Followers

Thursday, July 26, 2018

திரு தங்கமணி!

திரு தங்கமணி!
//திரு பரமசிவம்,
சுவனப்பிரியனிடம் கேட்டால் பதில் சொல்லாமல் விழிக்கிறார். இஸ்லாமிய அடிமைமுறையை ரொம்ப நல்லது என்று பிரச்சாரம் செய்யும் அவருக்கு நீங்கள் முடிந்த அளவுக்கு உதவுகிறீர்கள்.
இதற்கும் விளக்கம் சொல்லி அவருக்கு உதவலாமே?
முகம்மதின் இந்த அறிவுரைக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லையே?
Q.2:178 – O you who believe! retaliation is prescribed for you in the matter of the slain, the free for the free, and the slave for the slave, and the female for the female.
உங்கள் அடிமையை ஒருவர் கொன்றுவிட்டால் நீங்கள் யாரை கொல்லவேண்டும் என்று முகம்மது சொல்கிறார்? கொன்றவரையா? கொன்றவரது அடிமையையா?//
'நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவுனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன்: அடிமைக்காக கொலை செய்த அடிமை: பெண்ணுக்காக கொலை செய்த பெண்: என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்லவிதமாக நடந்து அழகிய முறையில் நஷ்ட ஈடு அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும் அருளமாகும். இதன்பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.'
-குர்ஆன் 2:178
தங்கமணி குறிப்பிடும் குர்ஆன் வசனம் இதுதான். வசனத்தின் பாதியை எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் தெரியாமல் உள்ளேன் என்று சொல்வது நகைப்பிற்கிடமானது. இந்த கேள்விக்கு முன்பே பதில் சொன்னதாலும் அதை விட்டு வேறு கேள்விக்கு சென்றேன். இனி விளக்கத்தைப் பார்ப்போம்.
ஆண், பெண், அடிமை,சுதந்திரமானவன் என்று யார் கொல்லப்பட்டாலும் அநியாயமாக கொல்லப்பட்டவனுக்காக கொன்றவனை அவனது இரத்த பந்தங்கள் கொல்வதற்கு குர்ஆன் அனுமதி அளிக்கிறது. ஒரு அரசாங்கம் இருந்தால் உண்மையை விசாரித்து கொலையுண்டவன் பக்கம் நியாயம் இருப்பின் தண்டனை வழங்க அதிகாரம் வழங்கப்படுகிறது. கொல்லப்பட்டவனின் வாரிசு பெருந்தன்மையாக நடந்து அவனை மன்னித்து விட்டாலோ அல்லது உயிருக்கு பகரமாக பணத்தை வாங்கிக் கொண்டாலோ அதற்கும் குர்ஆன் அனுமதிக்கிறது. அதை விடுத்து இதை எல்லாம் உதாசீனம் செய்து விட்டு வேறு வழிகளில் சென்று பழி தீர்ப்பதோ, அவரது வாரிசுகளை பழி தீர்ப்பதோ தடை செய்யப்படுகிறது. இதற்கு கடுமையான தண்டனை உண்டு என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது. இதன் மூலம் கால காலமா தலைமுறை தலைமுறையாக பழி தீர்க்கும் படலங்கள் ஒரு கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.
ஆனால் நம் நாட்டு சட்டம் என்ன சொல்கிறது. ஒருவன் அநியாயாமாக கொல்லப்பட்டால் தண்டனை பெற்ற கைதியை மன்னிக்கும் அதிகாரத்தை நமது நாட்டு ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவனின் மனநிலை டெல்லியில் ஏஸி அறையில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியும்? அவனது வலியை உணர முடியுமா? என்றெல்லாம் சிந்திக்காமல் சட்டத்தை இயற்றி வைத்துள்ளோம்.
எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக் கூடிய சட்டங்களே குர்ஆனின் சட்டங்கள் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த உதாரணம்.

No comments: