said...

//mr.badri who supported this kid should have a long and happy life. what a gem of person he is that he has dedicated his entire life for such kids. compared to this we have so much in our life but all that we do is complaining.
thanks for sharing mr.suvanapriyan.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ரஹ்மான்!