Followers

Sunday, August 21, 2016

நாட்டை உலுக்கும் ராணா அய்யூப்



ராணா அய்யூப். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பெயர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து இவர் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’, இன்று டெல்லியின் அதிகார வர்க்கத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அந்தப் புத்தகம் தமிழில் ‘குஜராத் கோப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

முன்கதை

பூர்வீகம் உத்தரப் பிரதேசம். அப்பா அய்யூப் வகீஃப் உருது கவிஞர். ‘பிளிட்ஸ்’ பத்திரிகையில் பத்திரிகையாளர். முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்திலும் இருந்தவர். அவரைப் பின்தொடர்ந்து, ராணாவும் பத்திரிகைத் துறையில் காலடி எடுத்துவைத்தார்.

இதழியல் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு 2006-ம் ஆண்டு ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு ஆரம்பித்த அவரது பயணம் ‘தெஹல்கா’வில் உச்சத்தைத் தொட்டது. குஜராத் கலவரங்கள், போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பாக அங்கு அவர் எழுதிய கட்டுரைகளால் பாரதிய ஜனதா கட்சியின் இந்நாள் தலைவர் அமித் ஷா அன்று கைது செய்யப்பட்டார்.

தெஹல்காவில் சுமார் ஏழு வருடங்கள் ‘பொலிட்டிக்கல் மற்றும் இன்வெஸ்டிகேட்டிவ் கரஸ்பாண்டன்ட்’ ஆகப் பணியாற்றினார். அப்போதைய தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிராகப் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு எழுந்தபோது, ‘அந்தப் பிரச்சினை நியாயமான முறையில் கையாளப்படவில்லை’ என்று சொல்லி, ராஜினாமா செய்த முதல் பத்திரிகையாளர் இவர்.

ஏன் இந்தக் கோபம்?

‘குஜராத் கலவரம் மாதிரி சென்ஸிட்டிவான விஷயத்தைத் தொட்டிருக்கீங்க. எப்படி இந்தத் துணிச்சல் வந்தது?’ என்று கேட்டதற்கு, சற்று யோசித்துவிட்டுப் பதில் சொல்கிறார்.

“நீதி! அது மட்டும்தான் என்னை உந்தித் தள்ளியது. அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும், அதற்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்று என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால்தான் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தேன்” என்றார்.

நாட்டின் பல்வேறு மூலைகளில் நடக்கும் விஷயங்களை, அங்கு நேரில் செல்லாமல் தலைநகர் டெல்லியில் இருந்துகொண்டே கட்டுரைகள் எழுதும் போக்கை, இன்றைய ஊடக உலகில் ‘லுட்டியன்ஸ் ஜர்னலிசம்’ என்று சொல்வதுண்டு. இவர் அப்படிப்பட்ட பத்திரிகையாளர் இல்லை.

குஜராத் கலவரம் மற்றும் போலி என்கவுன்ட்டர்களால் பாதிக்கப்பட்டவர்களை, அதில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளைப் பற்றி குஜராத்திலேயே எட்டு மாதங்கள் தங்கியிருந்து, பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளார். இதற்காக இவர் ‘வெளிநாட்டிலிருந்து குஜராத் மாநிலத்தைப் பற்றி ஆவணப் படமெடுக்க வந்திருக்கும் பெண் இயக்குநர்’ என்ற வேடமிட வேண்டியிருந்தது. அந்தக் கற்பனைப் பாத்திரத்துக்கு அவர் சூட்டிய பெயர் மைதிலி தியாகி.

உண்மைகளின் பதிவு

‘‘அந்த மைதிலி தியாகி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’’ என்றதும், சிரித்துக்கொண்டே தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ராணா அய்யூப் ஆக என்னால் அந்த மாநிலத்துக்குள் நுழைய முடியாது. ஏனென்றால், என் பெயர் அங்கு மிகவும் பிரபலம். பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். எனவே, ‘மைதிலி தியாகி’ ஆக மாறினேன். என் சிகை, உடை அலங்காரம் போன்றவற்றை மாற்றிக்கொண்டேன். வெளிநாட்டவர்களைப் போல ஆங்கில உச்சரிப்பை திருத்திக் கொண்டேன். இந்தியா, ஃபிரான்ஸ் நாட்டு மாணவர்கள் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்தியா வந்திருந்த ஃபிரெஞ்சு மாணவர் ‘மைக்’ (இது அவரின் உண்மைப் பெயர் அல்ல) என்பவரை கேமராமேனாக நடிக்கச் சொல்லித் துணைக்கு அழைத்துக்கொண்டேன்.

ஒரு விடுதியில் மாத வாடகைக்குத் தங்கியிருந்து பல காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தோம். போகிற இடங்களிலெல்லாம், என் குர்தாவுக்குள் சிறிய கேமராவை மறைத்து வைத்துக்கொண்டு செல்வேன். எப்போதெல்லாம் ஒரு அதிகாரி சில உண்மைத் தகவல்களைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம், வேண்டுமென்றே என் பேனாவைக் கீழே நழுவவிட்டுக் குனிந்து எடுப்பேன். அப்படிக் குனியும்போது என் கேமராவை ‘ஆன்’ செய்துவிடுவேன்.

சில்லிடச் செய்த அனுபவம்

இப்படி ஒரு முறை ஒரு பெண் காவல்துறை அதிகாரியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். முதல் நாள் நாங்கள் அறிமுகமானோம். இரண்டாம் நாள் இரவில் அவர் என்னைத் தனியே ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். ‘ஏதேனும் முக்கியமான தகவலை அவர் நமக்குத் தரப் போகிறாரோ?’ என்ற எண்ணத்துடன் ஒரு ஆட்டோவைப் பிடித்து அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். அது ஒரு நெடுஞ்சாலை. சாலையின் இருபுறமும் காடு. ஆள் அரவம் எதுவுமில்லை. ஒரே ஒரு போலீஸ் ஜீப் மட்டும் நின்றிருந்தது. நான்கைந்து ஆண் கான்ஸ்டபிள்கள் இருந்தனர்.

எனக்கு வியர்த்துக் கொட்டியது. முதுகு சில்லிட்டது. அப்போது அதிலிருந்து அந்த அதிகாரி இறங்கி வந்தார். ‘நான் உன்னை ஒரு ரெஸ்டாரன்ட்டுக்குக் கூட்டிப் போகிறேன். நாம் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என்றார். ஜீப்பில் ஏறினோம். ‘இவர் நம்மை எங்கே கூட்டிப்போகிறார்?’ என்ற கேள்விதான் மனதில் அலையடித்துக்கொண்டே இருந்தது. வழி நெடுக அவர் பேசிக்கொண்டே வந்தார். என்னால் அவர் பேச்சைக் கவனிக்க முடியவில்லை. அப்போது என் அப்பா அம்மாவிடம் பேச வேண்டும் போலிருந்தது. இது என் கடைசி இரவாகக்கூட இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், நான் கடைசியாக இருந்த இடத்தையாவது அவர்களுக்குத் தெரிவித்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தேன்.

நல்லவேளை, நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. உண்மையிலேயே ரெஸ்டாரன்ட்டுக்குத்தான் போனோம். அப்போதுதான் கொஞ்சம் நிம்மதி வந்தது. உடனே நான் கழிவறைக்கு ஓடினேன். குழாயைத் திறந்துவிட்டு, அழத் தொடங்கினேன். அன்று நான் அழுத அழுகை... இன்றுவரை அழுததில்லை. இது ஒரு சம்பவம்தான். நான் தங்கியிருந்த எட்டு மாதங்களில் ஒவ்வொரு நிமிடமும் என்னை ஆபத்து சுற்றிக்கொண்டிருந்தது. நான் எந்த நிமிடம் வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் செய்யப்படுவதற்கான சாத்தியம் இருந்தது!” என்று சொல்லிவிட்டுத் தேநீரைப் பருகினார்.

‘ஒரு பெண்ணாக, அதுவும் ஒரு இஸ்லாமியராக இருந்து நீங்கள் இவ்வளவு பெரிய வேலையைச் செய்தது நிச்சயம் சாதனைதான்!’ என்று சொன்னதற்கு, “தயவு செய்து நான் ஒரு பெண் என்றோ, இஸ்லாமியர் என்றோ பார்க்காதீர்கள். நான் ஒரு ஆணாகவோ அல்லது இந்துவாகவோ இருந்திருந்தால்கூட, நான் செய்திருக்கும் பணிகளுக்கு வேறு சில கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. எனவே, என்னை ஒரு பத்திரிகையாளராக மட்டும் பாருங்கள்!” என்கிறார் கம்பீரமாக!

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
21-08-2016

15 comments:

Dr.Anburaj said...


இரயிலில் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்ட 60 இந்துக்களின்உ யிரைப்பற்றி இந்த அம்மா

என்ன சொல்லியிருக்கின்றாா்கள்.தொிவிக்கலாமே!

ASHAK SJ said...

60 உயிர்கள் கொளுத்தப்பட்டது உண்மைதான், ஆனால் யார் கொளுத்தியது, கொளுத்தியவர்கள் என்று சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது, ஆனால் இதன் மூலம் அப்பாவி முஸ்லிம்களை கொன்ற கயவன் தான் கார்ப்பரேட் ப்ரோக்கர் மோடி, அப்பவனுக்கு பிரணதவர்கள் சரியான குற்றவாளியை கண்டு பிடித்து தண்டனை வழங்க வேண்டும் அதை விட்டு விட்டு எதற்க்காக கொள்ள படுகிறோம் என்று கூட தெரியாமல் நிறைய மக்கள் கொள்ள பட்டார்கள், அப்பாவி குழந்தைகள் என்ன பாவம் செய்தது என்று ப்ரோக்கர் மோடி சொல்வாரா? இதைத்தான் சொன்னோம் 56 க்கு பன்றி போல் உடம்பிருந்து பயன் இல்லை, மூளை வேண்டும் என்று

Feroz said...

முனைவரின் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இந்துத்துவாக்கள் எப்படி இதை செய்தார்கள் என்று பானர்ஜி கமிஷன் மற்றும் டெஹல்கா அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியது( ரயில் வண்டியில் ஒரு கம்பார்ட்மெண்டில் இருந்து கடைசி நடந்து போகலாம் என்பது ரயிலில் தெரியும் அப்படி தீயை வைத்து இருந்தால் அடுத்த பெட்டிக்கு ஓடி தப்பித்து இருக்கலாமே என்று மூளை உள்ளவன் கேட்பான்) . ஆனால் நான் இன்னும் மூளை என்று இல்லாதால் நான் உண்மையை விளங்க மாட்டேன் என்று அடம்பிடுத்து கொண்டு இருக்கிறார். எந்த பின்னூட்டத்தை எடுத்தாலும் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுவது என்பது வாடிக்கை. காபிர்களை கண்ட இடத்தில் கொள்ளுங்கள் என்று இறை வசனத்தை வெட்டி (முழுமையாக போடாமல்) தனக்கு ஏற்றாற்போல் போட்டார் அதற்கு சகோதரர் ஆசிக் முழு வசனத்தை எடுத்து போட்ட போது குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்க முடியவில்லை முனைவருக்கு. ஓன்றும் ஒன்றும் மூன்று என்று விளங்கி இருக்கும் போது ஒன்றும் ஒன்றும் மூன்றல்ல இரண்டு என்று விளக்கும் போது தன தவறாக விளங்கி கொண்டதை ஏற்பவன் தான் பகுத்தறிவு உள்ளவன். படித்தவன். சகோதரர் சுபி அவர்கள் தான் சார்ந்து இருக்கும் மார்க்கத்தில் இருப்பவை பற்றியும் கண்களுக்கு தெரியும் தவறுகளை சுட்டி காட்டுகிறார். ஆனால் எந்த இடத்திலும் மதவெறி கொண்டு மாற்று மத கடவுளையோ கடவுளச்சியையோ அசிங்ககாகவோ அல்லது எள்ளலோ செய்து இருக்கிறாரா? சுட்டி காட்ட முடியுமா முனைவரே. ஆனால் வரம்பு மீறி எங்கள் உயிரினும் மேலான நபியை பற்றி அவதூறு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கும் உங்கள் அளவு இறங்கி இந்து மதத்தை விமர்சிக்க முடியும். ஆனால் எங்கள் இறைவன் மாற்று மத கடவுள்களை ஏசாதீர்கள் என்று கட்டளை இடுகிறான். ஆகவே பதிவு சார்ந்த விவாதத்தை எதிர்பார்க்கிறேன். நட்புடன்

Dr.Anburaj said...

