Followers

Thursday, August 09, 2018

இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்


இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்


//நான் அரேபிய வல்லாதிக்க இயக்கமான இசுலாத்தை ஏற்கவில்லை.
நான் இந்து சமயத்தை பின்பற்றுகின்றேன்.
இந்து சமூகத்தில் பல கலாச்சார பிரிவுகள் கோத்திரங்கள் இருக்கின்றது.கலாச்சார வேறுபாடு உள்ளது.அதன் அடிப்படையில் பல சமய அனுஷ்டானங்கள் உள்ளன். அதன்படி அவர்களுக்கென தனி கோவில் அமைப்பு அனுஷ்டான முறைகள் இருக்கின்றன்.நான் அந்தந்த கோயிலுக்கு சென்றால் அதற்கு தக்க நடந்து கொள்வேன். இறைவன் ஒருவனே என்பது எனக்கு தெரியும்.இந்து மதத்தில் பல தெய்வங்கள் இல்லை.பல கலாச்சார பிரிவுகள் உள்ளன்.
இந்நிலையில் நான் காபீா்ரா ? இல்லையா ? பதில் பதிவு செய்யுங்கள்.//

Dr Anbu Raj

இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்

இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி கியான்' என்றும் கூறுவர். இந்த வேதங்கள் சமஸ்கிரத மொழியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். வேதம் இறக்கியருளப்பட்டக் காலத்தில் எழுத்துப் பயிற்சி இல்லாததால் ஆசிரியர்கள் வேதங்களை வாய் வழியாக ஓதி வந்தனர். அவ்வாறு தலைமுறை தலைமுறையாகச் சென்ற பல நூற்றாண்டுகளாக வாய் மொழியாகவே ஓதப் பட்டு வந்த வேதங்களை இன்று வரை கற்கப் பட்டும் கற்பிக்கப் பட்டும் ஓதப் பட்டும் வருகின்றன. சென்ற ஒரு நூற்றாண்டுக் காலத்திற்க்குள்ளாகத் தான் வேதங்களை எழுதுவது, அச்சிடுவது, மொழி பெயர்ப்பது என்னும் பழக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

எழுத்து முறை உலகிலேயே முதன் முதலாக பினீசியர் என்னும் கிழக்கு மத்திய தரைப் பிரதேச மக்களால் கண்டு பிடிக்கப் பட்டது என்பதை நாம் அறிவோம். பினீசியாவிலிருந்து மெசப்பட்டோமியா வழியாகவும் பாரசீகம் வழியாகவும் வந்து இப்புதுமை இந்தியாவை அடைந்திருக்க வேண்டும். ஆதியில் இந்தியாவில் பழக்கத்திற்கு வந்த எழுத்து முறை 'பிராமி' எனப்படும். இவ்வெழுத்துக்களிலேயே அசோகரது கல் வெட்டுக்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

இந்துக்களின் வேதங்கள் கி.மு. 1500 க்கும் கி.மு. ஆயிரத்துக்கும் இடைப் பட்ட காலத்தில் இயற்றப் பட்டதாக இருக்கலாம். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வியாஸர் அவற்றை தொகுத்தும் வகுத்தும் ரிக், யசூர், சாம, அதர்வம் என்று பாகு படுத்தி பதிப்பித்து இருக்கலாம் என்று இந்து மதப் பெரியார்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கான சான்றுகள் எதையும் கூறவில்லை.

வேதம் அருளப்பட்ட காலம் எழுத்துப் பயிற்சி என்பது இல்லாத காலமாதலால் வேதம் அருளப் படும்போது அது எழுதி வைக்க சாத்தியமில்லை.

