Followers

Saturday, July 21, 2018

'காஃபிர்' என்ற அரபி சொல் ஏதோ அவமானகரமான சொல்....

//Anburaj!... am a kaffir in front of Muslim, am a dalit in front of upper caste oppression, // -Vijay//
'காஃபிர்' என்ற அரபி சொல் ஏதோ அவமானகரமான சொல் என்ற தவறாக விளங்கியதால் உங்களின் கேள்வி பிறந்துள்ளது சகோ விஜய்.
முதலில் 'காஃபிர்' என்ற அரபு பதத்திற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம். 'குஃப்ர்' என்ற மூலச் சொலிலிருந்து பிறந்ததே 'காஃபிர்' என்ற வார்த்தை. அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு 'இறை மறுப்பாளர்' கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை 'காஃபிர்கள்' என்று அழைக்கிறோம். இது ஏதோ ஒரு அவமானச் சொல் என்ற ரீதியில் உங்கள் கேள்வியை வைத்துள்ளீர்கள்.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மூலரின் திருமந்திரம் தமிழருக்கு சொந்தமானது. நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்துள்ளனர். இந்த பல தெய்வ வணக்கம் என்பதே இடைக்காலத்தில் கலாசார மாற்றங்களினால் புகுத்தப்பட்டது. இடையில் வந்த இந்த பழக்கத்தை விட்டு விட்டு தமிழர்கள் நாம் அனைவரும் ஏக இறைவனையே வணங்க ஆரம்பித்து விட்டால் தமிழகம் என்ன...... உலக மசூதிகள் அனைத்திலும் 'தமிழர்கள் காஃபிர்கள் அல்ல' என்று அறிவித்து விடுவோம்.
ஆதி கால தமிழர்களின் மார்க்கமும் இஸ்லாமிய மார்க்கமும் ஏறத்தாழ ஒன்றே. இந்து மத வேதங்களும் கூட ஏக இறைவனையே வணங்கச் சொல்லி இந்துக்களுக்கு கட்டளையிடுகிறது.

5 comments:

vara vijay said...

Suvanapriyan I too know the meaning of kaafir. Am against the oppression caused by belief on religion , God.

Dr.Anburaj said...

பொய் சொல்ல வேண்டாம். தாங்கள் இந்துக்களை காபிா் என்று அறிவிக்க வேண்டும் என்ற ஒன்றும் உம்மிடம் கெஞ்சி மனுகொடுக்கவில்லை.பிரச்சனையை எதிா்கொள்ள இந்துக்களும் தயாராகி வருகின்றோம்.
ஒா்நாமம் ஒா் உருவம் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாம் தெள்ளேனாம் கொட்டாமே ?
ஒரு அரேபிய கைநாட்டு போ்வழியிடம் இருந்து எந்த கருத்தையும் கற்றுக் கொள்ள வே்ணடிய இழிநிலையில் இந்துக்கள் இல்லை.இறைவன் ஒருவனே என்பது எங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே தெரியும் . இந்த கருத்தை அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியஅவசியம் இல்லை.லட்சக்கணக்கான கோத்திரங்கள் சாதிகள் கலாச்சார பிரிவுகளாக உலகம் பரிணமித்து இருக்கின்றது.ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் ஒரு இறைகொள்கை வழிபாடு திருமண முறை கலாச்சாரம் உள்ளது.இந்த நிலையில் கோத்திரங்களை இணைப்பது என்பது சவாலான காரியம். கோத்திரங்கள் ஒருங்கிணைப்பு என்பதை இந்துமதம் மிகவும் மென்மையான முறையில் கையாண்டு வருகின்றது.ஒரு கோவிலில் 10 சிலைகள் இருந்தால் 10 கோத்திரங்கள் ஒன்று பட்டுள்ளது என்று அா்த்தம். ஒரே நாளில் அரேபியன்போல் வாழும் முறையை மாற்றிக்கொள் இல்லையேல் செத்து தொலை என்று முகம்மது செய்தது போல் கண்மூடித்தனமாக மதவெறியோடு அரேபிய இனவெறியோடு யாரும் செயல்பட்டு சமூக சீா்திருத்தம் செய்யவில்லை.ஆகவேதான் வழிபாடுகள் பல பல.தெய்வம் ஒன்றே.பல மலா்களை ஒருநாரில்தொடுப்பது இந்துமதம் அமைந்துள்ளது.நாா் ஒன்றுதான்.மலா்கள்தான் வேறு. 1000 ஆண்டுகள் இந்துக்களை காபீா்என்ற வெறுத்த முஸ்லிம்கள் மற்றும் சாத்தானின் மதம் என்று இழிவு படுத்திய கிறிஸ்தவா்கள் ஆட்சியில் எங்களது சமூக அமைப்ப நாசம் ஆனது. அதை சரியாக கட்டமுடியாமல் சமய சார்பற்ற கொள்கை காரணமாக முறைான சமய கல்வி அளிக்கப்படாமல் இன்றும் இந்து சமூகம் திசை தெரியாத கப்பல்போல் சென்று கொண்டிருக்கின்றது என்பது உண்மை. இதற்கு இசுலாம் தீா்வு என்பவன் கோழை.முட்டாள்.

இசுலாத்தை எற்காதவன்காபீா்.முகம்மதுவை இறைதூதா் என்று எற்காதவன் காபீா். சொர்க்கம் நரகம் என்று நம்பாதவன் காபீா்.
நியாயத்தீா்ப்பு நாளை ஒ்ப்புக்கொள்ளாதவன் காபீா்.
அரேபிய கலாச்சாரத்தின்படி பிரார்த்தனை செய்யாதவன் காபீா்.
காபாவை நோக்கி-அரேபிய அடிமைத்தனத்தை எற்காதவன் -
பிராத்த்தனை செய்யாதவன் காபீா்.

இப்படி பட்டடியல் போய்கொண்டேயிருக்கும்.
உலகம் முழுவதும் அரேபிய வல்லாதிக்கத்தின் ஆளுமைக்குள் வரும்வரை -காபீா்களோடு போர் செய்யுங்கள்.பிடறியை வெட்.டுங்கள் என்பது இசுலாமிய போதனை.3வது கலிபா உதுமான் மகம்மதுவின் இரண்டு மகள்களை திருமணம் செய்தவா். ஆனால் முகம்மதுவின் மனைவி ஆயிசா உதுமானை ஏன் காபீா் என்று திட்டினாள் ? பதில் சொல்லுங்கள்.
காபீா் என்று திட்டிய சில காலத்திற்குள் உதுமான் கொல்லப்பட்டாா். ஏன் கொன்றவன் யாா் ? காபீா்என்ற வார்த்தை கொடூரமானது.அநாகரீகமானது. நச்சுக் கருத்து.
இந்துக்கள் மத்தியில் ஸ்ரீநாராயணகுரு அருட்பெருஞ்சோதி வள்ளலாா் ஐயா வைகுண்டசாமி போன்றவர்கள் வழிபாடுகளில் சிறந்த மாற்றத்தை எற்படுத்திதான் இருக்கின்றார்கள். அரசு ஆதரவளித்து அனைவருக்கும் அதை கற்றுக் கொடுக்க என்ன தடை யிருக்கின்றது என்பது தெரியவில்லை.இந்து அரசியல் வாதிகள் தேவையில்லாமல் முஸ்லீம்கள் மற்றும்கிறிஸ்தவர்களைக்கண்டு பயந்து சாகின்றனா்கள்.வழிபாடுகளில் இந்துபண்பாடுகளின் அடிப்படையில் பெரும் மாற்றம்தேவைதான் . இந்த கருத்தையாரும் முன்னெடுக்க முன்வரவில்லையே.என்ன செய்வது???????

ASHAK SJ said...

காபிர் என்றால் இறைமறுப்பாளன், முஷ்ரிக் என்றால் பல தெய்வத்தை வணங்குபவன் என்றும் அர்த்தம்

Dr.Anburaj said...

நான் அரேபிய வல்லாதிக்க இயக்கமான இசுலாத்தை ஏற்கவில்லை.
நான் இந்து சமயத்தை பின்பற்றுகின்றேன்.
இந்து சமூகத்தில் பல கலாச்சார பிரிவுகள் கோத்திரங்கள் இருக்கின்றது.கலாச்சார வேறுபாடு உள்ளது.அதன் அடிப்படையில் பல சமய அனுஷ்டானங்கள் உள்ளன். அதன்படி அவர்களுக்கென தனி கோவில் அமைப்பு அனுஷ்டான முறைகள் இருக்கின்றன்.நான் அந்தந்த கோயிலுக்கு சென்றால் அதற்கு தக்க நடந்து கொள்வேன். இறைவன் ஒருவனே என்பது எனக்கு தெரியும்.இந்து மதத்தில் பல தெய்வங்கள் இல்லை.பல கலாச்சார பிரிவுகள் உள்ளன்.
இந்நிலையில் நான் காபீா்ரா ? இல்லையா ? பதில் பதிவு செய்யுங்கள்.

Dr.Anburaj said...

அம்மாவிடம் பால் குடித்து விட்டு தொட்டிலில் படுத்து முதலில் நன்கு தூங்கு. ஆஷிக்.எனது பதிவுகளை முழுவதும் படிக்காமல் அதில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் டேப்ரெக்கார்டா் போல் தனக்கு தெரிந்தவசனத்தை கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கின்றவன் -பதிவுசெய்பவன் முட்டாள். a childish , child-like.