Followers

Thursday, May 29, 2014

இரு பெண்களை கற்பழித்து தூக்கில் ஏற்றிய கொடூரம்!உத்தர பிரதேசம் பாடாவுன் மாவட்டம் சத்கஞ்ச் கிராமத்தில் இரண்டு இளம் பெண்கள் கூட்டாக கற்பழிக்கப்பட்டு பிறகு அவர்களை தூக்கில் ஏற்றி உள்ளனர் காம கொடூரர்கள். இது அந்த கிராமத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண்களுக்குமே 14 லிருந்து 15 வயது வரைதான் ஆகிறது. வீட்டிலிருந்து இயற்கை கடன்களை கழிக்க சற்று தூரம் உள்ள மறைவான இடத்துக்கு இந்த இரண்டு பெண்களும் சென்றுள்ளனர். இரவாகியும் திரும்பாததால் சந்தேகம் ஏற்பட்டு கிராம மக்கள் காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். ஆனால் காவல்துறையோ எந்த ஒரு விசாரணைக்கும் உத்தரவிடாமல் தட்டிக் கழித்துள்ளது. கூட்டு கற்பழிப்பானதால் அந்த இரு பெண்களும் வலி தாங்காமல் இறந்துள்ளனர். இறந்த அந்த இரண்டு உடல்களையும் மறுநாள் ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டு 'கற்பழிப்பால் தற்கொலை' என்று கேஸை மூடப் பார்க்கிறது காவல் துறை என்கின்றனர் கிராம மக்கள்.

கிராம மக்களின் போராட்டத்தால் நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளது. சர்வேஷ் யாதவ் என்ற இளைஞரையும் போலீஸ் கைது செய்துள்ளது. பணியில் அசட்டையாக இருந்ததால் நான்கு காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்பு என்பது நமது நாட்டில் மிகவும் கேள்விக் குறியாக மாறி வருகிறது. தலித் மக்களை உயர் சாதி இளைஞர்கள் கூட்டு வன் புணர்வு செய்வது பல ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது. அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலரின் பிள்ளைகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதிப்படைந்த மக்கள் கூறுகின்றனர். சட்டங்களை கடுமையாக்கி குற்றவாளிகளையும் இதே போல் தூக்கில் ஏற்றினால்தான் இது போன்ற கற்பழிப்புகளும் கொலைகளும் குறையும்.

முஸாஃபர் நகரில் காதல் என்று பொய்யாக புனைந்துரைத்து 40 முஸ்லிம்களின் உயிரை குடித்த இந்துத்வா வெறியர்கள் தற்போது எங்கு சென்று ஒளிந்து கொண்டனர். குஜராத்திலிருந்து ஓடி வந்து கலவரத்தை நடத்திய அமீத்ஷா தற்போது எங்கே? எவரும் வர மாட்டார். ஏனெனில் இது இரண்டு சாதிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை. இது தான் இவர்களின் சுயரூபம்.

http://www.news18.com/news/uttar-pradesh/constable-three-others-arrested-in-dalit-sisters-gangrape-murder-case-492645.html

4 comments:

Anonymous said...

//ஹிந்து மதம் ஆன்மீக வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது//-anand sager

எப்படி? உபியில் இரண்டு தலித் இளம் பெண்களை கற்பழித்து அவர்களை தூக்கில் தொங்க விட்டுள்ளார்களே யாதவர்கள்! அதைச் சொல்கிறீரா!

தலித் உயிர் உங்களுக்கெல்லாம் பெரிதாக தெரிவதில்லை. இந்துக்களின் எண்ணிக்கையை கூட்டி காட்டுவதற்கு மட்டும் தலித்கள் இந்துத்வாவுக்கு தேவைப்படுகிறார்கள். இந்த கொலைகளைப் பற்றி இந்துத்வா மூச்சு கூட விடவில்லை. இதற்கு பெயர்தான் இந்துத்வா.

சுவனப் பிரியன் said...

பேர் இல்லா கவிதை..!!

மனிதன் என்ற பேரில் இருக்கும்
ஈனத்திலும் ஈனப் பிறவிகளே..!
அநியாயமாய் தொங்கி கொண்டிருக்கும்- நாங்கள்
செய்த மகா பாவமென்ன..?

மனிதர்களை வேறுபடுத்தி பார்க்கும்
நீதி கெட்ட இச் சமுதாயத்தில்
தலித் பெண்களாக பிறந்தது தான்
நாங்கள் செய்த குற்றமா..?

அனைத்திலும் தீண்ட தகாதவராக
தள்ளி வைக்கும் நீங்கள்- உங்கள்
உடல் பசிக்கு மட்டும் ஏன் – எங்களின்
உடல் உறுப்பை பயன்படுத்துகிறீர்கள்?

ஐந்தறிவு பிராணி கூட தன் இச்சைக்காக
தன் சக உயிர்களை கொல்வதில்லையே..?
ஆறறிவு படைத்த கேடுகெட்டவர்களே
உங்களுக்கு மட்டும் ஏனடா இந்த இச்சை வெறி..?

எதிர்க்க வலுவில்லாத எங்களிடம் - உங்கள்
வீரத்தை காட்டும் நீங்களெல்லாம்
ஆண்மகன் என்ற பேரில் இருக்கும்
கோழைகளிலும் கோழைகளடா.

எங்களின் உயிறற்ற உடல்களை பார்த்து
அடிவயிறு பற்றி எரிய கண்ணீர் விடும்
எங்கள் சகோதரிகளின் வேண்டுதல்கள்
உங்களை வாழ விடாமல் செய்யுமடா.