காலம் காலமாக வேத மொழியாக (வாய் மொழியாக) இருந்த கிரந்தங்கள் பின்பு பிரகிருத மொழிக்கு மாற்றப் பட்டது. (பாகத அல்லது பிராகிருத மொழி என்பது பாமர மொழியாகும்) பின்பு பிராகிருத மொழியிலிருந்து சமஸ்கிரதத்திற்கு மாற்றப் பட்டது. (சமஸ்கிரதம் என்றால் செப்பனிடப் பட்ட மொழி - அறிஞர்கள் மொழி) இவ்வாறு காலம் காலமாக வாய் மொழியாக இருந்து பின்பு மொழி பெயர்ப்புக்கு உட்பட்டு வந்ததால் அதில் இடைச் சொருகல் ஏற்படவும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

நூஹ் (நோவா) நபிக்கு அருளப்பட்ட வேதம் அப்படியே இப்போது இருக்குமானால் அது மொழி மாற்றத்தைத் தவிர மற்றெல்லா வகையிலும் அது திருக் குர்ஆனுக்கு ஒத்ததாகவே இருக்கும்.

இறைவன் குர்ஆனில் பல இடங்களில் தூதர்களைக் குறிப்பிடும் போது நோவா, அப்ரஹாம், மோஸே, தாவீது, ஏசு, முகமது என்று அனைத்து இறைத் தூதர்களையும் சிலாகித்துக் கூறுகிறான்.

முகமது நபிக்கு குர்ஆனையும், ஏசு நாதருக்கு இன்ஜீலையும், தாவூத் நபிக்கு ஜபூரையும், இப்றாகீம் நபிக்கு சில ஆகமங்களையும் வழங்கியதாகக் கூறுகிறான். ஆனால் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதம் பற்றி நேரிடையாக எதுவும் குறிப்பிடவில்லை.

இனங்களைக் குறிப்பிடும் போது யூதர்கள்,கிறித்தவர்கள், ஸாபியீன்கள், முஸ்லிம்கள் என்று பிரித்தறிவிக்கிறான். அதில் ஸாபியீன்களுக்கு வேதம் அருளப்பட்டதாகவும் கூறுகிறான்.

குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிய இப்னு கஸீர் தன்னுடைய விளக்கத்தில் ஸாபியீன்கள் என்பவர்கள் நூஹ் நபியுடைய இனத்தவர்களே என்று கூறுகிறார்.

ஸாபியீன்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை வணங்குபவர்களாகவும் கிரக பலன், சோதிடம், இவற்றில் நம்பிக்கையுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் வானவர்களை (தேவர்களை) வணங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று மார்க்க அறிஞர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இந்த வணக்க வழி பாட்டு முறைகள் அனைத்தும் அப்படியே அமையப் பெற்ற இனத்தவர் இந்துக்களே என்று தெளிவாக அறிகிறோம். ஆகவே குர்ஆன் கூறும் ஸாபியீன்கள் என்பவர் இந்துக்களே என்று தெளிவாக விளங்க முடிகிறது.

இந்த ஸாபியீன்களுக்கு அனுப்பப் பட்ட தூதர் அதாவது இந்து சமூகத்திற்கு அனுப்பப் பட்ட தூதர் நூஹ் (நோவா) நபி அவர்களே!

குர்ஆன் தவ்ராத்தையும், இன்ஜீலையும், ஜபூரையும், இப்றாஹீமின் ஆகமங்களையும் தவிர்த்து முதல் வேதம் (ஸீஹீஃபில் உலா), முன்னோர்களின் வேதம் (ஜீபூருல் அவ்வலீன்) என்ற பெயர்களையும் குறிப்பிடுகிறது. முதல் வேதம், முன்னோர்களின் வேதம் என்றால் குர்ஆன், இன்ஜீல், ஸபூர், தவ்ராத், இப்றாகீமின் ஆகமங்களுக்கு முந்தியதாகத்தான் இருக்க வேண்டும். 

இந்த வேதங்கள் அருளப்பட்ட தூதர்களுக்கு முந்தைய தூதர் நோவா தான். நோவா (நூஹ்) நபியின் சமுதாயம் தான் ஸாபியின்கள். ஸாபியீன்கள் தான் இக்காலத்தில் இந்துக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்துக்கள் தங்களிடையே உள்ள வேதங்களை 'ஆதிகிரந்தம்' என்றும் ' ஆதி கியான்' என்றும் கூறுகின்றனர். 'ஸீஹீபில் உலா' 'ஜீபூருல் அவ்வல்' என்னும் பெயர்களுக்கு இணையான சமஸ்கிரத சொல் 'ஆதி கிரந்', 'ஆதி கியான்' ஆகும். இதன் மூலம் குர்ஆன் கூறும் முன்னோர்களின் வேதம் என்பது 'ஆதி கிரந்தம்', 'ஆதிகியான்' என்பது தெளிவாகிறது.

