Followers

Wednesday, July 11, 2018

இரத்ததானத்தில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்

இரத்ததானத்தில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று முஸ்லிமல்லாத மக்களில் சிலர் சிலாகித்து சொல்வதுண்டு. சில, பல இடங்களில் நாம் கூட இதை சொல்லி மகிழ்ந்து கொள்வோம்.
நேற்று அவசரமாக நான்கு யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகி ஒருவருக்கு மெசேஜ் செய்திருந்தேன். அவரும் அதை பலருக்கும் அனுப்பி அதற்கான ஏற்பாட்டை செய்து வைத்துள்ளார். இரத்தம் கொடுப்பதற்காக பலரும் எனக்கு போன் செய்திருந்தார்கள். அதில் ஒருவர் முஸ்லிமல்லாத சகோதரர்.
உலக மீடியாக்களும், இந்திய மீடியாக்களும், சங்க்பரிவார பயங்கரவாதிகளும் முஸ்லிம்கள் குறித்து பல்வேறு அவதூறுகளை தினம், தினம் பரப்பியும் அதை முஸ்லிமல்லாத பலர் அசட்டை செய்து முஸ்லிம்களை ஒரு உறவினர் போலவே பார்க்கிறார்கள். அதை நேரடியாக அனுபவிக்கும் போது கூடுதலான சுகம் தருகிறது.
மகிழ்ச்சி மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..

No comments: