பதிவர் திரு நம்பள்கி அவர்கள் போன பதிவில்
//எதை சொன்னாலும், மதத்துடன் சம்பந்தப் படுத்துகிறீர்கள்; சரி! கொசுவைப பற்றி எழுதி மதத்துடன் சமபந்தப் படுத்தி எழுதுங்கள் பார்க்கலாம் ...!//
என்று சலிப்போடு கேட்டிருந்தார். அவருக்காகவே இந்த பதிவை தருகிறேன்.
அன்றைய சிலையை வணங்கிக் கொண்டிருந்த அரபுகளை நோக்கி இறைவன் கூறுகிறான்
'மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவி தாழ்த்தி கேளுங்கள். ஏக இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.'
-குர்ஆன் 22:73
-குர்ஆன் 22:73
மற்றோர் இடத்தில்....
'ஏக இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலஹீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?'
-குர்ஆன் 29:41
-குர்ஆன் 29:41
இவ்வாறு இரண்டு இடங்களில் பல தெய்வ வணக்கம் புரிவோரைப் பார்த்து இறைவன் கேட்கிறான். இதனால் கோபமடைந்த அரபிகள் முகமது நபியிடம் கிண்டலாக 'உதாரணத்துக்கு உங்கள் இறைவனுக்கு வேறு உயிரினங்கள் கிடைக்கவில்லையா? அற்பமான ஈயையும் சிலந்திப் பூச்சியையும் உதாரணமாகக் காட்டுகிறானே?' என்றனர்.
இவர்களின் கிண்டலுக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக இறைவன் கீழ் கண்ட வசனத்தை இறக்குகிறான்.
'கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற இறைவன் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் 'இது தமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர்.'
-குர்ஆன் 2:26
அதாவது மனிதர்கள் நேர் வழி பெறுவதற்காக எந்த அற்ப உயிரினங்களையும் உதாரணமாகக் கூற இறைவன் தயங்க மாட்டான் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. மனிதர்கள் அற்பமாக நினைக்கும் இந்த கொசுவை இறைவன் எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் என்பதை இனி பார்ப்போம்.
1. அது பெண்கொசு. 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படி பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு உயிரினத்தையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை இறைவனே நன்கறிந்தவன்.
இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம். இறைவனே யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
---------------------------------------------------------
கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு, நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை, அப்போது பிறந்த, அல்லது பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொசு விரட்டிகளில் உள்ள `டையாக்சின்', புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது, `அலெத்ரின்', மனிதர் களின் எடையை குறையைச் செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா? சுற்றுப்புறத்தைத் தூய்மையாக, தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசு வலையையும் பயன்படுத்தலாம்.
6 comments:
Why Islamic calender is not 365 days.
குளோனிங் முறையில் நிறைய சாத்தியமாகி உள்ளது. கொசு வின் இருப்பிற்கும் இறைவனுக்கும் சம்பதப்படுத்தி வாதம் செய்வது சிறுபிள்ளைகளுக்க ரசிக்கலாம்.முறையாக கல்விபயின்றவா்களுக்கு ரசிக்காது.
அன்றைய சிலையை வணங்கிக் கொண்டிருந்த அரபுகளை நோக்கி இறைவன் கூறுகிறான்
'மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவி தாழ்த்தி கேளுங்கள். ஏக இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.'
-குர்ஆன் 22:73
---------------------------
குரான் என்பது 1500 முன் வாழந்த காட்டரபிகளின் கைசரக்குதான் என்பதற்கு இதுவே நிரூபணம். முஸ்லீம்கள் அனைவரும் திரண்டு ஈயை உருவாக்கிக்கொண்டாயிருக்கின்றாா்கள்.
இதுசரியான உளறல்.அசட்டுத்தனமாக கூற்று.இதில் உண்மை பகுத்தறிவு அறிவியல் ஏதும் இல்லை.
----------------
ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.'
ஈ ” அப்படி என்னத்தை பறித்துக் கொள்ளும் ? ஈயிடமிருந்து மீட்க முடியாது.
ஈ மலத்தில் மீது அமரும்போது மலத்திலிருந்த சிறு பகுதியை காலில் -எடுத்துக்கொள்ளும்தான்.
அதை அந்த மலத்தை மீட்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.அல்லாவுக்கோ அவரது தூதருக்கோ முஸ்லீம்களுக்கோ அவசியமா ? என்று எனக்கு தெரியாது.
----------------
குரான் வசனம் முட்டாளதனத்தின் சிகரம்.
குரான் வசனம் படி ” ஈக்களை உருவாக்க முஸ்லீம்களால் முடியும்” -சரிதானே.
இன்று உலகில் காணப்படும் ஈக்களை உருவாக்கிக்கொண்டிருப்பது முஸ்லீம்கள்தான்.
முஸ்லீம்களின் தொண்டு இப்படிப்பட்டது.
இஸ்லாமிய காலண்டர் நிலவை அடிப்படியாக கொண்டதால் 365 நாட்கள் வராது
அதே மூடனே , இஸ்லாமியர்களால் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அறிவாளர்கள் சேர்ந்தாலும் ஒரு ஈயைக்கூட உண்டாக்கமுடியாது
Post a Comment