இந்த பெயர் மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகும். குர்ஆன் கிறித்தவர்களை நசாராக்கள் என்று அழைக்கிறது. கிறித்தவர்கள் எவரும் தங்களை நசாராக்கள் என்று கூறிக் கொள்வதில்லை. அது போல் கிறித்தவர்களின் வேதத்தை குர்ஆன் 'இன்ஜீல்' என்ற கூறுகிறது. கிறித்தவர்களோ அதனை பைபிள் என்கின்றனர். குர்ஆன் தாவூதுக்கு அருளிய வேதத்தை 'ஜபூர்' என்று அழைக்கிறது. யூதர்களும், கிறித்தவர்களும் அதை 'சங்கீதம்'என்று தான் அழைக்கிறார்கள். எனவெ இந்த பெயர் மாற்றம் என்பது காலத்துக்கு தக்கவாறு மாறுகிறது என்பது தவிர்க்க முடியாதது.

நோவா அவர்களுக்கு அருளப்பட்ட இவ்விரு வேதங்களில் ஒன்று ஜலப் பிரளயத்துக்கு முன்பும், மற்றொன்று ஜலப் பிரளயத்துக்கு பின்பும் அருளப் பட்டதாய் இருக்கலாம். இறைவனே நன்கறிந்தவன்.

'நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.'

26 : 196 - குர்ஆன்


சங்கீதத்தையும், தோராவையும், சுவிஷேஷங்களையும் தவிர்த்து முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

உலகிலேயே பழமையான வேதங்கள் இந்துக்களிடமுள்ளது. ஓரளவுக்கு மூல மொழியில் உள்ள வேதங்களும் இந்துக்களுடையதே! நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது என்று குர்ஆன் கூறியதை மெய்ப்பிக்கும் படியாக இந்துக்களிடமுள்ள கிரந்தங்களிலும் குர்ஆனுக்கு ஒத்த கருத்துடைய சில வசனங்களையும், குர்ஆனுக்கு இணையான நடையழகையும் முன்பு கண்டோம்.

'நபியே! இன்னும் உமக்கு முன்னர் வஹீ மூலம் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.'

16 : 43,44 - குர்ஆன்

என்று இறைவன் குரஆனில் கூறுகிறான்.

தொன்மையான காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன்
8 : 6 : 11 - ரிக் வேதம்


இதிலிருந்து குர்ஆன் 'குறிப்பிடும் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும்' கொண்டு தொகுக்கப் பட்ட பாடல்களையே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் என்று விளங்கிக் கொள்ளும் படியாக ரிக் வேதத்தின் சுலோகம் அமைந்துள்ளது.

இறைவன் நோவா அவர்களுக்கு அருளிய வேதங்களான ஆதி கிரந்தம், ஆதி கியான் போன்றவை தொன்மையான காலம் தொட்டு வாய் மொழியாக, மரபுச் செய்தியாக இருந்தது. அவைகளே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதம் என்று பகுத்து தொகுக்கப் பட்டிருக்கிறது என்று விளங்க முடிகிறது.

வேதங்கள் தவிர்த்து புராணங்கள், உபநிஷத்துக்கள், ஆரண்யங்கள், ஸ்மிருதிகள் எல்லாம் இந்துக்களின் புனித நூல்களாக உள்ளன. குர்ஆனுக்கு விளக்க உரையாக முகமது நபியின் 'நபி மொழிகள்' எவ்வாறு அமைந்திருக்கிறதோ அது போல ஆதி கிரந்தங்களுக்கு ரிஷிகளால் எழுதப் பட்ட வியாக்யானங்களாக இந்த புராணங்களும் உபநிஷத்துகளும், எழுதப் பட்டிருக்க வேண்டும். அல்லது நோவாவுக்குப் பிறகு வந்த இறைத் தூதர்களின் விளக்கங்களின் தொகுப்பாகக் கூட இருக்கலாம்.

'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'

87 : 18,19 -குர்ஆன்


“Ekam Evadvitiyam”
“He is only one without a second.”
(Chandogya Upanishad 6:2:1)

“He who knows Me as the unborn, as the beginning-less, as the Supreme Lord of all the Worlds.”
(Bhagvad Gita 10:3)
and “Of (check – or For Him?) Him there is neither parents nor Lord.”
(Shwetashvatara Upanishad 6:9)

A similar message is given in Shwetashvatara Upanishad & Yajurveda:
“Na Tasya pratima asti”
“There is no likeness of Him.”
(Shwetashvatara Upanishad 4:19 & Yajurveda 32:3)


இறைவனே மிக அறிந்தவன்.

தகவல் உதவிக்கு நனறி
ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

நீங்கள் காஃபிரா இல்லையா என்பதை உங்கள் உள் மனதும் இறைவனுமே அறிந்தவர்கள். அது பற்றிய அறிவு எனக்கில்லை.

6 comments:

Dr.Anburaj said...

நன்றி. என்னை காபீா் என்று தீர்ப்பு அளிக்காமல் பின்வாங்கியதற்க நன்றி. முஹம்மதுவின் போதனைகளை நன்கு படித்தவன் என்ற முறையில் ” இசுலாமிய இலக்கணப்படி காபீா் என்ற பதம் எனக்கு பொருந்தும்.பாக்கிஸ்தானில் நான் பிறந்திருந்தால் எனது நிலை என்னவாயிருக்கும் ????????????
பியே! இன்னும் உமக்கு முன்னர் வஹீ மூலம் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.'
16 : 43,44 - குர்ஆன்
என்று இறைவன் குரஆனில் கூறுகிறான்.

தொன்மையான காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன்
8 : 6 : 11 - ரிக் வேதம்

இதிலிருந்து குர்ஆன் 'குறிப்பிடும் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும்' கொண்டு தொகுக்கப் பட்ட பாடல்களையே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் என்று விளங்கிக் கொள்ளும் படியாக ரிக் வேதத்தின் சுலோகம் அமைந்துள்ளது.
---------------------------------------------------------------------------
நபி என்ற சித்தாந்தம் இந்தியாவில் என்றும் இருந்ததில்லை. முழுமையான மனிதர்களை கொண்டாடுவதற்கு அவர்களுடைய தவம், தொண்டு ஒழுக்கம் போன்ற உயா் தகுதிதான் காரணம்.கௌதமா் கடவுளை நம்பினாரா நம்பவில்லையா என்பதை குறித்து ஒரு இந்து கவனிப்பதில்லை.கௌதமரின் அன்புள்ளம் ஒரு இந்துவை மலைக்கவைக்கின்றது. அது அவரை போற்ற பின்பற்ற துதிக்க இந்துவிற்கு போதுமானது.இதுபோல் இசுலாம் என்ற பெயரின்றி கிறிஸ்தவம் என்ற பெயரின்றி முகம்மதுவின் போதனைகளை இயேசுவை படிக்க சிந்திக்க இந்துக்கள் இயல்பாக முன்வருவார்கள்.ஆனால் மதமாற்றம் என்று இந்தியாவை இந்து கலாச்சாரத்தை நல்ல பண்புகளை இந்து முன்னோர்களின் பெயா்களை வரலாறுகளை பொட்டை குங்குமத்தை அழகிய மலா் அலங்காரத்தை, தீபங்களின் அலங்காரத்தை, தோ் திருவிழாக்களை நிராகரிப்பதை ஒரு இந்துவால் எற்கஇயலாது.ஒரு இந்து என்ற நிலையில் காலத்திற்கு தக்க தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கின்றான்.

அது அரேபியனாக மாறுவதாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
ஒரு இந்தியன் அரேபியனாக மாறக் கூடாது.அது மதம் ஆன்மீகம் அல்ல.

மேலே நாடுகளில் இந்துசமய கருத்துக்களுக்கு இன்று அதிக வரவேற்பு இருக்கின்றது.குறிப்பாக யோகா மற்றும் தீப அலங்காரங்கள்மற்றும் தோ்திருவிழாக்கள் மேற்கு நாட்டு மக்களை வெகுவாக கவர்கின்றன்.ஆனால் இந்து சமய கருத்துக்கள் அங்கிருக்கும்உ ள்நாட்டு கலாச்சாரத்தை செழிக்க வைக்கும் செயலையே செய்கின்றன. அவற்றை முற்றிலும் அழிக்கும் எந்த செயலையும் அது செய்யவில்லை.சரியாக சொல்வதென்றால் இயேசுவை வெறுக்கக் கற்றுக் கொடுக்கவில்லை-அதுதான் முக்கியம்.
இந்தியாவில் இசுலாம் அரேபிய காடையா்களைக் கூட நேசிக்க கற்றுக்கொடுக்கின்றது.பிறமதத்தவா்களை அழிக்க தேவையான கருத்துக்கள் திட்டங்களை தன்னுள் கொண்டுள்ளது.
இந்தியாவில் பிறந்த கௌதமனை வியாசரை ஆதிசங்கரரை ஸ்ரீநாராயணகுருவை ஸ்ரீகண்ணனை ஸ்ரீராமனை புறக்கணிக்க சொல்கின்றது. இந்தியாவில் பிறந்த கீதையை இராமாயாணத்தை மகாபாரதத்தை -இந்தியாவில் வரலாற்றை தொன்மையை புறக்கணிக்க த் தூண்டுகின்றது. இந்தியாவில் பிறந்த சமய அடியார்களை அனைவரையம் வெறுக்க இசுலாம்கற்றுக்கொடுக்கின்றது.
ஆகவே இசுலாத்தை நான் புறக்கணிக்கின்றேன். எந்த இந்துவும் மதம் மாறிப்போகக் 4டாது என்பதில் ஆா்வம் உள்ளவனாக இருக்கின்றேன்.
நன்றி பாராட்டுக்கள்.

Dr.Anburaj said...


நன்றி. என்னை காபீா் என்று தீர்ப்பு அளிக்காமல் பின்வாங்கியதற்க நன்றி. முஹம்மதுவின் போதனைகளை நன்கு படித்தவன் என்ற முறையில் ” இசுலாமிய இலக்கணப்படி காபீா் என்ற பதம் எனக்கு பொருந்தும்.பாக்கிஸ்தானில் நான் பிறந்திருந்தால் எனது நிலை என்னவாயிருக்கும் ????????????
பியே! இன்னும் உமக்கு முன்னர் வஹீ மூலம் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.'
16 : 43,44 - குர்ஆன்
என்று இறைவன் குரஆனில் கூறுகிறான்.

தொன்மையான காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன்
8 : 6 : 11 - ரிக் வேதம்

இதிலிருந்து குர்ஆன் 'குறிப்பிடும் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும்' கொண்டு தொகுக்கப் பட்ட பாடல்களையே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் என்று விளங்கிக் கொள்ளும் படியாக ரிக் வேதத்தின் சுலோகம் அமைந்துள்ளது.
---------------------------------------------------------------------------
நபி என்ற சித்தாந்தம் இந்தியாவில் என்றும் இருந்ததில்லை. முழுமையான மனிதர்களை கொண்டாடுவதற்கு அவர்களுடைய தவம், தொண்டு ஒழுக்கம் போன்ற உயா் தகுதிதான் காரணம்.கௌதமா் கடவுளை நம்பினாரா நம்பவில்லையா என்பதை குறித்து ஒரு இந்து கவனிப்பதில்லை.கௌதமரின் அன்புள்ளம் ஒரு இந்துவை மலைக்கவைக்கின்றது. அது அவரை போற்ற பின்பற்ற துதிக்க இந்துவிற்கு போதுமானது.இதுபோல் இசுலாம் என்ற பெயரின்றி கிறிஸ்தவம் என்ற பெயரின்றி முகம்மதுவின் போதனைகளை இயேசுவை படிக்க சிந்திக்க இந்துக்கள் இயல்பாக முன்வருவார்கள்.ஆனால் மதமாற்றம் என்று இந்தியாவை இந்து கலாச்சாரத்தை நல்ல பண்புகளை இந்து முன்னோர்களின் பெயா்களை வரலாறுகளை பொட்டை குங்குமத்தை அழகிய மலா் அலங்காரத்தை, தீபங்களின் அலங்காரத்தை, தோ் திருவிழாக்களை நிராகரிப்பதை ஒரு இந்துவால் எற்கஇயலாது.ஒரு இந்து என்ற நிலையில் காலத்திற்கு தக்க தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கின்றான்.

அது அரேபியனாக மாறுவதாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
ஒரு இந்தியன் அரேபியனாக மாறக் கூடாது.அது மதம் ஆன்மீகம் அல்ல.

மேலே நாடுகளில் இந்துசமய கருத்துக்களுக்கு இன்று அதிக வரவேற்பு இருக்கின்றது.குறிப்பாக யோகா மற்றும் தீப அலங்காரங்கள்மற்றும் தோ்திருவிழாக்கள் மேற்கு நாட்டு மக்களை வெகுவாக கவர்கின்றன்.ஆனால் இந்து சமய கருத்துக்கள் அங்கிருக்கும்உ ள்நாட்டு கலாச்சாரத்தை செழிக்க வைக்கும் செயலையே செய்கின்றன. அவற்றை முற்றிலும் அழிக்கும் எந்த செயலையும் அது செய்யவில்லை.சரியாக சொல்வதென்றால் இயேசுவை வெறுக்கக் கற்றுக் கொடுக்கவில்லை-அதுதான் முக்கியம்.
இந்தியாவில் இசுலாம் அரேபிய காடையா்களைக் கூட நேசிக்க கற்றுக்கொடுக்கின்றது.பிறமதத்தவா்களை அழிக்க தேவையான கருத்துக்கள் திட்டங்களை தன்னுள் கொண்டுள்ளது.
இந்தியாவில் பிறந்த கௌதமனை வியாசரை ஆதிசங்கரரை ஸ்ரீநாராயணகுருவை ஸ்ரீகண்ணனை ஸ்ரீராமனை புறக்கணிக்க சொல்கின்றது. இந்தியாவில் பிறந்த கீதையை இராமாயாணத்தை மகாபாரதத்தை -இந்தியாவில் வரலாற்றை தொன்மையை புறக்கணிக்க த் தூண்டுகின்றது. இந்தியாவில் பிறந்த சமய அடியார்களை அனைவரையம் வெறுக்க இசுலாம்கற்றுக்கொடுக்கின்றது.
ஆகவே இசுலாத்தை நான் புறக்கணிக்கின்றேன். எந்த இந்துவும் மதம் மாறிப்போகக் 4டாது என்பதில் ஆா்வம் உள்ளவனாக இருக்கின்றேன்.
நன்றி பாராட்டுக்கள்.

Dr.Anburaj said...

இந்தியாவில் இந்துக்கள் மட்டும் மதசாா்பற்றவராக இருக்க வேண்டும்என்ற கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் எதிா்பார்க்கின்றார்கள்.இது சமநிலைக்கு எதிரானது.ஒரு பிஷப்பின் அரசியல் விளையாட்டைப் பாருங்கள்
ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 1

ச.நாகராஜன்
டெல்லியின் ஆர்ச்பிஷப் அனில் கௌடோ (Anil Couto, Archbishop of Delhi) எல்லா சர்ச்சுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன் சாரம் ஒரே வரியில் இது தான்; செகுலரிஸம் ஆபத்துக்குள்ளாயிருக்கிறது. (Secularism fabric under threat : Archbishop)

இதன் முழு அர்த்தமும் நமக்குப் புரிய வேண்டும். அதாவது இனிமேல் நம்மால் நினைத்தபடி மதம் மாற்ற முடியாது; ஏமாற்ற முடியாது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார் இந்த பிஷப்! எது வரை? 2019 பொதுத் தேர்தல் வரை!

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழி போல ‘2019 பொதுத் தேர்தல் வரை’ என்பதிலிருந்தே மறைமுகமாக இந்த பிஷப், மோடிக்கு ஓட்டுப் போடாதீர்கள்; போட்டால் நமது தொழில் இங்கே சரிவர நடக்காது! என்கிறார்.

