Followers

Friday, August 28, 2015

குஜராத்: வினை விதைத்தவன் வினை அறுப்பான்!



ஒரு மாநிலமே முடங்கியிருக்கிறது. தலைநகர் அகமதாபாத் கலவர நகரமாகியிருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டும் அகமதாபாத்தில் மட்டும் 50 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று 140 வாகனங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன. இதுவரை 9 உயிர்கள் கலவரங்களில் பறிபோயிருக்கின்றன. மேசானா, ராஜ்கோட், சூரத் என சௌராஷ்டிரம் வரை வன்முறைத் தீ தொடர்ந்து பரவுகிறது. கடி நகரில் சுகாதார அமைச்சர் நிதின் படேலின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேசானாவில் உள்துறை இணையமைச்சர் ரஜனிகாந்த் படேல், மோர்பியில் வேளாண் இணையமைச்சர் ஜெயந்தி கவாடியா, சமூகநீதித் துறை அமைச்சர் ரமண்லால் வோராவின் அலுவலகம் ஆகியவை எரித்தழிக்கப்பட்டிருக்கின்றன. மோர்பியில் மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன் கவுன்டரியாவின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வடோதராவில், பலிதானாவில் என்று ஆளும் பாஜகவின் பிரதிநிதிகளே அடிபடும் கதைகள் ஒவ்வொன்றாய் வந்துகொண்டேயிருக்கின்றன. முதல்வரும் பிரதமரும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல், விரைவு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை என மத்தியப் படைகளின் பல பிரிவுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

ஹ்ருதிக் படேல் என்ற இந்த 22 வயது இளைஞனுக்கு இத்தகைய ஆற்றல் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது. இதற்கான விடை மேலே உள்ள புகைப்படம் சொல்லும். படேல், குஜ்ஜர், ஜாட் என்ற முற்படுத்தப்பட்ட மக்களை தூண்டிவிட்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும் உரிமைகளை பறிக்க இந்துத்வாவினர் முயலுகின்றனர். பள்ளனும் பரையனும் படித்து பட்டம் பெற்று விட்டால் வர்ணாசிரமத்தை கட்டிக் காப்பது எப்படி? பார்பனர்கள் மீண்டும் சகல அதிகாரங்களோடு வலம் வருவதற்கு என்ன வழி? அதற்கான முன்னோட்டம்தான் இந்த வன்முறை போராட்டம். ஆர்எஸ்எஸ் எவ்வளவு சூசகமாக தனது நச்சுக் கருத்தை விதைக்கிறது என்பதையும் பாருங்கள்.

இடஒதுக்கீடு குறித்த தங்களது நிலைப்பாட்டை முன்வைத்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலாலர் சுரேந்திரா ஜெயின் அளித்த பேட்டியில், "இடஒதுக்கீடு பிரச்சினையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.

ஆக... இந்த வன்முறை போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டு இதன் மூலம் சாதிவாரியான இட ஒதுக்கீட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். பார்பனர்களை மீண்டும் உயரிய பதவிகளில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதே இந்துத்வாவின் மறைமுக அஜண்டா. அதன் ஆரம்பமே இந்த குஜராத் கலவரம்.

3 comments:

Dr.Anburaj said...

மோடி என்றாலே தங்களுக்கு பைத்தியம் கிறுக்ககு,லூஸ்தனம்,மடத்தனம், மூளைகெட்டத்தனம்,சைக்கோபொினியா, சைக்கோசிஸ் இப்படி உலகத்தில் உள்ள மனோ வியாதிகள் அனைத்தும் தங்களை பிடித்துக் கொள்கின்றது. பட்டேல் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா ? தற்சமயம் அந்த மக்கள் பிற்பட்டவகுப்பிலா முற்பட்டவகுப்பிலா அட்டவணை இனமா ? மலைசாதி இனமா ? என்பதைப்பற்றி தாங்கள் ஏதும் கூறவில்லை. பட்டேல் சாதியினாின் தற்போதைய பொருளாதார நிிலை சமூக அந்தஸ்து நிலை அவர்களின் கோாிக்கை நியாயமாதா ? ஏற்க தக்கதா ? என்ன நிவாரணம் வழங்க தகுதி என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஏன் இப்படி சா்வ அறிவையும் தியாகம் செய்து விட்டு அடிமுட்டாள்போல கட்டுரை எழுதுகின்றீரே ? உமது வாசகா்களை சற்று மதித்தால் இப்படி கட்டுரை எழுத மாட்டீர்

Dr.Anburaj said...

