'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, May 28, 2014
டீ விற்றவர் இன்று இந்தியாவின் பிரதமர்!
டீ விற்ற சாதாரண ஊழியன் இன்று இந்திய நாட்டின் பிரதமராகியிருக்கிறார் என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும். முடியாட்சியில் இது போன்ற விந்தைகள் நடக்க சாத்தியமில்லை. 'ஒரு அபிஷீனிய கருத்த அடிமை உங்களின் தலைவராக பொறுப்பேற்றாலும் அவரது நியாயமான கட்டளைகளுக்கு கட்டுப்படுங்கள்' என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்கேற்ப மோடியின் தலைமையை முஸ்லிம்கள் வரும் ஐந்தாண்டுகளுக்கு ஏற்கத்தான் வேண்டும். இதில் உள்ள நன்மை தீமைகளை இறைவனே அறிவான்.
சாதாரண டீ விற்றவர் பிரதமரானது ஒரு பக்கம் இருந்தாலும் அதை அடைய அவர் எடுத்துக் கொண்ட முயற்சியான மறு பக்கத்தையும் நாம் அலச கடமைபட்டுள்ளோம். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அதனை எரித்தது முஸ்லிம்கள் அல்ல: அது ஒரு விபத்து என்று அதிகாரிகள் தெரிவித்தும், இறந்த உடல்களை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதித்ததும், சொராபுதீன் என்கவுண்டர், இர்ஷத் ஜஹான் என்கவுண்டர், ஹரேன் பாண்டியா கொலை, 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது, உபியில் வாக்குகளை அள்ள காதல் பிரச்னை என்று பொய்யுரைத்து அங்கு ஐம்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இறக்க காரணமானது, பீகார் குண்டு வெடிப்பு, மற்றும் நமது நாட்டில் நடந்த அனேக குண்டு வெடிப்புகள் என்று எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டு இன்று ஒரு டீக்கடைக்காரர் பிரதமராகி விட்டார்.
மன்மோகன் சிங் தலைமையில் பாகிஸ்தானோடு நட்புக் கரம் நீட்டி எல்லாம் கூடி வரும் வேளையில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டு பல அப்பாவி இந்திய, மற்றும் பாகிஸ்தானிய பயணிகள் இறக்க காரணமாக இருந்ததை மறந்திருக்க மாட்டோம். குண்டு வெடிப்புக்கு காரணமாக அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை முடிவில் அதனை செய்தது இந்துத்வா என்ற உண்மை வெளிப்பட்டது. ஆனால் அதே பாகிஸ்தானிய பிதமரை இன்று அழைத்து அவரோடு சுமூகமாக செல்ல மோடி முயற்சிக்கும் விந்தையையும் நாம் பார்க்கிறோம். கிரிக்கெட் விளையாட்டுக்கே மைதானத்தை துவம்சம் செய்த இந்துத்வா இதற்கு வாய் மூடி மௌனமாக வேடிக்கை பார்க்கிறது. இது ஆச்சரியமில்லை. முன்பு பாகிஸ்தான் எதிர்பாகட்டும்: இன்று அதே பாகிஸ்தானோடு கூடி குலாவுவதாகட்டும் எல்லாமே திட்டமிட்டு நடத்தப்படும் நிகழ்வுகள்:
2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள அக்ஷர்தாம் ஆலயத்தில் புகுந்த தீவிரவாதிகள் 33 பேரை சுட்டுக் கொன்று, 85 பேரை காயப்படுத்தினர். என்எஸ்ஜி கமாண்டோக்கள், சம்பவத்தில் ஈடுபட்ட இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கின் புலன் விசாரணை, குஜராத் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. வெகு விரைவாக புலனாய்வு நடத்திய குஜராத் போலீஸ், ஆதாம் அஜ்மீரி, ஷாய் மியா என்கிற சந்த் கான், முப்தி அப்துல் கயூம் மன்சூரி, முகம்மது சலீம் ஷேக், அப்துல் மியான் காதிரி மற்றும் அல்டாப் ஹுசைன் ஆகியோரை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவர் மீதும் போட்டா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
ஜுலை 2006ல் போட்டா சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நீதிமன்றம் ஆதாம் அஜ்மீரி, ஷான் மியா என்கிற சந்த் கான், மற்றும் முப்தி அப்துல் கயூம் மன்சூரி ஆகியோருக்கு மரண தண்டனையும், முகம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும், அப்துல் மியான் காதிரிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அல்டாப் ஹுசைனுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும் விதித்து. 2008ல் இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 30 மே 2010 அன்று, குஜராத் உயர்நீதிமன்றம், போட்டா நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.
இதற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில்தான் அத்தனை பேரையும் விடுவித்த உச்சநீதிமன்றம் கீழ்கண்டவாறு தெரிவித்தது.
We intend to express our anguish about the incompetence with which the investigating agencies conducted the investigation of the case of such a grievous nature, involving the integrity and security of the nation. Instead of booking the real culprits responsible for taking so many precious lives, police caught innocent people and got imposed the grievous charges against them which resulted in their conviction and subsequent sentencing
தேசத்தின் பாதுகாப்பு குறித்த இப்படியொரு முக்கியமான வழக்கில், புலனாய்வு அமைப்புகள் தான்தோன்றித்தனமாக விசாரணை செய்ததை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, காவல்துறை அப்பாவிகளை பிடித்து அவர்கள் மீது குற்றம் சுமத்தி தண்டனையும் பெற்றுத் தந்துள்ளது.
