குழந்தைகளுக்கு எட்டு நுண்ணறிவு உள்ளது. இவைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் இன்றைய கல்வி முறை இல்லையென்று பேராசிரியர் ஜகிதா பேகம் எழுதிய கட்டுரையை வாசித்தேன்.
அவரோடு தொடர்புகொண்டு பேசிய பிறகு, கடந்த 9/7/2016 அன்று அவரை காந்தி கிராமத்தில் நானும் எனது துணைவியாரும் சந்தித்தோம். அவர் ஒரு சிறந்த கல்வியாளர் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.
ஜகிதா பேகம் அவர்களுடைய தந்தையார் புதுக்கோட்டை மகாராஜாவுக்கு உருது ஆசிரியராக இருந்தவர். 7 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், உருது, அரபி, இந்தி மற்றும் பார்சி) பாண்டித்தியம் பெற்றவர்.
அவரிடம் மகாராஜா, நீங்கள் பல்கலைக் கழகம் அல்லது பள்ளியில் ஏதாவதொரு பதவியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டபோது - 1 மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலை கேட்டுப் பெற்றார் என்ற செய்தியை ஜகிதா பேகம் பகிர்ந்துகொண்டார்.
தனது பல்கலைக் கழக பணிகளை முடித்த பிறகு, வீட்டுக்கு அருகில் உள்ள 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இலவச வகுப்புகளும் எடுத்து வருகிறார்.
1 comment:
ஊருக்கு உழைத்திடல் யோகம்.நல்ல பணி.வாழ்த்துக்கள்.
Post a Comment