Followers

Sunday, August 12, 2018

பார்த்தேன்.. படித்தேன்.. மனம் நெகிழ்ந்தேன்....

பார்த்தேன் படித்தேன் மனம் நெகிழ்ந்தேன்
மனம் நெகிழ்வூட்டும் நிகழ்வாக அமைந்த மருத்துவமனை தஃவா...
கண்ணீருடன் சந்தோசத்தை வெளிபடுத்திய முதியவர்.!!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக வியாழக்கிழமை தோறும் மஃஹ்ரிப் தொழுகைக்கு பின் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அழைப்புப் பணி நடைபெற்றுவருகிறது
இந்த நிகழ்வில் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி, அவர்களின் நோய் குணமடைய அல்லாஹ்விடம் துஆ செய்துவிட்டு வருவது கடந்த 4வருடங்களாக வழக்கமாக நடைபெற்றுவருகிறது.
இந்த சந்திப்புகளில் பல அனுபவங்களை நம்முடைய தஃவா குழுவினர் பெற்று இருக்கிறார்கள்.

இருப்பினும் நேன்று (9-08-2018) அன்று நடைபெற்ற சந்திப்பில் நடந்த நிகழ்வுகள் நமது மனதை நெகிழசெய்யதது.
அப்படி என்ன நடந்தது..?
மருத்துவமனை தஃவா என்றால் மஃஹ்ரிப் தொழுதுவிட்டு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி தஃவா செய்து விட்டு இஷா தொழுகைக்கு பள்ளிக்கு வந்துவிடுவோம். இது தான் வழக்கமாக இருந்து கொண்டுஇருந்தது.
ஆனால் நேற்றய நிலையே வேறு

மருத்துவமனையினுல் நுழைந்து ஆண்கள் பகுதிக்கு செல்கிறோம். அங்கு முதன்முதலில் ஒரு வயதி மூத்த சகோதரர் அமர்ந்திருந்தார், அவரிடம் நாம் இப்படி தவ்ஹீத் ஐமாஅத் என்ற முஸ்லிம் அமைப்பில் இருந்து வந்திருக்கிறோம் நாங்கள் வாரம் வாரம் வந்து இப்படி மக்களை சந்தித்து நோய் நலம் விசாரித்து அவர்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்து விட்டு செல்வோம், இந்த வாரம் கடவுள் உங்களை கண்ணில் காட்டி இருக்கிறார் என்று கூறி அந்த சகோதரிடத்தில் பரிவன்போடு நம்முடைய சகோதரர்கள் நோய் நலம் விசாரித்து ஆறுதல் சொல்லவுமே அவர் கண்கள் களங்கி அழ ஆரம்பித்து விட்டார், என்னய்யா என்ன ஆச்சி ஏன் அழுகுரீங்க நாங்க எதுவும் உங்கள் மனதை காயப்படுத்தி விட்டோமா என கேட்ட, இல்லையா இல்லையா அப்படிலாம் ஒன்னும் இல்லையா, என் நிலையை நினைத்து அழுதேன் என்றார்.
என்னங்கையா என்ன ஆச்சி சொல்லுங்கையா எங்களால் ஆன உதவியே செய்கிறோம் என்று சொல்லவுமே நம்மிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்தார்,
எனக்கு இரண்டு மகன்கள், அவங்கள நல்ல படிக்கவச்சி வளர்தேன் நான் கஸ்டப்பட்டாலும் அவங்கள கஸ்டபடாம பார்த்து கொண்டேன், ஆனால் இன்றைக்கு அவங்க என்டவுள்ள எல்லாதையும் எடுத்து கொண்டு சென்று விட்டு என்னை ஏறெடுத்தும் பார்காமல் என்னை ஆனாதையாக விட்டுவிட்டார்கள்.
பெத்த பிள்ளைகளே நம்மை பார்க்காமல் இருக்கும் போது எங்கிருந்தோ வந்து இவ்வளவு அக்கரையோடு, அன்போடு விசாரிக்கிறீங்களையா, எனக்குனு யாரு இருக்கானு நினைத்து கொண்டு இருக்கும் போது, நீங்கள் இப்படி அன்போடு கூறும் வார்தைகள் என்னை அழ செய்துவிட்டது வேறு ஒன்னும் இல்லப்பா. என்று அந்த சகோதரர் சொல்ல நம் உள்ளங்கள் நெகிழ்ந்து தான் போனது.
கவலைபடாதீங்கையா கடவுள் உங்களோடு இருப்பார் என ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தடுத்த நபர்களை பாரக்க தயாறாகும் போது.
போங்கையா போங்க போயி எல்லா மக்களையும் பாருங்க, நீங்க செய்யிற இந்த பணிக்காக நீங்க எப்போதும் நல்லா இருக்கனும் என்று நம்மை அன்போடு அனுப்பிவைத்தார்.
இப்படி எத்தனையோ நபர்கள் மனபாரத்தோடு இருக்கத்தான் செய்கிறார்கள், இது போன்ற சந்திப்புக்கள் நிச்சயம் அவர்கள் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பதை உணர்ந்து கொண்டோம்.
இன்னும் சில நெகிழ்ச்சியான சம்வங்களும் நடந்தது இறைவன் நாடினால் முழுமையான பதிவை பதிவு செய்கின்றோம்..
எனவே ஜமாஅத்தின் கொள்கை சொந்தங்கள் மற்ற மற்ற தஃவா பணிக்கு மத்தியில் இந்த மருத்துவமனை சந்திப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாரத்தில் ஒருமுறையேனும் மக்களை சந்தித்து வர மிக பெரிய மாற்றம் அவர்களின் உள்ளங்களில் ஏற்படும். எனவே மருத்துவமனை தஃவா வில் நம்முடைய ஜமாஅத் சகோதரர்கள் கவணம் எடுக்க வேண்டுமென கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் கேட்டு கொள்கின்றோம்.
சந்தித்த நபர்களின் விபரம்:
முஸ்லிம் சகோதர, சகோதரிகள்: 3
பிறமத சகோதர, சகோதரிகள்: 30
அல்ஹம்துலில்லாஹ்!!!


1 comment:

Ashak S said...

masha allah