திரு தங்கமணி!
//இது தமிழ் மொழிபெயர்ப்பில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குரான் வசனத்தில் விளையாடியது. ஆங்கிலத்தில் free for the free என்றுதான் இருக்கிறது. சுதந்திரமான்வனுக்கு சுதந்திரமானவன் என்றுதான் இருக்க வேண்டும். தமிழில் மொழிபெயர்க்கும் போது, சுதந்திரமானவனுக்காக ( கொலை செய்த) சுதந்திரமானவன் என்று போட்டு விளையாடியிருக்கிறார்கள். குரான் வசனத்தை மாற்றுவதற்கு உங்களிடம் எதாவது தண்டனை உண்டா?//
'உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல்,மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை தோராவில்(தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். பாதிக்கப்பட்ட யாராவது அதை மன்னித்தால் அது அவரின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகி விடும்.'
-குர்ஆன் 5:45
-குர்ஆன் 5:45
உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண் என்றால் என்ன பொருள் கொள்வீர்கள்? கொலையுண்டவனின் வாரிசு கொலை செய்தவனை பழிக்கு பழி வாங்கலாம். அல்லது மன்னித்து விடலாம் என்ற பொருள் அதில் மறைந்துள்ளது. படிக்கும் யாவருமே இதை எளிதில் புரிந்து கொள்வர். குர்ஆனில் உள்ள சில விளங்காத வசனங்களுக்கு முகமது நபி தனது ஹதீதுகளில் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அடைப்புக்குரிகளை மொழி பெயர்ப்பாளர் இடுகின்றனர்
உதாரணத்துக்கு என்னிடம் ஒரு அடிமை இருந்து அவனை ராஜா என்ற ஒருவன் கொன்று விட்டதாக வைத்துக் கொள்வோம் நான் பழி தீர்ப்பதற்காக ராஜாவின் அடிமையை கொன்று போட்டால் என்னை அந்த இறைவன் மன்னிப்பானா? ராஜா குற்றம் செய்ததற்க்காக அவன் அடிமை எப்படி தண்டனையை அனுபவிக்க முடியும்? இது அநியாயம் இல்லையா? ஒரு இறைவன் இப்படி சொல்லியிருக்க முடியுமா? அப்படிப்பட்டவன் ஒரு இறைவனாக இருக்க முடியுமா?
இந்த சிறிய விஷயத்தை விளங்கிக் கொள்ள இவ்வளவு விளக்கம் தேவையில்லை தங்கமணி!
'வறுமை காரணமாக உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்'
-குர்ஆன் 6:151
-குர்ஆன் 6:151
வறுகைக்காக குழந்தைகளை கொல்வதை தடை செய்கிறது குர்ஆன். நாமோ கள்ளிப் பாலையும், அரிசிகளையும் சேலம் ராமநாதபுரங்களில் கொடுத்து சமாதியாக்குகிறோம்.
'இறைவன் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்: விபசாரம் செய்ய மாட்டார்கள்: இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.'
-குர்ஆன் 25:68.
-குர்ஆன் 25:68.
தக்க காரணமின்றி ஒரு உயிரை கொல்வதை இந்த அளவு தடை செய்யும் குர்ஆன் எஜமானன் செய்த குற்றத்திற்காக அடிமையை கொலை செய்யச் சொல்லுமா? கவிதை நடையில் ஒரு வாக்கியத்தை சொல்லும் போது சில சொற்களை விடுவது அனைத்து மொழிகளிலும் உள்ள மரபு. இதை படிப்பவர் வெகு இலகுவாக புரிந்து கொள்வார். வீம்பு பண்ணுபவர் வேண்டுமென்றே மறுதலிப்பார். இதுதான் இங்கு நடக்கிறது.
2 comments:
குரான் ஹதீஸ்கள் குழப்பங்களின் சுரங்கம். அதற்கு இப்படியெல்லாம் உரைகள் விளக்கங்கள் கோனாா் தமிழ் உரை போல் நிறைய தேவை. அவற்றிற்கும் ஒரு விளக்கம் தேபை்படும்.
அந்த விளக்கம் சரியா தவறா என்ற விவாதத்தில் பல முஸ்லீம் ஜமாத்கள் மோதி மண்டையை உடைத்துக் கொள்வாா்கள். நாட்டில் நடந்து கொண்டிருப்பது அது தானே ?
மண்டையை உடைத்து கொண்டாலும் ஒரே பள்ளியில் தொழுவார்கள் , மாறாக கோவிலுக்குள் நுழைந்தால் எரித்து கொல்வது இல்லை
Post a Comment