இந்த கெட்ட எண்ணப் பிரார்த்தனை வேண்டுகோள் ஒரு புறம் இருக்க இதை ஆதரித்து ஜூலியோ ரிபரோ என்ற போலீஸ் அதிகாரி (Julio Riberio – The Times of India dated 28-5- 2018 - A prayer for secularism: Hindu Rashtra, which would make my country a saffron Pakistan, is profoundly anti-national May 28, 2018, 2:02 AM IST Julio Ribeiro ) எழுதியுள்ள கட்டுரையில் இந்தியா காவி பாகிஸ்தான் ஆகி விடக்கூடும்; ஹிந்து ராஷ்ட்ரத்தில் நான் விரும்பும் வழிபாட்டைச் செய்ய முடியுமா? என்று ஆதங்கப்பட்டுக் கேட்டிருக்கிறார்.

ஆக, ஆர்ச்பிஷப்பின் விஷமத்தனமான தூண்டுதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது தெரிகிறது.

ஜூலியோவிற்கு நாம் சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது. இருந்தாலும் கூட “கிறிஸ்து வழிபாட்டைத் தடுத்து நிறுத்த மாட்டீர்களே என்று கேட்கும் நீங்கள் தயவு செய்து கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட வரலாறைச் சற்று தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி விடலாம். அத்துடன் இந்தியாவைப் பற்றி ஒன்றுமே நீங்கள் அறிந்திருக்கவில்லை; அறிந்திருந்தால் இப்படி ஒரு அபத்தமான எண்ணத்தை வெளியிட்டிருக்க மாட்டீர்கள் என்றும் கூறலாம்.

Dr.Anburaj said...

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்த தாமஸ் ஜெஃபர்ஸன் என்ன சொன்னார் என்று பார்ப்போமா?

“Millions of innocent men, women and children, since the introduction of Christianity, have been burnt, tortured, fined, imprisoned, (and molested) : yet we have not advanced one inch towards humanity. What has been the effect of coercion? To make one half of the world fools, and the other half hypocrites. To support error and roguery all over the earch.” – Thomas Jefferson, The Third President of United States.

கிறிஸ்துவ மதத்தை அறிமுகப்படுத்துவதில் லட்சக்கணக்கான அப்பாவிகளும், பெண்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், அபராதம் விதிக்கப்பட்டனர், சிறைக்கு அனுப்பப்பட்டனர். பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர். இருந்த போதிலும் ஒரு அங்குலம் கூட மனிதத்வத்தை நோக்கி நாம் முன்னேறவில்லை. இப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவு என்ன? உலகின் ஒரு பாதியை முட்டாளாக்கியது. இன்னொரு பாதியை கபடதாரிகளாக்கியது. தவறுக்கும் அயோக்கியத்தனத்திற்கும் துணை செய்தது. - தாமஸ் ஜெஃபர்ஸன், யுனைடெட் ஸ்டேட்ஸின் மூன்றாவது ஜனாதிபதி.
பற்பல நூற்றாண்டுகளாக இந்தியா தான் எல்லா மதத்தினருக்கும் சுதந்திரமாக வழிபடுவதற்கான சொர்க்க பூமியாக அமைந்திருக்கிறது. எல்லா இனத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சொர்க்க பூமி இது ஒன்றே தான்! தங்கள் நாடுகளை விட்டு அகதிகளாகத் துரத்தப்பட்டவர்களுக்கும், மதமாற்றக் கொடுமைகளிலிருந்து தப்பித்து ஓடி வந்தவர்களுக்கும், தங்கள் பண்பாட்டையும் வழிபாட்டுமுறைகளையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பி ஓடி வந்தவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்த புண்ய பூமி இது.

கிறிஸ்துவத்தில் உருவ வழிபாட்டை ஏற்று அதன்படி வழிபாடு நடத்திய சிரியன் கிறிஸ்தவர்கள் கேரளாவில் அடைக்கலம் புகுந்தனர்.

தீயை நித்தம் வழிபடும் பார்ஸிகள் மஹராஷ்டிரத்திலும் குஜராத்திலும் அடைக்கலம் கோரி வந்து வசித்தனர்.

யூதர்களில் சிலர் மத மாற்றக் கொடுமைக்கு அஞ்சி இங்கு வந்து குடியேறினர்.

முஸ்லீம்களில் பஹாய் மார்க்கத்தினர் 50 இஸ்லாமிய நாடுகளில் வாழ முடியாமல் அங்கு வர அனுமதிக்கப்படாமல் இறுதியில் இந்தியாவில் வந்து குடியேறினர்;தங்கள் வழிபாடுகளை இன்றளவும் தடையின்றி நடத்துகின்றனர்.

சீன கம்யூனிஸ ராட்சஸர்களால் துரத்தப்பட்ட தலாய்லாமா - புத்த மதத் தலைவர் - அடைக்கலம் தேடி இந்தியா வந்தார். இன்றளவும் தர்மஸ்தலாவில் தங்கி தன் வழிபாட்டைத் தொடர்கிறார்.

இப்படி ஒரு நாட்டை - இன்னும் ஒரே ஒரு நாட்டை உலகில் காட்ட முடியுமா? முடியாது.

தன் மதத்தைச் சேராமல் இருப்பவர்களுக்கு - அடிதடி, வெட்டு, குத்து, கொலை - இவை தான் இதர மதங்கள் காட்டும் வழி; செய்த செயல் முறை.

ஆக இப்படிப்பட்ட நாட்டை நோக்கி- அதன் மக்களை நோக்கி - என் வழிபாட்டை இங்கு தொடர முடியுமா என்று கேள்வி கேட்கும் ஜூலியா போன்றவர்களை என்ன சொல்லி அழைப்பது?

அப்பாவித்தனமாக கேள்வி கேட்பவர் என்றா?

விஷமிகளில் ஒருவர் என்றா? வரலாறு தெரியாதவர் என்றா?

நல்ல மனம் கொண்ட, இந்திய வரலாறைத் தெரிந்த எவரும் இந்திய வாழ்க்கை முறை ஒன்றே தான் எந்த மதத்தையும் சம்மதம் என்று ஏற்றுக் கொள்ளும் ஒரே வாழ்க்கை முறை என்பதை உணர்வர்.

இஸ்லாமோ, கிறிஸ்தவமோ ஏனைய பிற மதங்கள் இருக்கக் கூடாது என்று கூறுபவை. பிற மதத்தின் வழிபாட்டைச் செய்வோர் பாவிகள்; அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து முழங்கி வருபவர்கள்.

ஆகவே ஜூலியா இப்படிப்பட்ட கேள்வியை இஸ்லாமிய நாடுகளிலும் கிறிஸ்தவ நாடுகளிலும் கேட்கலாம். அங்கு இதர மதத்தினருக்கு வழிபாட்டுச் சுதந்திரம் உண்டா என்று கேட்கலாம்.

விஷமத்தனமான கேள்விகளைக் கேட்பவர்களுக்காக - அவர்கள் இப்படிக் கேட்டு இந்தியாவில் வகுப்புக் கலவரத்தைத் தூண்ட விரும்புவதால் - சில உண்மைகளை எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது.அதைத் தொடர்ந்து காண்போம்.

Ramesh Ramar said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Dr.Anburaj said...

நன்றி.திரு.இராமேஷ் இராமா் அவர்களே.இதற்கு முன் தாங்கள் எந்த பதிவையும் செய்து நான் படிக்கவில்லை. ஏன்?
தாங்கள் அளித்துள்ள சுட்டிகள் அனைத்தும் இந்துக்களின் பிரச்சனைகளை முன்வைக்க விரும்பாதவைகள்தான். ஆப்பானிஸ்தானில் அந்த நாட்டு புா்விக இந்துக்கள் 20 பேர் பயங்கரவாத தாக்குதலால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டாா்கள்.எத்தனை தொலைக்காட்சிகள் மேற்படி செய்தியை வெளியிட்டது. பாலிபா் மட்டும் ஒருமுறை செய்தியைச் சொன்னது.தாலைக்காட்சி சேனல்கள் கிறிஸ்தவத்தை இசுலாத்தை காக்க திட்டம் கொண்டவை.இந்து நலன் குறித்து யாதும் அறியாத பேதைகள்.