'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, August 02, 2015
ஆடுதுறை மற்றும் மன்னார்குடியில் எதிர்ப்பை மீறி உடல் அடக்கம்!
ஆடுதுறை சம்பவத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மார்க்கம் அறியாத மூடர்கள் நபி வழியில் இறந்த உடலை அடக்கம் செய்ய மறுத்தனர். இதற்கு காவல் துறையும் துணை போனது.
இந்த அடாவடித்தனத்தைக் கண்டு பொறுக்காத தவ்ஹீத் ஜமாத்தினர் தடையை மீறி உடலை அடக்கம் செய்தனர். ஆடுதுறையிலும் இதே போன்று தடையை மீறி இறந்த உடலை அடக்கம் செய்துள்ளனர். இனி மேல் எதிர்ப்பு தெரிவித்தால் இதே போன்று தடையை மீறி உடலை அடக்கம் செய்ய தமிழகம் முழுவதும் தவ்ஹீத் வாதிகள் தயாராக வேண்டும்.
இதே போன்று சென்ற ரமலானில் பண்டாரவாடையில் இறந்த உடலை அடக்கம் செய்ய ஒரு கூட்டம் மறுத்தது. பள்ளி வாசலின் உள்ளே ஒரு இளைஞன் சரியான குடி போதையில் இடையிடேயே வெளியே வந்து 'உயிரே போனாலும் உடலை அடக்க விட மாட்டோம்' என்று வெறித் தனமாக கத்தி விட்டு சென்றான். காவலுக்கு நின்ற போலீஸ்காரர் ஒருவர் 'எங்கள் கோவிலில் தான் இது போன்று சாராயத்தை குடித்து விட்டு அலம்பல் செய்வார்கள். உங்கள் பள்ளி வாசலில் இவ்வாறு ஒருவன் குடித்து விட்டு கத்திக் கொண்டு நிற்பதை முதல் முறையாக பார்க்கிறேன்' என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
பண்டாரவாடையில் இவ்வாறு பிரச்னை நடந்து கொண்டிருந்தபோது மாலை நேரத் தொழுகைக்கும் இரவு நேரத் தொழுகைக்கும் பாங்கு கொடுக்கப்பட்டது. பாங்கு கொடுத்தவுடன் சுன்னத் ஜமாத் பெரிய பள்ளியின் உள்ளே 'உடலை அடக்கக் கூடாது' என்று கோஷமிட்ட ஒரு பெரும் கும்பல் பள்ளிக்கு வெளியே தொழாமல் வந்தது. சில அடி தூரத்தில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியின் வெளியே கூடியிருந்த அனைத்து மக்களும் தொழ பள்ளிக்கு சென்றனர். ஆனால் தொழ பள்ளியில் இடமில்லை. இரண்டாவது ஜமாத், மூன்றாவது ஜமாத், நான்காவது ஜமாத் என்று தொழுது தங்கள் கடமையை தவ்ஹீத் இளைஞர்கள் நிறைவேற்றினர்.
பெரிய பள்ளியில் குடித்து விட்டு கும்மாளமிட்ட சுன்னத் ஜமாத் இளைஞர்களையும் ஆறு நோன்பு வைத்துக் கொண்டு கடமையான தொழுகைகளையும் நிறைவேற்றிய தவ்ஹீத் பள்ளியில் தொழுத ஏகத்துவ இளைஞர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். சாராயத்தில் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களின் நேர்வழிக்காக பிரார்த்தனை செய்தேன்.
ஐந்து வேளை தொழாதவன், சாராயம் குடிப்பவன், வட்டி வாங்குபவன், விபசாரம் புரிந்தவன், பள்ளி வாசல் சொத்தை கொள்ளை அடித்தவன், அரபு நாடுகளில் வேலை செய்து கம்பெனி பணத்தை சுருட்டிக் கொண்டு வந்து ஊரில் பெரிய மனிதனாக உலா வருபவன் இவனது குடும்பத்தாருக்கெல்லாம் இறந்த உடலை அடக்கம் செய்ய எந்த வித கட்டுப்பாடுகளையும் பள்ளிவாசல் நிர்வாகம் விதிப்பதில்லை.
ஆனால் நபி சென்னபடி தனது வாழ்வை அமைத்துக் கொண்டு ஏகத்துவத்தைக் கடை பிடிக்கும் இளைஞனின் வீட்டு இறந்த உடலை இந்த பள்ளி நிர்வாகிகள் அடக்க இடம் தர மறுக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களை இந்த உலகிலேயே இறைவன் இழிவுபடுத்துவான். மறு உலகிலும் உலக மக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனையை தருவான். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுதும் அடித்து நொறுக்கப்படுகின்றன. தீமைகளின் தாய் மது என அண்ணல் நபி(ஸல்) உரைத்தார். 1400 வருடங்களுக்கு முன்பு, மது ஆறாக ஓடிய மெக்காவில் மதுவை விட்டு மீண்டவரை வைத்தே மதுபானக்கடைகளை அடித்து நொறுக்கினார்.
எங்கள் அண்ணல் நபி(ஸல்) செய்ததை இன்று தமிழகம் செய்கிறது. உண்மையிலியே தமிழனாக பிறக்க நான் கொடுத்து வைத்தவன் எனும் பெருமிதம் எனக்குள் முதல் முறையாக எழுகிறது.
அல்லாஹ் தமிழகம் மீது அருள் பொழிவானாக.
1400 வருடங்களுக்கு முன்பு, அரேபியாவில் வட்டிக்கொடுமை ருத்ரதாண்டவமாடியது. ஏழைகளை கசக்கி பிழிந்தது. கவலையை மறக்க ஏழை தண்ணி அடித்தான். தட்டிக்கேட்க ஆளில்லாத சமுதாயத்தில், பார்ப்பன ஆளும் வர்க்கம் சதிராட்டம் போட்டது. காபாவை சுற்றி தாழ்ந்த ஜாதி பெண்களை ஆடையில்லாமல் ஓடவைத்து கும்மாளமடித்தது. இந்த காலகட்டத்தை ஜாஹிலியா எனும் இருண்டகாலமென்று இஸ்லாமிய சரித்திரம் அறிவிக்கிறது.
இந்த ஜாஹிலியா காலக்கட்டத்தில்தான், அண்ணல் நபியை(ஸல்) அல்லாஹ் குரைஷி பார்ப்பனர் குலத்தில் படைத்து திருக்குரானை மக்களுக்கு எடுத்துச்சொல்ல கட்டளையிட்டான். தீமைகளின் தாய் மதுவும் வட்டியுமென பெருமானார்(ஸல்) போதித்தார். ஜக்காத் மற்றும் பைத்துல்மால் எனும் வட்டியில்லா வங்கி அமைப்பின் மூலம், வட்டியை ஒழித்தார். போதையின் பிடியிலிருந்து அரேபியாவை மீட்டார். வறுமை ஒழிந்தது. நல்வாழ்வும் அமைதியும் மலர்ந்தது.
வட்டி, மது. இவையிரண்டையும் ஒழித்தால் “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழலாம்” என அண்ணல் நபி(ஸல்) உரைத்தார். இன்று அண்ணல் நபி(ஸல்) காட்டிய சத்திய பாதையில் எனது தமிழ்மண் காலடி எடுத்து வைத்துவிட்டது. இனி தமிழகத்தில் அமைதி தவழும், வறுமை ஒழியும், நீதி நிலைக்கும், அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
Post a Comment