Followers

Friday, May 02, 2014

சென்ட்ரல் குண்டு வெடிப்பும் நமது மீடியாக்களும்!

சென்ட்ரல் குண்டு வெடிப்பும் நமது மீடியாக்களும்!



சென்னையில் ரயில் குண்டு வெடித்து ஒரு பெண் இறந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். அமைதி பூங்காவான தமிழகத்தை தீவிரவாதம் மீண்டும் சீண்டிப் பார்த்துள்ளது. மனித குல எதிரிகளான இந்த காட்டு மிராண்டிகளை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் இது போன்ற மாபாதக செயலை செய்ய எவருக்கும் துணிவு வராது.

இது ஒருபுறம் இருக்க: நேற்று ஜாகிர் உஷேன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யும் போது பெரும் தொகையான ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். அதோடு இந்திய வரைபடமும் எந்த இடங்களை எல்லாம் தாக்க வேண்டும் என்ற குறிப்புகளும் அவரிடம் இருந்ததாம். சிரித்து விடாதீர்கள். இதை எல்லாம் சொல்வது நமது காவல் துறைதான். நாளைய தினம் இவர் இந்தியன் முஜாஹிதீன், அல்லது லஸ்கர் ஏ தொய்பா என்ற அமைப்போடு தொடர்புடையவர் என்ற செய்தியையும் கசிய விடுவார்கள். ஐஎஸஐ உளவாளி என்ற பெயரும் வரும். இதை எல்லாம் ஜாகிர் சொல்லியிருக்க மாட்டார். அவர் சொன்னதாக நமது காவல்துறை கண் காது மூக்கு வைத்து இந்த பலிகடாவை ரயில் குண்டு வெடிப்போடு சம்பந்தப்படுத்தி கேஸை மூடி விடுவார்கள். ஆறு மாதம் கழித்து 'ஹவாலா தெழில் செய்யும் ஜாகிரை தவறுதலாக குண்டு வெடிப்போடு சம்பந்தப்படுத்தி விட்டோம்' என்று விடுதலையாக்குவார்கள். இதுதான் அன்று முதல் இன்று வரை நடந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு நமது தமிழகத்தோடு எந்த முறுகலும் இல்லை. அவர்களுக்கு எல்லையோர மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களின் மீதுதான் கண் இருக்கும். அங்குள்ள மக்களை தமக்கு சாதகமாக பயனபடுத்த திட்டம் தீட்டுவர். அதுவாவது நம்பும்படி இருக்கும். இவ்வாறு சம்பந்தம் இல்லாதவர்களை கைது பண்ணி கேஸை முடிப்பதால் குற்றவாளிகள் வெளியில் தாராளமாக உலவி வருவதை இவர்கள் ஏனோ கண்டு கொள்வதில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு, மக்கா மசூதி குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு என்று அனைத்து குண்டு வெடிப்புகளுக்கு மத்தியிலும் இந்துத்வாவினர் இருந்ததை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். கைது செய்த குற்றவாளிகளை பொதுவில் வைத்து விசாரிக்காத வரை உண்மை குற்றவாளிகள் பிடி பட போவதில்லை. அவ்வாறு விசாரித்து ஜாகிர்தான் உண்மை குற்றவாளி என்றால் பொது மக்கள் முன்னிலையில் அவனை தூக்கிலிடட்டும்.

பார்பன ஊடகங்கள் பாகிஸ்தானை காட்டி தேசபக்தியை ஊட்டும். நமது அம்பிகளும் குய்யோ முறையோ என்று 200 கம்மெண்டுகளை தினமலரில் எழுதி தள்ளுவார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு மோடி பிரதமராவதுதான் என்று கருத்து திணிக்கப்படும். மோடியும், அமித்ஷாவும் ஏஸி அறையில் அமர்ந்து கொண்டு 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகுந்த திறமைசாலிகள்' என்று தொலைக்காட்சியில் வரும் குண்டு வெடிப்புகளை பார்வையிட்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

12 comments:

Anonymous said...

