ஈழத் தமிழர்களிடத்தில் சாதிகள் இல்லை என்பது உண்மையா?
"ஈழத்தில் சாதி இல்லையென்று" Yogoo Arunagiri தனது முகநூலில் எழுதிய பதிவொன்று, பலரது விமர்சனத்திற்குள்ளானது. அவரது கூற்றில் இருந்து:
//இன்றுவரை ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லை, ஒரு சாதிக்கு என கட்சி இல்லை, ஒரு சாதிக்கு என கொடி இல்லை, ஒரு சாதி தலைவர் இல்லை, தனி சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லை...//
இதைச் சொன்னவர் ஒரு (புலம்பெயர்ந்த) ஈழத்தமிழர் தான். ஆனால், ஈழத்தின் சமூக அரசியல் அறியாதவர். தமிழ்நாட்டின் சாதி அமைப்பிற்கும், ஈழத்தின் சாதி அமைப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள சாதிய பாகுபாடுகள் குறித்து, அங்கிருந்து இயங்கும் சமூக ஆர்வலர் Hasee Aki என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
யாழ் குடாநாட்டில் இன்றைக்கும் தொடரும் சாதிப் பாகுபாடுகள் பற்றி அவர் வெளியிட்ட ஆதாரங்கள்:
//கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று கூறியவருக்கு, காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.
காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்.... இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை. மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள். ஈழத்து சிதம்பரம் கோவில், அன்று போராட்டம் நடை பெற்றதால் தான் எல்லோரும் நுழைய கூடியதாக இருந்தது. இன்று சாதி பிரச்சனை இல்லை என்று தம்மட்டம் அடித்துக் கொண்டிருந்தால் அக் கோவிலும் நல்ல ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கும்.
காரைநகரில் ஊரி என்னும் பிரதேசம் உள்ளது அங்கு இன்றும் பாடசாலைகளிலும் சாதிய ஒடுக்கு முறையுள்ளது. வெளிப்பார்வைக்கு அவ்வாறு தான் தெரியும் தம்பி. ஆனால் நிலமை அவ்வாறு இல்லை. அச்சுவேலியில் பத்தமேனியில் தம்மை வேளாளார் என்று கூறிக்கொள்பவர்கள் வசிக்கிறார்கள். ஒடுக்கப்படும் சாதியினர் ஒருவர் அப்பிரதேசத்தில் காணி ஒன்றினை வாங்கினார்.
அவ்விடத்தில் அவரை வாசிக்க விடாமல் பல பிரச்சனைகளை கொடுத்தார்கள். மின்சார சபையை அங்கு வந்து தூண் நிறுத்த விடாமல் பல பிரச்சனைகளை செய்தார்கள். சாதி பெயர் சொல்லி ஒவ்வொரு நாளும் சண்டைகள். தங்கள் பிரதேசத்தில் இருக்காமல் எழும்பி போக சொல்கிறார்கள்.
கல்வியங்காட்டில் செங்குந்தான் என்னும் சாதியில் உள்ளவர்கள் தமது ஊருக்குள் ஒடுக்கப்பட்ட சாதி வாகுப்பினத்தவர் அதிபராக வரவிடாமல் பல ஆர்பாட்டங்களை செய்து அவரை மாற்றம் செய்தார்கள், கிராம உத்தியோகத்தர்கள் சிலருக்கு இதே நிலையே. உயர்கல்வி மட்டங்களும் அவைக்கு துணை போகின்றன.
இப்படியே பல பிரச்சனைகளை கூறிக் கொண்டு போகலாம். எண்ணிக்கையில் அடங்காத பிரச்சனைகள் எமது ஆணாதிக்க சமூகத்தை பீடித்துள்ளது. இவ்வாறான பிரச்சனைகளை கூறினால் சாதிய கட்டமைப்பை ஆதரித்து பேணி காக்க விரும்புபவர்கள், இவை பொய்யான கதைகள், இல்லாத பிரச்சனைகளை நாம் கதைப்பதாக கூறுவார்கள். முடியுமானால் நான் கூறிம இடங்களை சென்று ஆழமாக பாருங்கள்.//
-----------------------------------------------------------
//என்ன பிறப்பு! எரியும் வீட்டில் பிடுங்கும் ஒரு கேவலமான மனிதர்கள். மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு! இறுதி யுத்தம்இடம்பெற்ற வேளை செல்வீச்சுக்களால் கொல்லப்படும் மக்களின் நகைகளை சிலர் களவாக கழற்றி எடுப்பார்கள். அனாதரவாக கிடக்கும் உடலங்களிலும் கழற்றி எடுப்பார்கள்....// (தகவலுக்கு நன்றி: Vaiththilingam Rajanikanthan)
இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, தம்மிடம் இருந்த உடைமைகளை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கியவர்கள் எத்தனை பேர்? ஒரு தேங்காய்க்காக வாகனத்தை பண்டமாற்று செய்தவர்கள் எத்தனை பேர்? நகைகளை கூட கொடுத்து சாப்பாடு வாங்கினார்கள்.
முள்ளிவாய்க்கால் வரையில், எந்தவொரு கடைக்காரரும் தன்னிடமிருந்த பொருட்களை மக்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, மனிதப் பேரவலத்திற்கு மத்தியிலும் காசுக்கு விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்! இலவசமாகக் கிடைத்த நிவாரணப் பொருட்களை, காசுக்கு விற்பனை செய்த கடைக்காரர்களும் உண்டு!
அப்படிப் பட்ட இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளை கண்ட மக்களின் மனம் எந்தளவு மரத்துப் போயிருக்கும்? கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட, இல்லாதவர்களுக்கு கொடுத்து சாப்பிட்ட மனமில்லாத ஈனப்பிறவிகளை தமிழர் என்று சொல்ல முடியுமா?
பேரவலத்தின் மத்தியிலும் தம்மிடம் இருந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத ஈனப்பிறவிகளிடம் திருடினால் அதில் என்ன தவறு? செத்த பிறகு இந்த சொத்துக்களால் என்ன பிரயோசனம்? நகைகளையும் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியுமா? அத்தகைய கேவலமான பிறவிகளை கண்டும் காணாமல் இருந்த ஈனப்பிறவிகள், இப்போது அறிவுரை கூறுகின்றன.
இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கேவலமான மனிதர்களும் மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு!
தகவல் உதவி
கலையரசன்
- http://kalaiy.blogspot.com/2016/09/blog-post.html