Followers

Monday, May 05, 2014

பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடலாமா?

ஹானஸ்ட் மேன்!

//கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெஇப்பதும் அந்த செய்தியை சொன்ன டிவி க்கு மாலை போடுவதும் உண்மையில் உங்கள் (முஸ்லிம்கள்) தேசபற்றை பறைசாற்றுபவையே!//

ஒரு நாட்டின் தேசப் பற்றின் அளவு கோளை ஒரு கிரிக்கெட் விளையாட்டில் காட்டும் விசில் சத்தத்தில் அடக்கி விட்ட உங்கள் அறியாமையை எண்ணி வியக்கிறேன். நாட்டுக்காக விளையாட தேர்வு செய்யப்பட்ட பல வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் கலந்து கொண்டு நாட்டின் மானத்தை சந்தி சிரிக்க வைத்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். கிரிக்கெட்டை பொருத்த வரை உலகம் முழுக்க பணத்துக்காக தனது தாய் நாட்டையே விலை பேசுபவர்களையல்லவா முதலில் நீங்கள் கண்டிக்க வேண்டும்? ஒரு நாட்டின் தேசபக்தி என்பது அந்நாட்டை தாக்க வேறொரு நாட்டு ராணுவம் வரும் போது உயிரை பணயம் வைத்து எதிர் கொள்வதே! இந்த நாட்டு மக்களை உயர்வு தாழ்வு பாராட்டாமல் சமமாக நடத்துவதே! சொந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையினரை தீட்டு என்று ஒதுக்கி வைப்பதல்லவா தேசக் குற்றம்?

இங்கு சவுதியில் இளைஞர்கள் அதிகமாக விரும்புவது பிரேசில் கால்பந்தாட்ட அணியை. இதன் வீரர் ரொனால்டோவின் பெயரைத்தான் அநேக சவுதி இளைஞர்கள் தங்களது பனியனில் அச்சிட்டு மகிழ்கிறார்கள். சவுதி அணியையும், சவுதி வீரர்களையும் நீங்கள் ஏன் ஊக்கப்படுத்துவது இல்லை என்று இந்த அரசாங்கம் அந்த இளைஞர்களை கண்டிப்பது இல்லை. விளையாட்டு ரசனை என்பது வேறு: நாட்டுப் பற்று என்பது வேறு. அதே நேரம் இதனையும் கூட நமது நாட்டில் சிலர் பிரச்னையாக்குவதால் இது போல் கொண்டாட்டங்களை கொண்டாடும் ஒரு சில முஸ்லிம்கள் அதனை நிறுத்திக் கொள்வது நல்லது.

அடுத்து பாகிஸ்தான் ஒரு குண்டை சென்னையில் போட்டால் இங்குள்ள அனைத்து மதத்தவருக்கும் அழிவுதானே ஏற்படும். அவன் போடும் குண்டு இங்குள்ள முஸ்லிம்களை கொல்லாதா? எப்படி இங்குள்ள முஸ்லிம் பாகிஸ்தானை நேசிக்கிறான் என்று சொல்வீர்கள்? இந்திய முஸ்லிம்கள் நஞ்சாக வெறுப்பது பாகிஸ்தானியர்களையும், ஜின்னாவையும். ஏனெனில் பாகிஸ்தான் பிரிவினை என்பது பெரும்பான்மை மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு. வஹாபிய கொள்கையில் இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் கடைசி வரை பிரிவினை வேண்டாம் என்று ஜின்னாவிடம் போராடி பார்த்தார். இஸ்லாமிய நடைமுறைகளை எதிலும் பேணாத மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றிய ஷியா முஸ்லிமான ஜின்னா பிரிவினைக்கு ஆதரவாக குரல் கொடுத்து அதை சாதித்தும் காட்டினார். இந்திய முஸ்லிம்களைப் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாத சுயநலமி இந்த ஜின்னா. நிலைமை இவ்வாறு இருக்கும் போது இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை எவ்வாறு ஆதரிப்பர்?

//உன் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியை மதிக்கும் நீ அந்த மூதாதையர்களின் மதத்தை மட்டும் மதிக்க மறுப்பதேன்?//

'நீ' 'உனக்கு' இது போன்ற அகங்கார வார்த்தைகள்தான் எனது நாட்டு பழக்க வழக்கமா? முதலில் கண்ணியமாக எழுதப் பழகிக் கொள்ளுங்கள். மனிதனை நான்கு வர்ணங்களாக பிரித்து அதனை இன்று வரை சரிதான் என்று வாதித்துக் கொண்டும் இருக்கும் உங்களைப் போன்றவர்களின் சாதி வெறியால்தான் இஸ்லாத்தை நோக்கி ஓடினர் எனது முன்னோர்கள். இனி மேலும் இந்த மத மாற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால் இந்து மதத்தில் சீர்திருத்தத்தை முதலில் கொண்டு வாருங்கள். மத மாற்றங்கள் தானாகவே நின்று விடும்.


3 comments:

Anonymous said...

சென்னையில் குண்டு வெடிப்பு நடத்திய காவி தீவிரவாதி மோகன்ராம் உளவாளிக்கு அருள் என்பவனுக்கும் நீண்ட நாள் பழக்கம் இருக்கிறது தற்போது மக்கள் சந்தேகபடுகின்ற்னர்..

இவர்கள் ஸ்லீப்பர் செல் போல் மதுரை திருச்சி என்று இந்தியா முழுவதும் உள்ளனர்.

இவர்கள் எதற்கு குண்டு செய்தார்கள்?? யாருக்கு குண்டு செய்தார்கள்? குண்டு செய்ய வாடகைக்கு எதற்கு வீடு கொடுக்கவேண்டும்????

இன்னும் பல கேள்விக்கு விடை இல்லாமல் அக்கம் பக்கம் உள்ள மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

உளவுத்துறை பாகிஸ்தானை கை காண்பித்து செல்ல திட்டம் அம்பலம்

-yousuf riaz

Anonymous said...

அஸ்ஸாம் மக்களுக்கு ஆறுதல்
***************************
போடாலாந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். அசாமின் மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தனி போடோலாந்து கோரிக்கையை எதிர்க்கும் வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களித்துவிட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இந்தப் படுகொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சி அரசு திறந்துள்ள முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.

வெல்பர் பார்ட்டி அகில இந்திய தலைவர் முஜ்தபா பாருக் அஸ்ஸாம் மாநில பாக்‌ஷா முகாமிற்கு சென்று மரண பயம் சூழ்ந்துள்ளமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நிவாரண பொருள்களை வழங்கினார்.

பாக்ஸாவில் காலை 10 மணியில் இருந்து 8 மணி நேரமும், கோக்ராஜாரில் 6 மணி நேரமும், சிராங்கில் 7 மணி நேரமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

உயிர் நீத்த தியாகிகளுக்கு இறைவன் சுவர்கத்தை வழங்குவானாக. அக்கிரமங்களையும் அநியாயங்களையும் தடுக்க சட்ட ரீதியிலான போராட்டத்தை ஜனநாயக ரீதியிலான வழிமுறைகளை
முன்னெடுப்போம் .

எஸ்.என்.சிக்கந்தர்

Anonymous said...

சௌதிகள் பிரேசிலை ஆதரிப்பது உண்மை தான். ஆனால் பிரேசிலுக்கு பதிலாக இஸ்ரேலை ஆதரிக்கடுமே பார்க்கலாம். அப்போது நீங்கள் சொல்லும் கூற்றை நான் ஒத்து கொள்கிறேன்.