'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, October 31, 2015
பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி...... - மாட்டுக் கறி!
பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி...... - மாட்டுக் கறி!
மாட்டிறைச்சி சாப்பிடுவது எந்த மதத்திலும் தவறு என்று சொல்லப்படவே இல்லை. வேத கால இந்து யாகங்களில் பசுவதை சாதாரணமான ஒன்று. ”தெய்வத்தின் குரல்”
பெரியவாள் ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கூறும் அருள் வாக்கை பாருங்கள்.
“ஒருத்தன் செய்ய வேண்டியதாக 21 யக்ஞங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், ஸோம யக்ஞம் என்று மூன்று விதமான யக்ஞங்களில், ஒவ்வொன்றிலும் ஏழு வீதம் மொத்தம் 21 சொல்லியிருக்கிறது. இவற்றிலும் பாக யக்ஞம் ஏழிலும் பசு பலி இல்லை. ஹவிர் யக்ஞங்களிலும் முதல் ஐந்தில் பசுபலி இல்லை. ‘நிரூட பசுபந்தம் ‘ எனற ஆறாவது யக்ஞத்திலிருந்துதான் பசுபலி ஆரம்பிக்கிறது.
‘கூட்டம் கூட்டமாகப் பசுக்களைப் பலிகொடுத்து, பிராம்மணர்கள் ஏகமாக மாம்ஸம் சாப்பிட்டார்கள். புத்தர் கூட இப்படி யாகத்துக்காக ஓட்டிக்கொண்டு போகப்பட்ட மந்தைகளை ரக்ஷித்தார்’ என்றெல்லாம் இப்போது புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மாதிரி ஏகப்பட்ட பசுக்களை பலி கொடுப்பதாக, வாஸ்தவத்தில் எந்த யாகமும் இல்லை. பிராம்மணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக்கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.
மாம்ஸ போஜனத்தில் இருந்த ஆசையினாலேயே பிராம்மணர்கள் “தேவ ப்ரீதி” என்று கதை கட்டி, யாகம் பண்ணினார்கள் என்று சொல்வது ரொம்பவும் பிசகாகும். ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம் தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும்"
.
தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்.- ஜீவஹிம்ஸை செய்யலாமா ?
பெரியவா சொல்லிட்டா..... இனிமேல் ராம் நிவாஸ், டாக்டர் அன்பு ராஜ் போன்ற இந்துத்வவாதிகள் துவரம் பருப்பு அளவுக்கு உப்போ, புளிப்போ, காரமோ சேர்க்காமல் பசுவின் கறியை மருந்தாக நினைத்து முழுங்கி விடவும். :-)
பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி....
Friday, October 30, 2015
துபாய் ஆட்சியாளரின் பிரமிக்க வைக்கும் எளிமை!
துபாய் ஆட்சியாளர் ராஷித் அல் மக்தூம் எகிப்திய அதிபர் அப்துல் பத்தாஹ் அல் சிசியை தனது காரில் தானே ட்ரைவ் செய்து துபாயை சுற்றிக் காண்பிக்கும் காட்சி. எளிமைக்கு பெயர் போன இது போன்ற ஆட்சியாளர்களை நம் நாடும் காணுவதும எப்போது?
Thursday, October 29, 2015
கேரள ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் கிடைத்த பொருட்கள்!
கேரள மாநிலம் கண்ணுரில் ஆர்எஸ்எஸ் அலவலகத்தில் நடைபெற்ற சோதனையில் காவல் துறை கைப்பற்றிய பொருட்களே இவை. சிறுவர்களையும் இளைஞர்களையும் வழி கெடுக்கும் ஆர்எஸ்எஸ் கோர முகத்தை மக்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
தேச பக்திக்கு நாங்கள் தான் சொந்தக்காரர்கள் என்று ஓயாமல் கூச்சலிடும் பாசிச கும்பலின் மறைமுக திட்டங்கள் இவை தான். வன்முறையின் மூலம் மக்களை பிளக்க வேண்டும். அதன் மூலம் வர்ணாசிர தர்மத்தை கட்டிக் காக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸின் உண்மை முகத்தை பிற்படுத்தப்பட்ட இந்து மக்களும் தற்போது நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். பெரியாரைப் போன்ற அம்பேத்காரைப் போன்ற தலைவர்கள் முன் எப்போதையும் விட தற்போதுதான் அவசியப்படுகிறார்கள்.
பி.எம்.பார்கவா பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார்!
நாட்டின் முன்னணி விஞ்ஞானியும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனருமான பி.எம்.பார்கவா தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையிலேயே பி.எம்.பார்கவா தனது பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் 'தி இந்து'வுக்கு (ஆங்கில நாளிதழுக்கு) அளித்த பேட்டியில், "நாட்டில் தற்போது நிலவும் சூழல் தொடர்ந்தால் இந்திய தேசம் ஜனநாயக தேசம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு பாகிஸ்தான் போல் மதசார்பு நாடாக உருவாகும். நம் நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் வருத்தமளித்தப்பதாக இருக்கிறது. எனவே, எனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக உள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவிருக்கிறேன். ஒரு விஞ்ஞானியாக என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்" எனக் கூறியுள்ளார்.
அறிவியல் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்:
அண்மையில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கூடங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிலர் கலந்து கொண்டனர். அறிவியல் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு என்ன வேலை. அதேபோல் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது வருத்தத்துக்குரியது என பார்கவா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸை பாராட்ட வேண்டும்:
அவர் மேலும் கூறும்போது, "என்னுடைய நூலில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால், இப்போது அவர்களை ஒரு விஷயத்துக்காக நான் வெகுவாக பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியினர் நாம் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கெடுபிடி விதிக்கவில்லை. அதற்காக அவர்களை பாராட்டியாக வேண்டும்" என்றார்.
நாட்டில் அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் மதிப்பற்ற சூழல் உருவாகியுள்ளது என வருத்தம் தெரிவித்தார்.
அறிவியல் அறிவு குடிமகனின் கடமை:
இந்திய அரசியல் சாசனத்தின் 51 (எச்) பிரிவின்படி இந்திய மக்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது என்பது கடமை என பட்டியலிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அமைச்சர்கள் பதவியேற்க நல்ல நேரம் பார்க்கிறார்கள், பல்வேறு மூடநம்பிக்கைகளும் முன் நிறுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது விநாயகர் பால் குடிப்பதாக எழுந்த வதந்திதான்யும் பின்னர் அது உண்மையல்ல என்பதை மக்களுக்கு நாங்கள் தொலைக்காட்சி வாயிலாக செயல்முறை விளக்கம் மூலம் நிரூபித்ததுமே ஞாபகத்துக்கு வருகிறது என பார்கவா கூறியுள்ளார்.
பிரதமர் இப்படிச் செய்யலாமா?
இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் விநாயகருக்கு யானை தலை பொருத்தப்பட்டதை தொடர்புப்படுத்தி இந்தியர்களுக்கு பண்டைய காலத்திலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தெரிந்திருக்கிறது எனப் பேசினார். ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா என பார்கவா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-10-2015
மாட்டுக்காக மனிதர்களைக் கொல்லும் இந்துத்வாவாதியினரே! வெட்கித் தலை குனியுங்கள்.
Wednesday, October 28, 2015
கோமாதா பிரியர்கள் இந்த யாகங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்!
கோமாதா பிரியர்கள் இந்த யாகங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்!
கோசவம்- பசுமாடுகளை கொல்லும் யாகம்
வாயவியஸ் வேதபசு- வாயூ தேவதைகளுக்காக வெள்ளை பசுவைக் கொல்லும் யாகம்
காமயபசு- தனது எண்ணங்களை ஈடேற்றி கொள்வதற்கு உரிய பசு யாகம்
வதசொபகரணம்- கன்று குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்
அஷ்டதச பசுவிதானம் – 18 பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்
ஏகாதசீ பசுவிதானம் – 11 பசுக்களைக் கொல்லும் யாகம்
கிறாமாரணயா பசுபிர்சம்ஷா – நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களைக் கொன்று யாகம் செய்வது
ஆதித்யவேதபசு – சூரிய தேவனுக்கு பசு யாகம்
ரிஷபாலம்பன விதானம் – எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி…
கோசவம்- பசுமாடுகளை கொல்லும் யாகம்
வாயவியஸ் வேதபசு- வாயூ தேவதைகளுக்காக வெள்ளை பசுவைக் கொல்லும் யாகம்
காமயபசு- தனது எண்ணங்களை ஈடேற்றி கொள்வதற்கு உரிய பசு யாகம்
வதசொபகரணம்- கன்று குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்
அஷ்டதச பசுவிதானம் – 18 பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்
ஏகாதசீ பசுவிதானம் – 11 பசுக்களைக் கொல்லும் யாகம்
கிறாமாரணயா பசுபிர்சம்ஷா – நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களைக் கொன்று யாகம் செய்வது
ஆதித்யவேதபசு – சூரிய தேவனுக்கு பசு யாகம்
ரிஷபாலம்பன விதானம் – எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி…
மாட்டிறைச்சி சோதனை - உம்மண் சாண்டி காட்டம்!
டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் போலீஸார் 'மாட்டிறைச்சி' சோதனை மேற்கொண்ட விவகாரத்தில், அவர்கள் தவறை ஒப்புக் கொள்ளவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி எச்சரித்துள்ளார்.
கேரள அமைச்சரவையில் இந்த விவகாரம் இன்று விவாதத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, “டெல்லி போலீஸ் கடமையை மட்டுமே செய்தது என்றும், சட்டத்திற்கிணங்கவே சோதனை மேற்கொண்டது என்ற டெல்லி போலீஸாரின் வாதத்தை மத்திய அரசும் கடைபிடித்தால், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்.
மாநிலம் நடத்தும் அதிகாரபூர்வ விருந்தினர் இல்லத்தில் மாநில அதிகாரிகள் அனுமதியின்றி சோதனை மேற்கொள்வது எல்லை மீறியதாக உள்ளதோடு, சட்டத்தையும் மீறியுள்ளது. இதனால் மாநில - மத்திய உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சோதனை குறித்த டெல்லி போலீஸாரின் விளக்கம் ஒருபோதும் மாநில அரசால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது குறித்து பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்குக்கும் கடிதம் எழுதியுள்ளோம், பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
இந்நிலையில் டெல்லி போலீஸ் அளித்த விளக்கத்தை மத்திய அரசும் மீண்டும் ஒரு முறை தெரிவித்தால், கேரள மாநிலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார் முதல்வர் உம்மன் சாண்டி.
மேலும், இந்த விவகாரத்தில் ஆதரவளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
“புகார் அளித்தவரின் நம்பகத்தன்மையைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றால், இது எந்தத் தரப்பையோ திருப்தி செய்ய நடத்தப்பட்டதாகவே தெரிகிறது. தவறை ஒப்புக் கொண்டால் கேரள அரசு அமைதியடையும்” என்றார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
28-10-2015
Tuesday, October 27, 2015
சகோதரி கீதாவை காப்பாற்றிய பாகிஸ்தானிய குடும்பம்!
காது கேட்காமல் வாயும் ஊமையாகிப் போய் தனது சிறு வயதில் தவறுதலாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி பாகிஸ்தான் சென்று விட்டார் சகோதரி கீதா. அவரை 14 வருடங்களாக தனது வீட்டிலேயே தனது மகளைப் போல பாவித்து அவரது விலாசத்தையும் கண்டு பிடித்து தற்போது இந்தியாவில் அவரது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வந்துள்ள அப்துல் சத்தார் குடும்பத்துக்கு இறைவன் நன்மைகளை வாரி வழங்குவானாக!
அந்த பெண் கீதாவின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் அவர் வழிபடும் தெய்வங்களின் படங்களை ஒரு ரூமில் வைத்து அவருக்கு சகல சௌரியங்களையும் செய்து கொடுத்துள்ளது அப்துல் சத்தார் குடும்பம். 'இந்த மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை' என்ற குர்ஆனின் வசனத்தை செயல்படுத்திக் காட்டியுள்ளது இவரது குடும்பம்.
இதனிடையே கீதாவை இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த எதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையான 'டான்' வெளியிட்ட செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிதியை அறக்கட்டளை நிறுவனர் அப்துல் சத்தார் எதி பணிவுடன் மறுத்துவிட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவரது மகன் அன்வர் காஸ்மி இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாக அந்தப் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்துத்வாவாதிகளே!
இனியாவது அப்துல் சத்தாரைப் போன்று மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். மாட்டை காட்டி மனிதனைக் கொல்லும் மிருக புத்திக்கு இனியாவது விடை கொடுங்கள்.
Monday, October 26, 2015
ஜூனியர் விகடன் கேள்விகளுக்கு பி.ஜைனுல் ஆபிதீன் பதில்!
ஜூனியர் விகடன் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பாளர் பி.ஜைனுல் ஆபிதீன்........
"பாகிஸ்தான் தீவிரவாதியை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தாதீர்கள்!"_ பீ.ஜைனுல் ஆபிதீன்
''இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப் படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''
''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை.
கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக் கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.
''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?''
''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது.
நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ் நாட்டில் அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.
அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் பிறகு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும் போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''
''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''
''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது.
நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச் செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது.
தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்த போதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைது செய்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் தான், தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.
தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது.
பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம்.
இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''
''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''
''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்த வர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவு உள்ளது.
ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பா ன்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்?
நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலை செய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ள சகோதார முஸ்லிமையும் ஒன்றாக அடையாளப்படுத்தாதீர்கள்.''
தலித் எழுத்தாளர் கைகளை வெட்ட இந்துத்வாவாதிகள் முயற்சி!
கர்நாடக மாநிலம் தாவணகெரே வில் ஹூச்சங்கி பிரசாத் (23) 'ஒடல கிச்சு' (உள்ளுக்குள் நெருப்பு) என்ற நூலை கடந்த ஆண்டு வெளியிட்டார். இதில் இந்து மதத்தில் இருந்து உருவான சாதி படிநிலையும், அதன் கட்டமைப்பையும், சமகாலத்தில் நிலவும் சாதி கொடுமைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் இந்து மத அடிப்படை வாதத்தையும், தீண்டாமை கொடுமைகளையும், இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் வலியுறு த்தி பல்வேறு இதழ்களில் கட்டுரை எழுதி வந்தார்.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அதிகாலை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஹூச்சங்கி பிரசாத் மீது தாக்குதல் நடத்தியது. அவரது முகத்தில் குங்குமத்தை பூசி, சாதிக்கு எதிராக எழுதும் விரல்களை வெட்டவும் முயற்சித்தனர்.
