Followers

Sunday, August 14, 2016

திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!

திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!

1. கடவுள் வாழ்த்து. ( 1 - 50 )

0001: சிவன் ஒருவனே சத்தியோடு இரண்டாய், பிரம்ம, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாகி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களாகி உண்மை விளங்கச் செய்து, ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறு ஆதாரங்களிலும் விரிந்து, அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அட்டமூர்த்தமாய் விளங்குகின்றான்.

0002: இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூய்மையானவனும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனும், தெற்குத் திசைக்குரிய இயமனைஉதைத்தவனுமாகிய இறைவனைப் புகழ்ந்து பாடி நான் உரைக்கின்றேன்.

0003: உயிர்களோடு உடனாய் நின்றவனும், அழிவில்லாத தேவர்கள் “ஆடையில்லாதவன்" என்று பகரும் தலைவனும், பக்கத்திலுள்ள தேவர்களாலும் கூட அறியமுடியாத மேலோனும் ஆகிய இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.

0004: அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருளானவனும் ஆகாய மண்டலத்துக்கு வித்துப் போன்றவனும், அடைக்கலமான இடத்தில் என்னைச் செல்ல விட்டவனும் ஆகிய இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபாடுடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.

0005: சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்ற போது பொன் போன்று பிரகாசிப்பான். சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவனாவான்.

0006: சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

0007: பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனும், பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவருக்கும் பழமையானவனும், தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைமகனும் ஆகிய இறைவனை யாரேனும் "அப்பனே" என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான்.

0008: தாழ்ந்த சடையுடைய சிவன் தீயைக் காட்டிலும் வெம்மையானவன்; நீரைக் காட்டிலும் குளிர்ச்சியானவன்; குழந்தையினும் நல்லவன்; பக்கத்தில் இருப்பவன்; அவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.

0009: பொன்னால் செய்யப்பெற்ற அழகான சடை என்று கூறுமாறு அவன் பின்புறம் விளங்க இருப்பவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். உயிர்கட்கெல்லாம் தலைவனாகிய அந்த சிவன் என்னால் வணங்கத்தக்கவன். அப்பெருமானால் வணங்கத் தக்கவர் வேறு எவரும் இல்லை.

0010: சிவனாகிய தானே இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாகவும் உள்ளான். சிவனே சுடுகின்ற அக்கினியாகவும் உள்ளான். சிவனே அருள் பொழியும் சத்தியுமாய் இருக்கிறான். சிவனே விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் உள்ளான். சிவனே எல்லாப் பொருளிலும் வியாபகமாய் உள்ளான்.

0011: தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் "ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றில்லை." முயற்சியும் முயற்சியின் பயனும் மழையும் மழை பொழிகின்ற மேகமும் அந்த இறைவனே ஆகும். அவன் பெயர் நந்தி.

0012: ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய "சிவனே அழியாதிருக்கும் அருள் புரிபவன்" என்பதை விண்ணவரும் மண்ணவரும் அறியாதிருக்கின்றனரே! என்ன அறியாமை!.

0013: கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்ற சிவனை பிரமன், விஷ்ணு முதலான தேவர்களும் எண்ணத்தில் அகப்படுத்தி நினைப்பதில்லை. மண்ணுலகோரோ சிவனைக் கடந்து சென்று அறிய முடியவில்லை.

0014: சிவன் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமனையும், மணிப்பூரகத்திலுள்ள விஷ்ணுவையும், அநாகதச் சக்கரத்திலுள்ள ருத்திரனையும் கடந்து சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.

0015: சிவன் உலகினைப் படைப்பவனாயும், உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும் அழிப்பவனாயும், குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும், திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான்.

0016: அமரர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ளமையால் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனாகிய சிவனது குணத்தைப் பாராட்டி நாடமாட்டார்கள்.

0017: தூல உடம்பும் சூக்கும உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் அல்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை.

0025: பிறவாதவனும் அழிவில்லாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை நல்குபவனும் ஆகிய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு அடையலாம்.

0026: ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நிற்கும் சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் எங்கும் வியாபித்துள்ளவனும் விசாலமான உலகம் முழுவதும் கடந்து நின்றவனும் சகஸ்ரதள கமலத்தின் மேல் உடனாய் இருந்தவனும் ஆகிய சிவனது திருவடிப்பேறு கிட்டும்.


மேலே உள்ள திருமந்திர விளக்கத்தில் சிவபெருமானைத் ஒப்பாக உலகில் ஒருகடவுளும் இல்லை என்று திருமூலர் நெத்தியடி அடிக்கிறார். இந்துமத மற்ற கடவுள்களான பிரம்மன்,விஷ்ணு,உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை என்கிறார். இதுதான் திரு மூலர் காட்டும் ஓர் இறை சைவ சமயம்....

7 comments:

muthamil selvam said...

என் நண்பனிடம் பேயை பார்த்தேன் என்று கூறினேன் பயந்தான் நம்பினான். அவனிடம் நான் கடவுளை பார்த்தேன் என்று கோரினேன் அவன் நம்பவில்லை சிரித்தான். ஏனென்றால் நமக்கு கடவுள் மேல அவ்வளவு "நம்பிக்கை".

muthamil selvam said...

நன்றி இப்பதிவால் நான் சிவபக்தன் ஆனேன்.

Ashak S said...

கடவுளை இவ்வுலகத்தில் யாரும் பார்க்க முடியாது என்பது எல்லா புனித நூல்களிலும் உள்ளது, கிராம பழமொழி கூட உண்டு, கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர், சிவன் யார் என்றால் என்னை பொறுத்தவரை அதன் நபி யாக இருக்கலாம், ஆதம் (அலை) அவர்கள் தான் இந்தியாவுக்கு நபியாக அனுப்ப பட்டார்கள், இலங்கையில் ஆதம் மலை என்று கூட உண்டு,

Dr.Anburaj said...


ஒன்றது பேரூர் வழி அதற்குள் என்றது போல இருமுச்சமயமும்
நன்றீது தீதிது என்றுரையாா்கள்
குன்று குரைத் தெழுநாயை ஒத்தாா்களே

என்மதம் உயா்ந்தது என்று பேசுகின்றவன் குன்றைபாா்த்து குரைக்கும் நாய் என்று திருமூலா் உரைக்கின்றாாா்.
நபித்துவதம் என்பது முட்டாள்தனமான கொள்கை. அறிவுக்கு ஒப்பாதது. ஆன்மிக பாிச்சையில் சதம் அடிப்பவா்கள் அனைவரும் இந்துமதத்தால் ஜீவன் முக்தா்கள் என்று அழைக்கப்படுகின்றாா்கள். இந்துமதம் நபி என்று யாரையும் கருதவில்லை. முஹம்மது ஒரு அரேபிய தாதா. ஆன்மீக தலைவா் என்ற தகுதி அவருக்கு கிடையாது. கௌதமனின் அன்புள்ளம் எங்கே! முஹம்மது நடத்திய பகல் கொள்ளை எங்கே! பாலைவனத்தில்வியாபாாிகளைக் கொள்ளையிட்ட முஹம்மதுவை எப்படி நபி என்பது? விளங்கவில்லை ஆசிக்கு.

Ashak S said...

டேய் லூசு நான் எங்கடா மதம் இருக்குன்னு சொன்னேன் பன்றி ராஜ், இறைத்தூதர்களை கடவுளாக மாற்றிய மூடர்களே, புத்த மதத்தை அழித்த, புத்த கோவில்களை தரைமட்டமாக்க ஆக்கிய, புத்த மக்களை கொத்து கொத்தாக கொன்ற ஈன பிறவிகள் ஏண்டா புத்தரை தூக்கி பிடிக்கிறீங்க

Dr.Anburaj said...முஹம்மது ஒரு அரேபிய தாதா. ஆன்மீக தலைவா் என்ற தகுதி அவருக்கு கிடையாது.

கௌதமனின் அன்புள்ளம் எங்கே! முஹம்மது நடத்திய பகல் கொள்ளை எங்கே!

பாலைவனத்தில்வியாபாாிகளைக் கொள்ளையிட்ட முஹம்மதுவை எப்படி நபி என்பது?இதற்கு பதில் அளிக்க மறந்து விட்டாய் சின்னப்பயலே?

Ashak S said...

1. இரவுகளில் தன கால் கடுக்க நின்று வணங்குவார்கள் நபி (ஸல்)
2. காற்றைவிட வேகமாக தருமம் செய்வார்கள்
3. நண்பர்களுடன் சேர்ந்து எல்லா வேலைகளையும் செய்வார்கள்
4. தன்னை வெறுத்தது ஒதுக்கிய, வஞ்சித்த கூட்டத்தை பழி வாங்குவது தவறு என்றால் சீட்டு ஆட்டத்தில் தோற்று போனதுக்கு 30 லட்சம் உயிர்களை கொன்றது என்ன?
5. ஒவ்வொருநாளும் 100 தடவை பாவமன்னிப்பு கேட்பாயாக இருந்தார்கள்
6. இன்னும் நிறைய இருக்கு

ஆனால் கவுதமனின் அன்புள்ளத்தையையே கொன்று புத்த கோவில்களை கொன்று, இன்று புத்த மதம் இந்து மதத்தின் ஒரு பகுதி என்று வெக்கம் இல்லாமல் பொய் சொல்லும் கேவலமான ஹிந்து மதம் எவ்வளவு கொடூரமானது என்று வரலாறை படி தெரியும் பன்றி ராஜ்