பசுவின் பெயரால் மற்றுமொரு மனித உயிர் பலி!
ஹரியானா மாநிலத்தில் உள்ளது அல்வார் நகரம். அங்குள்ள கிராமம் ஒன்று லாலாவண்டி. இக்கிராமத்தை ஒட்டி ரக்பர் கான், அஸ்லம் என்ற இரு இஸ்லாமியர் பசுக்களை ஓட்டிச் சென்றுள்ளனர். குடி போதையில் இருந்த தர்மேந்தர் யாதவ் மற்றும் இவனது இரு நண்பர்கள் இந்த பசுக்கள் தங்கள் கொட்டகையிலிருந்து திருடி வரப்படுவதாக நினைத்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ரக்பர் கான் மருத்துவ மனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். தர்மேந்தர் யாதவ் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இறந்த ரக்பர் கானின் தந்தை சுலைமான் கூறுகிறார்: 'எனது குடும்பம் மிகவும் வறிய குடும்பம். எனது மகன் பசு கடத்தல் காரன் அல்ல. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்' என்கிறார்.
தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
22-07-2018
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
22-07-2018
------------------------------------------------
இன்று காலை அலுவலகம் வந்தவுடன் என்னோடு ஒன்றாக பணிபுரியும் எகிப்து நாட்டை சேர்ந்த முஹம்மது (வயது 30) 'நஜீர்.... செய்தி தெரியுமா? அல் ஜஜீராவில் பார்த்தேன். உனது நாட்டில் பசு கடத்தினார் என்று கூறி ஒரு முஸ்லிமை அடித்தே கொன்றுள்ளார்கள். பார்த்தாயா?'
'ஆம் நானும் பார்த்தேன்'
'ச்சே என்ன மனிதர்கள் இலர்கள்? மிருகத்துக்காக மனிதர்களை கொல்வதா? எங்குமே கேள்விபடவில்லை'
'இந்த கொள்கையை கொண்டு வந்ததே உனது நாடுதான்'
'என்ன சொல்றே'
'ஆம்... 4000 வருடங்களுக்கு முன்பு மூஸா நபி, ஹாரூன் நபி வரலாற்றை குர்ஆனில் படித்திருக்கலாமே'
'ஆம்... படித்துள்ளேன்.'
'மாட்டை கடவுளாக வணங்கி அதனால் இறைவனின் கோபத்தை சுமந்தவர்கள் உனது நாட்டுக்காரர்கள்தானே...'
'ஆம்... அவர்கள் யஹூதிகள்(யூதர்கள்)'
'அவர்களின் ஒரு பிரிவினர்தான் ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக எனது நாட்டுக்குள் புகுந்தனர். வந்தவர்கள் தங்களின் நம்பிக்கையையும் எனது நாட்டு மக்களுக்கு புகுத்தி விட்டனர். 'வெள்ளையாக இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்' என்று நம்பியதால் அவர்கள் சொன்ன அனைத்தையும் நம்பினர். சந்தேகம் இருந்தால் "Aryans migrat to india" என்று கூகுளில் தேடிப் பார்' என்றேன்.
எகிப்தியன் கூகுளில் அரபு மொழியில் தேடிப் பார்த்து விட்டு நான் சொன்னதில் உள்ள உண்மையை புரிந்து கொண்டான். என்னதான் நம் நாட்டுக்குள் குறைகள் இருந்தாலும் மாற்றானிடம் நம் நாட்டை விட்டுக் கொடுக்கக் கூடாது அல்லவா?
எல்லா புகழும் இறைவனுக்கே!
3 comments:
எகிப்தியன் ஆரியனா ?
உலகம் முழுவதும் ஒரே கலாச்சாரம் இருந்திருக்கலாம்.ஆரியன் என்பது பொய்யான கட்டுக்கதை என்பதை பலமுறை பதிவு செய்துள்ளேன்.
இசுலாமிய காபீா் தத்துவம் குறைந்தது 4கோடி இந்துக்களை அநியாயமாக கொன்று குவித்துள்ளது என்ற கதையையும் மேற்படி நண்பருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
ஹிந்து மத வேதங்களிலும் காபிர் தத்துவம் உண்டு, மக்கள் கொல்லப்பட்டும் உள்ளனர் , உனக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறேன்
Post a Comment