கடுமையான தாக்குதலுக் குள்ளான ஹூச்சங்கி பிரசாத் அவர்களிடம் இருந்து தப்பி தாவணகெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதை விசாரித்த போலீஸார் மர்ம நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும், தலித் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பிரசாத்தின் நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராம் சேனா அமைப்பினரிடம் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுதவிர சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பிரசாத் தாக்கப்பட்ட இடத்தில் கிடந்த தடயங்களை கைப்பற்றியும், அருகில் இருந்தவர்களுடமும் விசாரித்து தகவல்களை திரட்டியுள்ளனர். இதையடுத்து தாவணகெரே, தார்வாடு, ஹூப்ளி ஆகிய பகுதிகளில் உள்ள சிவசேனா, நவநிர்மாண் சேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறும்போது, “எழுத்தாளர் ஹூச்சங்கி பிரசாத் மீது நடைபெற்ற தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தாவணகெரே போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக் கப்படுவார்கள். எழுத்தாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலை செய் யப்பட்டதை தொடர்ந்து, கர்நாட காவில் மற்றொரு எழுத்தாளர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து கர்நாடகா வில் பல்வேறு இடங்களில் எழுத்தாளர்களும், தலித் அமைப் பினரும் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-10-2015
Sunday, October 25, 2015
கோமாதாவுக்காக குல மகளை பலியிடப் போகிறார்களாம்!
மாட்டிறைச்சி சாப்பிட்ட கன்னட பெண் எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் பெங்களூரு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான சேத்தனா தீர்த்தஹள்ளி கன்னடத்தில் 5-க்கும் மேற்பட்ட புனைவு நூல்களை எழுதியுள்ளார். அவ்வப்போது இலக்கிய இதழ்களில் பெண் அடிமை, வரதட்சணை கொடுமை, சாதி கொடுமை ஆகியவற்றை எதிர்த்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.
நாட்டில் அதிகரித்துவரும் எழுத்தாளர்கள் மீதான வன்முறை, தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்ட விவகாரம், கோயிலுக்குள் நுழைந்த தலித் முதியவர் எரிக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றை கண்டித்து தமது பேஸ்புக்கில் அவர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்ற மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்று மாட்டிறைச்சி சாப்பிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பல்வேறு இந்துத்துவா அடிப்படைவாதிகள் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு பேஸ்புக் மூலமாகவும் செல்போன் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இன்னும் சிலர் முகத்தில் ஆசிட் வீசப்போவதாகவும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த மதுசூதன கவுடா பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில்,
‘‘இந்து மதத்தை அவமதித்து மாட்டிறைச்சி சாப்பிட்டதால் கல்புர்கியைப் போல சேத்தனா தீர்த்தஹள்ளியை கொலை செய்வேன்’’ என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சேத்தனா தீர்த்தஹள்ளி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹனுமந்த் நகர் காவல் நிலையத்தில் மதுசூதன கவுடாக்கு எதிராக புகார் அளித்தார். போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதித்ததால் நேற்று பெங்களூரு மாநகர துணை ஆணையர் லோகேஷ் குமாரை சந்தித்து புகார் அளித்தார்.
இதனை பெற்றுக்கொண்ட லோகேஷ் குமார்,
‘‘எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த காவல் நிலையத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்வார்கள்’’என்றார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
25-10-2015
நமது நாட்டை நாசமாக்கியே தீருவோம் என்று வெறி பிடித்த இந்துத்வா கூட்டம் களமிறங்கியுள்ளது. கண்டிப்பாக இவர்களின் முயற்சியை பெரும்பான்பை இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் முறியடிப்பார்கள். இந்துக்களாலேயே இந்துத்வாவாதிகள் அடித்து விரட்டப்படும் காலமும் வரும். அது வரை பொறுத்திருப்போம்.
Saturday, October 24, 2015
ஆரிய ஆர்.எஸ்.எஸின் சதிகளும் தமிழக சவால்களும்!
மத்தியில் இப்போது பாஜக அரசு ஆட்சி நடத்தினாலும் அவர்களை எல்லா துறைகளிலும் இயக்கும் இயங்குசக்தியாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்தான் என்பது அரசியல் தெரிந்த சாதரணமானவர்களுக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இந்த மதவெறிக் கும்பலான ஆர்.எஸ்.எஸ்சின் நோக்கத்தை அறிந்து கொண்டால் தான் அவர்களின் எதிர்கால சதிதிட்டமென்ன என்பன போன்ற பலவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்.
இந்த மதவெறிக் கும்பல் அடுத்த இலக்காக வைத்திருப்பது அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் இரு மாநிலத் தேர்தல்கள் தான். அதில் ஒன்று மேற்கு வங்காளம், மற்றொன்று தமிழகம். இந்த சூழ்நிலையில் இவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் வண்ணம் இந்த சிறியக் கட்டுரையை எழுதுகிறோம். இதுவே முழுமையானது அல்ல.
முதலில் ஆர்.எஸ்.எஸின் நோக்கத்தை தெரிந்து கொண்டால் தான் அதன் இன்றைய செயல்பாடுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதாவது இந்தியா இந்துக்களின் நாடு என்றும், இங்கு வாழும் அனைவரும் இந்துக்களே என்றுகூறி மத அடிப்படைவாதத்தையும், சிறுபான்மையினர் மற்றும் தேசிய இனங்களை சேர்ந்தவர்களுக்கு எதிரான முழக்கத்தையும் முன்வைத்து, 1925ல் ஆர்.எஸ்.எஸ் உதயமாகிறது. அன்றிலிருந்து தனது அடிப்படைவாதத்திற்கு வலுவூட்ட பல்வேறு மதக்கலவரங்களையும், கொலைகளையும் செய்து வருகிறது. அதன் உச்சம் தான் கோட்சே என்பவனை வைத்து காந்தியை சுட்டுக் கொன்றது.
இப்படி கொடூரமான செயலை செய்த ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது இதுவரை நான்கு முறை இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டோமென்று மன்னிப்பு கேட்டு தடையை நீக்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு மோசமான இயக்கமான ஆர்.எஸ்.எஸின் பிடியில் தான் இந்தியா சிக்குண்டுள்ளது. இவர்களின் கருத்துகளை வலுவூட்ட கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும். அப்படிப்பட்ட சூழல் தான் இப்போது இருக்கிறது என்பதை உணர்ந்து தான் மோடியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
மோடி வருகையும் ஆர்.எஸ்.எஸின் திட்டமும்:
கடந்த ஜீலை’2013 அன்று மஹாராட்டிராவிலுள்ள அமராவதி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் ஆரிய இனவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ்சின் கூட்டம் நடைபெற்றது. அதில் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. இதுதான் சிறந்த நேரம் ஆர்.எஸ்.எஸின் துணையுடன் பாஜகவை ஆட்சியில் ஏற்றி நமது கொள்கைகளை நாடெங்கும் கொண்டு செல்வோமென்று மேற்கு வங்கம் மற்றும் ஓரிசாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பேசினார்கள்.
அதன் விளைவே இளம் வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்சின் நீண்ட கால உறுப்பினரும், குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களைப் படுகொலை செய்த மோடியை சீனியரான அத்வானியை ஓரம்கட்டி பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறார்கள். பெரிய பெரிய கார்ப்ரேட் முதலாளிகளும் மோடியைக் கொண்டுவர கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க, விளம்பரங்கள் மூலமே 26 மே 2014ல் ஆட்சியை பிடிக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.
பாஜகவில் ஆர்.எஸ்.எஸின் ஆட்கள்:
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸின் வேலை தொடங்குகிறது. அதாவது மோடியின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸில் இருந்த ஏழு பேருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அதில் முக்கியமானவர் வெளியுறவுத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங். இவர்தான் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவர வேண்டுமென்று தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார்.
மேலும் அந்த கட்சியில் தலைவராக அமித் ஷாவை கொண்டு வருகிறார்கள். இவர் ஒரு அதிதீவிரமான ஆர்.எஸ்.எஸ்காரர். அதுபோக கட்சியில் தற்போது பொதுச் செயலாராக இருக்கும் ஐந்துபேர்களில் மூன்று பேர் (ராம் மாதவ், ராம் லால் மற்றும் முரளிதரராவ்) ஆர்.எஸ்.எஸினால் நேரடியாக பாஜகவுக்கு அனுப்பப்பட்டவர்கள். மீதமுள்ள இரண்டு பேர் (புபேந்திர யாதவ் மற்றும் சரோஜ் பாண்டே) ஆர்.எஸ்.எஸிடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இதுபோக இதுவரை இல்லாத நடைமுறையாக அமித் ஷா நான்கு இணைச் செயலாளர்களை நியமிக்கிறார். அவர்கள் நால்வரும் ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்தவர்கள்.
மேலும் நாட்டின் மிக முக்கிய பொறுப்புகளான பண்பாடு, கலாச்சாரம், கல்வி முதலியனவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸின் ஆட்களே நியமிக்கப்படுகிறார்கள். உதாரணமாக
1. ஆர்.எஸ்.எஸ் ஊறுப்பினரான கஜேந்திர சவுகான் இந்தியாவின் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி இயக்குனரகத்தின் தலைவராகிறார்.
2. ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான பல்தேவ்சர்மா தேசிய புத்தக அறக்கட்டளைக்கு தலைவராகிறார்.
3. ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருக்கின்ற இந்தர் மோகன் காபபி என்பவர் பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினராகிறார்.
4. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான ஓய்.சுதர்சன ராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்படி நாடு முழுவதையும் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் அதி தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸின் தற்போதைய செயல்திட்டங்கள்
ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை இந்தியாவெங்கும் பரப்ப, அதிகாரம் தனது கைகளில் இருக்கும் இந்த நேரம் தான் சரியானது என்று முடிவெடுத்து எந்தெந்த மாநிலங்களெல்லாம் தனக்கு செல்வாக்கு இல்லையோ, அங்கே மத அடிப்படை வாதத்தையும் போலி மோதல்களையும் உருவாக்கி அதன்மூலம் தனது செல்வாக்கை நிலைநிறுத்த தற்போது தீவிரமாக முயற்சி செய்கிறது. இதை தற்போது நடந்து கொண்டிருக்கும் பீகார் தேர்தலைப் பார்த்தாலே நமக்குப் புரியும்.
2014ல் உத்ரபிரதேசத்தில் அமித் ஷாவை தலைவராகக்கொண்டு ஆர்.எஸ்.எஸின் காவி தொண்டர்களும், பாஜகயினரும் சேர்ந்து தேர்தலை சந்தித்தனர். இதில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக 71 இடங்களை கைப்பற்றியது. அதேபோல அடுத்தடுத்து நடக்கும் எல்லா மாநிலத் தேர்தலைகளையும் குறி வைத்திருக்கிறது. அதில் தற்போது முதலில் இருப்பது பீகார், அடுத்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழகம் தான்.
உத்திரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ் தொண்டனும் 100 பேரையாவது பாஜகவுக்கு வாக்களிக்க வைக்க வேண்டுமென்றும், மேலும் அந்த 100 பேருக்கும் தான் ஒரு இந்து என்றும், சிறுபான்மையினர் நமக்கு எதிரிகள் என்றும் நம்ப வைக்க வேண்டும் என்பது தான் அயோக்கியன் அமித் ஷாவின் தேர்தல் வியூகம். அதன்படியேதான் தற்போது மேற்கு வங்காளத்திலும் தமிழகத்திலும் தனது வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்கிறது.
ஆர்.எஸ்.எஸின் செயல்திட்டமும் மேற்குவங்கம் மற்றும் தமிழகம் ஓப்பீடும்
மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு இரண்டும் மத அடிப்படை வாதத்தை மிகத் தீவிரமாக எதிர்க்கும் மாநிலங்கள். அதிலும் குறிப்பாக தமிழகம் இவர்களின் புரட்டுக்களை இராண்டாயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வந்தவர்கள். மேற்கு வங்காளம் கம்யூனிச சித்தாந்தத்தையும், தமிழகம் பகுத்தறிவு சித்தாந்தத்தையும் கொண்ட மாநிலங்கள்.
இந்தச் சூழலில் மேற்கு வங்காளத் தேர்தல் குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் இந்த வருடத்தில் மட்டும் 5 முறை நடந்துள்ளது. கடந்த முறை 2011ல் நடந்த தேர்தல்களில் மொத்தமிருக்கிற 290 இடங்களில் ஒரு இடம் கூட பாஜக வெல்லவில்லை என்பதை மாற்ற வேண்டுமென்று மோடி விரும்புகிறார் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா பேசியிருக்கிறார். மேலும் இங்கு யார் தலைவராக வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்சே முடிவு எடுத்துக் கொள்ளலாமென்றும் ஓப்புதல் அளித்திருக்கிறார் அமித் ஷா. மேலும் மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுவதன் மூலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை முழுவதையும் மற்றும் சீனா எல்லையோரத்தையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆர்.எஸ்.எஸ் பேசியிருக்கிறது. இதனை பாஜகவின் மூத்த தலைவரான சித்தார்த் நாத் சிங் தனது பேட்டி ஒன்றில் அறிவித்தார்.
இதனையடுத்து மேற்குவங்காளத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிட்டது,. முதன்முறையாக அந்தத் தேர்தலில் அனைத்து உள்ளாட்சி பொறுப்புகளுக்கும் ஆளை நிறுத்தி தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டது. அந்த தேர்தலில் குறைந்தளவு வெற்றியை பெற்ற போதிலும் அதாவது மொத்தமிருந்த 1943 இடங்களில் வெறும் 16லிருந்து 74 இடங்களையே பெற்றிருந்தது. இருந்தாலும் எங்களுக்கும் மேற்கு வங்காளத்தில் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிற்கவைக்க ஆட்கள் இருக்கிறார்கள்; நாங்களும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் மம்தா பேனர்ஜியின் கட்சிக்கு இணையாக இங்கு இருக்கிறோமென்று மக்கள் மனதில் நிலைநிறுத்தியது. அடுத்ததாக அது கையில் எடுத்தது மதச்சண்டைகள்.
மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை 1971ல் வங்கதேசம் தனிநாடாகப் பிரிந்த போது உருவான இந்து முஸ்லீம் பிரச்சனைகளை தவிர, அங்கு அதன் பிறகு பெரிதாக மதச்சண்டைகள் உருவாகவில்லை. ஆனால் இன்று தொடர்ச்சியாக அங்கு மதச்சண்டைகளை உருவாக்கும் விதமாக தொடர்ந்து பேசி சிறுபான்மையினருக்கு எதிரான அணி திரட்டலை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
இதுதான் தமிழகத்திலும் நடந்தது/நடக்கிறது. சற்று யோசித்துப் பார்த்தால் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது அது பெற்ற இடங்கள் கார்ப்ரேசன் கவுன்சிலர் 4, முனிசிபால்டி சேர்மன் 2, முனிசிபால்டி கவுன்சிலர் 37, பாஞ்சாயத்து தலைவர் 13 மற்றும் வார்டு மெம்பர் 181 பேர் என மொத்தம் 237 இடங்களை கைப்பற்றி, திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது. அதன் மூலம் ஒரு பெரிய கூட்டணியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தி பாஜக என்ற கட்சியை மாற்று கட்சியாக முன்னிலைப்படுத்தியது.
மேலும் தனக்கு வேண்டிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரைத்து, அதன் மூலம் கிராமம் தோறும் தமிழகத்தில் காலூன்றுகிற ஒரு முயற்சியையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக செய்கிறது.
இது ஒருபுறமென்றால் மறுபுறம் முன்னைவிட வீரியமாக அவ்வப்போது மாட்டிறைச்சிக்கு தடை, இடஓதுக்கீடுக்கு எதிரான முழக்கங்கள், பகவத் கீதையை புனித நூலாக அறிவிக்க வேண்டுமென்று புதுப்புது சர்சைகளைக் கிளப்பி அதன் மூலம் மக்கள் மனநிலையையும் முற்போக்கு இயக்கங்களின் மனநிலையையும் எடை போடுகிறது. மேலும் தனக்கு சாதகமான ஆட்களை காட்சி ஊடகங்களில் வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸின் கருத்துகளை மக்கள் கருத்தாக மாற்றும் வேலையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையும் சிலர் ‘நாமெல்லாம் இந்துக்கள் தானே, ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தால் நல்லது தானே’ என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறுயில்லை. ஏனென்றால் ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி சொன்னது ’சிங்களவர்களுக்கும் எங்களுக்கும் ஆரிய உறவு’ என்று. அப்படியானல் தமிழர்கள் யார்? அவர்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கிறது தமிழர்கள் வேறு; இந்துக்கள் வேறு என்று. ஆனால் இங்கு தான் சிலர் ‘என் பெயர் கோபலாகிருஷ்ணன்’ என்று 16வயதினிலே சப்பாணி மாதிரி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவன் தமிழர்களை எதிரியாகவே பார்க்கிறான்/பார்ப்பான்.
ஒருவேளை இந்தியாவெங்கும் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுகிறதென்றால் அது ஒடுக்கப்பட்ட மக்கள் தேசிய இனமக்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவே இருக்கும். இதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாயாஜி ஜோசி சமீபத்தில் தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதாவது “இந்துஸ்தான் என்பது இந்துக்கள் வாழும் இடம். எனவே இங்கு வாழும் அனைவருமே இயற்கையாகவே இந்துக்கள் தான். இதனை மறுப்பவர்கள் இங்கு இருக்கத் தேவையில்லை” என்ற பகிரங்க மிரட்டலை விடுத்திருக்கிறார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று வெளியுலகை நம்ப வைத்துக்கொண்டு அதற்கு வேட்டுவைக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் இந்த ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலையும் அதன் அரசியல் வடிவமான பாஜகவையும் மக்கள் புரிந்துகொண்டு புறக்கணிக்க வேண்டும். இதனை தமிழர்களாகிய நாம் தொடங்கி வைப்போம்.
- சு.கி.கொண்டல், மே 17 இயக்கம்
எழுத்தாளர்: சு.கி.கொண்டல்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2015
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கை வண்ணம்.....
Friday, October 23, 2015
ஹரியானாவில் மற்றொரு தலித் சிறுவன் அடித்து கொலை!
ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனாபேட் மாவட்டத்தில் அமைந்துள்ள கோஹானா கிராமத்தில் 14 வயதே ஆன ஒரு தலித் சிறுவன் புறா திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மேல் சாதி காவல்துறை கயவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளான். கோவிந்த் என்ற இந்த சிறுவனை அடித்து கொன்று பிறகு தூக்கில் ஏற்றியுள்ளது காவல்துறை.
புறா திருடியதாக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கு கோவிந்த் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். அவனை மீட்க அவனது தாய் காவல் நிலையம் சென்றபோது லஞ்சம் கேட்டுள்ளது காவல்துறை. கேட்ட பணத்தையும் கொண்டு வந்துள்ளார் கோவிந்தின் தாய். ஆனால் 'எங்கள் காவலில் இருந்து தப்பி விட்டான்' என்று காவல் துறை சொல்லியுள்ளது. ஒரு சிறுவன் போலீஸ் காவலில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? அவனை அடித்து கொன்று விட்டு நாடகமாடுகிறது காவல் துறை.
மாட்டுக் கறியை புனிதமாக்கி அதனை சாப்பிடுபவர்களை எல்லாம் எதிரிகளாக்கினர் இந்துத்வவாதிகள். அதன் பலனை இன்று அனுபவித்து வருகிறது நமது நாடு. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இரண்டு தலித் பிஞ்சுகளை உயிரோடு கொளுத்தினர் இந்துத்வாவாதிகள். நேற்று கோவிந்த் என்ற இளைஞன் அடித்து கொல்லப்பட்டுள்ளான்.
அன்றே இந்தத்வாவாதிகளை இந்துக்கள் கடுமையாக தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இனியாவது நடுநிiலை இந்துக்கள் இந்துத்வாவாதிகளுக்கு எதிராக கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும். அதற்கு இஸ்லாமியர்களும் கிருத்தவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இனியும் தாமதித்தால் நமது இந்தியாவை இந்த இந்துத்வாவாதிகள் சோமாலியா ரேஞ்சுக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
தகவல் உதவி
NDTV
23-10-2015
Thursday, October 22, 2015
இந்தியர்களுக்கு இலவச உணவு வழங்கும் பாகிஸ்தானியர்!
சில நாட்களுக்கு முன் மும்பையில் ஒரு பாகிஸ்தானிய குடும்பம் விடுதி கிடைக்காததால் நடு ரோட்டில் தங்களின் பொழுதை கழித்ததை மறந்திருக்க மாட்டோம். இந்திய அரசும் பாகிஸ்தானிய அரசும் போட்டி போட்டுக் கொண்டு இரு நாட்டு மக்களையும் பிரித்து வைத்தே தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். சில அரசியல் அமைப்பினரோ பாகிஸ்தானை இந்தியாவின் எதிரியாகவே, இந்திய மக்களுக்கு சித்தரித்து வருகின்றனர். 'பாகிஸ்தானை சேர்ந்தவர்' என்றாலே அவர் 'இந்தியாவுக்கு எதிரானவர்' என்ற எண்ணம் பல இந்தியர்களின் மனதில் ஆணி வேராக பதிந்திருக்கின்றது.
இதை தகர்க்கும் வகையில் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான இக்பால் லத்திஃப், ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். பாகிஸ்தானை சுற்றிப் பார்க்க குறுகிய கால விசாவில் வருகை தரும் அனைத்து இந்தியர்களுக்கும், தனது 'டங்கின் டோனட்ஸ்' உணவகத்தின் அனைத்து கிளைகளிலும் உணவும், டோனட்டும் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை இக்பால் விடுத்துள்ளார். பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத், லாகூர், பேஷாவர் ஆகிய நகரங்களில், உலகப் புகழ் பெற்ற டோனட் உணவகமான டங்கின் டோனட்ஸின் 26 கிளைகளின் உரிமையாளரான இக்பால், இந்த அறிவிப்பை விடுத்த சில நாட்களில் 2400 க்கும் அதிகமான இந்தியர்கள், தனது உணவகங்களில் உண்டு மகிழ்ந்ததாக கூறி பெருமை கொள்கிறார்.
'ஒரு பாகிஸ்தானிய குடும்பம் தங்குவதற்கு இடமின்றி காவல் நிலையத்திலும் ரோட்டோரத்திலும் தங்கியிருந்ததை பத்திரிக்கைகளில் படித்தேன். இது என்னை மிகவும் பாதித்தது. இது போன்று மனிதர்களுக்குள் பிறந்த நாட்டை வைத்து வெறுப்பை வளர்க்காமல் நட்புக் கரம் நீட்ட என்னால் ஆன சிறிய முயற்சியே இது' என்கிறார் இக்பால் லத்தீஃப்.
வாழ்த்துக்கள் இக்பால் லத்தீஃப் அவர்களே!
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
Wednesday, October 21, 2015
தீயில் பொசுங்கிய இளம் தளிர்கள்! சாதி வெறியின் கோரம்!
உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட ஹரியாணா மாநிலம் சன்பெட் கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தின் உறவினர்கள் நீதி கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் தலித் வீட்டுக்கு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி புறநகர் பகுதியில் சன்பெட் கிராமத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இச்சம்பம் நடந்தது. ஜிதேந்தர் (31), அவரது மனைவி ரேகா (28), அவர்களின் இரண்டரை வயது குழந்தை வைபவ், 11 மாத குழந்தை திவ்யா ஆகியோர் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த சிலர் ஜிதேந்தரின் வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், இரு குழந்தைகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த னர். ரேகா படுகாயமடைந்தார். ஜிதேந்தருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை எண் 2-ல் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இறந்த குழந்தைகளின் சடலுங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு குவிந்த போலீஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
21-1-2015
அடப் பாவிகளா! அந்த பிஞ்சுக் குழந்தைகள் என்னடா செய்தது உங்களை! இந்துத்வ வெறிக்கு ஒரு அளவில்லையா? மோடி இதற்கும் வாய் திறக்க மாட்டாரா? வெளி நாட்டினர் இந்த செய்தியை கேள்விப் பட்டால் மூஞ்சியிலேயே காறி துப்ப மாட்டார்களா? அந்த தலித்தும் உனது இந்து மதத்தை சேர்ந்தவன்தானே! அப்படி என்ன வன்மம் உனக்கு உழைக்கும் மக்களின் மேல்? இன்னும் நான்கு ஆண்டுகளில் எனது தாய் நாட்டை இந்துத்வ வெறிக் கும்பல் சுடுகாடாக ஆக்கி விட்டுத்தான் ஓயும் போல் இருக்கிறது.
Tuesday, October 20, 2015
ஆஷூரா நோன்பு நினைவூட்டல்......
வரும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நபிகள் நாயகம் வலியுறுத்திய ஆஷூரா நோன்பை கடைபிடித்து அதிகமதிகம் நன்மைகளை பெற்றுக் கொள்வோம். அதே போல் நபிகளின் பேரன் ஹூசைன் அவர்கள் இறந்ததற்காக நாங்களும் துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்ற பெயரில் உடலைக் கீறிக் கொண்டு ரோடுகளில் தீமிதிக்கும் ஷியாக்கள் தங்கள் தவறை உணர்ந்து இஸ்லாம் காட்டிய வழியில் நோன்பை கடைபிடிப்பார்களாக!
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்”
(ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),
-----------------------------------------
ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)
-----------------------------------------
எதிர்வரும் வருடம் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன் என நபி அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
ஆதாரம் : முஸ்லிம்)
-----------------------------------------
Monday, October 19, 2015
ஸ்மிருதி ராணிக்காக எம்பிஏ பட்டத்தை வாங்க மறுத்த காஷ்மீரி!
Islamic University of Science and Technology (IUST) படித்து எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார் காஷ'மீர் இளைஞர் சமீர் கோஜ்ரி. இன்று 19ம் தேதி பட்டத்தை வாங்கியிருக்க வேண்டும். பட்டத்தை வழங்கவிருப்பது மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி என்று தெரிய வரவே விழா மேடைக்கே வரவில்லை இந்த காஷ்மீரி இளைஞர். இது பற்றி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது
'தற்போதய இந்திய சூழலை வைத்து 41 எழுத்தாளர்கள் நாடு தழுவி தாங்கள் வாங்கிய அவார்டுகளை திருப்பி தருகின்றனர். ஒரு மாணவனுக்கு பட்டம் வாங்குவது என்பது வாழ்நாள் கனவு. அந்த கனவை கறை படிந்த கைகளுக்கு சொந்தக்காரரின் கையால் வாங்க என் மனம் ஒப்பவில்லை:'
என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்.
இந்துத்வாவாதிகளுக்கு சரியான பதிலைக் கொடுத்துள்ளார் சமீர். மதம் பிடித்து அலையும் இந்துத்வாவாதிகளை இனி மாணவர்கள்தான் அடக்க வேண்டும்.
தகவல் உதவி
NDTV.COM
TIMES OF INDIA
19-10-2015
Sunday, October 18, 2015
நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
ராமேசுவரம் சென்றிருந்தேன். உலகின் மிக நீண்ட பிராகாரத்தைக் கொண்டது ராமநாதசுவாமி கோயில். கோபுர வாசலை ஒட்டியுள்ள அனுமன் முகத்தில் செந்தூரப்பூச்சு. அடுத்து தனுஷ்கோடி நோக்கிப் பயணம். வழியில் நம்புநாயகி அம்மன் கோயில். நம்புநாயகி அம்மன் முகத்தில் செந்தூரப்பூச்சு. தனுஷ்கோடியின் காவல் தெய்வம் முத்துமாரியம்மன்.
தனுஷ்கோடி கடலோடிகள் வாழ்வின் ஒரு பகுதி என்றும்கூட இதைச் சொல்லலாம். ஊரில் பெரும்பாலானோர் பெயர்கள் மாரி, முத்து, முத்துமாரி, மாரியம்மாள் இப்படி இருக்கும். கடற்கரையில் புதிய வடிவில் ஒரு கோயில் முளைத்திருக்கிறது. சிலைகள் எதிலும் நம்மூர் பாணி இல்லை. வடக்கிலிருந்து உபயமாக வந்தடைந்த சிலைகள் என்கிறார்கள். உள்ளூர் மாரியம்மனுக்கு இப்போது சவாலாக ஆரம்பித்திருக்கிறது பெருந்தெய்வ வழிபாடு.
தமிழகத்தின் கோயில் நகரங்களான கும்பகோணம், காஞ்சிபுரம் செல்லும்போது ஒவ்வொரு முறையும் வழியில் புதுப்புது கோயில்கள் முளைப்பதைப் பார்க்க முடிகிறது. கோபுரங்கள் / விமானங்களில் தொடங்கி உள்ளே இருக்கும் சாமி சிலைகள், வழிபாட்டு முறைகள் வரை எல்லாம் புதுப் பாணி. இந்தியர்களின் எல்லை கடந்த ஆன்மிகப் பயணங்களும் உறவுகளும் பங்களிப்புகளும் வரலாறு முழுக்க விரவிக் கிடக்கின்றன. ஆனால், இந்தப் புதிய கலாச்சாரத்தையும் அதன் தொடர்ச்சியாகப் பார்க்க முடியுமா? முடியாது.
இதன் பின்னுள்ளவர்களைத் தேடினால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பெயர் ஒலிக்கிறது நன்கொடையாளர் ரூபத்தில். உள்ளூர் மக்களுக்கோ, வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கோ இதில் நேரடித் தொடர்பு இல்லை. ஊருக்கு ஊர் வெவ்வேறு கடவுள்கள். அந்தந்த ஊரின் இயல்போடும் எளிதில் நெருங்கிப் பொருந்தக் கூடிய வகையிலுமான கடவுள்கள். ஆனால், இக்கோயில்கள் உருவாக்கும் கலாச்சாரம் ஒருமித்தது.
