
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர். மம்தூஹ், மஹ்மூத் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் ரியாத்தில் வேலை செய்து வரும் ஒரு சூடானி தம்பதிகளுக்கு பிறந்தது. இதனை கேள்விப் பட்ட மன்னர் அப்துல்லா அரசு செலவில் அந்த குழந்தைகளை பிரித்தெடுக்க உத்தரவிட்டார்.
டாக்டர் அப்துல்லா அல்ரபிய்யா தலைமையில் ஒரு மருத்துவ குழு 13 மணி நேரம் போராடி இந்த இரண்டு குழந்தைகளையும் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையானது ஒன்பது கட்டங்களாக பிரிக்கப்பட்டு முடிவில் வெற்றியை சென்ற சனிக்கிழமை பெற்றுள்ளது இந்த மருத்துவ குழு. இதற்கு முன்னும் இதே போல் 34 முறை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை இந்த குழுவானது பிரித்தெடுத்துள்ளது. இந்த மருத்துவ குழுவில் 28 மருத்துவ வல்லுனர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கினர்.
ஒரு குழந்தையை சுலபமாக பிரித்து விட்டனர். மற்றொரு குழந்தையின் இதயம், லிவர், பித்தப்பை, சிறுநீரகம் போன்றவற்றை சீராக இயங்க வைக்க பெரும் சிரமப்பட வேண்டியாயிருந்தது. இறைவன் கிருபையால் இரண்டு குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர். குழந்தையின் பெற்றோர் மன்னர் அப்துல்லாவுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
24-05-2014
No comments:
Post a Comment