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.
எவனாலும் அதைச் சாதிக்க இயலாது.ஆா.எஸ்எஸ் அப்படி ஒன்றும் முட்டாள்களின் குருடா்களின் இயக்கம் அல்ல. யதாா்தததை உணா்ந்தது. தாங்கள் நினைக்கும் தவறை ஒரு போதும் செய்யாது

Dr.Anburaj said...

முற்பட்ட வகுப்பினரும் இன்றைய காலக்கட்டத்தில் நினையவே மாறியிருக்கின்றாா்கள். திருந்தி விட்டாா்கள். இன்று சாதி என்பது திருமணம் செய்ய மட்டும்தான் என்ற நிலைக்கு சுருங்கி விட்டது.எல்லாருக்கும் எல்லா சாதியில் நண்பர்கள் உள்ளாா்கள். இன்றிலையில் பாா்பபன துவேசம் நியாயமா ? அந்த சாதியில் உள்ள ஏழைகளுக்கு-வருமானச்சான்றின் அடிப்படையில் கல்வி உதவித் தொகையாவது வழங்கலாமே ? ஏன் இவ்வளவு கொடூரத்தனம் ? அரசாங்கள் இவ்வளவு கொடுமையாக நடக்கலாமமா ? பிறாமணா்கள் நாட்டிற்கு மொழிக்கு சமூகத்திற்கு அளப்பாிய தொண்டுகள் தியாகங்கள் செய்துள்ளாா்கள் என்பதை அனைவரும் மறக்கத்தான் வேண்டுமா ? சாதித்துவேசம் எந்த சாதியில் இல்லை ? தான் சாா்ந்த அமைப்பைச் சாா்ந்தவா்களை விரும்புவதும் ஆதரிப்பதும் பிறரை சற்று ஒரம்கட்ட நினைக்கும் மனப்பான்மை எங்கும் உள்ளது.முஸ்லீம்களிடம் உண்டு.காயல்பட்டணம் முஸ்லீம்களோடு பிற முஸ்லீம்கள் சாிநிகா் சமமாக பழகுபதில் பல கஷ்டங்கள் உண்டு.கிறிஸ்தவா்களும் அப்படித்தான்.உயா் கலவி நிறுவனங்களில் கூட சாதிய மனப்பான்மை வேண்டுமா ? என் இராணுவ பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கவில்லை ???
தகுதி பெற்றவா்களை உயா்கல்வித்தகுதி பெற்றவா்களை மதிக்க வேண்டுமா இல்லையா ? உயா்கல்வித்தகுதி பெற்ற பிறாமணா்கள் வெளிநாட்டில்தான் பணியாற்ற வேண்டுமா ?
ஏன் இப்படி பொறாமை? அவனும் இந்தியன்தானே ? விஞ்சிய திறமையிருந்தும் ஏழ்மையிருந்தும் கல்வி உதவித்தொகை கிடையாது ? கல்வி நிலையத்தில் சோ்க்கை கிடையாது அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிிடையாது என்றால் என்னாவது ? பிறாமணா்களுக்கு திருவோடு தான் எடுக்க வேண்டுமா ? தமிழ்தாத்தா உடைய தமிழ் தொண்டோடு ஒப்பிடக் கூடிய தொண்டை பாா்ப்பன துவேசம் காட்டும் எவராவது செய்துள்ளாரா ? காலம் மாறிவிட்டது. பிறாமணா்களுக்கும் இன்று முற்பட்ட சாதிபட்டியலில் இருக்கும் மக்களுக்கும் சமூக நீதி வேண்டும். வேண்டும்.அநீதி நீக்கப்பட.வேண்டும்.இப்படிக்கு அ-அன்புராஜ் நாடாா்.