“ஷீர்டி சாய்பாபாவின் ஆரம்ப கால ஓவியங்கள், சிலைகளில் அவர் கன்னம் ஒட்டிப்போயிருக்கும். இப்போது கவனிக்கிறீர்களா? கன்னம் பூச ஆரம்பித்திருக்கிறது. புதிய ஓவியங்கள், சிலைகளில் மோடி மாதிரி இருக்கிறார் சாய்பாபா” என்றார் நண்பர் சங்கர். அப்படிப் பார்த்தால், அப்படியும் தெரிகிறார். எது ஒன்றையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
தமிழகத்தில் எங்கெல்லாம் கோயில்களில் செந்தூரம் புதிதாக நுழைகிறதோ அங்கெல்லாம் நிலத்துக்கு அடியில் சங்கப் பரிவார வேர்கள் பரவுவதை உணர முடிகிறது. ராமேசுவரத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் ‘தமிழ்நாடு விடுதி’யில் தங்கல். விடுதி உணவகத்தில் அசைவத்துக்கு இடம் இல்லை. கூடவே, உணவகம் முழுக்க சைவப் பிரச்சாரம். வாசல் சுவர் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரொட்டி கேட்கிறது: “நாங்கள் ஏன் சைவமாக இருக்கிறோம் என்று கேட்காதே! மாறாக, நீ ஏன் சைவமாக இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்!”
உலகின் மிகச் செழிப்பான கடல் பகுதியைக் கொண்ட ராமேசுவரத்துக்கு நிறைய விசேஷங்கள் உண்டு. முக்கியமானது, இந்தியக் கடற்பரப்பில் காணப்படும் 2,200 மீன் இனங்களில் 450 இனங்கள் கண்டறியப்பட்ட ராமேசுவரம் கடல். இங்கு கிடைக்கும் மீன்கள் பல வேறு எங்கும் சாப்பிடக் கிடைக்காதவை. தவிர, அசைவ சமையலில் ராமேசுவரத்துக்குத் தனிப் பாரம்பரியம் உண்டு. இந்திய - இலங்கை - அரேபிய - பாரசீக சமையல் கலாச்சாரத்தின் கூட்டுக் கலவை அது.
ஒரு அலை கொஞ்சம் ஓங்கி அடித்தால், விடுதிக்குள் வந்து தண்ணீர் விழும்; கடலுக்கு அவ்வளவு நெருக்கமாகக் கரையில் கட்டப்பட்டிருக்கிறது ‘தமிழ்நாடு விடுதி’. கடலோடிகளின் நகரத்தில், கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு அரசுசார் விடுதியில் மீன் உணவு இல்லை என்றால், நாம்தான் நியாயமாகக் கேள்வி எழுப்ப வேண்டும். மாறாக, ஏன் விடுதி நிர்வாகம் நம்மைப் பார்த்துக்கேள்வி எழுப்புகிறது? கோயிலைக் காரணமாகச் சொன்னார் ஒரு ஊழியர்.
இந்தியாவில் கோயில் இல்லாத ஊர் ஒன்று உண்டா? தவிர, கடவுளையே சைவம் அல்லது அசைவம் ஆக்க நாம் யார்? பதில் இல்லை. விடுதியை விட்டு வெளியேறும்போது, அது கண்ணில் பட்டது. கடற்கரையில், விடுதிக்கு வெளியே கொஞ்ச தூரத்தில் மண்ணில் நிறுவப்பட்ட நடுகல். சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘பலிதான இடம்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். சூழலையும் சூழலுக்கான பின்னணியையும் சொல்லாமல் சொல்லும் குறியீடுபோல இருந்தது அது!
மாட்டிறைச்சி தொடர்பாக நிறைய விவாதங்கள் நடக்கின்றன. படித்ததில் கவனிக்க வைத்தவர்கள் இருவர். முதலாமவர், நாட்டின் குறிப்பிடத் தகுந்த பத்திரிகை யாளர்களில் ஒருவரும் மோடி ஆதரவாளருமான சுவாமிநாத ஐயர். நான் மாட்டிறைச்சி சாப்பிடுபவன் என்ற பிரகடனத்துடன் தன் கட்டுரையைத் தொடங்கும் சுவாமிநாத ஐயர், பண்டைய காலத்தில் மேல் சாதியினராகக் கருதப்பட்டவர்களும் ரிஷிகளும்கூட மாட்டிறைச்சி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்று விரிவாக விளக்குகிறார். ‘மகாபாரத’த்தில் வரும், ஒவ்வொரு நாளும் 20,100 கால்நடைகளைத் தனது விருந்தினர்களுக்குப் பரிமாறிய அரசனைக் குறிப்பிடுகிறார்.
கி.பி. எட்டாவது நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்படும் பவபூதியின் ‘உத்தர-ராம-சரித்திர’ நாடகத்தைக் குறிப்பிடுகிறார். அதில், சமைத்து வைத்திருந்த பசுவின் இறைச்சியை வசிஷ்டர் கடகடவென்று சாப்பிடுவதைப் பற்றி விவரிக்கும் சவுதாஹடகி - தண்டாயனா உரையாடலைக் குறிப்பிடுகிறார். “பவபூதி எடுத்துக் காட்டியதைப் போல மாட்டுக்கறியைச் சாப்பிடுவது பண்டைய இந்துக் கலாச்சாரம்தான்” என்று சொல்லும் அவர், “வசிஷ்டர் காட்டிய வழியில் மகிழ்ச்சியோடு செல்லும் பிராமணன் நான்” என்று கட்டுரையை முடிக்கிறார்.
இன்றைக்கு இந்துத்வத்தைக் கையில் ஏந்தி நிற்பவர்கள் எந்த மதத்தையும் வரலாற்றையும் அதன் அடியாதாரமாகக் கருதுகிறார்களோ அதில் உள்ள பன்மைத்துவம், முரண்கள் மீது உள்ளிருந்தே வெளிச்சம் பாய்ச்சுகிறார் சுவாமிநாத ஐயர்.
இரண்டாமவர், தலித்திய சிந்தனையாளர் ஸ்டாலின் ராஜாங்கம். மாட்டிறைச்சியை வெறுமனே தலித்துகள் / முஸ்லிம்களோடு மட்டுமே பொருத்திப் பேசப்படும் அரசியலை ஸ்டாலின் ராஜாங்கம் கேள்விக்குள்ளாக்குகிறார். “மலம் அள்ளுவது, பிணக்குழி வெட்டுவது, செத்த மாட்டை அகற்றுவது என்று கடந்த காலங்களில் எதையெல்லாம் சாதியின் பெயரால் தலித்துகளின் மீது சுமத்தினார்களோ அதையெல்லாம் தூக்கியெறிந்து வந்திருப்பதே கடந்த ஒரு நூற்றாண்டு பயணப்பாடு. முன்பு சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்ட அடையாளத்தை இன்றைக்குச் சாதி ஒழிப்பின் பெயரால் நியாயப்படுத்துவதும் சாதி அடையாளத்தை மறுவுறுதி செய்வதுதான்.
தலித்துகளின் அடையாளம் என்று ஏனைய சாதியினரால் சுமத்தப்படும் மாட்டிறைச்சி அடையாளத்துக்கும் இது பொருந்தும். ஒரு தலித் மாட்டிறைச்சியை விரும்பி உண்பது அவருடைய உணவு உரிமை, சுதந்திரம். ஆனால், அதையே தலித் அடையாளமாக்கி அவர் மீது பிறர் சுமத்துவது சாதிய வன்முறை” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். இந்தக் கூற்று முஸ்லிம்களுக்கும் பொருந்தும்.
இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு அப்பாற்பட்டு மாட்டிறைச்சியை விரும்பிச் சாப்பிடுபவர்களில் எல்லா இனங்களைச் சேர்ந்தவர்களுமே இருக்கிறார்கள். அதேசமயம், தலித்துகள், முஸ்லிம்களில் அதிகமானோர் மாட்டிறைச்சியைச் சாப்பிட முக்கியமான காரணம், அவர்களுடைய பொருளாதார நிலை. இந்தியச் சூழலில் பொதுப் புத்தியிலுள்ள மாட்டிறைச்சி தொடர்பான மாடு இந்துக்களின் புனித பிம்பம் அல்லது தலித்துகள், முஸ்லிம்களின் உணவுக் கலாச்சாரத்தின் பிம்பம் எனும் - இரு மாறுபட்ட கருத்தாக்கங்களின் அசலான பின்பகுதியை சுவாமிநாத ஐயரும் ஸ்டாலின் ராஜாங்கமும் தொட்டுக்காட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது.
வரலாறு, நீண்ட கலாச்சாரம் இவற்றையெல்லாம் தாண்டியும் தனி மனித நம்பிக்கைகளுக்கு மதிப்பு இருக்கிறது. ஆனால், அதற்கான எல்லையின் விளிம்பு அவரவருடன் முடிந்துவிடுகிறது. அடிப்படையில் உணவு என்பது உணவு. அதைத் தாண்டி கவனிக்க வேண்டியது, கோடிக்கணக்கானவர்கள் பிழைப்பு. பெரும்பான்மை இந்தியர்களுக்கு இதில் எந்தக் குழப்பமும் இல்லை.
இந்திய விவசாயிகளுக்கு, பயிர்களைத் தாண்டியுள்ள ஒரே ஆதாரம் கால்நடை வளர்ப்பு. 1947-ல் 19.87 கோடியாக இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை இன்றைக்கு 52.9 கோடி. இதில் மாடுகளின் எண்ணிக்கை 2.98 கோடி. ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படும் மாடுகளில் 30% மட்டுமே இறைச்சிக்காகச் செல்கின்றன; மீதி 70% பல்வேறு வணிகப் பயன்பாட்டுக்காகச் செல்கின்றன. உற்பத்தியாகும் மாட்டிறைச்சியில் கணிசமான அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகிலேயே மாட்டிறைச்சியில் இன்றைக்கு முதலிடத்தில் இருப்பது இந்தியா. கிட்டத்தட்ட ரூ. 30 ஆயிரம் கோடி ஏற்றுமதியில் மட்டும் புரளுகிறது. உள்நாட்டில் மாட்டிறைச்சிக்குத் தடை கோரும் சங்கப் பரிவாரங்கள் ஏற்றுமதிக்குத் தடை கோருமா? ஏனைய 70% மாடுகள் செல்லும் வணிகப் பயன்பாடுகளுக்குத் தடை கோருமா? எல்லாவற்றுக்கும் மேல் சந்தை மதிப்பற்ற மாடுகளுக்கு ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் பராமரிப்புச் செலவை யார் ஏற்பது?
முசாஃபர்நகர் 2013 கலவரங்களின் விளைவு என்ன? மனிதாபிமானிகள் 62 உயிர்கள் பறிபோனதையும் 50 ஆயிரம் பேர் இடம்பெயர நேர்ந்ததையும் சொல்வார்கள். தேர்தல் கணக்கர்கள் 2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 73/80 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றதைச் சொல்வார்கள். விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலைக் கேட்டால், அவர் சரியாகச் சொல்வார், “முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெற முடியும் என்பதை நிரூபித்த தேர்தல் இது.”
இந்திய வரலாற்றில் நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட வெற்றி பெற முடியாமல் போன முதல் தேர்தல் இது. முசாஃபர்நகர் கலவரங்களின் நேரடி எதிரொலி. சங்கப் பரிவாரக் கூட்டங்களில் அடிக்கடி ஒலிக்கும் குரல் இது: “சாதியின் பெயரால் நீ நின்றால், உனக்குப் பின்னே இருப்பவர்கள் அதிகபட்சம் நூற்றுக்குப் பத்து அல்லது இருபது பேர்; எதிரிலோ எண்பது பேர். ஆனால், இந்து என்று உணர்ந்து நின்றாலோ, உன்பின்னால், நூற்றுக்கு எண்பது பேர்.”
சாதி உணர்வை மத உணர்வாக உருமாற்றி, தனதாக்கிக் கொள்வது சங்கப் பரிவாரங்களின் அடிப்படை உத்திகளில் ஒன்று. பிஹார் தேர்தல் வெற்றிக்காக என்ன விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது பாஜக. சாதிவாரி ஓட்டுக் கணக்குக்குப் பேர் போன பிஹார் தேர்தல் களத்தைத் தனக்குச் சாதகமாகத் திருப்புவது எப்படி? தன்னுடைய அடிப்படை உத்தியையே சங்கப் பரிவாரங்கள் இப்போது கையில் எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.
ஏன் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் இசை நிகழ்ச்சியை நடத்தமுடியாமல் தடுக்கப்பட்டார்? ஏன் இந்திய - பாகிஸ்தான் உறவுகளைப் பேசும்குர்ஷித் கசூரியின் புத்தக வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்த சுதீந்திர குல்கர்னிமை வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டார்? சிவசேனையின் ஆன்மா ‘சாம்னா’வில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் எழுதியிருக்கிறார்:
“கோத்ரா சம்பவத்தை வைத்துத்தான் நரேந்திர மோடியை உலகம் அறிந்துவைத்திருக்கிறது. அதே காரணத்துக்காகத்தான் நாங்களும் அவரை மதிக்கிறோம். குலாம் அலி, குர்ஷித் கசூரி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானவை என்று இன்றைக்கு அதே மோடி சொல்கிறார் என்றால், அது எங்களுக்குத்தான் துரதிர்ஷ்டம்!”
கொஞ்ச காலமாகவே சங்கடமாகத்தான் இருந்தார் நயன்தாரா சேகல். தாத்ரி சம்பவத்துக்குச் சில வாரங்களுக்கு முன்பு அவர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில்கூட அது வெளிப்பட்டது.
டெல்லி நேரு அருங்காட்சியகம் உருமாற்ற முயற்சியை யொட்டி எடுக்கப்பட்ட பேட்டி அது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற ‘அணிசேரா இயக்க’த்தின் அறுபதாமாண்டு கொண்டாட்டத்தைப் பற்றி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் நயன்தாரா. அந்த நிகழ்வில் இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன் உரையில் ஒரு வார்த்தைகூட நேருவைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால், பங்கேற்ற ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் அத்தனை பேரும் நேருவைக் குறிப்பிட்டார்கள். “அந்த இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் நேரு. ராமனைக் குறிப்பிடாமல் ராமாயணத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஒப்பானது இது. நேருவை வரலாற்றிலிருந்து அகற்றுவதில் குறிவைத்துச் செயல்படுகிறது இந்த அரசு.
