Followers

Saturday, May 17, 2014

மோடி அலை என்பது உண்மையா?



இந்தியா முழுவதும் உள்ள நாட்டு மக்கள் அளித்த ஓட்டில் வெறும் 31 சதவிகத ஓட்டுக்கள் தான் மோடியின் பி.ஜே.பிக்கு கிடைத்துள்ளது. கிட்ட தட்ட 70 சதவித மக்கள் மோடியின் ஆட்சியை விரும்பவில்லை. மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மோடி அலை உண்மையாக இருந்தால் குறைந்த பட்சம் 60 சதவிகத ஓட்டுக்களையாவது மோடியின் பி.ஜே.பி பெற்றிருக்க வேண்டும். நமது நாட்டு தேர்தல் முறையில் உள்ள பலவீனங்களே இது போன்ற நபர்கள் பிரதமராகும் வாய்ப்பை தந்து விடுகிறது. விகிதாச்சார முறைப்படி தேர்தலை திருத்தி அமைத்தால்தான் சிறுபான்மை இன மக்கள், பிறபடுத்தப்ட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உண்மையான பிரதிநிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும். வெறும் 30 சதவீத மக்களின் ஆதரவை பெற்று இன்று இந்தியாவையே நான் புரட்டிப் போட்டு விடுகிறேன் என்ற கூப்பாட்டோடு மோடி புறப்பட்டு விட்டார்.

எண்ணிக்கையே தர்மம்
என்று ஆகிவிட்ட
குருசேத்திரத்தில்
வெற்றிகள் எல்லாம்
கௌரவர்களுக்கே போகின்றன....

என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள்தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது.

நேற்று ஒரு டி.வி விவாதத்தில் அருண் ஷோரி ( முந்தைய பா.ஜ.க ஆட்சியில் பொதுத்த் துறை நிறுவனங்களைத் தனியார்களுக்கு விற்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்), பதவி ஏற்கவுள்ள பா.ஜ.க அரசு எல்லா அரசியல் முடிவுகளுக்கும் பாராளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும் என்கிற நிலையை ஒழித்து வெறும் நிர்வாக ஆணையின் அடிப்படையிலேயே (Executive Order) ஆணைகளை இட்டு நடைமுறைப் படுத்த வேண்டும் எனச் சொன்னார். நிர்வாகத்தின் அதிகாரம் சர்வாதிகாரம் என்கிற நிலையை எட்டாமல் தடுப்பதற்கு ஒரு ஜனநாயக அமைப்பில் உள்ள இரு நிறுவனங்கள்தான் பாராளுமன்றமும் நீதிமன்றமும். பாராளுமன்றத்தின் இந்த அதிகாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறார் அருண்ஷோரி. வருங்காலங்களில் இன்னும் எத்தனை தமாஷாக்கள் அரங்கேறப் போகின்றன என்பதனையும் பார்ப்போம்.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் இந்துத்வா இனி இந்திய மக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாம். இதில் ஏன் இவர்கள் இந்த அளவு உறுதியாக உள்ளார்கள்?

இன்று இஸ்லாமிய வாழ்வு முறை இந்த இந்தியாவில் எந்த தடையுமின்றி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த அழகிய வாழ்வு முறையை பார்த்து பல இந்துக்கள் தங்கள் மதத்தை துறந்து இஸ்லாத்தில் கூட்டம் கூட்டமாக இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். இன்னும் இருபது ஆண்டுகளில் பார்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் இஸ்லாத்தில் ஐக்கியமாகி விடும் நிலைமையை நோக்கி இந்து மதம் சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் இஸ்லாத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்துகளான வணக்க வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

