சவுதி அரேபியா , ஜோர்டான், கட்டார் , ஓமான், யேமன், அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், ஈராக் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய டிஷ்.
இந்த கப்சா ரைஸ் பொதுவாக பாசுமதி அரிசி, இறைச்சி அல்லது சிக்கன், காய்கறிகள், மற்றும் கப்சா மசாலாவை பயன்படுத்தி செய்யப்படுகின்றன.
கப்சா ரைஸில் பயன்படுத்தப்படும் மசாலா தான் அதற்க்கு சுவை கொடுக்கின்றன. இவை பொதுவாக கருப்பு மிளகு, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கருப்பு எலுமிச்சை, பே இலைகள் சேர்த்து செய்யப்படுகின்றன.
தேவையான பொருட்கள்:
4 கப் பாசுமதி அரிசி ( 20 நிமிடம் ஊர வைக்கவும்)
1 கிலோ சிக்கன் ( 12 துண்டுகள்)
4 டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் பட்டர் அல்லது நெய்
2 இலவங்கப்பட்டை
2 கிராம்பு
2 ஏலக்காய்
2 பே இலை
6 கப் தண்ணீர்
3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 1/2 டேபிள் ஸ்பூன் கப்சா மசாலா
2 கருப்பு எலுமிச்சை (விரும்பினால்)
2 பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கவும்)
2 தக்காளி (நீளமாக நறுக்கவும்)
2 டேபிள் ஸ்பூன் தக்காளி பேஸ்ட்
உப்பு தேவைக்கேற்ப
2 கை அளவு மல்லி இலை
1 கிலோ சிக்கன் ( 12 துண்டுகள்)
4 டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் பட்டர் அல்லது நெய்
2 இலவங்கப்பட்டை
2 கிராம்பு
2 ஏலக்காய்
2 பே இலை
6 கப் தண்ணீர்
3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 1/2 டேபிள் ஸ்பூன் கப்சா மசாலா
2 கருப்பு எலுமிச்சை (விரும்பினால்)
2 பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கவும்)
2 தக்காளி (நீளமாக நறுக்கவும்)
2 டேபிள் ஸ்பூன் தக்காளி பேஸ்ட்
உப்பு தேவைக்கேற்ப
2 கை அளவு மல்லி இலை
கப்சா மசாலா:
1 இலவங்கப்பட்டை*
3 கிராம்பு*
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்*
1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்*
1 தேக்கரண்டி கருப்பு மிளகு*
1 தேக்கரண்டி ஏலக்காய்*
1 தேக்கரண்டி சீரகம்*
1 தேக்கரண்டி கொத்தமல்லி*
3 கிராம்பு*
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்*
1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்*
1 தேக்கரண்டி கருப்பு மிளகு*
1 தேக்கரண்டி ஏலக்காய்*
1 தேக்கரண்டி சீரகம்*
1 தேக்கரண்டி கொத்தமல்லி*
செய்யும் முறை:
1. முதலில் அனைத்து * போட்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து தூளாக ஆக்கி கொள்ளவும்.
2. கடாயில், இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, பே இலை, ஒரு கை மல்லி இலை, கோழி துண்டுகள் மற்றும் 6 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
3. 5 நிமிடம் கொதித்தவுடன், கோழி துண்டுகளை மற்றும் தனியாக எடுக்கவும்.
4. கோழி எடுத்த பின் இருக்கும் தண்ணீரை தனியாக வைத்து கொள்ளவும்.
5. அடுப்பில் வேர ஒரு கடாய் வைத்து, ஒலிவ் எண்ணெய், பட்டர், நறுக்கிய வெங்காயம் மற்றும் கருப்பு எலுமிச்சை சேர்த்து தாளிக்கவும்.
6. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தக்காளி பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் 1 1/2 டேபிள் ஸ்பூன் கப்சா மசாலா சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி மசிந்தவுடன், தாளிப்பு செய்த இந்த மசாலாவை தனியாக வைத்து கொள்ளவும்.
8. ரைஸ் குக்கர் அல்லது பானையில்,ஊர வைத்த அரிசி, கோழியை கொதிக்க வைத்த தண்ணீர், மல்லி இலை மற்றும் தாளிப்பு செய்த மசாலாவை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும்.
9. தனியாக எடுத்து வைத்த கோழி துண்டுகளுடன் மீதம் உள்ள 1 டேபிள் ஸ்பூன் கப்சா மசாலா மற்றும் மீதம் உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மேரினேட் பன்னவும்.
10. மேரினேட் செய்த கோழியை ஓவன் அல்லது க்ரில் பேனில் வேகும் வரை வாட்டி எடுக்கவும்.
11. வாட்டி எடுத்த கோழி துண்டுகளை புழுங்கிய கப்சா ரைஸுடன் சேர்த்து, முந்திரி, பாதாம் அல்லது திராட்சை சேர்த்து பரிமாறவும்.
kabsa rice
சமைக்கும் நேரம்: 1 1/2 மணி நேரம்
சமைக்கும் நேரம்: 1 1/2 மணி நேரம்
பரிமாறும் அளவு: 6 – 8 பேர்
No comments:
Post a Comment