ஏனென்றால், நவீன இந்திய வரலாற்றில் நேரு அடைந்திருக்கும் இடம் அவர்களுக்கு அத்தனை அச்சம் தருகிறது. நேரு அருங்காட்சியகத்தை உருமாற்றுவது என்பது அவருடைய வரலாற்றை மட்டும் மாற்றி எழுதப்போகும் முயற்சி அல்ல; அங்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஆவணங்கள் பல இருக்கின்றன. பிரிட்டிஷ் அரசுடன் உடன்பட்டுச் செல்ல எந்த நிலைக்கும் தயாராக இருப்பதாக அந்தமான் சிறையிலிருந்து கடிதம் எழுதி சமரசம் பேசிய ஆர்எஸ்எஸ் முன்னோடி வீர் சாவர்க்கர் ஆவணங்கள் உட்பட. இன்றைய நவீன இந்தியா நேருவால் உருவானதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், அது காந்தியிடமிருந்து உருவாகி நேருவிடம் வந்தது. நேருவைக் குறிவைப்பதன் மூலம் நவீன இந்தியா எனும் கட்டமைப்பையே அவர்கள் குறிவைக்கிறார்கள்” என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் நயன்தாரா.
விமர்சனங்களுக்காக ஒரு மூத்த எழுத்தாளர் சுட்டுக் கொல்லப்படுகிறார், மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனும் வதந்தி காரணமாக ஒரு முஸ்லிம் பெரியவர் அடித்துக் கொல்லப்படுகிறார், கோயிலுக்குள் நுழைய முற்பட்டார் என்பதற்காக ஒரு தலித் பெரியவர் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்படுகிறார் என்பன போன்ற செய்திகள் மட்டும் அல்ல; ஏதோ ஓரிரு சம்பவங்களோ, கலவரங்களோ அல்ல; நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதில் தொடங்கி ஒவ்வொரு துறையிலும் நடந்துகொண்டிருக்கும் தொடர் மாற்றங்கள், பொதுவெளியில் சங்கப் பரிவாரங்கள் ஏக துணிச்சலோடும் உற்சாகத்தோடும் மூட்டும் வெறுப்புத்தீ, சிறுபான்மைச் சமூகங்களிடையே ஏற்பட்டிருக்கும் பதற்றம் இவையெல்லாமும்கூடித்தான் நயன்தாராவை இந்த முடிவை நோக்கித் தள்ளியிருக்கின்றன.
இந்துத்வம் என்பது இந்திய ஆன்மாவில் விழுந்த ஓட்டை. காந்திய, நேருவிய அணுகுமுறைகள் அதற்கு ஒட்டுப்போட்டன. இந்த அரசு அதை நூல் நூலாகப் பிரிக்க ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் பாஜகவைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் பேசியிருக்கிறார், “இஸ்லாமியர்கள் இந்தியாவில் தொடர்ந்து வாழலாம்; ஆனால் மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட வேண்டும்.” இதற்கு அர்த்தம் என்ன? ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படிப் பேசும்போது, அந்த மாநிலத்தில் வாழும் ஒரு முஸ்லிம் குடிமகனின் மனநிலை என்னவாக இருக்கும்?
இதுதான் உயிர் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் விழுமியங்கள் நம் கண் முன்னே அணுஅணுவாகச் சின்னாபின்னாமாக்கப்படுகின்றன; இந்த நாட்டின் ஆன்மாவை எது உயிர்ப்போடு வைத்திருப்பதோ, அந்தப் பன்மைத்துவ நரம்பு இறுக்கப்பட்டு மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கப்படுகிறது. பொதுவெளியில் யாருக்கும் இது உறுத்தவில்லை.
யாரையும் இது உலுக்கவில்லை. ஆனால், உண்மைக்கு நெருக்கமான எந்தக் கலைஞ ரையும் உலுக்கத்தான் செய்யும்; நெருக்கடியில் அவரைத் தள்ளத்தான் செய்யும். நயன்தாரா 88 வயது மூதாட்டி. அவரால் என்ன செய்ய இயலும்? இந்நாட்டு அரசு தன் எழுத்தளார்களுக்கு அளிக்கும் உச்சபட்ச இலக்கிய அங்கீகாரம் சாகித்ய அகாடமி விருது. அதை அவர் திருப்பி அளித்தார்.
இந்தச் சூழலை எதிர்க்கத் தன்னளவில் அவர் தேடிக்கொண்ட வழி இது. அவரைத் தொடர்ந்து, இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்குக் கிட்டத்தட்ட 50 படைப்பாளிகள் தங்கள் விருதைத் திருப்பி அளிக்கும் முடிவை அறிவித்திருக்கிறார்கள் என்றால், வெளிப்படுத்தப்படும் செய்தி ஒன்றுதான்: வேதனையும் இயலாமையும். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து, பிரிட்டிஷ் அரசு தனக்குக் கொடுத்த ‘நைட்’ பட்டத்தை 1919-ல் திருப்பி அளித்தார் தாகூர். அன்று தொடங்கி இன்று வரை இந்நாட்டில் படைப்பாளிகளால் இயன்றது அவ்வளவுதான். நம் சமூகத்தில் அந்த அளவுக்குத்தான் எழுத்தாளர்களுக்குச் செல்வாக்கு கொடுத்திருக்கிறோம்.
நயன்தாரா சேகல் நல்லவரா, கெட்டவரா? எழுத்தாளர்கள் விருதைத் திரும்பித்தருவது சரியா, தவறா? இதற்குப் பின்னே இருப்பவர்கள் யார், முன்னே இருப்பவர்கள் யார்? நிறுத்துங்கள்… இதுவா பிரச்சினை? நியாயமாரே… இந்நாட்டின் ஆன்மாவில் ஓட்டை விழுந்துகொண்டிருக்கிறது. நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்… நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
18-10-2015
Thursday, October 15, 2015
அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 15
ஒரு மொழியில் கேள்விகளும் அதற்கான பதில்களும் மிக அவசியம். மொழி பெரும்பாலும் பயன்படுவதே அதற்காகத்தான். அந்த வகையில் கேள்வி, பதில் மற்றும் அதற்கான உதாரணங்கள் சிலவற்றை இந்த பாடத்தில் பார்போம்.....
مِثَالٌ --- மிதாலுன் --- எடுத்துக்காட்டு, உதாரணம்
سُؤَالٌ --- சவாலுன் --- கேள்வி
جَوَابٌ --- ஜவாபுன் ---- பதில்
مَا هَذَا؟ ----------- மா ஹாதா? -------- இது என்ன?
هَذَا بَيْتٌ ----------- ஹாதா பைதுன் ----- இது ஒரு வீடு.
أَهَذَا بَيْتٌ؟ --------- அஹாதா பைதுன்? - இது வீடா?
نَعَمْ، هَذَا بَيْتٌ. ----- நாம்! ஹாதா பைதுன் -- ஆம், இது வீடு.
مَا هَذَا؟ ----------- மா ஹாதா? ---- இது என்ன?
هَذَا قَمِيْصٌ. --------- ஹாதா கமீஸூன் -- இது சட்டை.
أَهَذَا سَرِيْرٌ؟ ------- அஹாதா சிரிருன்? ----- இது கட்டிலா?
لَا، هَذَا كُرْسِيٌّ ------ லா! ஹாதா குர்ஸிய்யுன் -- இல்லை, இது நாற்காலி.
أَهَذَا مِفْتَاحٌ؟ ------ அஹாதா மிஃப்தாகுன்? ---- இது சாவியா?
لَا، هَذَا قَلَمٌ. ------ லா.. ஹாதா கலமுன் -- இல்லை, இது பேனா.
مَا هَذَا؟ --------- மா ஹாதா? --- இது என்ன?....
هَذَا نَجْمٌ. --------- ஹாதா நஜ்முன் --- இது நட்சத்திரம்.
நீங்களும் புதிதாக இது போன்ற உதாரணங்களை அமைத்து தனியே எழுதிப் பழகிப் பாருங்கள்.
இறைவன் நாடினால் மேலும் சில பயிற்சிகளை அடுத்த பாடத்தில் பார்போம்.
Wednesday, October 14, 2015
படைப்புக் கொள்கை பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?
//பெரு வெடிப்பு கொள்கை, குரானில் சொல்லப்பட்ட படைப்பு கொள்கையில் இருந்து எப்படி ஓத்து போகின்றது என்பதை பற்றி விரிவாக எளிமையாக பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.//- சகோ நரேன்!
'வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'
-குர்ஆன் 40:57
'படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்'
-குர்ஆன் 79:27
வானங்களையும் கோள்களையும் உள்ளடக்கிய இம் மாபெரும் பேரண்டத்தை இறைவன் 'ஆகு' என்ற ஒரு வார்த்தையில் உண்டாக்கினான் என்பதை குர்ஆனின் துணை கொண்டு முன்பு பார்த்தோம். அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் ஆராய்ச்சியின் வழியாக அறிவியல் பூர்வமாகவும் குர்ஆனின் வார்த்தை உண்மையானது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். அதன் பிறகு படைப்புக் கொள்கைக்கு வருவோம்.
இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்த எனக்கு மனிதர்களாகிய உங்களை படைப்பது எனக்கு வெகு சுலபமே என்று மனிதர்களைப் பார்த்து இறைவன் குர்ஆனில் கூறுகிறான். பேரண்டத்தைப் படைக்க இறைவனின் ஆற்றல் அவசியம் என்பது போல் மனிதனைப் படைப்பதற்கும் இறைவனின் ஆற்றல் இங்கு அவசியமாகிறது. (ஒரு செல் உயிரி பரிணாமம் அடைந்து குரங்கு வரை வந்து பிறகு மனிதனானது என்ற வாதம் நாத்திகத்தை கொண்டு செல்ல டார்வினால் வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கால கட்டம் வரை அறிஞர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. உலக முடிவு நாள் வரையில் அவர்களால் நிரூபிக்கவும் முடியாது.)
'பூமியில் உங்களை அதிகாரத்துடன் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வாழ்க்கைக்குரிய வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தியுள்ளோம். இருப்பினும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்'
-குர்ஆன் 7:10
'நீங்கள் எவைகளை எல்லாம் இறைவனுக்கு இணை கற்ப்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையா? அல்லது பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்ட கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.'
-குர்ஆன் 27:61
மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் இந்த பூமியை மனிதர்களுக்காக பிரத்யேகமாக இறைவன் உண்டாக்கியுள்ளான் என்பதை அறிகிறோம். இந்த பூமியானது தானாகவே மனிதர்களுக்கு எற்றவாறு மாற வில்லை என்பதும் இறைவன் அத்தகைய ஏற்பாட்டை கொண்டு வந்தான் என்பதையும் விளங்குகிறோம். பிரபஞ்சத்தின் வேறு எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது என்பதையும் இதிலிருந்து விளங்குகிறோம்.
பெரு வெடிப்பிலிருந்து படிப்படியாக உருவாகி வரும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கோள் நம் போன்ற உயிரினங்கள் வாழும் வாழ்விடமாக மாற்றுதல் என்பது இறைவனின் ஆற்றலுக்கு மிக எளிதானது. இதையே நாம் அறிவியல் பார்வையில் பார்க்க வேண்டுமானால் மிக மிக மிக கடினமான காரியமாகும்.
இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளுமே மனிதன் வாழ தகுதியுடையதாக இல்லை பூமியைத் தவிர. பூமியைப் படைத்த இறைவன் அதை மனிதனுக்காக பிரத்யேகமாக படைத்ததாகவும் கூறுகிறான். இந்த பூமியை மனிதனுக்காக படைக்கவில்லை என்றால் மற்ற உயிரினங்களைப் போலவே எந்த சட்ட திட்டங்களும் இல்லாமல் சாதாரணமாக இருந்திருப்பான். ஆடு மாடுகளைப் போல் எப்படி வேண்டுமானாலும் மனிதனும் இருந்து கொள்ளலாம். நன்மை தீமைகளை பிரித்தறியும் கடமையும் அவனக்கு இருந்திருக்காது. இத்தனை வசதி வாய்ப்புகளை நமக்காக ஏற்படுத்திய இறைவன் அவன் சொல்படி நாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்பும் நியாயமான ஒன்றே!
பூமியைப் போன்ற ஒரு கோள் அல்லது துணைக்கோள் உயிரின வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் அது பிரதானமாக கீழ்காணும் ஆறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவியலார் ஷெப்லி அவர்கள் கூறுகின்றார். அது என்னவென்று பார்ப்போம்:
1. அந்தக்கோள் நட்சத்திரங்களிலிருந்து சரியான தூரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும்.
2. அந்தக் கோள் சரியான வெப்ப நிலையை பெற்றிருக்கும் பொருட்டு அதன் சுற்றுப் பாதை (Orbit) அதற்க்கேற்ற விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.
3. அந்தக் கோளுக்கு விஷம் கலவாத ஒரு வளி மண்டலம் (Atmosphere) இருக்க வேண்டும்.
4. அந்தக் கோளிற்கு நஞ்சு கலவாத நீர் ஊற்றுகள் (Sources) இருக்க வேண்டும்.
5. காற்றும் நீரும் உயிரினங்களுக்குத் தகுதி வாய்ந்த இரசாயனக் கலவையாக (Chemical Composition) இருக்க வேண்டும்.
6. அந்தக் கோள் காற்று மண்டலத்தை நிலை நிறுத்தும் அளவிற்குப் பெரிதாகவும் இருக்க வேண்டும்.
ஆதாரம்: OF STARS AND MEN, PAGE 66-67.
மேற்கண்ட சிறப்பம்சங்கள் உயிரின வாழ்க்கைக்குப் பொதுவாக தேவைப்படும் அம்சங்களாகவே ஷேப்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது ஆய்வு குறிப்பாக மனித வாழ்க்கையின் தேவைகளை குறித்ததாக இருப்பதால் மேற்கண்ட அம்சங்களோடு மேலும் சில சிறப்பம்சங்களையும் மனிதன் வாழுகின்ற கோள் அல்லது துணைக் கோள் பெற்றிருக்க வேண்டும். அவற்றையும் பார்ப்போம்:
7. அந்தக் கோள் மனிதனின் உணவிற்க்கும் ஏனைய உபயோகங்களுக்கும் ஏற்ற தாவரம் மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியைப் பெற்றிருக்க வேண்டும்.
8. விவசாயம் செய்வதற்கேற்ற பருவ காலங்களை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.
9. இரவு பகல் மாறி வருவதற்க்கேற்ப அக்கோள் சீரான அச்சின் சுழற்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.
10. மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்ற விதத்திலான புவியீர்ப்பு விசையை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.
இங்கு நாம் இந்த இடத்தில் நமது அறிவைக் கொண்டு சற்று சிந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான விண் மீன்கள் கோளகள் குறுங்கோள்களையுடைய இந்த பேரண்டத்தில் பூமியில் இத்தகைய வசதி வாய்ப்புகள் உருவானது எவ்வாறு? தானாகவே அசெம்பிள் பண்ணிக் கொண்டதா? அதை நமது அறிவு ஏற்கிறதா?
மனிதனின் உடலமைப்பு நீரில் வாழ உகந்ததாக இல்லை. ஆனால் கடலில் வாழும் மீன்களே செல்ல முடியாத ஆழத்துக்கு சில உபகரணங்களின் துணையால் மனிதன் சென்று விடுகின்றான். தனக்கு இறக்கை இல்லாவிட்டாலும் பறவைகளே போக முடியாத தூரத்துக்கு வானத்தின் மேல் பறந்து காட்டுகிறான். காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை ஒரு கூண்டுக்குள் அடைத்து தான் சொல்வதை எல்லாம் கேட்கும்படி பழக்கி விடுகிறான். இந்த ஆற்றல் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கல்வித் திறனால் வந்தது. இல்லை என்றால் விலங்குகளைப் போலவே மரங்களிலும் குகைகளிலும் தனது வாழ்க்கையை இன்றும் கழித்து வந்திருப்பான் மனிதன். சிங்கம் புலி ஆடு மாடு போன்றவை தங்களது அறிவை மெருகேற்றி இன்று தங்களுக்கென்று ஒரு குடிலை அமைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் அமைத்துக் கொடுத்தால் அதில் வந்து அமர்ந்து கொள்ளும். இல்லை என்றால் மரத்து நிழல்களிலோ காடுகளிலோ தங்களது இருப்பிடத்தை அமைத்து கொள்ளும்.
இவ்வளவு அறிவையும் ஆளும் திறனையும் மனிதனுக்கு அள்ளித் தந்த இறைவன் அந்த மனிதன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
அடுத்து இன்றைய அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்க்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என சொல்லி வருகிறது. இப்பேரண்டம் இருப்பதால்தான் மனிதனின் சிந்தனை விரிவடைந்து மேலும் மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாள் தோறும் வெளியிட்டு வருகிறான். மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இப்பேரண்டம் அவசியம் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. பிற்காலத்தில் இன்னும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படும்போது இப்பேரண்டத்தின் முக்கியத்துவத்தை மனித குலம உணர்ந்து கொள்ளும். அதுவரை நாமும் பொறுப்போம்.
'வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'
-குர்ஆன் 40:57
'படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்'
-குர்ஆன் 79:27
வானங்களையும் கோள்களையும் உள்ளடக்கிய இம் மாபெரும் பேரண்டத்தை இறைவன் 'ஆகு' என்ற ஒரு வார்த்தையில் உண்டாக்கினான் என்பதை குர்ஆனின் துணை கொண்டு முன்பு பார்த்தோம். அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் ஆராய்ச்சியின் வழியாக அறிவியல் பூர்வமாகவும் குர்ஆனின் வார்த்தை உண்மையானது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். அதன் பிறகு படைப்புக் கொள்கைக்கு வருவோம்.
இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்த எனக்கு மனிதர்களாகிய உங்களை படைப்பது எனக்கு வெகு சுலபமே என்று மனிதர்களைப் பார்த்து இறைவன் குர்ஆனில் கூறுகிறான். பேரண்டத்தைப் படைக்க இறைவனின் ஆற்றல் அவசியம் என்பது போல் மனிதனைப் படைப்பதற்கும் இறைவனின் ஆற்றல் இங்கு அவசியமாகிறது. (ஒரு செல் உயிரி பரிணாமம் அடைந்து குரங்கு வரை வந்து பிறகு மனிதனானது என்ற வாதம் நாத்திகத்தை கொண்டு செல்ல டார்வினால் வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கால கட்டம் வரை அறிஞர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. உலக முடிவு நாள் வரையில் அவர்களால் நிரூபிக்கவும் முடியாது.)
'பூமியில் உங்களை அதிகாரத்துடன் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வாழ்க்கைக்குரிய வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தியுள்ளோம். இருப்பினும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்'
-குர்ஆன் 7:10
'நீங்கள் எவைகளை எல்லாம் இறைவனுக்கு இணை கற்ப்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையா? அல்லது பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்ட கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.'
-குர்ஆன் 27:61
மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் இந்த பூமியை மனிதர்களுக்காக பிரத்யேகமாக இறைவன் உண்டாக்கியுள்ளான் என்பதை அறிகிறோம். இந்த பூமியானது தானாகவே மனிதர்களுக்கு எற்றவாறு மாற வில்லை என்பதும் இறைவன் அத்தகைய ஏற்பாட்டை கொண்டு வந்தான் என்பதையும் விளங்குகிறோம். பிரபஞ்சத்தின் வேறு எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது என்பதையும் இதிலிருந்து விளங்குகிறோம்.
பெரு வெடிப்பிலிருந்து படிப்படியாக உருவாகி வரும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கோள் நம் போன்ற உயிரினங்கள் வாழும் வாழ்விடமாக மாற்றுதல் என்பது இறைவனின் ஆற்றலுக்கு மிக எளிதானது. இதையே நாம் அறிவியல் பார்வையில் பார்க்க வேண்டுமானால் மிக மிக மிக கடினமான காரியமாகும்.
இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளுமே மனிதன் வாழ தகுதியுடையதாக இல்லை பூமியைத் தவிர. பூமியைப் படைத்த இறைவன் அதை மனிதனுக்காக பிரத்யேகமாக படைத்ததாகவும் கூறுகிறான். இந்த பூமியை மனிதனுக்காக படைக்கவில்லை என்றால் மற்ற உயிரினங்களைப் போலவே எந்த சட்ட திட்டங்களும் இல்லாமல் சாதாரணமாக இருந்திருப்பான். ஆடு மாடுகளைப் போல் எப்படி வேண்டுமானாலும் மனிதனும் இருந்து கொள்ளலாம். நன்மை தீமைகளை பிரித்தறியும் கடமையும் அவனக்கு இருந்திருக்காது. இத்தனை வசதி வாய்ப்புகளை நமக்காக ஏற்படுத்திய இறைவன் அவன் சொல்படி நாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்பும் நியாயமான ஒன்றே!
பூமியைப் போன்ற ஒரு கோள் அல்லது துணைக்கோள் உயிரின வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் அது பிரதானமாக கீழ்காணும் ஆறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவியலார் ஷெப்லி அவர்கள் கூறுகின்றார். அது என்னவென்று பார்ப்போம்:
1. அந்தக்கோள் நட்சத்திரங்களிலிருந்து சரியான தூரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும்.
2. அந்தக் கோள் சரியான வெப்ப நிலையை பெற்றிருக்கும் பொருட்டு அதன் சுற்றுப் பாதை (Orbit) அதற்க்கேற்ற விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.
3. அந்தக் கோளுக்கு விஷம் கலவாத ஒரு வளி மண்டலம் (Atmosphere) இருக்க வேண்டும்.
4. அந்தக் கோளிற்கு நஞ்சு கலவாத நீர் ஊற்றுகள் (Sources) இருக்க வேண்டும்.
5. காற்றும் நீரும் உயிரினங்களுக்குத் தகுதி வாய்ந்த இரசாயனக் கலவையாக (Chemical Composition) இருக்க வேண்டும்.
6. அந்தக் கோள் காற்று மண்டலத்தை நிலை நிறுத்தும் அளவிற்குப் பெரிதாகவும் இருக்க வேண்டும்.
ஆதாரம்: OF STARS AND MEN, PAGE 66-67.
மேற்கண்ட சிறப்பம்சங்கள் உயிரின வாழ்க்கைக்குப் பொதுவாக தேவைப்படும் அம்சங்களாகவே ஷேப்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது ஆய்வு குறிப்பாக மனித வாழ்க்கையின் தேவைகளை குறித்ததாக இருப்பதால் மேற்கண்ட அம்சங்களோடு மேலும் சில சிறப்பம்சங்களையும் மனிதன் வாழுகின்ற கோள் அல்லது துணைக் கோள் பெற்றிருக்க வேண்டும். அவற்றையும் பார்ப்போம்:
7. அந்தக் கோள் மனிதனின் உணவிற்க்கும் ஏனைய உபயோகங்களுக்கும் ஏற்ற தாவரம் மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியைப் பெற்றிருக்க வேண்டும்.
8. விவசாயம் செய்வதற்கேற்ற பருவ காலங்களை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.
9. இரவு பகல் மாறி வருவதற்க்கேற்ப அக்கோள் சீரான அச்சின் சுழற்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.
10. மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்ற விதத்திலான புவியீர்ப்பு விசையை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.
இங்கு நாம் இந்த இடத்தில் நமது அறிவைக் கொண்டு சற்று சிந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான விண் மீன்கள் கோளகள் குறுங்கோள்களையுடைய இந்த பேரண்டத்தில் பூமியில் இத்தகைய வசதி வாய்ப்புகள் உருவானது எவ்வாறு? தானாகவே அசெம்பிள் பண்ணிக் கொண்டதா? அதை நமது அறிவு ஏற்கிறதா?
மனிதனின் உடலமைப்பு நீரில் வாழ உகந்ததாக இல்லை. ஆனால் கடலில் வாழும் மீன்களே செல்ல முடியாத ஆழத்துக்கு சில உபகரணங்களின் துணையால் மனிதன் சென்று விடுகின்றான். தனக்கு இறக்கை இல்லாவிட்டாலும் பறவைகளே போக முடியாத தூரத்துக்கு வானத்தின் மேல் பறந்து காட்டுகிறான். காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை ஒரு கூண்டுக்குள் அடைத்து தான் சொல்வதை எல்லாம் கேட்கும்படி பழக்கி விடுகிறான். இந்த ஆற்றல் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கல்வித் திறனால் வந்தது. இல்லை என்றால் விலங்குகளைப் போலவே மரங்களிலும் குகைகளிலும் தனது வாழ்க்கையை இன்றும் கழித்து வந்திருப்பான் மனிதன். சிங்கம் புலி ஆடு மாடு போன்றவை தங்களது அறிவை மெருகேற்றி இன்று தங்களுக்கென்று ஒரு குடிலை அமைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் அமைத்துக் கொடுத்தால் அதில் வந்து அமர்ந்து கொள்ளும். இல்லை என்றால் மரத்து நிழல்களிலோ காடுகளிலோ தங்களது இருப்பிடத்தை அமைத்து கொள்ளும்.
இவ்வளவு அறிவையும் ஆளும் திறனையும் மனிதனுக்கு அள்ளித் தந்த இறைவன் அந்த மனிதன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
அடுத்து இன்றைய அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்க்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என சொல்லி வருகிறது. இப்பேரண்டம் இருப்பதால்தான் மனிதனின் சிந்தனை விரிவடைந்து மேலும் மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாள் தோறும் வெளியிட்டு வருகிறான். மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இப்பேரண்டம் அவசியம் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. பிற்காலத்தில் இன்னும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படும்போது இப்பேரண்டத்தின் முக்கியத்துவத்தை மனித குலம உணர்ந்து கொள்ளும். அதுவரை நாமும் பொறுப்போம்.
Tuesday, October 13, 2015
மனைவியையும் மகளையும் பறி கொடுத்த பாலஸ்தீனியர்!
கடந்த 12 நாட்களில் 23 பாலஸ்தினியர்களை பாசிஸ இஸ்ரேலிய மிருகங்கள் கொன்று குவித்துள்ளன. வயிற்றில் குழந்தையுடன் இருந்த நூர் ஹஸன் என்ற தனது மனைவியையும் ரஹாப் என்ற இரண்டு வயது பெண் குழந்தையையும் ஒரே நேரத்தில் பறி கொடுத்த தந்தை கதறி அழும் காட்சி!
இறைவா! பாலஸ்தினத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவாயாக! அநியாயக்கார இஸ்ரேலிய அரசை அழித்தொழிப்பாயாக!
தகவல் உதவி
சவுதி கெஜட்
12-10-2015
Monday, October 12, 2015
இருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா?
பாஜக ஆட்சியில் நிலைபெறும் அச்சுறுத்தல்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டவை
இந்து மதத்தின் உருவ வழிபாடு குறித்து வெளிப்படையாக விமர்சித்துவந்த 77 வயதான எம்.எம். கல்புர்கி, கடந்த அகஸ்ட் மாதம் தனது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பிப்ரவரி மாதம், மும்பை அருகே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த பன்ஸாரே கொல்லப்பட்டார். 2013-ல், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலைசெய்யப்பட்டார். இந்தப் படுகொலைகள், மிகப் பெரிய அபாயத்தின் அறிகுறிகள்தான். மதச்சார்பற்ற குரல்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன; பிற அபாயங்கள் தொடரப்போகின்றன.
பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல்கள் இந்தியாவில் அவ்வப்போது நடப்பவைதான் என்றாலும், இந்த முறை விஷயம் வேறு மாதிரியானது. இச்சம்பவங்கள் தொடர்பான செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது அரசு. இவ்விஷயங்கள் தொடர்பான பிரதமர் மோடியின் மவுனம், அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதைக் காட்டுகிறது என்றே பலர் கருதுகிறார்கள். ஏனெனில், 2014-ல் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கின்றன.
இந்து பாகிஸ்தான்?
அண்டை நாடுகளை ஒப்பிடும்போது சுதந்திரமான ஜனநாயக நாடாகவும், உயர்ந்த எண்ணங்களை ஆதரிக்கும் நாடாகவும் பெருமிதம் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது மிக முக்கியமான தருணம். 2011-ல் பாகிஸ்தான் தாராளவாத அரசியல் தலைவர் சல்மான் தஸீர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் (தற்போது பாஜக செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்) இவ்வாறு சொன்னார்: “சல்மான் தஸீர் மட்டும் இந்திய முஸ்லிமாக இருந்திருந்தால், இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருப்பார்.” வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, அந்நாட்டின் ஜனநாயக அமைப்பின் எதிர்காலம் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.
மாறாக, நாம் இந்தியாவில் நடக்கும் விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். இந்தியா விமர்சிக்கும் அதன் அண்டை நாடுகளின் பாதையில் இந்தியாவும் சென்றுவிடலாம் என்பதையும் நாம் உணர வேண்டும். மும்பையைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற பத்திரிகையாளருமான நிகில் வேகில் என்னிடம் சொன்னார், “மதச்சார்பின்மை இல்லையெனில், இந்தியா ஒரு ‘இந்து பாகிஸ்தா’னாக இருக்கும்.”
இந்தியாவில் நடந்திருக்கும் இந்தப் படுகொலைகளுக்கும் இந்த ஆண்டு வங்கதேசத்தில் வலைப்பூ எழுத்தாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஆனால், வங்கதேசத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக உலகளாவிய விமர்சனங்கள் எழுகிறபோது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனும் அங்கீகாரப் பூச்சுக்குப் பின்னே மறைந்துகொள்கிறது இந்தியா.
நீடிக்கும் அச்சுறுத்தல்கள்
கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் விளைவாக, சுய தணிக்கையும், பயமும் கொண்ட சூழல் உருவாகி யிருக்கிறது.