60 உயிர்கள் கொளுத்தப்பட்டது உண்மைதான்,

ஒப்புக் கொண்டதறகு நன்றி.பாராட்டுக்கள். ஆனால் 60 பேரை கொடூரமாக கொலை செய்யும் மனநிலை -மிருகவெறி எப்படி அந்த கொலையை நடத்தியவா்களுக்கு வந்தது - எந்த கருத்து அவர்களை கொலைகாரகாக்கியது-எந்த தத்துவம் அவர்களை மிருகங்களாகியது -?

சிாியாவிலும்எகிப்திலும் ஆப்கானிஸ்தானத்திலும் இரத்தக்களறியாவதற்கு எந்த தத்துவம் காரணமோ எந்த புத்தகம் எந்த நபாின் செல்வாக்கு காரணமோ அதுதான் கோத்ரா படுகொலைக்கும் காரணம்.
சிாியாவிலும்எகிப்திலும் ஆப்கானிஸ்தானத்திலும் யாரும் பகவத்கீதையைப படிக்கவில்லை.
குரானையும் ஹதீஸ்களையும் படிக்கின்றாா்கள். மஹம்மது என்ற ஒரு மக்கா நகரத்து ஒருவரை நேசிக்கின்றாா்கள். இவர்களது நடத்தைக்கு RSS காரணமாக இருக்கவே முடியாது.பின் யாா் என்று சொல்லித்தான் தொிய வேண்டுமா ?
குரான்தான் அது.

Dr.Anburaj said...

இழப்பதற்கல்ல காஷ்மீரம்!
நம் தாய்த்திருநாட்டின் மணி மகுடம் காஷ்மீர். ரிஷி கஷ்யப முனிவரின் பெயரில் காஷ்மீரம் என அழைக்கப்பட்டது. சரஸ்வதி தேவியின் அருளாட்சி காஷ்மீர் பள்ளத்தாக்கில் எப்போதும் கோலோச்சி வருகின்றது. இமயமலைச் சாரலில் பனிமலை சிகரங்கள் அழகு சேர்க்க பூலோக சொர்க்கமாக திகழ்வது ஸ்ரீநகர்.

காஷ்மீர் மக்களின் கலாசாரம் பழமையானது. கடும் குளிரையும் உறை பனியையும் உழைப்பால் வென்றவர்கள் காஷ்மீர் மக்கள். படித்தவர்களை பண்டிதர்கள் என்பார்கள். தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர் என்கிற மாபெரும் தலைவர் பண்டிதர் பட்டம் பெற்றவர். தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்.

தற்போது காஷ்மீரில் வசிப்பவர்கள் பண்டிதர்கள். அதாவது பிராமணர்கள். காஷ்மீர் பிரச்னை என்பது பிராமணர்களின் பிரச்னை என தவறான திசை திருப்பப்பட்டு அவதூறு பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மூதாதையர்கள் காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மகான் ஆதிசங்கரர் தவம் செய்த மலைக்குகை ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் உள்ள தால் ஏரிக்கரையில் உள்ளது. தற்போது இதனை சுலைமான் குகை என பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர்.

காஷ்மீர் மொழியில் ஏராளமான இலக்கியங்களும் வீரசைவ சித்தாந்தங்களும் உள்ளன. மகான் இராமனுஜர் தான் எழுதிய ஸ்ரீபாஷ்யத்தை காஷ்மீர் சரஸ்வதி பீடத்தில் வைத்தபோது, கலைமகள் அதனை தன் தலையில் சூடி அங்கீகரித்தாளாம். மொகலாயர்கள், துருக்கியர்களின் படையெடுப்பின்போது காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

சக்தி பீடங்களும், ராமாயண மஹாபாரத தொடர்புடைய புண்ணியத்தலங்களும் அமர்நாத் பனி லிங்க குகை கோயிலும் காஷ்மீரத்தின் பூர்வகுடிகள் இந்துக்களே என்பதை நிலைநாட்டுகின்றன. அந்நியப் படையெடுப்பின்போது கோயில்கள் சூறையாடப்பட்டன. காஷ்மீர் மக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.

சீக்கிய மதத்தின் எட்டாவது குரு தேஹ்பகதூர், காஷ்மீர் இந்துக்களை காப்பதற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். சீக்கிய மதத்தைச் சேர்ந்த ராஜா ரஞ்சித்சிங் காஷ்மீரை ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து மீட்க போர் புரிந்துள்ளார். சீக்கிய மதத்தின் பத்தாவது குரு கோவிந்த்சிங் காஷ்மீரை காப்பாற்ற யுத்தம் புரிந்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட காஷ்மீரில் பெரும்பான்மையாக இந்துக்கள்தான் வசித்து வந்தனர். பிரிவினையின் போது காஷ்மீர் மஹாராஜ ஹரிசிங் நிபந்தனையற்ற முறையில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார். அதற்குக் காரணம், சுதந்திரம் பெற்ற உடனேயே பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்கத் துவங்கியது.

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இந்திய ராணுவத்தினர் வெற்றி பெற்று காஷ்மீரைக் காப்பாற்றினர். இந்திய ராணுவம் போரில் வெற்றி பெற்று கொண்டிருக்கும்போதே முழுமையான காஷ்மீர் மீட்கப்படும் முன்பாக ஜவாஹர்லால் நேரு போர் நிறுத்த அறிவிப்பு செய்தார். இப்பிரச்னையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றார். இதன் காரணமாக இன்றளவும் காஷ்மீர் பிரச்னை நீடிக்கின்றது.

காஷ்மீரை பூகோள ரீதியாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று - இன்றும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஜம்மு பகுதி, இரண்டு - முழுமையாக இந்துக்களும், சீக்கியர்களும் விரட்டியடிக்கப்பட்டு முஸ்லிம்கள் மட்டுமே வாழுகின்ற ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு, மூன்று - பெளத்தர்களும் ஷியா முஸ்லிம்களும் கணிசமாக வாழுகின்ற லடாக் பகுதி.

கடந்த பத்து ஆண்டுகளுக்குள்ளாக ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களும் முழுமையாக முஸ்லிம் மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியில் காஷ்மீர் மொழி முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது.
உருது மொழியும் அரபு மொழியும் மட்டுமே மக்களின் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் உள்ளன.

பெரும்பாலான இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு விட்டன.

Dr.Anburaj said...

1948-இல் மூன்றில் ஒருபங்கு காஷ்மீரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இதனை "ஆசாத் காஷ்மீர்' என பாகிஸ்தான் சொல்கிறது. நாம் இதனை "பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்' என்று சொல்கிறோம். இதில் ஒரு பகுதியை பாகிஸ்தான் சீனாவிற்கு கொடுத்துள்ளது. இப்பகுதி "அக்சய்சின்' என அழைக்கப்படுகிறது.

இப்பகுதியில் சீன ராணுவம் சாலை வசதிகளை அமைத்து தனது போர்த்தளவாடங்களை குவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியிலிருந்துதான் பயங்கரவாதம் உலகம் முழுக்க பரவி வருகின்றது.

இங்கு பாகிஸ்தான் அரசு ஏராளமான பயிற்சி முகாம்களை பயங்கரவாதிகளுக்காக நடத்தி வருகின்றது.
காஷ்மீர் இளைஞர்களுக்கும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கும் மூளைச்சலவை செய்தும் பண ஆசை காட்டியும் ஆயுதப்பயிற்சி கொடுத்தும் அவர்களை

ஜிகாத் பயங்கரவாதிகளாக மாற்றி

இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்து கொடிய பயங்கரவாதச் செயல்களை இந்தியாவிற்குள் நடத்தி வருகின்றனர்.

