Followers

Friday, May 02, 2014

மோடியை வம்பில் மாட்டி விட முயற்சிக்கும் அத்வானி!உத்தரகாண்டின் பிதோரகரில் அல்மோரா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஜர் தாம்தாவை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது அத்வானி கூறியதாவது...

"பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சாரப் பேரணிகள் நடத்துவதற்கு பதிலாக, தேர்தலில் களமிறங்கும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்களிடையே பொதுத் தளத்தில் விவாதம் நடத்தலாம்.

இதற்கான ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு, இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது" என்றார் அத்வானி.

அமெரிக்க தேர்தலில், அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபடுவது அந்நாட்டு அரசியல் நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையிலேயே அவ்வாறான விவாதம் இந்தியாவிலும் நடத்தப்பட வேண்டும் என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் எப்படியாவது மோடியை சிக்கலில் மாட்டி விட அத்வானி முயற்சிக்கிறார். விவாதம் என்று வந்தால் மோடியை எதிர் தரப்பினர் குஜராத் கலவரம், மனைவியை மறைத்த விவகாரம், பெண் உளவு பார்த்த விவகாரம், ஹேமந்த் கர்கரேயின் மனைவி மோடி தந்த பண முடிப்பை வாங்க மறுத்ததன் பிண்ணனி, குஜராத் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை விவகாரம்(இன்று வரை நீதிக்காக இவரது பெற்றோர் போராடி வருகின்றனர்), இர்ஷத் ஜஹான் என்கவுண்டர் வழக்கு, குஜராத்தின் வறுமை நிலை என்று அத்தனையையும் மக்கள் மன்றம் முன்னால் கேள்வி கேட்க ஆரம்பிப்பர். இதற்கு மோடியால் என்ன பதிலை தர முடியும்?

கரன் தாப்பர் கேட்ட ஒரு கேள்விக்கே பதிலளிக்க முடியாமல் விக்கித்து தண்ணீர் கேட்டவர் இந்த மோடி. நேரிடையாக அதனையும் பார்த்தோம். எனவே அத்வானியின் யோசனை மோடியை பின்னுக்கு தள்ளவே உதவும். எனக்கு கிடைக்காத பிரதமர் பதவி மோடியே உனக்கும் கிடைக்க விட மாட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார் அத்வானி. அத்வானியின் இந்த யோசனையை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆவண செய்ய வேண்டும். தேர்தல் முடிவுக்கு பிறகு மிகப் பெரும் குடுமிபிடி சண்டை பிஜேபியில் உண்டு.

1 comment:

Anonymous said...

புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது .
குண்டு வெடிப்பு பற்றி பேராசிரியர் ஹாஜா கனி சொன்ன ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது .

" கொஞ்ச நாள் முன்னால இந்தியாவிலுள்ள புத்தகயாவில் குண்டுவெடித்தது. அடுத்த நாள் ஒரு பிரபலமான வட இந்திய செய்தி பத்திரிக்கை...
" பர்மாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்காக இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் புத்தகயாவில் குண்டு வைத்தார்கள் " என்று முழுப்பக்க செய்தி போட்டு விசாரணையின் கோணத்தையே திசை திருப்பியது.
சில முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் குண்டு வைத்தவர்கள் ஏழு சாமியார்கள் என்பது பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள்தான் குண்டு வைத்திருப்பார்கள் என்று அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் குண்டு வெடித்த உடனேயே செய்தியை பரப்பி விடுகிறார்கள். இது உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடையாக இருக்கிறது.
இன்றைய குண்டு வெடிப்பால் யாருக்கு ஆதாயம் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுக் கொல்ல வேண்டும் "

பாராட்டுக்குரிய அழுத்தமான உண்மையான கருத்து.
வாழ்த்துக்கள் ஹாஜாகனி !