பெண்கள் இந்நாட்டு கடவுள்களாம்- வெட்கக்கேடு
எங்களுக்கென்று எந்த அபிஷேகங்களும் வேண்டாமடா
எங்களின் உடலை மட்டும் பார்க்காமல்- சக உயிராக
மனுஷியாக மதித்து நடத்தினால் போதுமடா.

மாறு கொண்ட இச்சமுதாயத்தில் வேண்டுமானால்
எமக்கான நீதிகள் தவறலாம் - ஆனால்
அணு அளவும் நீதி பிசகாத அவனிடத்தில்
எமக்கான நன்மைகள் கிடைக்குமடா.

By

Ayusha Begum.....

Anonymous said...

தமிழச்சி (Tamizachi)

//கற்பழிக்கப்பட்ட பெண்கள்ல கூடவா ஜாதி வித்யாசம் பாக்குறது.// இவை போன்ற திசைமாற்றும் கேள்விகள் வருமென்பதால் முன்பே இந்திய சட்டபிரிவு குறித்து குறிப்பிட்டிருந்தோம்.

மீண்டும் உங்கள் கவனத்திற்காக:

"ஆண்டாண்டு கால இக்கொடுமைகளுக்கு எதிராகத்தான் 'இந்திய சட்டத்தில் சாதாரண பெண்கள் பலாத்தாரம் செய்யப்பட்டால் குற்றவாளிக்கு கொடுக்கப்படும் தண்டனைகளைவிட, தலித் பெண்கள் மீது பலாத்தாரம் செய்யும் ஆண்களுக்கு இரண்டு மடங்கு தண்டனை காலங்கள் அதிகமாக கொடுக்க வேண்டும்' என்று சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டிருக்கிறது."

தலித் பெண்கள் மற்றும் பழங்குடி பெண்கள் அதிகளவில் இந்தியாவில் பலாத்தாரம் செய்யப்படுவதற்கு காரணங்கள் ஆதிக்கசாதி ஆண்களின் வர்க்க / சாதி இழிநிலை சார்ந்த வெளிப்பாடு. உதாரணத்திற்கு "அவன் வீட்டு வேலைக்காரியைக்கூட விட்டு வைக்க மாட்டான்" என்று ஒரு ஆணின் நடத்தையை குறித்து பேசும் போது வேலைக்காரியைக்கூட என்று இழித்து பேசுவது ஏன்? அவள் பெண் என்பதையும் தாண்டி வர்க்க அடிப்படையில் பார்க்கப்படுவது ஒரு காரணம். இன்னொரு காரணம் சாதியில் தாழ்ந்தவர்களாக கருதப்படும் பெண்களே வீட்டு வேலைகளில் இச்சமூகம் வைத்திருக்கிறது. அது அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணிகளாக இருப்பது. இங்கே வர்க்க வெளிபாடும் சாதிய இழிவும் ஒன்றே முதன்மைப்படுத்தப்படுகிறது.

ஆனந்த் சாகர் said...


////
//ஹிந்து மதம் ஆன்மீக வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது//-anand sager ////

//எப்படி? உபியில் இரண்டு தலித் இளம் பெண்களை கற்பழித்து அவர்களை தூக்கில் தொங்க விட்டுள்ளார்களே யாதவர்கள்! அதைச் சொல்கிறீரா!-சுவனப்பிரியன் //

யாரோ குற்றவாளிகள் இரண்டு பெண்களை கற்பழித்த குற்றத்துக்கும் ஹிந்து மதத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? என்ன சுவனப்பிரியன், கொஞ்சம்கூட மூளை இல்லாமல் இப்படி உளறுகிறீர்? அதிலும் தலித், யாதவர் என்ற ஜாதி பார்வை வேறு? கம்யூனிஸ்டுகள்தான் எதற்கெடுத்தாலும் வர்க்க பார்வை என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அந்த பாணியில் ஹிந்துக்களிடம் ஏதாவது குற்ற நிகழ்வு நடந்துவிட்டால், உடனே அதில் ஜாதியை தேடுவதே உமக்கு பிழைப்பாக இருக்கிறது.

தலித் ஆண்களை கொன்று அவர்கள் செல்வங்களை கொள்ளை அடித்து, அவர்கள் பெண்களை கற்பழித்து அவர்களை பாலியல் அடிமைகளாக வைத்துக்கொள்ளுங்கள் அல்லது அடிமை சந்தையில் விற்று காசு பாருங்கள் என்று ஹிந்து மதம் சொல்லவில்லையே?

ஆனால் இஸ்லாம் அப்படியா? காபிர் ஆண்களை கொன்று விட்டு அவர்களின் செல்வங்களை கொள்ளை அடிக்கலாம், அவர்களுடைய பெண்களையும் சிறுவர்களையும் அடிமை படுத்தலாம், அடிமை சந்தையி விற்கலாம், அல்லது வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ற பெயரில் அப்பெண்களை கற்பழிக்கலாம், பாலுறவு அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம், அதில் எந்த குற்றமும் முஸ்லிம்கள் மேல் இல்லை, அப்படி கொள்ளை இட்ட காபிர்களின் செல்வங்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியற்றில் 20 சதம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பங்கு உண்டு என்று குரான் கூறுகிறது. குரானை இறை வேதம் என்று எந்த நாகரிக மனிதனாவது ஏற்பானா?