பாரத நாட்டில் உள்ள சில அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளும், கம்யூனிச இடதுசாரி நக்ஸல் அமைப்புக்களும், திராவிடர் கழகங்களும் சில மனித உரிமை அமைப்புக்களும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இந்திய ராணுவத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வது வேதனையாக உள்ளது.( சுவனப்பிாியன்கூட)

ஸ்ரீநகரில் கலவரக்காரர்கள் பாகிஸ்தான் கொடியை உயர்த்திப்பிடிக்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை காட்டுகின்றனர்.
இந்திய தேசிய கொடியை எரிக்கின்றனர்.
பெண்களையும் குழந்தைகளையும் முன்நிறுத்தி
ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.

கலவரக்காரர்கள் இயந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி, பொது மக்களையும் போலீஸாரையும், ராணுவத்தினரையும் தாக்கலாம்.

ஆனால் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

Dr.Anburaj said...

தற்போது "பெல்லட்' ரக துப்பாக்கி அதாவது குண்டுகளுக்கு பதிலாக உயிர்ச்சேதம் ஏற்படுத்தாத கற்களை தோட்டாக்களாக பயன்படுத்தும் துப்பாக்கியையும் ராணுவத்தினர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐயோ பாவம் காவல் துறையும் ராணுவ வீரர்களும் கல்லடிபட்டு சாக வேண்டியதுதானா?

காஷ்மீரில் இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள், ஒரு கிராமத்தில் சீக்கியர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் இவற்றைக் கேட்பதற்கு நாதியில்லை. ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியில் வேலையின்மை, வறுமை எனவே இளைஞர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்றெல்லாம் தவறான தகவலை தருகின்றனர்.

உண்மையில் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் இதுவரை நடத்தப்பட்டதும் தற்போது நடந்து கொண்டிருப்பதும் திட்டமிட்ட இனப்படுகொலையாகும். காஷ்மீர் பூர்வகுடி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். காஷ்மீர் மொழி, பண்பாடு, கலாசாரம், தொன்மைச் சின்னங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு உள்ளன.

காஷ்மீரில் கலவரக்காரர்களுக்கு தலைமை தாங்கும் பயங்கரவாதகுழுக்களின் தலைவர்களின் வாரிசுகள் அனைவரும் நன்கு படித்து வேலை வாய்ப்பு பெற்று சிறப்பாக வாழ்கின்றனர். ஆனால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தான் தூண்டுதல் மற்றும் உதவி மூலம் இஸ்லாமிய மதரசாக் கல்வி எனும் பெயரில் பயிற்சி கொடுத்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.

அரசியல் சாசனப்பிரிவு 370-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள காஷ்மீருக்கான விசேஷ அந்தஸ்து மூலம் கிடைக்கும் பெருவாரியான சலுகைகளை ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதி மக்களே அனுபவித்துள்ளனர்.

லடாக் பகுதி பெளத்தர்களும் ஷியாமுஸ்லீம்களும், ஜம்மு பகுதி இந்துக்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

காஷ்மீருக்கு ஒதுக்கப்படும் நிதி, வளர்ச்சித்திட்டங்கள் ஆகியவை பெருமளவு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியே அனுபவித்துள்ளது. ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளிலும் பயங்கரவாதிகளின் அக்கிரமங்கள் அதிகரித்து வருகின்றன.

Dr.Anburaj said...

இப்போது ஜம்முவிலும் பல மாவட்டங்களில் காஷ்மீர் பூர்வகுடி இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. நாம் நம் நாட்டைக் காக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும். ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டும்.

காஷ்மீரில் பா.ஜ.க., பி.டி.பி. கூட்டணி அரசு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட அரசாகும். தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. கூட்டணி அரசை வெறும் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கக் கூடாது. நமது ராணுவத்தினரின் மன உறுதியை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது.

