படிக்கும் காலங்களில் 'எம்ஜிஆர் ரசிகன்: கலைஞரின் தொண்டன்' என்று நோட் புக்கில் கிருக்கி வைத்திருந்தேன். இதைப் பார்த்த ஆசிரியர் 'மீசையே முளைக்கல்ல உனக்குல்லாம் எதுக்குடா அரசியல் சினிமால்லாம்' என்று அன்பாக கடிந்து கொண்டார்.
இன்று வரை அரசியலாகட்டும்: சினிமாவாகட்டும் தாமரை இலையில் பட்ட தண்ணீரைப் போலத்தான் நான்.
கலைஞரின் உடல் நிலை வயது மூப்பால் மோசமாகியுள்ளது. இது எல்லோருக்கு இயற்கை. ஆனால் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக குடும்பத்தை விட்டு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்து கிடப்பதை பார்க்கிறேன். இங்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? வெளியூர் பயணங்களையும் தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தலைவர்கள் இறந்தால் அரசு பேரூந்துகளை ஏன் உடைக்கிறார்கள்? இவர்களது வரிப் பணத்தில் அல்லவா அந்த பஸ்கள் ஓடுகின்றன.
செல்வம் கொழிக்கும் சவுதி அரேபியாவை எடுத்துக் கொள்ளுங்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மன்னர் ஃபஹதின் கல்லரையை பாருங்கள். வெறும் களி மண்ணாலும், கூழாங் கற்கலாலும் உள்ளது. அவர் இறந்த போது இங்கு பணி புரியும் எவருக்கும் விபரம் தெரியாது. தொலைக்காட்சிகளை பார்த்துதான் தெரிந்து கொண்டோம். உலக கோடீஸ்வரனாகவும், எவ்வளவு பெரிய மன்னனாகவும் இருந்தாலும் மனிதனின் வாழ்க்கை அவ்வளவுதான்.
இதை உணர்ந்து திமுக உடன்பிறப்புகள் எந்த செய்தி வந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு பொது மக்களுக்கு இடையூறு தராமல் தங்கள் வருத்தத்தை தெரிவிப்பார்களாக! தலைவர்களும் அதனைத்தான் விரும்புவார்கள்.
கலைஞர் பூரண நலம் பெற்று மீண்டு வர நாமும் வாழ்த்துவோம்.
6 comments:
Suvanapriyan,Why Taj Mahal was built? What will happen to kaffir kalaingar after death.
ஆன்மீகமான அடக்கம். எளிமையான நடவடிக்கை.அர்த்தமானது.அறிவுபுர்வமானது.
இதைவிட ”பிணங்களை எரிப்பது” எளிமையானது.சிக்கனமானது.நமது நாடு போன்று 125 கோடி மக்கள் கொண்ட நாட்டிற்கு இறக்கும் அனைவருக்கும் கல்லறை கட்ட வேண்டும் என்றால் ...ஏகப்பட்ட ஏக்கா் நிலங்கள் வீணாகிவிடும்.அனைவரும் பிணங்களை எரிக்க வேண்டும் என்று ஆக்கிவிட்டால் ஒரு ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு எரிதகன மேடை போதுமானது. 30 சென்ட இடம் ஒதுக்கினால் மயானத்தின் தேவை நிரந்தரமான நிறைவேறிவிடும். இந்துக்கள் மத்தியில் பிரச்சாரம் அடக்கம் செய்வதை கைவிட்டு எரிக்க சம்மதிக்க வைத்து விடலாம்.
இசுலாமியா்கள் கிறஸ்தவா்களும் சம்மதிக்க வைக்கும் திராணி நமது அரசியல் வாதிகளுக்கு கிடையாது. திரு.மோடி அவர்கள் எரிக்க வேண்டும் என்றால் அனைத்து கட்சியினரும் கூட்டு சோ்ந்து கொண்டு மதவெறி பிடித்தவா் என்று பிரச்சாரம் செய்வார்கள்.
கலைஞரின் உடல் வாழும் தகுதியை இழந்து விட்டது.உயா்தர மருத்துவ வசதி அவரின் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் தடுத்துககொண்டிருக்கின்றது.பணக்காரா்கள் கடைசிவரை முயன்றே ஆக வேண்டும்.
கலைஞா் அவர்களை முற்றிலும் வெறுத்து வந்தேன்.பாரதிய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி வைத்த போதுதான்நான் கலைஞருக்கு ஆதரவான நிலையை எடுத்தேன்.ஒட்டு போட்டேன்.
குறைகள், நிறைகள் உள்ள பேராண்மை கொண்ட இந்த வீரரின் ஒரு சாதனையை என்னால் மறக்க முடியாது.பாராட்டாமல் இருக்க முடியாது.
அனைவருக்கும் சைக்கிள் ரிக்ஷா அளித்து
கை ரிக்ஷா வை தமிழ்நாட்டை விட்டு விரட்டினாா்.
இன்றும் கை ரிக்ஷா கல்கத்தாவில் பயன்படுத்தப்படுகின்றது.
இந்தியா முழுவதும் கை ரி க் ஷா வை ஒழிக்க வேண்டும். ஒரு இயக்கம் நடத்த வேண்டும்.
கலைஞரின் உடல் வாழும் தகுதியை இழந்து விட்டது.உயா்தர மருத்துவ வசதி அவரின் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் தடுத்துககொண்டிருக்கின்றது.பணக்காரா்கள் கடைசிவரை முயன்றே ஆக வேண்டும்.
கலைஞா் அவர்களை முற்றிலும் வெறுத்து வந்தேன்.பாரதிய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி வைத்த போதுதான்நான் கலைஞருக்கு ஆதரவான நிலையை எடுத்தேன்.ஒட்டு போட்டேன்.
குறைகள், நிறைகள் உள்ள பேராண்மை கொண்ட இந்த வீரரின் ஒரு சாதனையை என்னால் மறக்க முடியாது.பாராட்டாமல் இருக்க முடியாது.
அனைவருக்கும் சைக்கிள் ரிக்ஷா அளித்து
கை ரிக்ஷா வை தமிழ்நாட்டை விட்டு விரட்டினாா்.
இன்றும் கை ரிக்ஷா கல்கத்தாவில் பயன்படுத்தப்படுகின்றது.
இந்தியா முழுவதும் கை ரி க் ஷா வை ஒழிக்க வேண்டும். ஒரு இயக்கம் நடத்த வேண்டும்.
காமராஜரைப் பற்றி மிகவும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வந்து மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த முயன்றாா் கருணாநிதி.
காமராசா் இறக்கும்போது அவரின் ஆஸ்தி 156 ரூபாய் மற்றும் சில கதா்வேட்டி சட்டை துண்டுகள் .சில புத்தகங்கள்.
கருணாநிதி இறக்கும் தருவாயில் இருக்கின்றாா். சாதனைகள் நிறைந்த வாழ்க்கைதான்.
பத்துகாசு யின்றி சென்னைக்கு வந்தகருணாநிதி யின் குடும்பம் பல ஆயிரம்...... கோடிக்கு அதிபதிகளாக உள்ளாா்கள்.தமிழ் வாழ்க என்று கோஷம்போட்ட கருணாநிதி மற்றும் திமுக தலைவா்கள் பலரும் பெரும் பணக்காரா்களாக வாழ்ந்து வருகின்றாா்கள்.
மிகவும் ஏழையான குடும்பத்தில் பிறந்த தட்சணாமூா்த்தி என்ற கருணாநிதி இன்று மரணம்அடைந்தாலும் சில ஆயிரம்கோடிக்கு அதிபதியாக மரணிக்கப்போகின்றாா்.
அரசியல்மற்றும் அரசு நிதி நிா்வாகம் சீரழிக்கப்பட்டதற்கு கருணாநிதி பெரிதும் காரணம்.
கலைஞா் கருணாநிதி செய்ய பெரும் பாவங்களையும் நாம் நினைக்கத்தான் வேண்டும்.
எளிமையான காமராசரை உயிரோடு எரிக்க முற்பட்டது ஆர் எஸ் எஸ்
Post a Comment