'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, August 25, 2015
தேச விடுதலையில் குஞ்சாலி மரைக்கார்கள்!
நமது நாட்டின் விடுதலைப் போரில் தங்களின் சதவீதத்துக்கு அதிகமாகவே தங்களின் இன்னுயிரை இழந்தவர்கள் முஸ்லிம்கள். வெள்ளையனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவனெல்லாம் இன்று சுதந்திர போராட்ட தியாகிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். நமது வரலாற்று புத்தகங்களில் படிக்காத தேசத்துக்காக தங்கள் உயிரைக் கொடுத்த குஞ்சாலி மரைக்கார்களைப் பற்றி இந்த பதிவில் பார்போம்.
கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வணிகம் செய்ய இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளையர்கள் உற்பத்திப் பொருட்களை விற்கும் சந்தைக் கூடாரமாக இந்தியாவை மாற்றி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். நாட்டுப் பற்றுடைய மக்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். வாஸ்கோடகாமா 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கள்ளிக் கோட்டையில் வந்து இறங்கியது முதல் இந்தியாவின் அடிமை வரலாறு ஆரம்பமாகின்றது.
கள்ளிக் கோட்டை கடற்கரையில் போர்த்துக்கீசியர் நங்கூரம் பாய்ச்சிய மறுகணமே அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த ஸாமுத்ரி ராஜாவின் படையிலிருந்து முஸ்லிம் வீரர்கள் ஆர்ப்பரித்து கிளம்பினார்கள். நான்கு மரைக்கார்கள் ஸாமுத்ரி ராஜாவின் கப்பற் படையில் முக்கிய வீரர்களாக விளங்கினார்கள். குட்டி அஹமது அலி, குட்டி போக்கர் அலி, பாத்து மரைக்கார், முஹம்மதலி ஆகியோரே அந்த நால்வர். குஞ்சாலி மரைக்கார்கள் என்பது இவர்களின் குடும்ப பெயர். குஞ்சாலி மரைக்கார்கள் கடல் போரில் புதிய புதிய வழிமுறைகளைக் கண்டு பிடித்தார்கள். ஆங்கிலேயருக்கு எதிராக மிகக் கடுமையாக போராடினார்கள்.
இவ்வாறு தொடர்ந்து நடந்த யுத்தத்தில் 1537 ஆம் ஆண்டு சதியின் மூலம் இவர்களில் ஒருவருடைய தலையை கோவாவில் வைத்து வெட்டி அதனை எடுத்து வந்து கண்ணணூர் கடற்கரையில் சூலத்தில் மாட்டி வைத்தார்கள். ஏனையோரை கைது செய்து கோவாவில் சிறையில் அடைத்து தூக்கில் ஏற்றினர்.
குஞ்சாலி மரைக்கார்களின் நினைவாக அவர்களின் சொந்த ஊரான கோழிக்கோடு மாவட்டம் இரிங்கல் என்னுமிடத்தில் நினைவுத் தூண் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இரிங்கல்லில் குஞ்ஞாலி மரைக்காயர்களின் பாரம்பரிய வீடு நினைவு மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. அருங்காட்சியகமும் அங்கே இருக்கிறது. அதன் வளாகத்தில்தான் இந்த நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது. நினைவுத்தூண் எழுப்பும் பணியை இந்திய கப்பற் படையே கவனித்துக் கொண்டது.
இந்திய கப்பற்படையினர் சார்பில் எழுப்பப்பட்டுள்ள இந்த நினைவுத்தூணை முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கடந்த 2006 ஆமட் ஆண்டு மே 17ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதில் அவர் ஆற்றிய உரையில்...
'இந்திய கப்பற் படை வரலாற்றில் ஒளி விளக்குகளாக போராடிய குஞ்சாலி மரைக்கார்கள் நாட்டுப் பற்றின் முன்மாதிரிகள். இந்திய கப்பற் படை குஞ்ஞாலி மரைக்கார்களுக்கு நினைவுத் தூண் எழுப்பியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்து 16 ஆம் நூற்றாண்டில் கப்பற் படைகள் இறக்கி போராடிய தீரர்கள் இந்த குஞ்ஞாலி மரைக்கார்கள்'
என்று புகழாரம் சூட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment