Followers

Wednesday, May 21, 2014

நமது சட்டம் இருக்க இறைவன் ஏன் தண்டிக்க வேண்டும்?

திரு சார் மார்!

//1. ஏன் இறைவன் தண்டிக்கவேண்டும்? மனிதனே செய்கின்றானே? ஃப்ளாஷ்ஃபமி லா போட்டு குரானை மறுத்தோரை இசுலாமிய நாடுகள் கொல்கின்றன. இல்லையா? இறைவனா கொல்கின்றான் அந்நாடுகளில்?
2. மற்ற குற்றங்களை நம் நாடு தண்டிக்கிற்தே! மரண தண்டனைகள் கொடுக்கப்படுகின்றனவே?//

குற்றவாளிகளுக்கு நமது நாடு கொடுக்கும் தண்டனைகள் உண்மையான தண்டனைகளே அல்ல. உதாரணத்துக்கு நமது நரேந்திர மோடியை எடுத்துக் கொள்வோம். அவரது ஆட்சியில் குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் 2000க்கு மேல் கத்தியால் குத்தியும், எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்கள். ஒரு நபரே 10லிருந்து 20 பேர் வரை கொன்றிருக்கிறார்கள். தற்போது சிறையிலும் அடைபட்டிருக்கிறார்கள். தீர்ப்புகள் வந்து அந்த கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு முறைதான் அவருடைய உயிரை எடுக்க முடியும். ஆனால் அந்த கொலையாளி கொன்றதோ 20 உயிர்களுக்கு மேல். 20 உயிர்களை கொன்றவனை ஒரு முறை தூக்கில் ஏற்றினால் அது சரியான தண்டனையாகுமா? எனவே அவனுடைய இறப்புக்குப் பிறகு அவன் கொன்ற 20 உயிர்களுக்கும் இறைவன் முன்னிலையில் உலக மக்கள் முன்னிலையில் பழி வாங்கப்படும். 20 உயிர்களின் வலியையும் அன்று அவன் உணருவான், தோல்கள் புதுப்பிக்கப்படும்: மீண்டும் உயிரும் கொடுக்கப்படும் அவனது தண்டனையை நிறைவேற்றுவதற்காக. அதுதான் நியாயமும் கூட...

//3. இறைவனின் வழிகாட்டுதல் என்றால் ஒரே ஒரு இறைவனா? பல மதங்கள் பல இறைவனைக்காட்டும்போது ஒரே ஒரு இறைவனாக அல்லாவை மட்டுமே என்பது எப்படி பல மத நாட்டில் சாத்தியாகும்? அங்கு எங்கே போயிற்ற் தோலை எரிக்கும் தணடனை? சாத்தியமா?

ஆக சுவனப்பிரியன், உலகமுழுவதும் இசுலாம் மட்டுமே இருப்பின் மட்டும் இந்த வசனம் சரி//


இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :

'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'

-ரிக் வேதம் 1:164:46

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'

உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.

இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'

குர்ஆன் 17 :110

ஆக உலகம் முழுவதையும் படைத்து பரிபாலிப்பவன் ஒருவனே! அனைத்து மதங்களும் இதைத்தான் போதிக்கின்றன. ஆனால் மனிதன்தான் தனது சுய லாபத்துக்காக வேதங்களை திருத்தி தனக்கு தோதானதாக மாற்றிக் கொள்கிறான். பல வேதங்கள் மனிதக் கரங்களால் மாற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

'வாசுதேவக குடும்பம்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'நட்ட கல்லும் பேசுமோ' என்ற நமது முன்னோர்களின் அறிவுரைகளை ஆராய்ந்து பாருங்கள்..... சுவனப்பிரியனின் வழியில் வந்து நிற்பீர்கள்.

4 comments:

ஆனந்த் சாகர் said...


//இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன. //

இப்படி இருப்பதில் எவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரே கடவுளை அவரவர் விருப்பப்படி எந்த உருவத்திலும் அல்லது உருவம் இல்லாமலும் வணங்கிவிட்டு போகட்டும். இதை பற்றி அந்த ஒரே கடவுளே பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

ஒரே கடவுளை உருவமில்லாத முறையில்தான் வழிபட வேண்டும் என்கிற கோட்பாடு வெறியாக மாறி பின்னர் பைத்தியக்காரதனமாக வளர்ச்சியடைந்து உங்கள் கூட்டம் இப்படி உளறிக்கொண்டு இருக்கிறது. அந்த ஏக கடவுளை ஏக்க கடவுளாக நீங்கள் பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்.

ஆனந்த் சாகர் said...

//ஆனால் மனிதன்தான் தனது சுய லாபத்துக்காக வேதங்களை திருத்தி தனக்கு தோதானதாக மாற்றிக் கொள்கிறான். //

வேதங்களை மனிதனே தன் தேவைக்கு ஏற்ப எழுதினான். பிறகு அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொள்கிறான். இதுதான் சிந்தனை பரிணாமம். மாறிக்கொண்டே இருப்பதுதான் மாறாதது.

ஆனந்த் சாகர் said...

//'நட்ட கல்லும் பேசுமோ' என்ற நமது முன்னோர்களின் அறிவுரைகளை ஆராய்ந்து பாருங்கள்..... //

'அல்லாஹ்வும் பேசுவானோ' என்பதை ஆராய்ந்து பாருங்கள். நபிமார்களிடம் வஹி மூலம் பேசினான், ஆனால் மற்ற மனிதர்களிடம் பேச மாட்டான் என்று குழந்தைத்தனமாக உளறக்கூடாது.

உங்கள் தர்க்கப்படி, எந்த கல்லும் என்னிடம் மட்டுமே பேசுது, மற்றவர்களிடம் பேசாது என்று எவரும் உரிமை பாராட்ட முடியும்.

ஆனந்த் சாகர் said...

//அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'//

இன்றைய ஏமன் நாட்டில் வாழ்ந்த சபயென்கள்(Sabaens ) ie சாபியீன்கள் தங்கள் கடவுளை ரஹ்மான் என்று அழைத்தனர். அதை முஹம்மது காப்பியடித்து குர்ஆனில் கூறினார்.