அழிவை நோக்கி செல்கிறார் அல்தாஃபி!
முன்பு தலைமையால் ஓரங்கட்டப்பட்டு தாய்லாந்தில் ஒரு கடையில் சேல்ஸ் மேனாக நின்ற பொட்டோவை பார்த்த போது மனது அனுதாபத்தால் "வலிக்கிறது" என்று பதிவு போட்டவன் நான். ஆனால் இன்று ஏகத்துவ எதிரிகளை விட மோசமாக கிளைகளை உடைத்தால் தான் தலைமை ஆட்டம் காணும் என்றும், ஆர்எஸ்எஸூம் தவ்ஹீத் ஜமாத்தும் ஒன்று என்ற பொருள்படியும் பேசி வருகிறார். இந்த ஆட்டங்கள் எல்லாம் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களை மேலும் ஒற்றுமையாக்கும்.
ஏகத்துவத்தை இவரும் சொல்லட்டும். இவர் பக்கம் உண்மை இருந்தால் தவ்ஹீத் ஜமாத் என்ன? ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் இவர் பக்கம் வரலாம். எனவே ஆக்கபூர்வமாகவும், பொறுமையாகவும் தனது அடிகளை எடுத்து வைப்பதை விட்டு விட்டு 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பது போல் உளறிக் கொட்டுகிறார். இனியும் காலம் கடந்து விடவில்லை. தவ்ஹீத் ஜமாத்தின் எதிர்ப்பை கை விட்டு அவர் ஒரு தனி அமைப்பு கண்டு அங்கு மக்களை அழைக்கட்டும். அதை விடுத்து தவ்ஹீத் ஜமாத்தை உடைக்க காய் நகர்த்தினால் இவரே உடை பட்டு போவார்.
இதற்கு முன்னால் முயற்சித்தவர்களுக்கும் அது தான் முடிவாக இருந்தது. அல்தாஃபியை பலமுறை சந்தித்து உரையாடியவன் என்ற உரிமையில் கேட்டுக் கொள்கிறேன். அழிவை உங்கள் கைகளாலேயே தேடிக் கொள்ளாதீர்கள்.
2 comments:
சமய வெறியன்.பொது நிகழ்ச்சிகளில் கூட நீசத்தனமாக பேசுவாா்.
அன்று ரசித்தவா்கள்.
இன்று குறைகாண்பது வேடிக்கை.
அல்லாவின் தண்டனை.
செய்யாத தவறை ஒத்துகொள்ளவைத்தபோது அனுதாபம் வரவில்லையா? முபாஹலாவுக்கு தைரியமாக வந்தார் தைரியமாக சாபம் என் மீது விழட்டும் என்றார், ஆனால் தவ்ஹீத் சமாதி நிர்வாகிகளுக்கு அந்த தைரியம் வரவில்லை, காரணம் பொய்யின் பக்கம் இருந்ததால், ஆக அல்தாபி செய்வது எல்லாவகையிலும் சரியானது, உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் சத்தியத்தின் பக்கம் இருப்பின் எதற்கு பயப்படுகிறீர்?
உங்களை எதிர்த்தால் அழிவின் பக்கம் செல்கிறார் என்று பிதற்றவேண்டியதா?
Post a Comment