




இறைவன் குர்ஆனில் பல இடங்களில் தொழுகையை வலியுறுத்துகிறான். மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான் என்றும் இறைவன் கூறுகிறான். ஆனால் அந்த தொழுகையில் நாம் பெரும்பாலும் அலட்சியமாகவே இருக்கிறோம். நாம் இறைவனை தொழுவதனால் இறைவனின் மதிப்பு ஒன்றும் கூடி விடப் போவதில்லை. மாறாக அதனால் நாம் தான் அதிக நன்மைகளை பெறுகிறோம். மறுமையில் இறைவனை சந்திக்கும் போது தொழுகையாளிகளுக்கு அவன் தரும் கண்ணியத்தையும் காணப் போகிறோம். உலகிலேயே பல பாவ காரியங்களிலிருந்து தொழுகை நம்மை தடுக்கிறது. தொழுவதனால் மன அமைதி கிடைக்கிறது. ஐந்து வேளை முறையாக தொழுபவர்கள் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவுக்கு என்றுமே வர மாட்டார். மேலும் இந்த தொழுகையானது பல நிலைகளில் நமது உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. அதன் பலன்களைத்தான் நாம் மேலே பார்கிறோம்.
ஒரு நாளில் நமக்கு கிடைக்கும் 24 மணி நேரத்தில் அரை மணி நேரத்தை இந்த தொழுகைகளுக்காக நம்மால் ஒதுக்க முடியாதா? தொழாதவர்கள் இனியாவது ஐவேளை தொழுகைக்கு முயற்சிப்போமாக!
இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:, ” இஸ்லாம் ஐந்து அம்சங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது 2. தொழுகையை நிலைநாட்டுவது 3. ரமளானில் நோன்பு நோற்பது. 4. ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர்) இறையில்லமான) கஃபாவில் ஹஜ் செய்தல்’
(புஹாரி: 4514, முஸ்லிம்)
இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை மனிதரை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும்.
குர்ஆன்(29:45)
அபூ ஹுரைரா(றழி) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று ஓடிக் கொண்டு இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி: 528, முஸ்லிம்)
No comments:
Post a Comment