Followers

Sunday, July 29, 2018

ஏவுகணை தாக்குதலை தடுக்க 7000 கோடி!

ஏவுகணை தாக்குதலை தடுக்க 7000 கோடி!

தலைநகரம் டெல்லிக்கு நிறைய அச்சுறுத்தல் உள்ளதாம். பகைவர்கள் நம்மை தாக்கி விடுவார்களாம். அதனால் டெல்லிக்கு உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்க எதிர் ஏவுகணைகளை பொருத்த 7000 கோடிக்கு அமெரிக்காவிடம் பாதுகாப்பு துறை கையெழுத்திட உள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தானால் அச்சுறுத்தல் உள்ளது:, அருணாசல பிரதேசத்தில் சீனாவால் அச்சுறுத்தல் உள்ளது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரவேற்கலாம். டெல்லிக்கு யாரால் அச்சுறுத்தல்? இதற்கு ஏன் 7000 கோடி ரூபாய். பட்டினியால் மூன்று குழந்தைகள் செத்துக் கொண்டுள்ள டெல்லிக்கு 7000 கோடியில் பாதுகாப்பு தேவையா? இதில் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எத்தனை கமிஷன் போகப் போகிறதோ தெரியவில்லை. 

இதை எல்லாம் பற்றி நீங்கள் பேசினால் 'ஆண்டி இன்டியன்' என்று ஹெச்.ராஜாவால் அழைக்கப்படுவீர்கள்.

3 comments:

vara vijay said...

Delhi is capital of India.

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானனோ சீனாவோ ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.இரண்டுமே சா்வாதிகார காடையா்கள் ஆட்சியாளா்களாக உள்ளனா். எனவே முட்டாள்தனமான அலப காரணங்களுக்கு கூட போர் துவங்கலாம்.
சுவனப்பிரியன் தாங்கள் ஒரு சாதாரண அரேபிய அடிமை.அரபு நாட்டில் ஏதோ பணியாற்றி வாழ்ந்து வருகின்றீா்கள்.

நாட்டின் பாதுகாப்பு என்பது தங்கள் தகுதிக்கும் தரத்திற்கும் அப்பால் பட்ட விசயம்.

சதா தாய்நாட்டை மலினப்படுத்த இப்படிப்பட்ட பதிவுகளைச் செய்ய வேண்டாம்.கமிஷஸன் வாங்குவது காங்கிரஸ் பண்பாடு. தியாக புருஷா் திரு.நரேந்திர மோடி அட்சியில் கமிசன் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

பாதுகாப்பதுறை நவீனப்படுத்த வேண்டும். பாக்கிஸதானும் சீனாவும் அப்போதுதான் அமைதி காப்பார்கள்.சாகஸங்களில் ஈடு்பட மாட்டாா்கள்.

இந்தியாவை நேசிக்கும் எவரும் இப்படிப்பட்ட கட்டுரையை எழுத மாட்டாா்கள்.

ASHAK SJ said...

சவப்பெட்டியில் ஊழல் செய்த கட்சி , ரபேல் விமானத்தில் ஊழல் , வியாபம் என்று பல , ஒவொன்றாக வெளிவருகிறது , பணமதிப்பிழப்பு ஊழல் , ஜி எஸ் டி சிறு வியாபாரிகளை காவு வாங்கிய திட்டம்