எப்படி பவுத்த மதத்தையும், சமண மதத்தையும், அதன் சட்டங்களை எல்லாம் பார்பன மயமாக்கி இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஆக்கினார்களோ அது போன்ற ஒரு சூழலை இஸ்லாத்திலும் கொண்டு வர எத்தனிக்கிறார்கள். அல்லாஹ்வையும் வணங்கிக் கொள், அருகில் ராமனையும் கிருஷ்ணனையும் வைத்துக் கொள். குர்ஆனையும் படி: அதோடு ராமாயணத்தையும் படி: அதன் கருத்துக்களை உள் வாங்கி அதற்கு மதிப்பு கொடு. திருமண ஒப்பந்தம், சொத்து பாகப்பிரிவினை, போன்ற அனைத்திலும் பார்பனிய சட்டங்களை முஸ்லிம்களாகிய நீ பின்பற்று: என்று இதை நோக்கி தற்போது செல்ல ஆரம்பிப்பார்கள்.

இதற்கு இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே முதலில் எதிர்க்க ஆரம்பிப்பார்கள். ஏனெனில் இந்துக்களில் பலர் இறந்த உடலை எரிக்கிறார்கள்: சிலர் புதைக்கிறார்கள்: பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சாதி வழக்கத்திற்கு ஒப்ப பல கடவுள்களை வணங்குகின்றனர். பார்பனர்கள் ராமன், கிருஷ்ணன், போன்ற கடவுள்களை மட்டுமே வணங்குவர். சுடலை மாடன், போன்ற கிராமிய கடவுள்களை பார்பனர்கள் கடவுளாக மதிப்பதில்லை. தங்கள் கோவில்களில் அதற்கு இடமும் தர மாட்டார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோவில்களில் ராமனும், கிருஷ்ணனும் தெய்வங்களாக வீற்றிருக்கும். பொது சிவில் சட்டத்தில் அரசு எதனை கடவுளாக்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி திருமணம் செய்ய வெண்டும் என்பது வரை சட்டங்களாக்கி அதனை பொதுவாக்கி விடுவர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே! கிராமிய கோவில்களில் ஆடு, கோழி, மாடு போன்றவற்றை பொது சிவில் சட்டத்தில் பலி கொடுக்க முடியாது. பார்பனர்களுக்கு காளை மாடு, பசு மாடு போன்றவை தெய்வங்கள். எனவே அதனை பலி கொடுப்பதற்கும் தடை விதிக்கப்படும்.

இதனை சட்டமாக்க ஆட்சியில் அமர்ந்துள்ள மோடி தயங்குவார். ஆனால் ஆர்எஸ்எஸ் இதனை சட்டமாக்கு என்று நிர்பந்திக்கும். சட்டமாக்காது விட்டால் ஆர்எஸ்எஸ் மோடியை உயிரோடு விட்டு வைக்காது என்பதும் தெரியும் . மஹாத்மா காந்தியையே கொலை செய்தவர்களுக்கு மோடி எம்மாத்திரம். எனவே பொது சிவில் சட்டம் அமுலாக்கப்பட்டால் நாட்டில் பல இடங்களில் கலவரம் வெடிக்கும். ஒருகால் அவசர நிலை கூட கொண்டு வரப்படலாம். சட்டம் ஒழுங்கை காரணமாக்கி மோடி அரசு கலைக்கவும் படலாம். இனி வருங்கால இந்தியாவை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கைகொள்ளப் போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

“இறைவா!! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

குர்ஆன்:3:26

குர்ஆனின் இந்த வசனத்தின் படி மோடியை இழிவுபடுத்துவதற்காகவே இத்தனை மெஜாரிட்டியோடு ஆட்சியை வல்ல இறைவன் கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த இழிவை இன்னும் ஒரு வருடத்தில் நாம் எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்!

இது சம்பந்தமாக சம்சுதீன் காசிமியின் உரையும் மிக அழகாக உள்ளது அதனையும் பார்த்து தெளிவுறுங்கள். முஸ்லிம்கள் எந்த அச்சமும் படாமல் நமது பிரார்த்தனையை ஐந்து நேரமும் நமது தொழுகையில் நமது இறைவனின் முன்னால் வைப்போமாக!

No comments: