Followers

Wednesday, July 18, 2018

இப்பலாம் யார்ங்க சாதி பாக்குறா


7 comments:

Dr.Anburaj said...

எந்த ஊரில் என்பது தெரிவிக்கப்படவில்லை.சாதி பிரச்சனையை நமது அரசியல்வாதிகள் முறையாக கையாளவில்லை என்று நான் பலமுறை பதிவு செய்துள்ளேன்.
நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் சாதி ஆதிக்கம் செய்பவர்கள் வேறு வேறு.இதற்கு பஞசாத்து அளவில் தீா்வு காண வேண்டும். ஆனால் இன்றளவும் யாரும் இதை செய்ய முன்வரவில்லை.ஆா்எஸ்எஸ் இயக்கம் மட்டுமே இதற்கு நிரந்தர தீா்வு காண முடியும்.அவர்களிடம் ஆள்பலம் பணபலம் கிடையாது.எ னவே சுயமாக யாரும் தொண்டு செய்ய முன் வந்தால் அதற்கு பயிற்சி அளித்து உதவுவார்கள்.

இந்துக்களுக்கு முறையான சமய கல்வி அளிக்காமல் மக்களை மாக்கள் ஆக்கினால் விளைவுகள் இப்படித்தான் இருக்கம். அனைவருக்கும் ஸ்ரீநாராயணகுரு மற்றும்சுவாமி விவேகானந்தரது புத்தகங்களை படிக்க ஆவன செய்ய வேண்டும்.

இந்துக்களை மலினப்படுத்த ஒரு சந்தா்ப்பம் கிடைத்து விட்டது.

அன்பு சகோராிக்கு தங்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனையை நானும் பகிா்ந்து கொள்கின்றேன்.வருத்தப்படுகின்றேன்.

வாருங்கள் திருநெல்வேலி மாவட்டம் உவரி என்ற ஊரில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டுச் செல்லுங்கள்.நல்ல மாற்றம் கிடைக்கும்.

Dr.Anburaj said...

எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்
(புத்தரின் காலம் முகம்மது பிறப்பதற்கு 900 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவா்)
அற்புதமான புத்த சரித்திரம் அவரது எல்லையற்ற கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் காண்பிக்கிறது. புத்த ஜோதியைத் தரிசித்த யாவரும் பரிசுத்தமாயினர்;ஜோதிக்குள் ஐக்கியமாயினர்.

இங்கு சில நிகழ்வுகளை புத்த சரித்திரத்திலிருந்து பார்க்கலாம்.

அங்குலிமாலா என்ற கொள்ளைக்காரன் அந்த நாளில் வாழ்ந்து வந்தான். அவனை நினைத்தாலே அனைவரும் பயப்படுவர். 999 பேரைக் கொன்று அவர்களின் விரல்களை அறுத்து அதை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டவன் அவன். இரக்கமின்றி எதிரில் வருபவரைக் கொன்று குவித்த கொலைகாரன். ஆகவே அவன் பெயரைச் சொன்னாலே அனைவரும் நடுங்குவர்.

ஒருநாள் புத்தர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியைப் பார்த்த மக்கள் அவர் அருகில் சென்று அந்த வழியில் போகவேண்டாம் என்றும் அது நேரடியாக அங்குலிமாலாவின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்த்து விடும் என்றும் எச்சரித்தனர்.

அமைதியாக அதைக் கேட்டுக் கொண்ட புத்தர் தன் வழியிலே செல்லலானார்.

அங்குலிமாலா ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தான். எதிரிலே புத்தர் வருவதைக் கண்ட அவன், “என்ன, என்னைக் கண்டு பயமில்லையா! ஆயிரமாவது ஆளான உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று கர்ஜித்தான்.

அமைதியாக புத்தர் அவனை நோக்கிப் புன்முறுவலுடன் முன்னேறினார்.

அச்சமின்றி தன் எதிரில் வரும் ஜோதி வெள்ளத்தைக் கண்டு அவன் பிரமித்தான். அவர் விரலை அறுக்க முயன்றாலும் அவனால் முடியவில்லை. அவர் பாதத்தில் வீழ்ந்தான்.

அந்தக் கணமே கொள்ளைக்காரன் அங்குலிமாலா மறைய, புதிய புத்த சீடனான அங்குலிமாலா உருவானானான். அவன் புதிய பெயரையும் பெற்றான்.

பத்து வருடங்கள் கழிந்தன. புத்தர் ஒருநாள் அவனை அழைத்து, “ நீ தகுதி பெற்றவனாகி விட்டாய்! சென்று தர்ம பிரச்சாரம் செய்” என்று கட்டளையிட்டார்.ஆனால் மக்கள் அங்குலிமாலாவைக் கற்களைக் கொண்டு அடித்தனர். ஆனால் அங்குலிமாலா புன்சிரிப்புடன் அவர்களை எதிர்கொண்டான். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எதனால் இந்த மாற்றம்?

அங்குலிமாலா கூறினான்: “ நான் முன்பு செய்த கொடுமைகள் அவர்களுக்குக் கோபத்தை உருவாக்கியது உண்மை தான். ஆனால் அதை விட அதிக கோபம் இப்போது அவர்கள் என்னைக் கல்லைக் கொண்டு எறியும் போதும் நான் பேசாமல் இருப்பதால் அதிகம் ஏற்படும். என் உள்ளார்ந்த அமைதியை அவர்கள் உணர்வர். அந்த அற்புதமான தெய்வீக ஞானத்தைப் பெற அவர்கள் தாமாகவே முன் வருவர்.”

உண்மை! அதிசயிக்கத் தக்க மாற்றத்தைக் காண்பித்த கொள்ளைக்காரன் இப்போது புத்த பிக்ஷுவாக மாறியதைக் கண்டு வியந்த மக்கள் இப்போது அவன் கூறும் தர்மோபதேசத்தைக் கேட்கத் தயாராயினர்.
...2

Dr.Anburaj said...

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

Dr.Anburaj said...

திருப்புா் திருமலைகவுண்டம்பட்டியில் பாப்பம்மாள் என்ற சமையலாளரை பணி செய்ய விடாமல் தடுத்த 75 பேர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறுதலான தகவல். சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
01. இந்து சமயம் -நாராயணகுரு சுவாமி விவேகானந்தா் மகாத்மா காந்தி பாரதியாா் போன்றவர்கள் போதித்த வண்ணம் அனைத்து மக்களுக்கும் போதிக்கப்படவேண்டும்.
02.முன்னேற்றம் என்ற ஒளி படாமல் இன்னும் சாதி அடிப்படையில் மக்களை இழிவுபடுத்தும் மடமையை மக்களில் சில பேர்கள் பிடித்துகொண்டு அல்லல்படுவது பரிதாபம்.
03.ஆா்எஸ்எஸ் போன்ற இந்து இயக்கங்கள் தங்களின் பணியை விரிவு படுத்த வேண்டும்.

Dr.Anburaj said...

தேச பக்தி
திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி.

“….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை.

நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேசபக்தி.

பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்க சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன்.

“அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டபடுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டபடுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம்.

கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி.

Dr.Anburaj said...

அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்

அமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில்

ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள்0 அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு
காண்க:-
http://kanichaaru.blogspot.in/2014/10/blog-post_17.html

திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில், பாயிரம் துவங்கி ஒன்பதாந் தந்திரம் வரை 30047 பாடல்கள் உள்ளன. நோயற்ற வாழ்விற்கு வழி சொல்லும் நூல். ஆணும் பெண்ணும் எப்படியெப்படிச் சேரும்போது என்ன குழந்தை பிறக்கும் என்று ர்டுத்துரைத்து அறிவியல் உலகிற்குச் சவால் விடும் அற்புதத் தமிழ்நூல். பூலோக கைலாசமாம் திருவாடுதுறையில் ஜீவசமாதி அடந்தவர் திருமூலர்..

மூன்றாம் தந்திரமானது, அட்டாங்க யோகம், இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி,
இயமம் ( தீது அகற்றல் ), நியமம் ( நன்றாற்றல் ) ஆதனம் ( இருக்கை ) பிராணயாமம் ( வளிநிலை ) பிரத்தியாகரம் ( தொகைநிலை )
தாரணை ( பொறைநிலை ) தியானம் ( நினதல் ) சமாதி ( நொசிப்பு ), அட்டமா சித்தி, அணிமா ( நுண்மை ) இலகிமா ( மென்மை ) மகிமா ( பருமை )
பிராத்தி ( விரும்பியது எய்தல் ) கரிமா ( விண் தன்மை )
பிராகாமியம் ( நிறைவுண்மை ), ஈசத்துவம் ( ஆட்சியன் ஆதல் )
வசித்துவம் ( கவர்ச்சி ) கலை நிலை, சரீர சித்தி உபாயம், காலச் சக்கரம், ஆயுள் பரீட்சை, வார சரம் வார சூலம், கேசரி யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை, சந்திர யோகம், என்ற பகுதிகளைக் கொண்டு திகழ்கின்றது.

இவ்வாறாக மூன்றாம் தந்திரத்தில் பாடல் எண் 549-ல் துவங்கி 883 வரை 234 பாடல்கள் உள்ளன.

அவற்றுள், 5.பிராணயாமம் பகுதியில், வருகின்ற பாடல்களில், வரிசை எண் 568 முதல் 573 வரை உள்ள பாடல்களே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்குக்க்காணம் ஓர் பழந்தமிழ்ப்பாடல் என்றும் ஆய்வர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அந்தப்பாடல் எது என்பதை வெளிப்படுத்தவில்லை.

568. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்

ஊறுதல் முப்பத்து இரண்டது ரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.- 3-ஆம் தந்திரத்தில் 5-ஆம் பாடல்


569. வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பஞ்சாம்

தெளியக் குருவின் திருவருள் பெற்றால்

வளியினும் வேட்டு அளியனும் ஆமே. - 6- ஆம் பாடல்


570. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே

அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை

அங்கே பிடித்துஅது விட்டள வும்செல்லச்

சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே. - 7-ஆம் பாடல்


571. ஏற்றி இறக்கி இருக்காலும் பூரிக்கும்

காற்றைப் பிடிக்கும் கணகறி வாரில்லை

காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்

கூற்ற்றை உதைக்கும் குறியது வாமே. - 8-ஆம் பாடல்


572. மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்

பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து

மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கலே

ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே. --- 9-ஆம் பாடல்


573. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே

ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்

காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு

ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே. -- 10-ஆம் பாடல்


அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 6 பாடல்களை
,மேலே பார்த்தோம்.

Dr.Anburaj said...

பொருள் விளக்கம் :-

568. பதினாறு மாத்திரை காலாளவு இடப்பக்கமுள்ள நாசித் துவாரத்தில் காற்றை உள்ளுக்கு இழுத்தால் பூரகமாம் அறுபத்துநான்கு மாத்திரை அளவு இழுத்த காற்றை உள்ளே நிறுத்தல் கும்பகமாம். முப்பத்திரண்டு மாத்திரை காலஅளவு வலப்பக்கம் நாசித்துவாரத்தில் காற்றை மெல்ல விடுதல் ரேசகமாம். முன்னே சொல்லிய முறைக்கு மாறாக வலப்பக்கம் நாசித் துவாரத்தில் காற்றை இழுத்து நிறுத்தி இடப்பக்கம் நாசித் துவாரத்தில் விடுதல் வஞ்சனையாம்.

569. சாதகர் காற்றை இழுத்துத் தன் வயப்படுத்தி அடக்கியிருந்தால், உடம்பு பளிங்குபோன்று மாசின்றித் தூயதாய் அது முதுமை எய்தினும் இளமைத் தன்மை உண்டாகும். இதனைத் தெளிய குருவின் அருளையும் பெற்ருவிட்டால் அவர் உடம்பானது காற்றைவிட மென்மை உடையதாகி , எங்கும் செல்லும் ஆற்றல் பெற்று மேன்மையடைவர்.

570. நீ எங்கே இருந்தாலும் இடப்பாக நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் செய்வாயாக. அங்கே அவ்வாறு பூரிக்க உடம்புக்கு அழிவில்லை. அங்கே கும்பகம் செய்து அப்பிராணன் செல்லும் அளவு மேற்செல்ல சங்கநாதம் உண்டாகி மேன்மை அடையலாம்.

571. இடைகலை பிங்கலை வழியாக இழுத்துப் பூரித்து, காற்றை உள்லே கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் இல்லை. அவ்வாறு காற்றைக் கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் காலனைக் கடக்கும் இலட்சியத்தை உடையவராவர்.

572. முறையான காற்று தொண்டை மூலாதாரம், விலா ஆகியவற்றில் நிரம்பும்படி செய்து, மறுபகுதியான இரேசகத்தால் ( விடுதலால் ) அவயவயங்களை ஒன்றோடு பதியும்படி செய்து, விருப்பத்தோடு வ்பயிற்றில் கும்பகம் செய்து இருக்கவே திருநீலகண்டப் பெருமான் அருளைப் பெறலாகும்.

573. இடைகலை வழியாகப் பதினாறு மாத்திரை பூரகம் செய்து, விரும்பத்தக்க பிங்கலையின்கண் பாதுகாப்புற்ற முப்பத்து இரண்டு மாத்திரை இரேசகம் செய்து, ஒஊரித்தகும் இரேசித்தலுமாகிய வேள்வியால் அறுபத்துநான்கு மாத்திரை கும்பகம் செய்ய உண்மை விளையும்.