Amana

ஐயகோ என்ன ஒரு ஒரேமாதிரி சிந்தனை கொஞ்சம் கண்விழித்து திறந்த மனதுடன் சிந்திகமாடிர்களா? கொஞ்சம் பழைய செய்திகளை புரட்டிப்பாருங்கள் கடந்த ஒன்னரை வருடங்களுக்கு முன்னால் இதே போன்று சம்பவம் நடந்ததே ஞாபவம் இருகிறதா? தஞ்சையே சேர்ந்த தமீம் அன்சாரி ஒரு வியாபாரி இலங்கைக்கு வியாபரத் தொடர்புடையவர். இதே போன்று காரணங்கள் கூறி கைது செய்யப்பட்டார், ஆனால் பிறகு நல்லுள்ளம் கொண்ட சில அரசியல் அமைப்புகள் அப்பாவியான அவருக்கு ஆதரவாக உண்மைகண்டறியும் குழு அமைத்ததில் காவல் துறை கூறியது உண்மையில்லை எனபது தெரியவந்தது. ஆனால் அவரை கைது செய்யும் போது பரபரப்பாக பேசிய மீடியாக்கள். அவரை நிரபராதி என்று வெளிவரும்போது காட்டவில்லையே. இப்பொழுது இலங்கையை சேர்ந்த ஜாஹீர் உசேன். இவர்களுக்கு பாகிஸ்தான் க்கு தொடர்புடைய ஆட்கள் கிடைக்காத காரணத்தால் இலங்கைக்கும் வழியாக பாகிஸ்தானை தொடர்புப்படுதுகிரார்கள்.

suvanappiriyan said...

திருநெல்வேலியில் கொலை நடந்தது என்பதால் நானும் கொலைகாரனா?அங்கு சாதி கலவரம் நடந்தால் நானும் சாதி வெறி பிடித்தவனா? இல்லை மத்த ஊரில் கொலைகள் நடக்கலியா? மத்த ஊர்களில் சாதி வெறியே இல்லியா?அனைத்தும் அனைத்திலும் உள்ளது.ஆனால் ஹரி காட்டியதும் விதைத்ததும் நெல்லையாச்சே....

இதனை இஸ்லாமியர்களுக்கும் பொருத்தி பாருங்கள்.உங்களோடு பணிபுரியும் இஸ்லாமியர்,இங்கு பதிவெழுதும் இஸ்லாமிய பதிவர்கள்,உங்களோடு பள்ளியில் படித்த இஸ்லாமியர் இவர்கள் வெடிகுண்டுகளோடு சுற்றுகிறார்களா என்ன? என்னோடு படித்த சாகுல் ஹமீது டீக்கடையில்தான் வேலை பார்க்கிறான்.அவனையும் ஸ்லிப்பர் செல் என்று வக்கிர எண்ணத்தின் நவீன பதிப்பான துப்பாக்கியில் முருகதாஸ் எச்சரிக்கை செய்கிறார்.இயல்பான ஒருவனின் வாழ்வை உடைத்துப்போட்டு அவனை தீவிரவாதியாகவே மாற்றி விடுதல் சரிதானா?

மல்டிப்ளக்ஸ் மாலில் ஆயிரம் கண்கள் தையலிடப்பட்ட செருப்பையே உற்று நோக்குவதை போல கூனி நழுவி செல்லும் நிலையில் நம்மோடு உடன் வாழும் ,நம்மைப்போலவே அண்ணாச்சி கடையில தேங்காய் சில்லு கடன் வாங்கி துவையலும் பழைய சாதமுமாகத்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றனர் பல இஸ்லாமியர்கள்..எங்கிருந்து வந்தது வெறுப்பு?

பயணங்களில்,தங்கும் விடுதிகளில்,கல்லூரிகளில்,வேலை பார்க்குமிடத்தில் என ஒவ்வொரு இடத்திலும் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை சந்தேகிக்க தூண்டியது அரசியலன்றி வேறென்ன?

சக மனிதனை தனிமைப்படுத்தும் இந்த செயலை அப்படியே ஏற்றுக்கொண்டு சமூக வலைதளங்களில் இணைந்து கொண்டு சமூகத்தை உடைத்து போடுகிறோம் நாம்.

சமீபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் பிணத்தில் பார்ப்பனனை கண்டு பிடித்த மேதாவித்தனத்திற்கும் வக்கிரத்திற்கும் சற்றும் குறைவில்லாதது இஸ்லாமியனை தீவிரவாதியாக சித்தரித்து சிரிக்கும் வக்கிரம்.

ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் பிழைத்து வாழும் ஒரு இஸ்லாமியன் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டு கொண்டிருக்கிறான்.குஜராத் கொலைவெறியில் ஆவேசமாக வாளேந்திய அசோக் மோசசி என்பவர் இன்னும் அசோக் மோசசியாகத்தான் (மோசசி-செருப்பு தைப்பவர்) இருக்கிறார். தூண்டி விட்ட அரசியல்வாதிகள் மந்திரிகளானார்கள்.பிரதமராக வரும் வாய்ப்பு வரை முன்னேறுகிறார்கள் .ஆனால் மோசசி?இன்னும் செருப்புதான் தைத்து வருகிறார்.

http://www.tamilmottu.blogspot.com/2014/05/blog-post.html

suvanappiriyan said...

புதியதலைமுறையில் குண்டு வெடிப்பு என்று முக்கிய செய்தி ஓட செய்தியாளர் இது குண்டுவெடிப்புதானா என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர் என கூறுகிறார்.பரவாயில்லை கண்முன் நடந்ததுதானே விடுங்க.அதனை தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையை தகர்க்க திட்டமிடப்பட்டது குரிப்பிடத்தக்கதுன்னு முத்தாய்ப்பாக தமது எதிராளியை குற்றவாளியாக நிறுத்துகிறது..

ஒரு குண்டுவெடிப்பிற்கு பின் எந்த அடிப்படையில் இவர்களாக தீர்மானிக்கிறார்கள் என தெரியவில்லை.இப்படியான சூழ்நிலையில் காவல்துறை பல தீவிர ஆய்வுகளுக்கு பிறகே தமது விசாரணையின் கோணத்தை ஆரம்பிக்கும்.

வெடிகுண்டின் மூலப்பொருட்கள் என்ன? அது அதிகமாக கிடைக்குமிடம் எது? அதன் விற்பனையில் யார்? யார்? இதற்கு முன் இப்படியான மூலப்பொருட்கள் அடங்கிய குண்டு வெடிப்ப்பு யார் செய்தது? எங்கு?அவர்களுக்கு இங்கு ஆதரவு நிலை எப்படி?

குண்டு வெடிக்கப்படும் விதம் வேறு சம்பவங்களோடு ஒத்து வருகிறதா? அதில் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்புக்கு இங்கு வாய்ப்புள்ளதா? அனுதாபம் உண்டா? நாள் ,கிழமை என பல விடயங்கள் ஆராயப்படும்.

குண்டு வெடிக்க வைக்கப்படும் விதம் கொண்டும் விசாரணை அவசியப்படும்.ரிமோட் எனில் ஆள் அந்த பகுதியில்தான் இருந்துள்ளான்.வேறு முறைகள் எனில் அந்த குண்டு எங்கு பொருத்தப்பட்டது? அந்தப்பகுதிகளை குறித்த விசாரணை...

குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள சமூக பிரச்சனைகள்,அதன் தீவிரம் என்ன?
இப்படியாக இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் அதற்கு முன்னேயே ஊடகங்கள் தமது எதிரியை இல்லை எவரையாவது குற்றவாளியாக்கி கொலை செய்ய துடிப்பதுதான் வேதனையே.

இதனைப்போன்ற தொடர் செய்திகள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தல் மூலம் மிகப்பெரும் நஞ்சை விதைத்து வருவது புரிகிறதா? நெல்லை என்பதால் எனது தம்பி மட்டும் ஒரு ஹோட்டலில் அருவா கத்தி இருக்கிறதா என சோதிக்கப்பட்டபோது கூனி நின்றான்.அதை இஸ்லாமியர்களுக்கு பொருத்தி பார்க்கும்போது உண்மையை புரிந்தும் கொண்டான்.

http://www.tamilmottu.blogspot.com/2014/05/blog-post.html

suvanappiriyan said...

என்னால் உறுதியாக சொல்லமுடியும்...ஒவ்வொரு இந்தியர்களிடத்தும் இந்துவாக்கி இஸ்லாமியனை எதிரியாக்கி இந்துக்களை ஒன்றுபடுத்துவதாக அரசியல் லாபம் பார்ப்பதுதான் கட்சிகளின் திட்டமிடப்பட்ட ஒற்றுமை உடைப்பு பரப்புரைகளும் ,செயல்பாடுகளும் .

ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் பணம் கிடைக்கலாம்..நமக்கு இழப்பில்லையா?நாஞ்சில் மனோவின் மூக்கு துடைத்துவிட்டு தோசை ஊட்டிய முஸ்லிம் அண்ணாச்சியை கடைசி காலத்தில் தனித்து செல்ல விரட்டியதை தவிர வேறென்ன கிழித்தது இந்த மதப்பற்று? வாப்பாக்களும் தாத்தாக்களும் பேரன்களை ஒன்றாகத்தான் விளையாடவும் படிக்கவும் பழக்கியிருந்தனர்.உங்கள் பிள்ளைகளை எப்படி அனுமதிக்க போகிறீர்கள்?


எண்ணற்ற சந்தேகக்கைதிகளாக வாழ்வை தொலைத்து கிடக்கும் அப்பாவிகளுக்கும் நிமிர்ந்து உரிமை கொண்டாடிய ஊரில் செய்யாத தவறுக்கு வெட்கி குனிந்து செல்லும் பாசக்கார அண்ணாச்சிகளுக்கும் இந்தப்பதிவு அர்ப்பணம்.

http://www.tamilmottu.blogspot.com/2014/05/blog-post.html

UNMAIKAL said...

சென்னை குண்டு வெடிப்பு: பின்னணியில் முன்னணியா? –

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று (01/05/2014) காலை 7.25 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர்.

இந்தியாவில் அவ்வப்போது மனித குல விரோதிகளால் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட போதும், 1998 – ன் துயர சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில், இத்தகைய கோர நிகழ்வுகள் ஏதும் நடந்திராதது நமக்கு ஆறுதலை அளித்தது. ஆனால் இன்றைய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் இலாபம்

கடந்த காலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகிய அசம்பாவிதங்கள் அனைத்தின் பின்னணியிலும், சங்க பரிவார சக்திகள் மூளையாக செயல்பட்டன என்பதனை ஆர்எஸ்எஸ் அசிமானந்தாவின் வாக்கு மூலமும், பிரக்யா சிங், கர்னல் புரோகித் ஆகியோரின் கைதுகளும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும், பாஜகவினரோ அல்லது அதன் பரிவாரங்களோ இலாபம் அடைந்துள்ளனர் என்பதனை இந்திய அரசியலை நன்கு அறிந்த எவரும் மறுக்க இயலாது.

அரசியல் இலாபத்திற்காக மக்களை பலி கொள்ளும் கோர அரசியல், இந்துத்துவ சக்திகளுக்கு சாதாரண விஷயமாய் ஆனது இந்தியாவின் சாபக்கேடே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

மோடிVs லேடி

தேசிய அரசியல் களம் சூடு பிடித்து, அடுத்த பிரதமர் தான்தான் என்ற கனவில் மிதக்கும் நரேந்திர மோடிக்கு, கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் அவரது நம்பிக்கைக்குரிய சகோதரி ஜெயலலிதா, “வளர்ச்சியின் நாயகர் மோடியா இந்த லேடியா?” எனக் கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இதன் பின்னணியில் மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க தயார் நிலையில் உள்ளதும், அதன் மூலம் “ஜெ”வை பிரதமராக தேர்வு செய்து பாஜகவின் கனவை தகர்ப்பதற்கும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான், “அதிமுக ஆதரவு தங்களுக்கு தேவைப்படாது” என்ற மோடியின் பதிலடி கூறப்பட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

பின்னணியில் முன்னணியா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் நெடுங்காலம் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், அக்கூட்டணியை விட்டு வெளியேறிய போது, 27 அக்டோபர் 2013 அன்று பீகாரில் குண்டு வெடித்தது நினைவிருக்கலாம்.

பிஹாரின் சட்ட ஒழுங்குகளை குறை கூற இந்த குண்டு வெடிப்பை பாஜகவினர் பயன்படுத்தினர்.

ஆனால் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.

அதே போன்றதொரு சூழ்நிலை தற்போதும் நிலவுவதால், கூட்டணிக்கு போகாமலேயே எட்டி உதைத்த அதிமுகவிற்கு பாடம் கற்பிக்க இரயில் நிலைய குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இயல்பாய் எழுகிறது.

ஊடகத்திலுள்ள பாசிச சக்திகளின் துணையுடன் வழக்கம் போல் இந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் மேல் பழியைப் பரப்பி, ஜெயாவிடம் முஸ்லிம் எதிர்ப்பை ஏற்படுத்தி பாஜக பரிவாரங்கள் அதிமுக ஆதரவைப் பெற முயற்சி செய்கிறார்களா என்றும் ஆராய வேண்டும்.

நேர்மையான விசாரணை நடந்து, குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்களா? அமைதி தவழும் பூங்காவாய் தமிழகம் நிலை நிற்குமா?

அமைதி தவழும் பூமியை அனைவருக்கும் கேட்போம்!
முஹம்மது ஷாஃபிஈ

- See more at: http://www.thoothuonline.com/archives/65451#sthash.LkkhZFHZ.dpuf

UNMAIKAL said...

சொல்வீர்களா கலைஞரே?

'ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்' என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.

ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது?

காவல்துறை ஒருவரை கைது செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர் தீவிரவாதிதான் என்ற முடிவுக்கு வரலாமா?

ஏற்கெனவே காவல்துறை அதிரை தமீம் அன்சாரியை தீவிரவாதி என்றுதான் கைது செய்தது. பின்னர் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை கைது செய்தது. பின்னர் அது உளவுத்துறையின் சதி என அம்பலமானது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர் குற்றமற்றவராக வெளிவந்துள்ளார்.

அப்துல்நாசர் மதானி, குணங்குடி ஹனீபா, தடா ரஹீம், ஆயிஷா என எத்தனையோ பேரை அன்றைய தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்தது. பல ஆண்டுகள் சிறையில் வாடிய பின், அவர்களை நிரபராதிகள் என சொல்லி நீதிமன்றம் விடுவித்தது.

எனவே, காவல்துறை ஒருவரை தீவிரவாதி என சொல்வதும், ஊடகங்கள் அதைப் பரபரப்பாக்குவதும், பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகி வரும்போது, உண்மைநிலையை உணராமல் கலைஞர் இப்படி அவசர அறிக்கை விடலாமா?

ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதைவிட, தயாநிதி மாறனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் 2ஜி யையே தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதே சரியானது.

சொல்வீர்களா? - ஆளூர் ஷாநவாஸ்.

SOURCE: https://www.facebook.com/aloor.shanavas?fref=ts

suvanappiriyan said...

திரு அரிசோனன்!

// ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே!
முதலில் நீங்கள் சென்னையில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புக்குக் கண்டனம் செய்துவிட்டு, உங்கள் கருத்தை எழுதியிருக்கலாமே!//

இந்த காட்டுமிராண்டித்தனமான ஈனச் செயலை கண்டித்து நேற்று ஒரு பதிவே எழுதியுள்ளேன். தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் ஜாகிர் உண்மையான குற்றவாளியாக இருந்தால் அவனை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடவும் எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். மனித உயிரை மதத்தால் வித்தியாசப்படுத்தி பார்ப்பவனல்ல நான்.

ஆனால் குண்டு வெடிக்க வைக்கப்பட்ட நேரம் ரயில் சரியாக வந்திருந்தால் அது வெடித்திருக்க வேண்டிய இடம் ஆந்திர எல்லலையில். எனவே நமது தமிழகத்தை குறி வைத்து நடத்தப்பட்டதாக நான் எண்ணவில்லை. ஒரு கால் அது தெலுங்கானா எதிர்ப்பு குழுவினரோ அல்லது ஆதரவு குழுவினரோ வைத்திருக்கலாம். அல்லது ஜெயலலிதாவை இஸ்லாமியருக்கு எதிராக திருப்பும் சதியாகவும் இருக்கலாம். அல்லது இனி நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்குகளை அள்ளும் தந்திரமாகவும் இருக்கலாம்.

