Followers

Thursday, May 22, 2014

மெக்காவைப் பார்க்கும் ஆவலில் கண்ணீர் சிந்திய டி.ராஜேந்தர்!சுவனப்பிரியனான நான் ஒரு இஸ்லாமிய தாய் தந்தைக்கு மகனாக பிறந்ததனால் இந்த இஸ்லாமிய மார்க்கமானது மிக இலகுவாக கிடைத்து விட்டது. ஆனால் உலகில் கோடான கோடி மக்கள் 'இந்த மார்க்கம் சிறந்தது: உண்மையானது: பழைய வேதங்களையும் ஒத்துக் கொள்கிறது: உலக மொழிகள் அனைத்தையும் நேசிக்கிறது: உலக மக்கள் அனைவரையும் ஒரு தாய் மக்கள் என்று அன்போடு அரவணைக்கிறது: ஆண்டியும் அரசனும் இறைவனைத் தொழும்போது அருகருகே நிற்க வைத்து இறைவனுக்கு முன்னால் அனைவரும் சமம் என்பதை பறைசாற்றுகிறது: இதை எல்லாம் உணர்ந்த நான் இஸ்லாமியனாக மாற துடிக்கிறேன். ஆனால் நான் மட்டும் இஸ்லாத்தை ஏற்றால் எனது குடும்ப வாழ்வு சிதறும்: அக்கம் பக்கத்தோரால் சீண்டப்படுவேன்: பல சவால்களை சமாளிக்க வேண்டி வரும்:அரசின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி வரும்:' என்று மனதளவில் புழுங்கி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகத்தான் டி.ராஜேந்தருக்கும் இன்று இஸ்லாமிய மார்க்கத்தின் பால் பற்று வந்துள்ளது. ஜெத்தா வரை சென்று மெக்காவை பார்க்க முடியவில்லையே என்று சொல்லும் போது அவர் கண் கலங்குகிறார். சன்டிவி 'சூப்பர் குடும்பம்' நிகழ்ச்சியிலும் இதே கருத்தை பிரதிபலித்தார். இவர் போன்று மன வலியுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் பல கோடி மாற்று மத அன்பர்களின் வாழ்வில் அமைதியை கொண்டு வர அந்த ஏக இறைவனிடம் பிரார்த்திப்போமாக! அதற்கேற்ற சூழல் அவர்கள் குடும்பத்தில் ஏற்படட்டுமாக என்றும் பிரார்த்திக்கிறேன்.

அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்ப­ல் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, சிரம் பணிந்து விழுவார்கள்.
அல்குர்ஆன் 19 : 58


ஆம்.... குர்ஆனின் வசனங்களுக்கு அத்தகைய ஆற்றல் இருக்கிறது. இஸ்லாத்தை ஏற்கும் பல சகோதர சகோதரிகள் தாங்கள் உறுதி மொழி எடுத்து குர்ஆன் வசனத்தை ஓதும் போது தங்களையும் அறியாமல் கண்ணீர் விடுவதை நாம் காணொளிகள் பலவற்றில் பார்த்துள்ளோம். அதுதான் தற்போது டி.ராஜேந்தருக்கும் நிகழந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=kQUMNUkbapQ

3 comments:

ஆனந்த் சாகர் said...

T ராஜேந்தர் டிவியில் போடும் ஆட்டமும் பட்டமும் நாம் அறிந்ததே. அவரிடம் பல குழந்தைத்தனங்கள் உள்ளன. அவர் இப்படி குழந்தைத்தனமாக அழுவதில் வியப்பேதும் இல்லை.

அது சரி, சினிமாக்காரர்களை கூத்தாடிகள் என்று கேலியாக சொல்வீர்களே. மெக்காவுக்கு செல்ல முடியவில்லையே என்று அறிவுகெட்டத்தனமாக அழும்போது மட்டும் சினிமாக்காரன் உங்களுக்கு பிடிக்கிறதோ?

Anonymous said...

ஏன் அவர் அங்கே போக முடியவில்லை பஸ் கிடைக்கலயா

ஆனந்த் சாகர் said...

//ஏன் அவர் அங்கே போக முடியவில்லை பஸ் கிடைக்கலயா//

எனக்கு தெரிந்தவரை, மக்கா நகருக்குள் காபிர்களை சவுதி அரசு அனுமதிப்பதில்லை. காபிர்கள் அசுத்தமானவர்கள், எனவே அவர்கள் தடை செய்யப்பட்டவர்களாம்!