கொலையாளிகளில் சிலர் இன்னமும் பிடிபடவில்லை. ஒரு கையில் துப்பாக்கியைச் சுமந்துசெல்லும் கொலையாளிகள் மறு கையில் பெயர்ப் பட்டியலை வைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 20-ல் சில தொலைபேசி அழைப்புகளை இடைமறித்துக் கேட்டவர்கள் மூலம் ஒரு முக்கியமான தகவலை, பத்திரிகையாளர் வாக்லே தெரிந்துகொண்டார். மற்றொரு வலதுசாரி அமைப்பான ‘சனாதன் சன்ஸ்தா’அடுத்து தன்னைக் குறிவைத்திருப்பதாக அவருக்குத் தெரியவந்தது. கல்புர்கியின் மரணத்தைக் கொண்டாடிய வலதுசாரித் தீவிரவாதிகள் பகிரங்கமாகவே பேசினர். இந்து மதத்தின் சாதி அமைப்பை விமர்சித்துவருபவரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான கே.எஸ். பகவான்தான் அடுத்த குறி என்று ட்விட்டரில் மிரட்டல் விடுத்தனர்.
மதச்சார்பற்ற நாடான இந்தியாவை, ‘இந்து தேச’மாக மாற்றும் நோக்கம்தான் இக்கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. அரசியல் தலைவர்களின் மவுனம் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான பாஜகவின் இந்து தேசியக் கொள்கைகளும் இந்நோக்கத்துக்குத் துணைபுரிகின்றன.
இந்துத்வா எனும் தகுதி
கடந்த சில மாதங்களாக, நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய நிறுவனங்களில் ஒலித்துக்கொண்டிருந்த மதச்சார்பற்ற குரல்களை ஒழித்துக்கட்டியிருக்கிறது இந்திய அரசு. ஏதோ சராசரியான ஆட்களைத் தூக்கியடிக்கவில்லை அரசு. நாளந்தா பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகித்தவர் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென். புகழ்பெற்ற ஆளுமைகளின் பதவியிடங்கள், இந்துத்வா கொள்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மட்டுமே தகுதியாகக் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டன.
இந்தியா எனும் மதச்சார்பற்ற நாட்டுக்கு அடித்தள மிட்டவரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவாகர் லால் நேருவின் பாரம்பரியத்தைக் குறிவைப்பதுதான், இந்த அரசின் இலக்குகளில் மிக முக்கியமானது. கடந்த மாதம், புது டெல்லியில் உள்ள ‘நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலக’த்தின் இயக்குநரை வெளியேற்றிய அரசு, தற்போது அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்ததுடன், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் பணிகளைச் செய்யவும் திட்ட மிட்டிருக்கிறது. வாஷிங்டன் நினைவிடத்தை, ஒபாமா அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு ஒப்பானது இது!
சுதந்திரச் சிந்தனை கொண்ட தலைவர்களின் பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன், மூர்க்கமான இந்து தேசியத் தலைவர்களை முன்னிறுத்துவதிலும் முனைப்புடன் இருக்கிறார்கள் பாஜக தலைவர்கள். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஸே வைத் ‘தேசபக்தர்’ என்று விளித்தார் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ். பின்னர், தனது கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டாலும், அவரது கருத்தை பாஜக தலைவர்கள் பலர் ஆதரித்தார்கள். காந்தியைப் படுகொலை செய்த கோட்ஸே, ஆயுதம் தாங்கிய இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னாள் உறுப்பினர். அந்த அமைப்புடன் தனது 8-வது வயதிலிருந்தே தொடர்பில் இருப்பவர் மோடி. இந்து தேசியவாத அரசின் நிழலில் தாங்கள் பலம் பெற்றிருப்பதாக இந்து அடிப்படைவாதிகள் கருதுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
நசுக்கப்படும் பேச்சுரிமை
2010-ல் வெளியான தனது நாவலால் ஆத்திரமடைந்த இந்து அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்கள் வந்ததாக, புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன், கடந்த டிசம்பர் மாதம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தின. எங்காவது கண்காணாமல் போய்விடுவது நல்லது என்று போலீஸார் அவருக்கு அறிவுறுத்தினர். தனித்துவிடப்பட்டவராக உணர்ந்த பெருமாள் முருகன், தனது ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையைவிட்டே விலகுவதாக ஜனவரி மாதம் அறிவித்தார். தனது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி, எழுதுவதையே கைவிடுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.
இந்த அச்சுறுத்தல்கள் பாஜக ஆட்சியில் இருக்கும் வரைதான் தொடரும் என்றுகூட நினைக்கலாம். ஆனால், இந்தியாவின் கட்டுமானத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம், நீண்டகால விளைவு களை ஏற்படுத்திவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் நடக்கும் இந்தத் தாக்குதல்களை, ஏதோ மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் அல்லது சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு மட்டும் நடக்கும் பிரச்சினையாகப் பார்க்க முடியாது. ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் அமைப்பின் - இதயத்தின் - மீதான தாக்குதல் இது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். நமது சொந்தக் குரலை இழப்பதற்கு முன்னர், அனைவரின் குரல்களைக் காக்க முன்வர வேண்டும்!
- சோனியா ஃபெலீரோ,
‘பியூட்டிஃபுல் திங்: இன்சைடு தி சீக்ரெட் வேர்ல்டு ஆஃப் பாம்பே’ஸ் டான்ஸ் பார்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-10-2015
சுதீந்திரா குல்கர்னியின் மீது கருப்பு மை வீசப்பட்டது!
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது கருப்பு மை வீசப்பட்டது மிதமான ஜனநாயக முறையிலான போராட்டம் என சிவசேனா தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறும்போது, "குல்கர்னி மீது மை வீசப்பட்டதா? தார் வீசப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது? பொதுமக்கள் கோபம் எப்படி வெடிக்கும் என்பதையும் கூறமுடியாது.
இருப்பினும் 'மை' வீசி தாக்குதல் நடத்துவது என்பது மிதமான போராட்டமே. ஜனநாயக நெறியிலான போராட்டமே. எங்கள் எதிர்ப்பையும் மீறி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றால் நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது மும்பையில் கருப்பு மை வீசப்பட்டது. சிவசேனா கட்சியினர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. -
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-10-2015
பூசப்பட்ட தாருடனேயே விழா மேடைக்கு வந்திருந்து புத்தகமும் வெளியிடப்பட்டது. காவிகளின் ஈனச் செயலை உலகம் அறிந்து கொள்ளட்டும் என்று பூசிய மையை அழிக்காமலேயே மேடைக்கு வந்தது பாராட்டத்தக்கது.
இன்னும் பாக்கி உள்ள மூன்றரை வருடத்தில் இந்த நாட்டை அழிவின் விளிம்புக்கே காவிகள் கொண்டு சென்று விடுவார்கள் போல் இருக்கிறது. இன்னும் என்னவெல்லாம் அராஜகம் அரங்கேறுகிறது பொறுத்திருந்து பார்போம்.
Sunday, October 11, 2015
ஏகத்துவ வாதிகளின் எழுச்சி மிகு பணிகள்!
மறுமை வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு இரவு பகல் பாராது ஏகத்துவ சிந்தனையை மக்கள் மனதில் எத்தி வைக்க பாடுபடும் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்' இளம் வீரர்கள்.
அஜீத்துக்கும் விஜய்க்கும் ரசிகர் மன்றங்கள் அமைத்து தங்கள் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் இதே தமிழகத்தில்தான் ஏகத்துவ இளைஞர்களும் உள்ளனர். இறைவன் இந்த இளைஞர்களின் மகத்தான பணியை பொருந்திக் கொண்டு தமிழகத்தில் ஏகத்துவம் எழுச்சி பெற அருள் புரிவானாக! இந்த இளைஞர்களையும் பொருந்திக் கொள்வானாக!
Saturday, October 10, 2015
சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டும் கஸ்தூரியின் உண்மை நிலையும்!
நமது வெளியுறவுக் துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் தளத்தில் 'இந்திய பணிப்பெண்ணின் வலது கை சவுதி முதலாளியால் வெட்டப்பட்டுள்ளது. இந்த காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்' என்று பொங்கியிருந்தார். உடனே இந்துத்வாவாதிகள் இணைய தளத்தில் மேலும் பொங்கினர். இது வழக்கமான பொய் பிரசாரம்.
இந்திய தூதரகத்தின் முக்கிய அதிகாரி அனில் நோடியல் அரப் நியூஸூக்கு அளித்த பேட்டியில் 'தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற வீட்டு வேலை செய்யும் பெண் தனது அறையை உள் பக்கமாக தாளிட்டு ஜன்னல் வழியாக கயிறு மற்றும் துணிகளை கட்டி கீழே இறங்க முயற்சித்துள்ளார். பேலன்ஸ் தவறி அந்த பெண் கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்' என்று கூறியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளையும் இஸ்லாமியர்களையும் அவதூறு செய்து அவப்பெயர் ஏற்படுத்த இந்துத்வாவாதிகள் என்னென்ன வழிகளை எஎல்லாம் உபயோகிக்றார்கள் என்று பாருங்கள்.
ஒரு வெளியுறவு மந்திரி செய்தியை போடுவதற்கு முன் பல முறை அதனை சரி பார்த்திருக்க வேண்டாமா? இந்திய தூதரகத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டாமா?
சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டர் தளத்தை பார்த்து இன்று உலக மீடியாக்கள் எள்ளி நகையாடுகின்றன.
இந்துத்வாவாதிகளுக்கு இது தேவையா? மோடியிலிருந்து ராமகோபாலன் வரை ஒருவர் விடாமல் பொய் செய்திகளை பரப்புவதில் கில்லாடிகள். ஆனால் அனைத்து பொய்களும் இணையம் மூலமாக ஒரே நாளில் வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது.
தகவல் உதவி
அரப் நியூஸ்
10-10-2015
Friday, October 09, 2015
கோகுல்ராஜ் கொலையில் ஜாமீனில் வந்துள்ளவர்களுக்கு கோவிலில் மரியாதை!
தலித் இனத்தை சேர்ந்த கோகுல்ராஜ் ஒரு கவுணடர் சாதி பெண்ணை காதலித்ததற்காக வெட்டிக் கொல்லப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.
இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சில இளைஞர்கள் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர். அந்த வீர இளைஞர்களுக்கு மாலை மரியாதை எல்லாம் கோவிலில் வைத்து செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்னும் இவர்களுக்கு ஊர் மத்தியில் சிலை வைக்காததுதான் பாக்கி. :-)
'இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா?' என்று அப்பாவித்தனமாகவும் மேலும் விஷமத்தனமாகவும் கேட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கும் ராம் நிவாஸ், அன்புராஜ் போன்ற இந்துத்வாவாதிகளுக்கு இந்த பதிவு சமர்பணம்.
சவுதி காவலர்களும் நம் நாட்டு காவலர்களும் - ஒரு ஒப்பீடு!
ஒரு சவுதி காவல் துறை உயரதிகாரி இறைவனை தொழ வேண்டிய நேரம் வந்தவுடன் ரோட்டின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு தொழ ஆரம்பித்து விடுகிறார். சவுதியில் இது அன்றாடம் நிகழ்ந்து வரும் நிகழ்வு. இவ்வாறு இறைவனுக்கு பயந்த ஒரு அதிகாரி கண்டிப்பாக லஞ்சம் வாங்க மாட்டார்: பொய் கேசு போட மாட்டார். லாக்அப் மரணங்களை நிகழ்த்த மாட்டார்.
ஆனால் நமது காவல்துறையில் பெரும்பாலான நபர்கள் காக்கி உடையை உடுத்தி விட்டால் வானளாவிய அதிகாரம் வந்து விட்டதாக எண்ணி அனைவரையும் ஒருமையில் அழைக்கின்றனர். பெரும்பாலான காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். லாக்அப் மரணங்களும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இறைவனைப் பற்றிய உண்மையான பயம் இவர்களுக்கு இல்லாததாலேயே இவ்வாறு தாறுமாறாக நடக்கின்றனர்.
சவுதியில் தவறு செய்யும் காவலர்களே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. நம் நாட்டைப் போன்று 80 சதவீதம் அழுகி விடவில்லை என்பதையே சொல்ல வந்தேன். உண.மையான இறை பக்தி நம் நாட்டு காவலர்களுக்கும் வந்தால் ஒருக்கால் மாற்றம் வருமோ என்னவோ?
--------------------------------------------------------------
'நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று நபிகள் நாயகம் கேட்டு விட்டு 'பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே' என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு
நூல் புகாரி 4918, 6072,6657
'நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர் சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது.' என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு
நூல்: முஸ்லிம் 5109
'ஒரு மனிதன் ஒரு கவள உணவை உட்கொண்டு இறைவனைப் புகழும் போதும், ஒரு மிடறு தண்ணீரை அருந்தி விட்டு அதற்காக இறைவனைப் புகழும் போதும் இறைவன் அந்த மனிதன் விஷயத்தில் திருப்திப் படுகிறான்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: நபித்தோழர் அனஸ்
நூல் முஸ்லிம் 4915
இது போன்று சிறிய விஷயங்களில் கூட நாம் இறைவனை நினைவு கூறுவதால் நமக்குள் மறைந்திருக்கும் ஆணவமும் அகங்காரமும் சிறிது சிறிதாக விலகும்.. இறைவனைப் புகழ்வதால் இறைவனுடைய தகுதி நம்மால் உயர்ந்து விடப் போவதில்லை. இதன் மூலம் நமது தகுதியை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாமே உயர்த்திக் கொள்கிறோம்.
Thursday, October 08, 2015
அல் அக்ஸா பள்ளியில் 50 வயதுக்கு கீழுள்ளவர்கள் தொழ தடை!
'அல் அக்ஸா மசூதியில் ஜூம்ஆ தொழுகைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களே வரமுடியும். பெண்களுக்கு வயது வித்தியாசம் இல்லை. ஆண்களில் 50 வயதுக்கு கீழுள்ளவர்கள் தொழ வரக் கூடாது'
இவ்வாறு இஸ்ரேலிய செய்திப் பிரிவு இன்று அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன மக்களுக்கிடையே தொடர்ந்து பிரச்னை அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த நடவடிக்கை என்று அரசு தரப்பு கூறுகிறது.
இறைவனை தொழ குறிப்பிட்ட வயதினர்தான் வர வேண்டும் என்று வந்தேறிகளான யூதர்கள் சொல்வது உலகிலேயே இஸ்ரேலில்தான் நடக்கும். இந்த மனித உரிமை மீறலைப் பற்றி எந்த நாடும் வாய் திறக்காது. எந்த ஊடகமும் வாய் திறக்காது.
உன்னை வணங்குவதற்கு கூட அனுமதி மறுக்கும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களை இறைவா! நாசமாக்குவாயாக!