காஷ்மீருக்காக நாம் கார்கில் யுத்தம் உள்பட நான்கு யுத்தங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளோம். இத்தனைக்கு பிறகும் நாம் காஷ்மீரை இழந்து காஷ்மீரிகளை பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சிந்திகள் மற்றும் பஞ்சாபிகளை போலவோ, வங்காள தேசத்தில் உள்ள சிறுபான்மை கிழக்கு வங்காளிகளை போலவோ, இலங்கையிலுள்ள சிறுபான்மை இந்து தமிழர்களை போலவோ கைவிட்டுவிடக் கூடாது.

இழப்பதற்கல்ல காஷ்மீரம், பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து காஷ்மீரைக் காப்போம். பாரதம் காப்போம்.

Dr.Anburaj said...


ஷியா முஸ்லீம் சன்னி முஸ்லீமை காபீா் என்கிறான்.இவன் அவனை காபீா் எனகிறான். இரண்டு பேரும் தற்கொலை தாக்குதல் நடத்துகின்றான்.

காபீா் என்ற பதம்தான் கொலை தத்துவம்.

அஹமதியா -காதியானி முஸ்லீம்கள் இரண்டு பேரை நான் நன்கு அறிவேன். பெரும்பான்மை முஸ்லீம்கள் வசிக்கும் அந்த ஊாில் அந்த இரு காதியானி குடும்பங்களும் படும் பாட்டை வாா்த்தைகளில் வடிக்க இயலாது. மற்ற முஸ்லீம்கள் அவர்களை காபீா்கள் என்றுதான் பட்டம் கட்டியுள்ளாா்கள்.கொடுமைபடுத்துகின்றாா்கள்.

காபீா் பட்டம் கட்டு
காலி பண்ணு
என்பதுதான் பயங்கரவாத செயல்களுக்கான
அடிப்படை தத்துவம் என்பது சத்தியமான வாா்த்தை.உண்மை.

இந்தியா இந்துபண்பாடு குறித்தும் கடுகளவு அன்போ மாியாதையோ யின்றி வாழும் தாங்கள்
அரேபியனாக வாழ்ந்து வருகின்றீா்கள்.இந்தியாவை அதுநிமித்தம் வெறுக்கின்றீா்கள். கிழக்கு பாக்கிஸ்தான் என்ற நாடு ஒன்றிருந்தது.அது பங்களாதேஷ் ஆக மாறியுள்ளது அதன் வரலாற்றை ச்ற்று படியுங்கள். இந்துக்களுக்கு செய்யப்பட்ட கொடுமை ... மிருகங்கள் கூட இப்படிப்பட்ட காாியங்களைச் செய்யுமா ? செய்யாது?

குரானையும் முஹம்மதுவையும் படித்தவா்களிடம் ஏன் இந்துக்கள் குறித்தும் பிற மதத்தவா்கள் குறித்தும் இவ்வளவு கொடுமையான எண்ணங்கள் ?

இந்தக்களை காபீா்கள் என்பது உங்கள் அனைவாின் கொள்கை.ஆகவே பயப்படுகின்றோம்.பாதுகாப்பு தேடுகின்றோம்.

திரு.பேரோஸ் அவர்களே புாிந்ததா ?

Feroz said...

//60 உயிர்கள் கொளுத்தப்பட்டது உண்மைதான்,

ஒப்புக் கொண்டதறகு நன்றி.பாராட்டுக்கள்//

//காபீா் பட்டம் கட்டு
காலி பண்ணு
என்பதுதான் பயங்கரவாத செயல்களுக்கான
அடிப்படை தத்துவம் என்பது சத்தியமான வாா்த்தை.உண்மை.//
முடியவில்லை முனைவரே, நான் சொன்னது என்ன நீங்கள் சொல்வது என்ன. உங்களிடம் பிரச்சினையாய் இருப்பது உங்கள் மனநலம். நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. 60 பேரை கொளுத்தியது யார் என்று பானர்ஜி கமிசனும் டெஹல்காவும் போட்டு உடைத்ததை சொன்னேன். மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்று பாட்டு பாடி கொண்டு இருக்கிறீர்கள். காபிர்களை கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு சகோ ஆசிக் அளித்த இறை வசனத்திற்கு ஏன் வருத்தம் தெரிவிக்க வில்லை என்று கேட்டேன் என்றும் போல் சம்பந்தம் இல்லாமல் சியா சன்னி என்று ஜல்லி அடிக்கிறீர்கள். உங்கள் மாணவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. உண்மையில் அறிவு நாணயம் உள்ளவன் வருத்தம் தெரிவிப்பான் ஆனால் உடல் மற்றும் மனம் முழுவதும் மத வெறி நோய் பரவி இருக்கிறது. தோழமையுடன்

ASHAK SJ said...

