Followers

Tuesday, July 10, 2018

தொளுகை செய்தால் அது ஹலாலாக இருக்குமா ?//”கல்லறை வணங்கிகள்” என்று முஸ்லீம்களில் ஒரு சாராரை கிண்டல் செய்து கட்டுரைகளை சுவனப்பிரியன் வெளியிட்டு மகிழும் போது ஒரு பிரமாண்டமான கல்லறையில் போய் - ஒரு காலத்தில் இந்து அரண்மனையாக இருந்தது என்ற குற்றச்சாட்டும்உள்ள இடத்தில்
தொளுகை செய்தால் அது ஹலாலாக இருக்குமா ?//
-டாக்டர் அன்பு ராஜ்
-----------------------------------------
சுவனப்பிரியனின் பதில்:
கல்லறை வணங்கிகள் என்று நாங்கள் குறிப்பிடுவது நாகூர் தர்ஹா போன்ற சமாதிகளில் தங்களின் தலையை சாய்ப்பவர்களைப் பார்த்து. அங்கு அடங்கியுள்ள மகான் தங்களுக்கு நன்மை செய்வார், இறைவனிடத்தில் பரிந்துரை செய்வார் என்ற தவறான நம்பிக்கையில் தலையை சாய்க்கிறார்கள்.
ஆனால் தாஜ்மஹாலின் கதையே வேறு. அங்கு அடங்கியுள்ள சாஜஹானோ, மும்தாஜோ மகான்கள் என்று போற்றப்படுவதில்லை. அவர்கள் அருள் பாலிப்பார்கள் என்று முஸ்லிம்கள் நம்புவதும் இல்லை. மேலும் முஸ்லிம்கள் தொழும் திசையையும் நோக்குங்கள். மெக்காவை நோக்கியே அவர்களின் தொழுகை இருக்கிறது. தொழும் நபர்களுக்கு பின்புறம்தான் தாஜ்மஹால் உள்ளது. எனவே அங்கு வணக்கம் இறைவனுக்குத்தானேயொழிய அங்கு அடங்கியுள்ளவர்களுக்கு அல்ல.
ஒரு கணவன் தனது மனைவியின் மீது எந்த அளவு அன்பு வைத்திருந்தான் என்பதை பறை சாற்றுகிறது இந்த கட்டிடம். அத்தனை அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த அழகை கண்டு ரசிக்கவே உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான நபர்கள் இந்தியா நோக்கி வருகின்றனர். இதனால் இந்தியாவுக்கு அந்நிய செலாவணி கணக்கின்றி கொட்டுகின்றனது.
இறந்தும் அந்த மன்னன் இந்தியாவுக்கு பொருளாதாரத்தை சுற்றுலாத் துறை மூலம் வாரி வழங்கி வருகிறான்.
ஆனால் இஸ்லாமிய பார்வையில் தாஜ்மஹாலுக்கு செலவழித்த தொகை அதிகமே. அந்த பணத்தை கங்கையையும் காவிரியையும் இணைக்க பயன்படுத்தியிருக்கலாம். இந்தியா முழுக்க மரங்களை நட்டு குளங்களை வெட்டி தண்ணீருக்கு வழி வகை செய்திருக்கலாம். ஆனால் மற்ற இந்து மன்னர்களோடு ஒப்பிடும் போது முகலாய மன்னர்கள் இந்திய மண்ணுக்கு தங்களால் இயன்ற நன்மைகளை செய்து விட்டே சென்றுள்ளனர். இவர்களின் பூர்வீகம் ஆப்கானிஸ்தானாக இருந்தாலும் இந்திய மண்ணிலேயே பல தலைமுறைகளாக வாழ்ந்து இந்திய மண்ணிலேயே அடக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
தாஜ்மஹால் முன்பு இந்து அரண்மனையாக இருந்தது என்ற வாதம் வடி கட்டிய பொய். தொல்லியல் துறை இதனை மறுத்துள்ளது. அதே நேரம் சைவர்கள் சமண கோவில்களையும் பவுத்த விஹாரைகளையும் இந்து கோவிலாக மாற்றியதை தொல்லியல் துறையும் ஒத்துக் கொண்டுள்ளது. அனைத்தையும் அவர்களிடமே திருப்பி தந்து விடலாமா? 

5 comments:

vara vijay said...

According to Quran and hadith Taj Mahal should be demolished why r u not doing that.

Dr.Anburaj said...

முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி கொடுமைக்கு உதாரணம். நல்லவர்கள் யாரேனும் இருந்திருக்கக் கூடும். ஆனாலும் குரானனி்ன் துா்போதனைகள் தான் காரணம். பிறமதத்தவர்கள் கொல்லப்படாமல் இருக்க ஜசியா வரி கட்டி பாதுகாப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காட்டு மிராண்டித்தனம் குரானில் இடம் பெற்றுள்ளதுதான் பிறமதத்தவா்கள் அதிகம் கொடுமைபடுத்தப்பட்டதற்கு காரணம். மன்னர்கள் பாவம் வெகுளிகள். குரானை நம்பி நாட்டையும் மனித உயிா்களையும் பாழாக்கியவா்கள்.

Dr.Anburaj said...


எனக்குச் சம்மதம்.

அதுபோல் இந்து கோவில்களாக இருந்து பள்ளிவாசல்களாக மாற்றப்பட்ட அனைத்து கட்டடங்களையும் இந்துக்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை சுவனப்பிரியன் ஏற்றுக் கொள்வாரா ?

கௌதமா் அனைவருக்கும் அஹிம்சையை போதித்தாா். அவரது போதனைகளால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றினார்கள். பெரிய அளவில் கல்வி மருத்துவம் என்று தொண்டுகள் நடைபெற்று மக்கள் அணிஅணியாக கௌதமர் பெயரால் நடக்கும் மடங்கள் நிறுவனங்களில் சோ்ந்தாா்கள். பணம் அரசியல் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது. ஆண் பெண்கள் அனைவருக்கும் சந்நியாசம் வழங்கப்பட்டது.பணம் பதவி செல்வாக்கு பெற்று விட்டதால் தகுதியில்லாத மனிதர்களும் வேசம் போட்டு எமாற்ற ஆரம்பித்து விடுவார்கள்.விளைவு மடங்களில் ஊழல்.மேலும் கௌதமரின் அனைவருக்கும் சைவ உணவு அஹிம்சை என்பது ஏற்கஇயலாததாக இருந்தது.கௌதமரின் பெயரைச் சொல்லி அசைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். இப்படிசீரழிந்து போனதுபௌத்த அமைப்புகள். கடைசியாக முகலாயர்களின் படையெடுப்பு நடந்தது.அஹிம்சை தத்துவத்தைால் சத்திரியா்கள் செல்வாக்கு இழந்து ஒரங்கட்டப்பட்டதால் எதிரிகளை எதிர்க்க போதிய பலத்தை திரட்ட முடியவில்லை.பாரத ரத்னா அம்பேத்தாா் ” புத்தமதத்தை அழித்தது முகலாய படையெடுப்புதான் ” என்று தெளிவாக பதிவு செய்துள்ளாா்.
------------------
ஜெயினா்கள் இன்றும் அம்மணமாக பகிரங்கமாக வாழ்கின்றார்கள். ஆண் ஜெயின் சாமியார்கள் பெரும் ஆண்பெண் கூட்டத்தினா் மத்தியில் அம்மணமாக வலம் வருகின்றனா்.
4 முழ வேட்டிக்கு வக்கற்றவர்களா இவர்கள் ? இவர்களுக்கு மனதின் மேல் அபாரமான கட்டுப்பாடு இருக்கலாம். ஆனால் அம்மணமாக பார்க்கும் சிறுவயது பெண்கள் சிறுமியர்கள் சிறுவா்கள் பெண்களுக்கம் அதே அளவு மனக் கட்டுப்பாடு பெற்றிருப்பார்களா ? அறுவருப்பாக உள்ளது.

சைவ வைணவர்கள் புத்த சமண மதங்களுக்கு ஜசியா வரியை விதித்து காபீா்கள் என்று பட்டம் கட்டி அழித்து ஒழிக்க வில்லை.

இதுபோன்ற காரணங்களால் பௌத்த சமய மதங்கள் செல்வாக்கு இழந்து மக்களின் ஆதரவை இழந்தது.எனவே மீண்டும் தாய் மதத்திற்கு வந்து விட்டார்கள். ஆயினும் கௌதமரின் போதனைகளின் வீரியம் இந்தியா்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.பௌத்தம் அழிக்கப்படவில்லை.ஜீரணிக்கப்பட்டு விட்டது.

சைவ வைணவர்கள் புத்த சமண மதங்களுக்கு ஜசியா வரியை விதித்து காபீா்கள் என்று பட்டம் கட்டி அழித்து ஒழிக்க வில்லை.சிறு பிரச்சனைகள் இருந்துள்ளது என்பது உண்மை.

nazeer ahamed said...

விஜய்....

பதிவில் உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது.

vara vijay said...

Am not satisfied with the answer, any thing against God and Rasool order it should be demolished. Taj Mahal is earning money so it should be left what kind of answer is it.