இந்த ஜூம்ஆவில் பாலஸ்தீன மக்களுக்காகவும் நமது நாட்டு இந்துத்வ அராஜக ஆட்சிக்காகவும் ஒரு முடிவு கட்ட இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்திப்போமாக!
தகவல் உதவி
dailysabah.com
09-10-2015
ரத்த தானம் - 11 வருடங்களாக முதலிடத்தில் 'தவ்ஹீத் ஜமாத்'
தமிழக அரசு 2014 ஆண்டுக்கான இரத்த தான கொடையாளர்கள் தர வரிசைப்பட்டியல் வெளியீடு...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில அளவில் முதலிடம்.!
தொடர்ந்து 11 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்...
சவுதியிலும் ரத்ததானத்தில் முதலிடம் பிடித்து தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.
எல்லா புகழும் இறைவனுக்கே...
------------------------------------------------------------
இந்துத்வ இயக்கங்கள் கலவரத்தை உண்டு பண்ணி மனித ரத்தம் குடிக்கிறது.....
இஸ்லாமிய இயக்கங்கள் இரத்தம் கொடுத்து பல உயிர்களை காக்கிறது.
இந்துத்வ இயக்கங்கள் காவல் துறை வாகனங்களை உடைக்கிறது....
இஸ்லாமிய இயக்கங்கள் ஆம்புலன்ஸ் சேவையால் உயிர்களை காக்கிறது....
கோவிலில் நுழைந்ததற்காக ஒரு தலித்தை அடித்தே கொன்றுள்ளது இந்துத்வ வெறிக் கும்பல். இன்று உபியில் ஒரு தலித் குடும்பத்தை பலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மாட்டு இறைச்சியை சேமித்து வைத்தார் என்ற காரணத்தை சொல்லி முஹம்மது இஹ்லாக்கை அடித்தே கொன்றுள்ளது இந்துத்வா... இவை எல்லாம் கடந்த இரண்டொரு நாளில் நடந்த நிகழ்வுகள்.
இந்துக்களே! இந்திய மக்களே! இந்துத்வாவை தூரமாக்கி நமது நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றுகள்!
முகமது நபி அவர்களின் கண் கலங்க வைக்கும் எளிய வாழ்கை!
ஒரு முறை நபித் தோழர் உமர்பின் கத்தாப் அவர்கள் முகமது நபி அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தார். வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்தார். முகமது நபி அவர்களின் வீட்டில் பதனிடப்பட்ட மூன்று தோல் துண்டுகளும் வீட்டின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடி பார்லி அரிசியும் கிடந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். வேறு பொருட்கள் எதுவும் தென்படவில்லை. உமர் அழத் தொடங்கினார். 'உமரே ஏன் அழுகிறீர்கள்?' என்று முகமது நபி கேட்டார். அதற்கு உமர் 'இறைவனின் தூதரே! நான் ஏன் அழக் கூடாது? அழாமல் வேறென்ன செய்வது? தங்கள் திரு மேனியில் பாயின் அச்சு பதிந்திருப்பதைப் பார்க்கின்றேன். மேலும் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களையும் பார்க்கின்றேன். இறைவனின் தூதரே! வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை நமக்கு அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்தியுங்கள். பாரசிகர்களும், ரோமானியரும் இறைவனை வணங்குவதில்லை. அவர்களுக்கு உண்மையான நம்பிக்கையும் கிடையாது. என்றாலும் ரோமானியப் பேரரசர்களும் பாரசீகப் பேரரசர்களும் அற்புதமான நீரோடைகளுக்கிடையே அமைந்துள்ள அழகிய வீடுகளில் வாழ்கின்றனர். ஆனால் இறைவனின் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள், இறைவனின் அடிமை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தாங்கள் வறுமையில் வாழ்கிறீர்கள்.' என்று முகமது நபியைப் பார்த்துக் கூறினார்.
அதுவரை தலையணையில் சாய்ந்திருந்த முகமது நபி அவர்கள் சட்டென எழுந்து அமர்ந்து பின் வருமாறு கூறினார்: 'உமரே! தாங்கள் இந்த விஷயம் குறித்து இன்னுமா சந்தேகம் கொள்கிறீர்கள்? இந்த உலகில் கிடைக்கும் அமைதியான வசதியான வாழ்க்கையை விட மறு உலகில் கிடைக்கக் கூடிய அமைதியும் வசதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையே சிறந்தது.'
-திர்மதி, ரியாளுஸ் ஸாலிஹீன்
486- ஹதீது எண்.
----------------------------------------
பிலால் அவர்கள் அறிவிக்கிறார்கள் : முகமது நபி அவர்கள் தமக்குக் கிடைத்த அன்பளிப்புப் பொருட்களைத் தமக்கு எதிர்காலத்தில் பயன்படட்டும் என்று எந்தப் பொருளையும் தமக்கென்று வைத்துக் கொண்டதில்லை. தமக்குக் கிடைத்தவற்றை எல்லாம் ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் வழங்கி விடுவார். ஒருமுறை முகமது நபி அவர்களுக்கு நான்கு ஒட்டகங்கள் நிறைய பொருட்கள் கிடைத்தன. ஆனால் அவர் அவற்றில் தமக்கென்று எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பொருட்கள் அனைத்தையும் தேவைப் படுவோருக்கு வழங்காமல் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.'
-ரியாளுஸ்ஸாலிஹீன்
465,466- ஹதீது எண்
------------------------------------------
முகமது நபி அவர்கள் தம் வாழ்நாளில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் குவித்தவர். ஆனால் அவர் மரணத் தருவாயில் கடனாளியாக இருந்தார். அவரது கேடயம் மதீனாவில் உள்ள ஒரு யூதக் குடி மகனிடம் அவர் பெற்றக் கடனுக்குப் பகரமாக வைக்கப்பட்டிருந்தது.
-ரியாளுஸ் ஸாலிஹீன்
504 - ஹதீது எண்.
'முகமது நபி அவர்கள் நன்கு அரைக்கப்பட்ட மாவை ரொட்டியாகச் சமைத்து சாப்பிட்டதுண்டா? என ஸஹ்ல் பின் ஸஃத் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'முகமது நபி அவர்கள் மரணிக்கும் வரை அந்த மாவைப் பார்த்ததே இல்லை' எனக் கூறினார்கள். 'அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடை இருந்ததா?' என்று கேட்டதற்கு 'சல்லடை இருந்ததில்லை' என்று கூறினார். பிறகு 'அப்படியாயின் கோதுமையை எப்படி மாவாக்கினீர்கள்?' எனக் கேட்கப்பட்டதும் 'அதை இடித்த பின் அதில் ஊதுவோம். பறக்கக் கூடிய உமி போன்றவை பறந்ததும் அதில் நீரைச் சேர்த்து குழைத்துக் கொள்வோம்'
ஆதாரம் : புகாரி, அஹ்மத், இப்னுமாஜா
------------------------------------------------
இப்படிப்பட்ட உத்தம தலைவரை நாம் பெற்றதற்காக இறைவனுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்தக் கொள்வோம். மத வெறி, மொழி வெறி, வறுமை, நோய் போன்றவற்றால் நாம் பாதிக்கப்படும் போது இறைவனை நொந்து கொள்கிறோம். வணங்குவதில் இஸ்லாத்தை பேணுவதில் நான் எந்த குறையையும் வைக்கவில்லையே! பிறகு ஏன் என்னை இறைவன் சோதிக்கிறான் என்று கேட்பவர்களுக்கு இந்த வரலாறுகள் தக்க பாடத்தைப் புகட்டும்.
Wednesday, October 07, 2015
ஐரோப்பிய குடும்பத்தையும் தன் வசப்படுத்திக் கொண்ட குர்ஆன்!
பலரும் இஸ்லாம் அராபிய கலாசாரத்தை புகுத்துகிறது என்று கூறுகின்றனர். உண்மையில் அராபிய கலாசாரம் என்பது வேறு: இஸ்லாம் என்பது வேறு: அராபியர்கள் நீண்ட 'தோப்' என்ற உடையை உடுத்துவார்கள். வெயில் பனியிலிருந்து காத்துக் கொள்ள தங்கள் தலையை மறைத்துக் கொள்வார்கள். மதுவுக்கும் விபசாரத்துக்கும் அன்றைய அரபு சமூகம் அடிமைப்பட்டுக் கிடந்தது. பெரும் பெரும் கத்திகளை வைத்துக் கொண்டு இசையுடன் நாட்டுப் புற பாடல்களை பாடிக்கொண்டு நடனமும் ஆடுவார்கள். குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் என்பது இன்றும் நடந்து வருகிறது. 'குப்ஸ்' எனும் ரொட்டிதான் அராபிய கலாசார உணவாகும். இவை எல்லாம் அராபியக் கலாசாரங்கள் என்று அறியப்படுபவை.
ஆனால் ஒரு இஸ்லாமியன் இதில் எதனையுமே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. குர்ஆனிலோ நபி மொழிகளிலோ இவற்றை எல்லாம் பின்பற்றுங்கள் என்ற எந்த அறிவிப்பும் இல்லை. எனவேதான் உலகின் எந்த கோடியில் உள்ள மனிதனும் குர்ஆனை ஒரு வரியைக் கூட ஒதுக்காமல் தனது வாழ்வில் பின்பற்ற முடிகிறது. இந்த ஐரோப்பிய குடும்பத்தில் உள்ள முகங்களை பாருங்கள். அராபிய கலாசாரத்துக்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? பூனைக் கண், மஞ்சள் நிறம், வெள்ளை முடி, உணவு பழக்க வழக்கம், கலாசார பழக்க வழக்கங்கள் என்று எதிலுமே ஒத்து வராத ஐரோப்பிய குடும்பமும் மனம் உவந்து இஸ்லாத்தில் ஐக்கியமாகிறது என்றால் அதனை பார்த்து நாம் அதிசயிக்கிறோம். அராபிய கலாசாரத்தை இஸ்லாம் போதித்திருந்தால் இன்று இந்த குடும்பத்தை இஸ்லாம் ஈர்த்திருக்காது. அரைகுறை ஆடையோடு பல ஆண்களோடு அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இப்படியும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்று ஆச்சரியப்படுகிறோம்.
இறைவன் இந்த குடும்பத்தை குர்ஆனின் கட்டளைகளை வாழ்வின் அனைத்து துறைகளிலும் பின்பற்றக் கூடியவர்களாக ஆக்கி அருள் புரிவானாக!
"இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது, இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்."
குர்ஆன் 110:1,2,3
Tuesday, October 06, 2015
சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கிறார் நயன்தாரா சேகல்
பிரபல எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் உறவினருமான நயன்தாரா சேகல் 1986-ம் ஆண்டு தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
“இந்தியப் பண்பாட்டு பன்முகத் தன்மையை அரசு பாதுகாக்கவில்லை” என்று எதிர்ப்பு தெரிவித்து, சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கப்போவதாக தெரிவித்தார்.
இது குறித்து இந்தியன் கல்ச்சரல் ஃபோரம் என்ற இணையதளத்தில் வெளியான அவரது அறிக்கையின் முழு விவரம்:
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி தன்னுடைய சமீபத்திய சொற்பொழிவில் அனைத்து குடிமகன்களுக்கும் பேச்சு, சிந்தனை, கருத்துரிமைகள், நம்பிக்கை, வழிபாடு குறித்த உரிமைகள் இருப்பதை வலியுறுத்தினார்.
பணிய மறுப்பது அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது, முரண்படுவதற்கான உரிமை என்பது நமது அரசியல் சாசன உத்தரவாதத்தின் உள்ளார்ந்த, தவிர்க்க முடியாத அம்சமாகும். அவர் ஏன் இதனை வலியுறுத்தினார் என்றால், இந்தியாவின் பண்பாட்டு பன்முகத் தன்மை பல்வேறு தரப்புகளிலிருந்து சமீப காலங்களில் தாக்குதலுக்கு உட்பட்டு வருகிறது.
மூட நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்தும் பகுத்தறிவுவாதிகள், இந்து மதத்தின் அசிங்கமான மற்றும் அபாயகரமான திரிபுகளாக அறியப்படும் இந்துத்துவாவை அறிவார்த்த புலத்திலும் கலை / இலக்கிய புலத்திலும் கேள்விக்குட்படுத்துபவர்கள், உணவுப்பழக்க வழக்க முறைகள் மற்றும் வாழ்க்கை முறை என்று எதிலும் கேள்வி கேட்பவர்கள் மற்றும் மாற்று பண்பாடுகள் கொண்டிருப்பவர்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர், அச்சு்றுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர்.
சாகித்ய அகாடமி விருது வென்ற கன்னட எழுத்தாளர் கல்புர்கி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தாபோல்கர், கோவிந்த் பன்சாரே, ஆகிய மூடநம்பிக்கை எதிர்ப்பு பகுத்தறிவுவாதிகள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், சில எதிர்ப்பாளர்களுக்கு அடுத்து இவர்கள்தான் என்ற ரீதியில் கொலை மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சமீபத்தில் பிசாரா கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்ததான சந்தேகத்தின் பேரில் மொகமது இக்லாக் வீட்டிலிருந்து வெளியே இழுத்துவரப்பட்டு மிகக் கொடூரமாக கல்லால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.
இந்த அனைத்து சம்பவங்களிலும் நீதி வழங்கப்படவில்லை. இந்த பயங்கரத்தின் ஆட்சி பற்றி பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார். அதாவது, அவரது கருத்தியலை ஆதரிக்கும் தீமை செய்வோரை அவர் அன்னியப்படுத்த விரும்பவில்லை என்று நாம் அனுமானிக்கவே அவரது மவுனம் வழிவகுக்கிறது.
சாகித்ய அகாடமியும் மவுனம் காக்கிறது என்பதும் வருத்தமளிக்கிறது. அகாடமிகள் எதற்காக இருக்கின்றன? படைப்புபூர்வமான கற்பனை வளத்தையும், கலை, இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றின் நுட்பமான விஷயங்களை ஊக்குவிப்பதில் பாதுகாவலர்களாக செயல்படுவதுதான் அகாடமிகளின் பணி.
கல்புர்கி கொலையை எதிர்த்து இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்து விட்டார். அதே போல் கன்னடா சாகித்ய பரிஷத் விருதுகளை 6 எழுத்தாளர்கள் திரும்ப கொடுத்து விட்டனர்.
எனவே கொலை செய்யப்பட்ட அனைத்து இந்தியர்கள் நினைவாகவும், எதிர்ப்பதற்கான உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் ஆதரவாளர்களுக்காகவும், அச்சத்துடனும், நிச்சயமின்மையுடனும் வாழும் அனைத்து எதிர்ப்பாளர்களுக்காகவும் நான் எனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்கிறேன்.
இவ்வாறு நயன்தாரா சேகல் கூறியுள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
06-10-2015
Subscribe to:
Posts (Atom)