Followers

Friday, July 13, 2018

மலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....



மலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....

A ; பிராமணர்களிடம் 
ஒரு வேத புத்தகம் இருக்கு டா 
அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று 

B ;அத யார் டா எழுதியது கடவுளா ?

A; அத பிராமணர்களே
எழுதிகிட்டானுங்கடா

5 comments:

Dr.Anburaj said...

மனு தரம சாஸ்திரம் என்ற புத்தகத்தில் இதுபோன்ற தவறான கருத்துக்கள் இருந்தது என்று பலரும் சொல்கின்றார்கள்.எனது கையில் அந்த புத்தகம் கிடைக்க மாட்டேன் என்கிறது.அதை தீயிட்டுக் கொளுத்த நான் தயாா். யாரும் படிக்காத சிந்திக்காத ஒரு கருத்தை மடையா்கள் சிலா் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு என்னத்தை சாதிக்க விரும்புகின்றார்கள்.

ஆப்பானிஸ்தானில் 129 பேர்கள் வெடிகுண்டு தாக்குதலில் மரணம் என்ற செய்தியை படித்ததுண்டா ?

கடந்த வாரம் 20 இந்துக்கள் செத்தார்கள். இன்று 129 பேர்கள் அனைவரும் முஸ்லீம்கள் -கொல்லப்பட்டுள்ளனா்.இதற்கு யார் காரணம்?இந்த நியாயத்தை எழுதி வைத்தவா் யாா் ? காபீர் என்ற சொல்லை பிறரை அழிக்க நியாயமாக எழுதி வைத்த முகம்மதுதான் காரணம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
-------------------------------
ஸ்ரீபகவத்கீதை அசல் நூலை படிக்காத முஸ்லீம்களை இந்துக்களை ஏமாற்ற இந்த மாதிரி பதிவுகளை தாங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றிா்கள்.

Dr.Anburaj said...

கீதைக்கு சம்பிரதாய தரிசன உரைகள் தவிர்த்து, தென்னாட்டில் பாரதியாரின் உரை பெருமை வாய்ந்தது. அதே போல ராஜாஜியின் “கைவிளக்கு” என்னும் உரையும், பால கங்காதர திலகரின் “கர்ம யோகம்” என்கிற உரையும், மகாத்மா காந்தி எழுதிய “அநாஸக்தி யோகம்” என்கிற உரையும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு பிரசித்தமாக உள்ளன
-------------------
வர்ணம்
கர்மம்தான் நான்கு வர்ண அமைப்புகளாக பிரித்து ஒழுங்குமுறைப்படுத்தப் பட்டுள்ளது. எல்லோரும்தான் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுகிறார்கள். ஆனால்,ஒரு சிலரே, உள்மூச்சு, வெளிமூச்சு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்களோ, ஆரம்ப நிலையில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால் கூட பத்து நிமிடம் கூட அவர்களால் தாங்கள் நினைத்தபடி, மனதை ஒருமுகப்படுத்த முடிவதில்லை. அத்தகைய குறைந்த அளவு சாதனை அறிவுடைய சாதகர் சூத்திர சாதனைப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தன்னுடைய சுபாவத்தில் இருந்து தோன்றிய கர்மத்திறனுக்கு ஏற்ப, சேவை புரிவதில் இருந்தே தன்னுடைய கர்மத்தைத் தொடங்க வேண்டும். படிப்படியாக வைசியர், சத்திரியர், மற்றும் பிராம்மணப் பிரிவுகளில் அடையப்படுகின்ற உயர் கர்மத் திறன் அவருடைய சுபாவத்தில் பெருகிக் கொண்டே செல்லும். அவர் தனது பாதையில் உயர்ந்து கொண்டே செல்வார். மிகவும் உயர்வானது என்று கருதப்படுகின்ற பிராம்மண சாதனைப் பிரிவும்கூட தன்னில் குறைவுடையதுதான். ஏனெனில், இந்த நிலையிலும் கூட அந்த பிரம்மம் என்னவோ இன்னும் அடையப்படாத நிலையில் தனித்தே இருக்கிறது. பிரம்மத்தில் நுழைவு பெற்றுவிட்டால், அந்த பிராம்மணப் பிரிவு என்பதும் கூட இல்லாமல் போய்விடுகிறது.

“வர்ணம்” என்றால் “தோற்றம்” என்று பொருள். இந்த உடல் உங்களுடைய உணமையான தோற்றம் அல்ல. உங்களுடைய அக எண்ணவோட்டம் எதுவோ, அதுவே உங்களுடைய உண்மையான தோற்றம் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: “அர்ஜுனா! மனிதன் நம்பிக்கைமயமானவன். எனவேதான் அவனுக்கு எதிலாவது நம்பிக்கை அவசியம் இருக்கவே செய்கிறது. அவனுடைய நம்பிக்கை எவ்விதமோ, அவ்விதமே அவனும் இருக்கிறான். எண்ணம் எவ்வாறோ, அவ்வாறே மனிதன்”.

Varnam

வர்ணம் என்பது கர்மத்திறனை மதிப்பிடுகின்ற அக அளவியல் குறீயிடு ஆகும். ஆனால், மக்கள் அனைவரும் இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தை விட்டுவிட்டு, வெளியில் உள்ள சமுதாயத்தில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, சாதிகளை உருவாகிக் கொண்டு, அவற்றையே ‘வர்ண அமைப்பு’ அல்லது ‘சாதி அமைப்பு’ என்று ஏற்றுக் கொள்வதுடன் நிற்காமல் அவற்றிற்கான சட்டதிட்டங்கள். ஒழுங்குமுறைகள் என்று எதை எல்லாமோ உண்டாக்கிக் கொண்டுள்ளனர். அவை அனைத்தும் வெறும் சமுதாய அமைப்புகளே தவிர, வேறொன்றுமில்லை. அவர்கள் கர்மத்தின் உள்ளது உள்ளபடியான யதார்த்த உருவத்தைத் தங்கள் இஷ்டப்படியெல்லாம் வளைத்தும் முறுக்கியும் மாற்றி மாற்றி அமைத்தும் கொள்கின்றனர். அதன்மூலம், அவர்களுக்குக் கிடைக்கின்ற போலித்தனமான சமுதாய மரியாதை மற்றும் சலுகைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படாமல் தற்காத்து கொள்கின்றனர். காலப்போக்கில் வர்ணத்தை நிச்சியம் செய்வது பிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்துவிட்டது. ஆனால், உண்மையில் அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. ஸ்ரீ கிருஷ்ணர், “நான்கு வர்ணங்களையும் நானே உருவாக்கினேன்” என்கிறார். அப்படியென்றால் இந்த பாரத தேசத்திற்கு வெளியில் படைப்பு என்ற பெயரில் ஒன்றுமே இல்லையா என்ன? ஆனால் அங்கெல்லாம் இந்த தேசத்தில் காணபடுவதைப் போன்று, “சாதிகள்” என்ற பெயரில் எந்த அமைப்புமுறையும் இல்லையே ஏன்? இந்த பாரத தேசத்தில் மட்டும் லட்சக்கணக்கான சாதிகள் மற்றும் அதற்குள் அடங்கிய கிளை சாதிகள் என்றொரு நிலை இருக்கிறதே! ஸ்ரீ கிருஷ்ணர் சாதியின் பெயரால் மனிதர்களை எல்லாம் பிரித்தாளும் வேளையில் ஈடுபட்டிருந்தாரா? இல்லை இல்லவே இல்லை. “குணகர்ம விபாகச”:– குணத்தை அடிப்படையாக கொண்டு, இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தையே நான்கு சாதனை பிரிவுகளில் ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளேன்” என்கிறார் அவர்.

Dr.Anburaj said...

“கர்மாணி ப்ரவி பக்தானி”:- “கர்மமே பிரிக்கப்பட்டு உள்ளது.” கர்மம் என்றால் என்ன? என்பது புரிந்துவிட்டால், “வர்ணம் என்றால் என்ன?” என்பது புரிந்துவிடும். “வர்ணம் புரிந்துவிட்டால், வர்ணக் கலப்பு எனபதையும் உள்ளது உள்ளவாரே புரிந்து கொண்டு விடுவீர்கள்.

Dr.Anburaj said...

ஸ்ரீபகவத்கீதை படித்த சுவாமி விவேகானந்தரின் சுதேஸ மந்திரம்
ஓ இந்தியா! உனது பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே! நீ வணங்கும் கடவுள் துரவிகளுக்கேல்லாம் பெருந்துறவி, அனைத்தையும் தியாகம் செய்துவிட்ட உமாபதி சங்கரர் என்பதை மறவாதே! உன் திருமணம், உன் செல்வம், உன் வாழ்க்கை இவை புலனின்பத்திர்காக அல்ல, உன் தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல என்பதை என்பதை மறவாதே! அன்னையின் பீடத்தில் பலியிடப்படுவதற்கே நீ பிறந்துள்ளாய் என்பதை மறவாதே!உன் சமுதாயம் மகாமாயையான அன்னையின் நிழல் என்பதை மறவாதே!

தாழ்ந்த ஜாதியினர், அறிவிலிகள்,ஏழைகள், படிக்காதவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள், எல்லோரும் உன்னுடைய ரத்தம், உன் சகோதரர்கள் என்பதை மறவாதே! ஓ வீரனே, துணிவுகொள். ‘நான் இந்தியன், ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன்’ என்று கர்வத்துடன் சொல்.

‘அறிவற்ற இந்தியன், ஏழை இந்தியன், பிராமண இந்தியன்,கீழ்ஜாதி இந்தியன் எல்லோரும் என் சகோதரர்கள்’ என்று சொல்; இடுப்பில் கந்தை மட்டும் கட்டிக்கொண்டு நீயும் உரத்த குரலில் பெருமையாகக் கூறு; இந்தியன் எனது சகோதரன், இந்தியன் எனது வாழ்க்கை, இந்தியாவின் தேவதேவியர் எனது தெய்வங்கள். இந்தியச் சமுதாயம் என் குழந்தைப் பருவத்தின் தொட்டில், என் வாலிபப் பருவத்தின் இன்பத்தோட்டம், என் முதிய பருவத்தின் வாரணாசி.

சகோதரா சொல்-‘இந்திய மண்தான் எனது சொர்க்கம். இந்தியாவின் நலன்தான் என்னுடைய நலன்.’ இரவும் பகலும் திரும்பத்திரும்பப் பிரார்த்தனை செய்-‘ ஓ கௌரி மணாளா, ‘ஓ உலக நாயகியே, எனக்கு மனிதத்துவத்தைக் கொடு; அம்மா, என்னுடைய பலவீனத்தைப் போக்கு; என் கோழைத்தனத்தை போக்கு! என்னை மனிதனாக்கு.’

ASHAK SJ said...

யார்ரா இவன் லூசு மாதிரி, இந்தியா இந்துமத கேவலங்களை பத்தி பேசுனா சம்பந்தம் இல்லாமல் அடுத்த நாட்டை பத்தி பேசிகிட்டு