Followers

Monday, May 05, 2014

ரயில் குண்டு வெடிப்பு உண்மை வெளிவருமா? புதைக்கப்படுமா?

உண்மை வெளிவருமா? புதைக்கப்படுமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை சென்ட்ரலில் வெடித்த குண்டுகளும் பாட்னா குண்டுகள் ஒன்று புலன் விசாரணை தற்போது உறுதி!!

சில மாதங்களுக்கு முன்பு பாட்னாவில்
மோடி கலந்துகொண்ட தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில்,
அவர் பேச இருந்த மேடைக்கு அருகில்
வெடிகுண்டுகள் வெடித்தன. அப்போது
இந்தியன் முஜாஹிதீன்களைச் சேர்ந்த
தீவிரவாதி ராஜு சாவோ என்பவனை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தில் பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாட்னா குண்டுவெடிப்பின்போது
கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் பெயர்கள் வருமாறு:

*கோபால் குமார் கோயல்
*கணேஷ் பிரசாத்
*பவன்குப்தா
*விகாஸ்குமார்.

இவர்களைக் கைது செய்த பாகல்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா,

“கைது செய்யப்பட்டவர்களில் மாஸ்டர் மைண்ட் தீவிரவாதி கோபால் குமார் கோயல் போலீசாரிடம் பல மர்மங்களை வெளிப்படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

பாட்னா குண்டுவெடிப்பு தீவிரவாதிகளான
இந்த நான்குபேரிடமும் தமிழகக் காவல்துறை
விசாரணை நடத்தினால் பல விவரங்கள் தெரியக்கூடும்.

குண்டு வைத்த தீவிரவாதிகள் யாராக இருந்தாலும்
-எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்-
சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக்
கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

சத்தியத்தின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டால்
அந்தச் சத்தியமே அவர்களுக்குப்
புலனாய்வுக்கான சரியான வழியைக் காட்டும்.

நன்றி -சிராஜுல்ஹஸன்

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சத்தியத்தின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டால்
அந்தச் சத்தியமே அவர்களுக்குப்
புலனாய்வுக்கான சரியான வழியைக் காட்டும்.//

இதெல்லாம் நம்ம நாட்டுல நடக்குற காரியமா ? வல்லரசு நாடாக இருந்தும் தாவூத் இப்ராஹீமை இதுவரை துபாயில் இருந்து தூக்கி வர முடியாத அரசாங்கம்தானே !

ஆனந்த் சாகர் said...

//குண்டு வைத்த தீவிரவாதிகள் யாராக இருந்தாலும்
-எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்-
சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக்
கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.//

உலகம் முழுவதும் நடக்கிற மத பயங்கரவாத செயல்களை முஸ்லிம்கள்தான் செய்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறகு எதற்கு 'எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும்' என்ற வார்த்தை பிரயோகம்?