அம்மோனியம் நைட்ரேட் மூலம் டைமர் செட் பண்ணுவதற்கு கை தேர்ந்த வல்லுனர்கள் தேவை. இதை எல்லாம் ஹவாலா தொழில் செய்து வரும் சாதாரண முஸ்லிம் செய்து விட முடியுமா? பாகிஸ்தானுக்கு நமது தமிழகத்தோடு எந்த முறுகலும் இல்லை. அவர்களுக்கு எல்லையோர மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களின் மீதுதான் கண் இருக்கும். அங்குள்ள மக்களை தமக்கு சாதகமாக பயனபடுத்த திட்டம் தீட்டுவர். அதுவாவது நம்பும்படி இருக்கும். இவ்வாறு சம்பந்தம் இல்லாதவர்களை கைது பண்ணி கேஸை முடிப்பதால் குற்றவாளிகள் வெளியில் தாராளமாக உலவி வருவதை இவர்கள் ஏனோ கண்டு கொள்வதில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு, மக்கா மசூதி குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு என்று அனைத்து குண்டு வெடிப்புகளையும் நாம் வசதியாக மறந்து விடுகிறோம். முதலில் இஸ்லாமியர்களை கைது செய்து விட்டு முடிவில் உண்மை குற்றவாளிகள் யார் என்பது உலகுக்கு தெரிய வந்தது. கைது செய்த குற்றவாளிகளை பொதுவில் வைத்து விசாரிக்காத வரை உண்மை குற்றவாளிகள் பிடி பட போவதில்லை. அவ்வாறு விசாரித்து ஜாகிர்தான் உண்மை குற்றவாளி என்றால் பொது மக்கள் முன்னிலையில் அவனை தூக்கிலிடட்டும்.

இவ்வாறு முஸ்லிம்கள் தரப்பில் ஒரு சார்பாகவே ஊடகங்களும் காவல்துறையும் செல்வதால் உண்மை குற்றவாளிகள் தைரியமாக மேலும் குண்டுவெடிப்புகளை நடத்தி அப்பாவிகளின் உயிர்களை காவு கொள்வார்கள். இதனை அரசு என்றுதான் உணருமோ தெரியவில்லை.

suvanappiriyan said...

திரு அரிசோனன்!

// ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே!
மனத் திடம் இருந்தால் கீழ்கண்ட லின்க்குக்குச் சென்று இஸ்லாமிய வெறி முஸ்லிம் சகோதரர்கள் மீதே எப்படித் தலை விரித்தாடுகிறது என்று கண்டுவிட்டு உங்கள் பதிலை எழுதுங்கள்.
குறிப்பு: இது CNN கொடுத்துள்ள உண்மையான இணைய லிங்க். கற்பனை அல்ல. நாடகம் அல்ல. மனித உரிமைக் குழுக்கள் இப்படிப்பட்ட மத வெறியை வன்மையாகக் கண்டித்துள்ளன.//

சிரியாவில் நடக்கும் பிரச்னையானது அங்கு கொடுங்கோல் ஆட்சி செய்து வரும் ஆசாத்தை நீக்குவதற்காக நடத்தப்படுவது. அந்த மக்கள் ஒரு சுதந்திர போராட்டத்தில் குதித்துள்ளனர். தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அங்குள்ள அரசு அந்த மக்களின் மீது ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது. அரசுக்கு ரஷ்யா ஆதரவும், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் ஆதரவை தந்து தங்கள் ஆயுதங்களை சிறந்த விலையில் விற்று வருகிறார்கள். நொடித்துப் போன அமெரிக்க பொருளாதாரமும் சற்று நிமிர்ந்துள்ளது. தற்போது அமெரிக்கா தனது பார்வையை உக்ரைன் பக்கம் திருப்பியுள்ளது. இனி ஆறு மாதத்துக்கு உக்ரைனில் நல்ல அறுவடை. அது முடிந்தவுடன் பாகிஸ்தான் காஷ்மீருக்கு வரலாம் நமக்கு தலைவலியைக் கொடுக்க :-). எவன் தாலி அறுந்தாலும் அமெரிக்க ஆயுத வியாபாரம் படுத்து விடக் கூடாது என்பதில் அந்த நாடு மிக கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது. எனவே இது ஆயுத வியாபாரத்துக்காக செய்யப்படும் சூழ்ச்சிகள். ஐநா பொம்மையாக செயல்படுவதுதான் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம்.