டேய் லூசு, 60 உயிரை கொன்றது யார் என்று கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை தருவது ஆண்மையா? இல்லை அப்பாவிகளை கொல்வது ஆண்மையா? மூடர் கூடம், அப்பறம் என்ன சொன்னாலும் காஷ்மீர் வேறு நாடே வேறு நாடே, துரோகி இந்தியாவும் எதிரி பாகிஸ்தானானும் வெளியேற வேண்டும்

ASHAK SJ said...

2000 லட்சம் கோடி இந்தியா ராணுவத்திற்கு செலவு செய்கிறது (அதிகமான ராணுவம் காஷ்மீர் பிரச்சனைக்காக பயன்படுத்தப்படுகிறது), கல்விக்கும் மருத்துவத்துக்கும் பணத்தை குறைத்து கொடுத்து தேவை இல்லாமல் பணத்தை விரயமாக்கும் அரசு தேவை இல்லை

Dr.Anburaj said...


ஒ பிரச்சனையை முழுமையாக அணுக வேணடும்.கோத்ரா சம்பவம் நடந்த அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திாிகையில் அந்த செய்தியை நான் படித்தேன். 2000 ஆட்களைக் கொண்ட கும்பல் தீயணைப்பு வண்டிகள் ரயில் நிலையத்திற்குள் நுழைய முடியாதபடி கல்வீசி தாக்கியது என்று எழுதியிருந்தது. யாா் அந்த மக்கள் உள்ளுா் முஸ்லீம்கள்தான். ஆனால் நமது கமிஷன்கள் -இத்தனை கமிஷன் எதற்கு - உண்மை உலகிற்கு தொியும்.. கோத்ராவில் உள்ள உள்ளுா் முஸ்லீம்கள் தீவைத்தாாகள். இவர்களையும் கண்டியுங்கள்.

பழிவாங்குவது போல் நடந்து கொண்ட இந்துக்கள் செய்ததும் நிச்சயம் பெறும் தவறுதான் தவறுதான்.

முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டது குறித்து எழுதும் அளவிற்கு இந்துக்கள் கொழுத்தப்பட்ட விசயம் முக்கியத்துவம் பெறவில்லையே ?

Dr.Anburaj said...


காஷ்மீாில் உள்ள இந்துக்களை காப்பதற்கு 2000 லட்சம் கோடி செலவு செய்கின்றோம் என்பது உண்மைதான். காஷ்மீா் இந்துக்களை காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகவும் அல்பமாக உள்ளது. நிறைய செய்ய வேண்டும். காஷ்மீா் இந்துக்கள் சிறுபான்மையினா் என அறிவித்து அதிக பாதுகாப்பு அளிக்க வேண்டும். இன்னும் நிறைய தேவை.

Dr.Anburaj said...

ஒரு கம்பார்ட்மெண்டில் இருந்து கடைசி நடந்து போகலாம் என்பது ரயிலில் தெரியும் அப்படி தீயை வைத்து இருந்தால் அடுத்த பெட்டிக்கு ஓடி தப்பித்து இருக்கலாமே என்று மூளை உள்ளவன் கேட்பான்) .
---------------
விரைவு ரயில்களில்தான் இந்த வசதி.லோக்கல் சா்வீஸ்கள் பல தனித்தனி பெட்டியாகவே இருக்கும். இதுகூட தொியாதா ?

தாங்கள் ரயிலைப் பாத்திதிருக்கின்றீா்களா ? பெரோஸ் ஐயா அவர்களே!