இந்த அக்ஷர்தாம் வழக்கை விசாரித்த அதிகாரி யார் தெரியுமா ? சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் விவகாரத்தில் சிறையில் உள்ள அதிகாரி டி.ஜி வன்ஸாராதான். இப்படி தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு சிறையில் இருந்த இந்த ஆறுபேர் எப்படி சித்திரவதை செய்யப்பட்டிருப்பார்கள் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
2007 தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ன பேசினார் தெரியுமா ? “காங்கரஸ் காரர்கள், மோடி என்கவுன்டரில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். மோடிதான் சோராபுதினை கொன்றார் என்று கூறுகிறார்கள். மத்தியில் உங்கள் அரசாங்கம்தான் இருக்கிறது. துணிச்சல் இருந்தால், மோடியை தூக்கு மேடைக்கு அனுப்புங்கள். சோராபுதீனை என்ன செய்ய வேண்டும் ? என கர்ஜிக்கிறார். கூட்டம் பதிலுக்கு கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும், கொல்லவேண்டும் என கூச்சலிடுகிறது.
”பல ஏகே 47 துப்பாக்கிகள் சோராபுதீனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சோராபுதீனை, நான்கு மாநிலங்கள் தேடிக்கொண்டிருந்த சோராபுதீனை, காவல்துறை மீது தாக்குதல் நடத்திய சோராபுதீனை, பாகிஸ்தானோடு தொடர்பு வைத்திருந்த சோராபுதீனை, குஜராத் மீது பார்வையை பதித்த சோராபுதீனை என் காவல்துறை என்ன செய்யும் ? ஏன் காவல்துறை சோனியாவிடம் அனுமதி கேட்க வேண்டுமா ?”
இதுதான் மோடியின் பேச்சு. இப்படிப் பேசியவரின் ஆட்சியில்தான் அக்ஷர்தாம் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் என்று ஆறு பேர் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பிறகு, தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதே போல பெங்களுரு மல்லேஸ்வரம் பிஜேபி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பிலும் 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். புலனாய்வு நடந்து ஆறு மாதங்கள் கழித்து பீர் மொய்தீன், சதாம் ஹுசைன் மற்றும் தென்காசி ஹனீப் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பீர் மொய்தீன், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை வருடம் சிறையில் கழித்த இந்த அப்பாவிகளின் கேள்விக்கு பதிலை யார் வைத்துள்ளார்? நன்றி: சவுக்கு தளம்
இது போன்று எண்ணற்ற சம்பவங்கள். டீ விற்ற இந்த மனிதர் இன்று பிரதமராக வீற்றிருக்க 3000 முஸ்லிம்கள் தங்கள் உயிரை இந்த மண்ணில் அநியாயமாக சிந்தியிருக்கிறார்கள். இனி வேக வேகமாக அனைத்து ஆதாரங்களும் திட்டமிட்டு அதிகார வர்க்கத்தால் நீக்கப்படும். சிறையில் இருக்கும் குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவர். மாயா கோட்னானி, பிரக்யாசிங், ஜெனரல் புரோகித் போன்ற குற்றவாளிகள் எல்லாம் தியாகிகளாக்கப்பட்டு இனி விடுதலையாகலாம்.
பிரதமராக எல்லோரும் கனவு காணலாம். ஆனால் அந்த எல்லோரும் தயவு செய்து நமது தற்போதய பிரதமர் அந்த கனவை மெய்ப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளை கனவிலும் கூட செயல்படுத்த முயற்சித்து விட வேண்டாம். இன்னும் சில காலம் கழித்து அவரது மனசாட்சியே அவரை தூங்கவிடாமல் தினமும் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கும். அது போன்ற ஒரு நிலைக்கு நாம் யாரும் ஆளாகிட வேண்டாம்: இவ்வளவு திட்டமிட்டு ஆட்சியை பிடித்தது இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கையாலும் அந்த நம்பிக்கையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தூய எண்ணத்தினாலும் என்று யாராவது நினைத்தால் அவரைப் பார்த்து பரிதாபம்தான் பட முடியும். இது போன்ற தீவிரவாதங்களினால் எந்த மதமும் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. இஸ்லாம் வளர்ந்தது அன்பினால்தான். எனவே தான் இத்தனை எதிர்ப்புகள், கைதுகள், என்கவுண்டர்கள் இருந்தும் அசுர வேகத்தில் இஸ்லாம் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இந்துத்வாவின் நிலை இதே போல் இனியும் இந்தியாவில் தொடர்ந்தால் இந்து மதம் முற்றாக அழிவதற்கு இவர்களே காரணமாகி விடுவர்.
எவ்வளவுதான் ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும் எல்லோரையும் ஆட்சி செய்து வரும் படைத்த இறைவனின் அதிகாரத்தின் முன்னால் இவை எல்லாம் தூசுக்கு சமானம். 'அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்' அந்த நாளை நாமும் எதிர் பார்த்திருப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment