Followers

Wednesday, May 28, 2014

அணுவைப் பற்றி தமிழச்சிக்கு சில விளக்கங்கள்!

அணுவைப் பற்றி தமிழச்சிக்கு சில விளக்கங்கள்!

தமிழச்சி!

//"பொருள்கள் எல்லாம் பிரியக்கூடியவை. பகுதி பகுதியாகப் பிரிபடக்கூடியவை அனைத்தும் அழியக் கூடியவை. ஒரு பொருளை பிரித்துக் கொண்டே போனால் இனி பிரிக்க முடியாது என்னும் ஒரு நிலையை பொருள் அடைந்தே தீரும். அவ்விதம் பிரிபடாத கடைசி நிலைதான் அணு. அதுதான் உலக உற்பத்திக்கு மூலம். அது அழியாதது"

- பவுத்தம்

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே

-திருமூலர்//

பவுத்த மதம், இந்து மதம் எல்லாம் அணுவைப் பற்றி சொன்னதை பின்னூட்டமிடும் போது இஸ்லாம் மார்க்கம் மட்டும் வேடிக்கை பார்க்க முடியுமா? எனவே அதற்கான ஆதாரம் இதோ!

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
-திருக்குர்ஆன் 21:30

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் எதையும் செய்வோராவோம்

-திருக்குர் ஆன் 21:104.

பிரபஞ்சம் விரிவடைகிறது:
[நமது] வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.
-திருக்குர் ஆன் 51:47

இந்த பிரபஞ்சமானது முன்பு ஒன்றாக இருந்ததாகவும் அதனை தாமே பிரித்தெடுத்ததாகவும் இறைவன் இந்த வசனத்தில் கூறுகிறான். உலக முடிவு நாளில் பிரித்த பிரபஞ்சத்தை ஒன்றாக மாற்றுவதாகவும் இதற்கு தாம் சக்தி பெற்றவன் என்றும் இறைவன் குர்ஆனிலே விவரிக்கிறான். மேலும் இந்த பிரபஞ்சத்தை விரிவாக்கம் செய்வதாகவும் விவரிக்கிறான்.

இது குறித்து 31-3-2010 தினமலரில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள்:

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, ‘பிக் பாங்’ (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.’அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்’ என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், ‘பிக் பாங் தியரி’ (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, ‘செர்ன்’ (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், ‘லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்’ எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, ‘செர்ன்’ அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.
இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் அனைத்தும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு இது இறை வேதம் தான் எனபதை நிரூபிக்கின்றது.

16 comments:

Anonymous said...

நீங்கள் சொன்ன வசனங்களில் அணுவை பற்றி எதுவும் இல்லையே அய்யா

Anonymous said...

எதுக்கு இந்த ஈன பிழைப்பு.
இதுதான் அறிவியலை சொல்வதா
யாரை முட்டாள் ஆக்குவது இது இதில் எங்கே அய்யா அணுவைப்பற்றி சொல்லப்பட்டிரருக்கிறது
இந்த வசனங்களை படித்தால் அணுவைபற்றி சிந்திக்க தோன்றுமா

சுவனப் பிரியன் said...

//எதுக்கு இந்த ஈன பிழைப்பு.
இதுதான் அறிவியலை சொல்வதா
யாரை முட்டாள் ஆக்குவது இது இதில் எங்கே அய்யா அணுவைப்பற்றி சொல்லப்பட்டிரருக்கிறது
இந்த வசனங்களை படித்தால் அணுவைபற்றி சிந்திக்க தோன்றுமா//

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, ‘பிக் பாங்’ (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.’அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
-திருக்குர்ஆன் 21:30

பிரபஞ்சம் விரிவடைகிறது:
[நமது] வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.
-திருக்குர் ஆன் 51:47

ஐயா அனானி!

இந்துத்வ வெறி முழுவதும் ஏறியிருந்தால் சிந்திக்கத் தோன்றாதய்யா... 'பல அணுக்களின் கூட்டமைப்பே நமது பிரபஞ்சம். அதனை நாமே பிரித்தெடுத்து தனித்தனி கோள்களாக்கினோம். அந்த பிரபஞ்சத்தை மேலும் விரிவாக்கம் செய்வோம்' என்று இவ்வளவு அழகாக அணுக்களின் கூட்டமைப்பை பற்றி விளக்கும் போது இது கூட விளங்கவில்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாதய்யா...

இந்து மதம் எங்கே போகிறது? said...

//Anonymous said...
எதுக்கு இந்த ஈன பிழைப்பு.
இதுதான் அறிவியலை சொல்வதா
யாரை முட்டாள் ஆக்குவது இது இதில் எங்கே அய்யா அணுவைப்பற்றி சொல்லப்பட்டிரருக்கிறது
இந்த வசனங்களை படித்தால் அணுவைபற்றி சிந்திக்க தோன்றுமா? //

அநானியின் அறிவியல் இதோ:‍‍

1ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள். 9.

இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?

எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?

சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா?

எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா?

மிருக உருவமா?

மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்?

-தந்தை பெரியார்

ஆனந்த் சாகர் said...

அணுவை பற்றி புத்த மதமும் ஹிந்து மதமும் பேசுகின்றன. இஸ்லாமும் அணுவை பற்றி சொல்கிறது என்பதை காட்டுவதற்காக சுவனப்பிரியன் மேற்கோள் காட்டியிருக்கும் குரான் வசனங்களில் அணுவை பற்றி ஒரு வார்த்தையும் இல்லை.

அணுவை பற்றி விளக்குவதாக தலைப்பிட்டுவிட்டு அதற்கு சம்பந்தமே இல்லாத குரான் வசனங்களை எடுத்துக்காட்டி அவர் எப்படிப்பட்ட காமெடி பீஸ் என்பதை மறுபடியும் தன்னை அம்பலப்படுதிக்கொண்டார்.

குரான் அறிவியல் பேசுகிறது என்று படம் காட்டுவதற்காக அவர் போடும் குட்டிக்கரணங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

ஆனந்த் சாகர் said...

//பவுத்த மதம், இந்து மதம் எல்லாம் அணுவைப் பற்றி சொன்னதை பின்னூட்டமிடும் போது இஸ்லாம் மார்க்கம் மட்டும் வேடிக்கை பார்க்க முடியுமா? எனவே அதற்கான ஆதாரம் இதோ!//

இஸ்லாம் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். குரானிலும் ஹதீஸ்களிலும் எங்கு தேடினாலும் அணுவை பற்றி சொல்லப்பட்டதை காண முடியாது. ஏனெனில் அணுவை பற்றி முகம்மதுவுக்கு ஒன்றுமே தெரியாது. சம்பந்தமில்லாத குரான் வசனங்களை அணுவுக்குஆதாரமாக நீங்கள் காட்டுவது கேலிக்குரியது.

ஆனந்த் சாகர் said...

ஹிந்து மதம் ஆன்மீக வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது.

ஆனந்த் சாகர் said...

குரானின் உளறல்களுக்கு அறிவியல் சாயம் பூசும் முஸ்லிம்களின் மோசடியை அம்பலப்படுத்தினால் அவர்கள் உடனே கிறிஸ்தவ, ஹிந்து வேத புத்தகங்களில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று ஓலமிட ஆரம்பித்து விடுகின்றனர். இது தவறான தர்க்க வாதம் என்பதை எடுத்து சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.

குரானின் வசனங்களில் அறிவியல் இருக்கிறது என்று கூறுகிற முஸ்லிம்கள் அதை அறிவியல் ஆதாரங்களை கொண்டு நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் மற்ற மத புத்தகங்களில் உள்ள தவறுகளை எடுத்து சொல்வது எப்படி குரானின் வசனங்களில் அறிவியல் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாகும்? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களிடம் எப்படி அறிவுப்பூர்வமாக வாதம் புரிய முடியும்?

குர்ஆனில் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவில்லை என்று நாங்கள் கூறினால், ஹிந்து மத புராண, இதிகாச கதைகளை எடுத்து சொல்வது குரான் வசனங்களில் அறிவியல் இருக்கிறது/இல்லை என்ற வாதத்துக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதது.

இனிமேலாவது தர்க்க அறிவு பூர்வமாக வாதம் செய்வது எப்படி என்று முஸ்லிம்களுக்கு தெரிகிறதா என்று பார்ப்போம்.

ஆனந்த் சாகர் said...

//பல அணுக்களின் கூட்டமைப்பே நமது பிரபஞ்சம். அதனை நாமே பிரித்தெடுத்து தனித்தனி கோள்களாக்கினோம். அந்த பிரபஞ்சத்தை மேலும் விரிவாக்கம் செய்வோம்' //

இது சுவனப்பிரியனின் சொந்த குரான். முஹம்மது சொன்ன குர்ஆனில் இப்படிப்பட்ட வசனம் இல்லை. அப்படியானால் அல்லாஹ்வின் சவாலை சுவனப்பிரியன் முறியடித்து விட்டாரா? சுவனப்பிரியன் எப்பொழுது நீர் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டீர்! சொல்லவே இல்லை!!!

Anonymous said...

//இந்துத்வ வெறி முழுவதும் ஏறியிருந்தால் சிந்திக்கத் தோன்றாதய்யா.//

துலுக்கதுவா வெறி ஏறியவர்களுக்கு மூளையே இருக்காதைய்யா, அது தான் சலவை செய்யப்பட்டு அந்த இடம் மழுங்கடிக்கப்பட்டு விட்டதே.

//பல அணுக்களின் கூட்டமைப்பே நமது பிரபஞ்சம். அதனை நாமே பிரித்தெடுத்து தனித்தனி கோள்களாக்கினோம். அந்த பிரபஞ்சத்தை மேலும் விரிவாக்கம் செய்வோம்' என்று இவ்வளவு அழகாக அணுக்களின் கூட்டமைப்பை பற்றி விளக்கும் போது இது கூட விளங்கவில்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாதய்யா...//

இவ்வளவு அழகாக அணுவை பற்றி ஆராய்ச்சி செய்தவன் விளக்கினான் அய்யா. உம் திருட்டு வேத புத்தகத்தில் இவ்வளவு அழகாக கூறி இருக்கிறதா அய்யா, அணு என்ற வார்த்தை அங்கே வருகிறதா அய்யா. பிரபஞ்சத்தை பிரித்தோம், உடைத்தோம், ஓட்டினோம, விரித்தோம், கிழித்தோம் இதுல
அணுவை எங்கே வருகிறது.
ஆதியாகமம்

1 அதிகாரம்
6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

இது கிறிஸ்தவ பைபிளின் வசனங்கள் இதனுடைய சுருக்கம் தான் அல்லாவின் ஒட்டுதலும், உடைத்தலும், பிரித்தலும் வசனங்கள். உமது வேத புத்தகமே திருட்டு புத்தகம் இதில் அதிலே அறிவியலும் பொரியி யலும் வேறு இருக்கிறதாம். அவியலும், பொரியலும் வேண்டுமென்றால் இருக்கலாம் .

உமது வசனங்களில் அணுவை பற்றி கூறி இருக்கிறது என்று உமது கூட்டம் மட்டும் தான் சொல்லி கொண்டிருக்க வேண்டும். எந்த அறிவியல் அறிஞராவது குரானை பார்த்து சிந்தித்து இதை கண்டுபிடித்தேன் என்று கூறி இருக்கிறாரர. மூளை இருப்பவன் சுயமாக சிந்தித்து கண்டுபிடிப்பான், ஆராய்ச்சி செய்வான். அதை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் எதாவது ஒரு குரான் வசனத்தை சொல்லி இந்த வசனம் அந்த கண்டு பிடிப்பை சொல்லுது இந்த கண்டுபிடிப்பை சொல்லுது என்று. அளந்து விட வேண்டியது.

Anonymous said...

//அநானியின் அறிவியல் இதோ:‍‍//
அட ஈமான்தாறியே நீ சொன்ன புராண கதைல அறிவியல் இருக்கிறது என்று நான் சொன்னேனா. நான் சொன்னதற்கு நீ சொன்னதா பதில். துப்பிருந்தால் சுவனப்ரியர் சொன்ன வசனம் எந்த விதத்தில் அணுவை பற்றி அவர் மேலே சொன்ன பௌத்த, இந்து சமய நூல்கள் விளக்குவதை போல் விளக்குகிறது என்று சொல்ல முடியுமா. அதற்கு நேரடியான பதிலை சொல்லாமல் நீ எதையோ சொல்வதில் இருந்தே தெரிகிறது அந்த குரான் வசனங்களில் அறிவியலும் இல்லை அணுவும் இல்லை என்று, அதை சுவனப்ரியற்கு விளக்கி சொல்லு

Anonymous said...

http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/muslimkal-katurkoklla-vandiya-padam-2014-election/

இந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சல்மான், கோவை

பதில்

காங்கிரஸ் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் மோடி நடத்திய பயங்கரவாதச் செயலை நடுநிலை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

முஸ்லிம்கள் ஒழிய வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் 30 சதவிகிதம் அளவுக்கு வாக்குகள் பெறுவார்கள் என்று நாம் நினைக்கவில்லை. குஜராத்தில் நடந்த கொடூரச் செயலைப் பார்த்து விட்டு, வயிற்றில் உள்ள குழந்தையைக் கூட ஈட்டியால் குத்தி கொலை செய்த கொடூரத்தைப் பார்த்து விட்டு, சிலிண்டர்களை வீடுகளில் வீசி கொளுத்திப் போட்ட கொடூரத்தைப் பார்த்து விட்டு இந்தக் கொடியவர்களை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

முஸ்லிம்களை அழித்து ஒழிக்கும் கொள்கை உடையவர் என்று தெரிந்து இருந்தும் மோடியை இவர்களால் ஆதரிக்க முடிகிறது என்றால் முஸ்லிம்கள் அநியாயமாக அழிக்கப்பட்டதும் அழிக்கப்படலாம் என்பதும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்தாலும் அது ஒரு பிரச்சனை இல்லை என்ற மனநிலைக்கு இவ்வளவு மக்கள் வந்து விட்டார்க்ள் என்பது தான் இதில் இருந்து நமக்குத் தெரியவருகிறது.


சுவன்ப்ரியர், அண்ணாச்சி பீ.ஜே சரியாக புரிந்து கொண்டார். உனது கூட்டத்தின் மீதான வெறுப்புணர்வு மேலும் வளர வேண்டும் , வளரும்.

சுவனப் பிரியன் said...

//ஹிந்து மதம் ஆன்மீக வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது//

எப்படி? உபியில் இரண்டு தலித் இளம் பெண்களை கற்பழித்து அவர்களை தூக்கில் தொங்க விட்டுள்ளார்களே யாதவர்கள்! அதைச் சொல்கிறீரா!

தலித் உயிர் உங்களுக்கெல்லாம் பெரிதாக தெரிவதில்லை. இந்துக்களின் எண்ணிக்கையை கூட்டி காட்டுவதற்கு மட்டும் தலித்கள் இந்துத்வாவுக்கு தேவைப்படுகிறார்கள். இந்த கொலைகளைப் பற்றி இந்துத்வா மூச்சு கூட விடவில்லை. இதற்கு பெயர்தான் இந்துத்வா.

ஆனந்த் சாகர் said...

//வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
-திருக்குர்ஆன் 21:30//

வானம் என்பது பூமிக்கு மேல் உள்ள கூரை(முகடு/canopy) என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். மேலும் ஏழு வானங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக இருப்பதாகவும் அவன் கூறுகிறான். அதாவது பூமிக்கு மேல் ஒரு கூரை, அதற்குமேல் இன்னொரு கூரை, அந்த கூரைக்கு மேல் இன்னொரு கூரை என்கிற வகையில் ஏழு கூரைகள் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த ஏழு கூரைகளும் பூமியும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்ததாகவும் பிறகு அவ்விரைன்டையும் தான் பிரித்ததாகவும் அவன் கூறுகிறான்.

சூரியனையும் பூமியையும் பற்றி அறிவியல் கூறுவது இதற்கு நேர் முரணாக உள்ளது. அதாவது ஒரே தூசு மண்டலத்திலிருந்து சூரிய குடும்பம்(solar system ) உருவானபோது, சூரியனும் பூமியும் தோன்றின என்று அறிவியல் கூறுகிறது. வேண்டுமானால் சூரியனும் பூமியும் ஒரே தூசு மண்டலமாக ஒரு காலத்தில் இருந்தன; பின்னர் அவை தனி அமைப்புகளாக(entities) உருப்பெற்றன என்று கூறலாம். இது வானம் என்கிற முகடுவும் பூமியும் ஒன்றாக இருந்தன என்பதற்கு முற்றிலும் முரண்படுவதாக அல்லவா இருக்கிறது?

ஆனந்த் சாகர் said...

//ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, ‘பிக் பாங்’ (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.’அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.//

நீங்கள் மேலே சொன்னதுபோல் பிரபஞ்சம் உருவாகவில்லை. அணு கூட்டம் ஒன்றாக சேர்ந்திருந்து அவை பிறகு வெடித்து சிதறியதால் பிரபஞ்சம் உருவானதாக நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு.

பெருவெடிப்பு கொள்கையின்படி, வெடிப்பு ஏற்படுவதற்கு முன் எந்த பொருளும்(matter - அணு) இருக்கவில்லை. வெறும் ஆற்றல்(energy) மட்டுமே திரண்டிருந்தது. இந்த ஆற்றல் மயத்தில் ஏற்பட்ட வெடிப்பினால்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது. இந்த வெடிப்புதான் பொருள்(matter அதாவது அணுக்கள்) மற்றும் கால வெளி(time and space) என்கிற நான்காவது பரிமாணம் ஆகியவற்றை தோற்றுவித்தது. பூஜ்ஜியம் நீளம் கொண்ட, பொருள் எதுவும் இல்லாத ஒரு புள்ளியிலிருந்துதான்(a point with zero length and no matter) இந்த வெடிப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகுதான் அணுக்கள் தோன்றியது.

மேலும் இப்பொழுது இந்த பிரமாண்ட முழு பிரபஞ்சமும் ஒரேயொரு எலெக்டரானால் ஆனது என்கிற ஒரு புதிய கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அதாவது ஒரே ஒரு எலெக்ட்ரான் தனக்கு தானே ஊடாடிக்கொண்டு பல கோடி கோடி அணுக்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி இந்த மாய பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. பல அறிவியல் அறிஞர்கள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இதன்மூலம் இந்த உலகம் ஒரு மாயை(illusion) என்கிற ஹிந்து ஞானிகளின் கூற்றுதான் மெய்பிக்கப்பட்டு வருகிறது.

ஆனந்த் சாகர் said...

//முஸ்லிம்களை அழித்து ஒழிக்கும் கொள்கை உடையவர் என்று தெரிந்து இருந்தும் மோடியை இவர்களால் ஆதரிக்க முடிகிறது என்றால் முஸ்லிம்கள் அநியாயமாக அழிக்கப்பட்டதும் அழிக்கப்படலாம் என்பதும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்தாலும் அது ஒரு பிரச்சனை இல்லை என்ற மனநிலைக்கு இவ்வளவு மக்கள் வந்து விட்டார்க்ள் என்பது தான் இதில் இருந்து நமக்குத் தெரியவருகிறது.//

இது முற்றிலும் அவதூறான பேச்சு. முஸ்லிம்கள் மத்தியில் ஹிந்துக்கள் மேல் வெறுப்பை வளர்க்கும் பேச்சு. தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் ஒரு பிழைப்புவாத தீய சக்தி என்பது தெளிவாக தெரிகிறது.