மதத்தின் பெயரால் வன்முறையை யார் கையிலெடுத்தாலும் ஒட்டு மொத்த மனித சமூகமும் அதற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

//மதத்தின் பெயரால் வன்முறையை யார் கையிலெடுத்தாலும் ஒட்டு மொத்த மனித சமூகமும் அதற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.//

முஹம்மதை உண்மையாக பின்பற்றும், பின்பற்ற விரும்பும் முஸ்லிம் இப்படி கூறுவதை நம்பக்கூடாது.

Anonymous said...

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிலர் உயிரிழந்தும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

மனிதகுலத்திற்கு எதிரான இத்தகைய குண்டு வெடிப்புகளை மனிதநேயமற்ற மிருகங்களாலேயே நிகழ்த்த முடியும். இவர்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன்னர் நிறுத்தி மரண தண்டனை கொடுப்பதே இறந்து போன உயிர்களுக்கு செய்யும் சரியான நீதியாகும்.

மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் இந்த சூழலில் குண்டுவெடிப்பு என்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகிறது. எனவே இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்து விட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவ முன் வர வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டிய காவல் துறையை தேர்தல்கள் நடைபெறும் போது தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை போட்டு அவர்களின் கையை கட்டி வைத்திருந்தது. தேர்தல் முடிந்த பிறகும் அது தொடர்கிறது.

தேர்தல் முடிந்த பிறகு ஓட்டுப்பெட்டிகளை பாதுகாக்கக்கூடிய வேலையை மட்டும் தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையை தேர்தல் விதிமுறைகள் இன்னும் அமுலில் உள்ளது என்று சொல்லி அவர்களுடைய கைகளை கட்டிப்போட்டதும்தான் இந்த அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணம் என்பதால் இதற்கு மறைமுக காரணமாயிருந்த தேர்தல் ஆணையத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம்

இனிவரும் காலங்களில் தேர்தல் ஆணையம் காவல் துறையின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

மனிதாபிமானமுள்ள எவராலும் எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத இத்தகைய கொடூர குண்டுவெடிப்பை தமிழகத்தின்

ஒட்டு மொத்த முஸ்லிம்களின் சார்பில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

வன்மையாக கண்டிக்கிறது.

Anonymous said...

'ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்' என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.

ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறை ஒருவரை கைது செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர் தீவிரவாதிதான் என்ற முடிவுக்கு வரலாமா?

ஏற்கெனவே காவல்துறை அதிரை தமீம் அன்சாரியை தீவிரவாதி என்றுதான் கைது செய்தது. பின்னர் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை கைது செய்தது. பின்னர் அது உளவுத்துறையின் சதி என அம்பலமானது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர் குற்றமற்றவராக வெளிவந்துள்ளார்.

அப்துல்நாசர் மதானி, குணங்குடி ஹனீபா, தடா ரஹீம், ஆயிஷா என எத்தனையோ பேரை அன்றைய தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்தது. பல ஆண்டுகள் சிறையில் வாடிய பின், அவர்களை நிரபராதிகள் என சொல்லி நீதிமன்றம் விடுவித்தது.

எனவே, காவல்துறை ஒருவரை தீவிரவாதி என சொல்வதும், ஊடகங்கள் அதைப் பரபரப்பாக்குவதும், பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகி வரும்போது, உண்மைநிலையை உணராமல் கலைஞர் இப்படி அவசர அறிக்கை விடலாமா?

ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதைவிட, தயாநிதி மாறனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் 2ஜி யையே தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதே சரியானது.

சொல்வீர்களா?

ஆளூர் ஷாநவாஸ்

Anonymous said...

சென்ட்ரலில் குண்டு வெடித்ததால் பயணிகள் ஓட்டம்
--------
காலை 11 மணிக்கு பதற்றத்துடன் சென்னை விமானநிலைய
உள்நாட்டு முனையத்திற்கு வந்த அகமது உசேன்ராஜா,
கவுகாத்தி செல்லும் விமானம் குறித்து விசாரித்து கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரணைக்காக சென்னை போலீஸ்
தலைமையகத்திற்கு கொண்டு சென்று ரகசிய விசாரணை
நடத்தி வருகின்றனர்.
-------
ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டார் அவரது பெயர் முகமது என்று கூறப்படுகிறது.
---------
கடந்த சில வருடங்களாக, ஒவ்வொரு முறை இதுபோன்ற
சம்பவங்கள் நிகழும்போதும், சந்தேகம் என்ற பெயரில்
ஒரு அகமதுவையோ அல்லது ஒரு முகமதுவையோ பிடித்து
விசாரணை என்ற பெயரில் மூன்று நான்கு மாதங்கள்
அடைத்து வைத்திருந்து பின்னர் விடுதலை செய்வது
வாடிக்கையாக உள்ளது ...

அப்போ, உண்மையான குற்றவாளிகள் யார் ... ???

உண்மையான குற்றவாளிகள், குற்றத்தை அகமது பக்கமும்
முகமது பக்கமும் திருப்பி விட்டுவிட்டு வெகு சுலபமாக
தப்பித்து விடுகின்றனர்.
-----
குண்டுவெடிப்பினால் எல்லா சமூகத்து மக்களும் உயிரிழப்புகளை சந்திக்கின்றனர், பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்

ஆனால், குறிப்பிட்ட சமூகத்தினர்மீது மட்டும் பழி விழுகிறது
-----
வெடிகுண்டு சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்படும் அகமதுவும் முகமதுவும் மேளதாளங்களுடன்
நன்கு விளம்பரம் செய்யப்பட்டு காவலில் உள்ளே அழைத்து செல்லப்படுகின்றனர்

ஆனால், அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று வெளியே
வருவதை யாரும் கண்டுகொள்வதில்லை

சந்தேகத்தின்பேரில் குற்றம் சுமத்தப்படுபவர் காவலில் இருந்த
மூன்று நான்கு மாதங்களில் பல சித்திரவதைகளுக்கு
உட்படுத்த பட்டதோடு மட்டுமல்லாமல் தீவிரவாதி என்ற
பழியையும் சுமந்து ஓசையின்றி வெளியே வருகிறார்.

அவர் சார்ந்த சமூகமும் அந்த பழியை சுமக்கிறது ...
-----
தற்காலத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களும் குண்டுவெடிப்பு,
தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவங்களில் குறிப்பிட்ட
சமூகத்தினரை காரணமாக காட்டியே வெளிவருகின்றன.
-----
தேர்தல் முடிந்து முடிவுகளை எதிர்நோக்கியும் மேலும் பல
இடங்களில் தேர்தல் முடியாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில்
குண்டு வெடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டு வெடிப்பினால் அதிக அளவில் பயனடைவது யார்
------
முகநூலில் குறிப்பிட்ட சமூகத்தினரை சாடி வரும் பதிவுகளுக்கு அந்த சமூகத்தினர் போட்டி போட்டுக்கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது பலருக்கு அருவருப்பை ஏற்ப்படுத்தலாம்

ஈரறிவு கொண்ட மண்புழுவை சீன்டினாலே அது அதன் எதிர்ப்பை வெளிப்படுத்த தன் உடலை அசைத்து காட்டும்போது,

ஆறறிவுள்ள மனிதன் பொறுமையாக இருக்கவேண்டும் அல்லது அடங்கி போகவேண்டும் என்று நினைப்பது நியாயமல்ல ...
------
குண்டுவைத்தது...இஸ்லாமியனாக இருந்தால் அது தேசப்பிரச்சனை வேறு ஒருவனாக இருந்தால், அது சாதாரண நிகழ்வு என உள்வாங்கிக்கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல

ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும்
ஒதுக்கிவிட்டு, மற்ற சமூகத்தினர் ஒருபோதும் நிம்மதியாக
வாழ்ந்துவிடமுடியாது ...
----
தமிழகத்தை பொறுத்தவரை இசுலாமியர்களும் இந்துக்களும்
தாயா பிள்ளையாக, மாமன் மச்சானாக பழகிவருகின்றனர்
அதன் காரணமாகவே, மதத்தை மையமாக வைத்து இயங்கும்
தேசிய கட்சிகள் எவ்வளவோ உத்திகளை கையாண்டும்
தமிழகத்தில் வேரூன்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

----- அமுதா அமுதா ----